என் மலர்
ஆன்மிகம்

வால்பாறையில் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

வால்பாறை மாகாளியம்மன் கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அவர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வால்பாறை அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் சிறப்பு யாக பூஜைகள், கலச பூஜைகள், கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. பின்னர் கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் வால்பாறை அண்ணா நகர் மற்றும் வால்பாறை சுற்று வட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story