என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சீனிவாச பெருமாள் கோவில் கருடனை தரிசனத்தால் எல்லாவிதமான தோஷங்களும் மறையும். ஒரு மண்டலம் எம்பெருமானை சுற்றி வந்து வழிபட்டால் சகல தோஷங்கள் நீங்கும்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே திருவாரூர் செல்லும் பாதையில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில்.
கோவில் மூலஸ்தானத்தின் கீழே மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி உள்ளது உள்ளே பக்ஷிராஜன் கருடன். பெரிய திருவடி, அரசு மங்களாலயன் என்றெல்லாம் புனித பெயர் கொண்டு அழைக்கப்படும் கருடன், சாளக்கிராம சிலை வடிவில் வாகன அமைப்பில் நீர் சுரக்கும் நீர் முடியும் நீண்டு வளர்ந்து திருமேனியும் கொண்டு பெருந்தோள் உடனும், மிகவும் வீரத்துடனும், எடுப்புடன் கூடிய தோற்றத்துடன் எழுந்தருளியுள்ளார். தம்மை விரும்பித் தொழும் அடியார்கள் வேண்டியன எல்லாம் அருளும் தெய்வமாக விளங்குகிறார். பெருமாளுக்கு நாள்தோறும் திருவாராதனம் கண்டவுடன் அவர் அமுதுபடி செய்ததை இவருக்கும் நித்தம் ஆறு வேளை ஆராதனம் செய்து வருகிறார்கள். இவருக்கு அமுதகலசம் என்ற மோதகம்(கொழுக்கட்டை) மிகவும் விருப்பம். அதனால் இவரை மோதகாமோதர் எனவும் அழைப்பதுண்டு. இவரிடம் வேண்டிக் கொள்ளும் விருப்பம் எல்லாம் உடனுக்குடன் நிறைவேறும் அதிசயத்தையும் காணலாம். இவரது சர்வாங்கங்களில் புஷ்ப அங்கி அணிவிப்பவர்களுக்கு எல்லா விருப்பங்களும் சட்டென நிறைவேறுகின்றன. மார்கழி பெரும் திருவிழாவில் நான்காம் திருநாளும் மற்றொன்று பங்குனிப் பெருவிழாவில் நான்காம் திருநாளும் ஆகும்.
வியாழன் மாலையிலும், சனி காலையிலும் கருட பகவான் வழிபாடு மிகவும் சிறப்பு என்பார்கள். இந்த கருடனுக்கு கஸ்தூரி குங்குமப்பூ, புனுகு சட்டம் முதலியவைகளை வாழை சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர், இஷ்ட சித்திகளையும் நிச்சயம் பெறுவர். இவரது நட்சத்திரம் சுவாதி ஆனதால் அன்று கருடனுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் உகந்தது. இவரது தரிசனத்தால் எல்லாவிதமான தோஷங்களும் மறையும். ஒரு மண்டலம் எம்பெருமானை சுற்றி வந்து வழிபட்டால் சகல தோஷங்கள் நீங்கும். ஸ்ரீசுதர்சன மனதிற்கு அதிர்ஷ்டான கடவுளானபடியால் எல்லாவிதமான மன நோய்களும் நீங்கும்.

சென்னை மவுண்ட்ரோட்டில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதிரி எனும் தர்கா தர்காவில் ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) விழா ஆகியவற்றின் தொடக்க விழா தர்கா வளாகத்தில் நடைபெற்றது.
சென்னை மவுண்ட்ரோட்டில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதிரி எனும் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) விழா ஆகியவற்றின் தொடக்க விழா தர்கா வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தர்காவின் மூத்த பரம்பரை அறங்காவலர் மற்றும் முத்தவல்லியுமான சையத் மசாரூதீன் கவர்னர் மற்றும் ஆற்காடு இளவரசருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து ஆண்டு விழா மலரை கவர்னர் வெளியிட்டார். இதன்பின்பு, அங்குள்ள ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதிரி சமாதியில் மலர்ப்போர்வையை கவர்னர் போர்த்தி மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார்.
விழாவில் மூத்த பரம்பரை அறங்காவலர் சையத் வாஜிதுதீன், பரம்பரை அறங்காவலர்கள் சையத் மன்சூருதீன், சையத் சாதிக் முகைதீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சந்தனக்கூடு திருவிழா நாளை (31-ந் தேதி) வரை நடக்கிறது.

குஜிலியம்பாறை ராமகிரியில் உள்ள 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்கப்பெருமாள் கோவிலில் தேரோட்டம் நேற்று நடந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. திருமண கோலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால் திருமணத்தடை நீங்கும் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் பங்குனி மாத தேரோட்ட திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதையடுத்து மண்டகப்படிதாரர்களின் வாகனப்புறப்பாடு, சாமி வீதி உலா, திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி கோவில் சன்னிதானத்தில் இருந்து பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சாமி சிலைகள் பூஜை செய்து கொண்டு வரப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டது. அதன்பின்னர் காலை 9.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுமார் 2 மணி நேரம் திருத்தேர் வீதி உலா வந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாளை (புதன்கிழமை) பல்லாக்கு அலங்கார நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தம்பதிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நம்பெருமாளும், தாயாரும் ஒருசேர இருப்பார்கள். பங்குனி உத்திரத்தினத்தன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சியை கண்டு, பெருமாளையும், தாயாரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம்.
இதனால் இந்த சேர்த்தி சேவையை தரிசிக்க ஆயிரக்கணக்கான தம்பதிகள் நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்தனர். இதையொட்டி, கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வார் திருச்சுற்று வழியே தாயார் சன்னதி சென்றடைந்தார்.
பின்னர் சமாதானம் கண்டருளி, முன்மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் பங்குனி உத்திரமண்டபத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேர்ந்தார். இதைத்தொடர்ந்து மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை வந்தடைந்தார். பகல் 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை சர்வ அலங்காரத்துடன் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.
பின்னர் சின்னப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி இரவு 10.30 மணிக்கு தாயார் சன்னதியை சென்றடைந்தார். இரவு 12 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணி வரை திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து தாயார் புறப்பட்டு காலை 5.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
சர்வஅலங்காரத்துடன் எழுந்தருளியிருந்த பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையை திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து இரவு முழுக்க தரிசனம் செய்தனர். சேர்த்தி சேவைக்கென தாயார் சன்னதிக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் சன்னதிக்குள் வரவும் வெளியில் செல்லவும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் விழாவையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மிகவும் பழமையான தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குண்டம் திருவிழா மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் தொடங்கும். அதன்படி கடந்த மாதம் 11-ந்தேதி சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. மறுநாள் 12-ந்தேதி கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து கடந்த 27-ந்தேதி இரவு 8 மணிக்கு அம்மன் ஆபரணம் பூணுதல் ஊர்வலம், நள்ளிரவு 11 மணிக்கு அரவான் சிசு ஊர்வலமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து மாலை 4 மணிக்கு அம்மன் தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக வந்து குண்டம் மைதானத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
இரவு 9.30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க வானவேடிக்கைகளுடன் குண்டம் பூ வளர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பூ வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர். முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் உப்பாறு பகுதிக்கு சென்று புனித நீராடினார்கள். பின்னர் செவ்வரளி மாலை அணிந்து அம்மனை வழிப்பட்டனர். அதன்பிறகு காலை 8 மணிக்கு குண்டம் மைதானத்திற்கு வந்தனர்.
அங்கு சிறப்பு பூஜைகள் செய்த பின், 60 அடி நீள குண்டத்தில் அம்மன் அருளாளி தண்டபாணி மல்லிகை பூவை உருட்டி விட்டார். அதை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினார்கள். பின்னர் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குண்டம் பூவை கையில் அள்ளி போட்டு வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். குண்டம் இறங்கிய பக்தர்களுக்கு வெண்ணெய் பிரசாதமாக வழங்கப் பட்டது.
இன்று (செவ்வாய்கிழமை) திருத்தேர் நிலை நிறுத்தலும், ஊஞ்சல் உற்சவம், பட்டாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) காலை மஞ்சள் நீராடுதலும், இரவு போர் மன்னன் காவு நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைகிறது.

மார்ச் மாதம் 30-ம் தேதியில் இருந்து ஏப்ரம் மாதம் 5-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
30-ம் தேதி செவ்வாய் கிழமை :
* சித்தயோகம்
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, பூரட்டாதி
31-ம் தேதி புதன் கிழமை :
* சுபமுகூர்த்தம்
* சங்கடஹர சதுர்த்தி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - ரேவதி, உத்திரட்டாதி
1-ம் தேதி வியாழக்கிழமை :
* கரிநாள்
* பெரிய வியாழன்
* சந்திராஷ்டமம்- ரேவதி, அசுபதி
2-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* புனித வெள்ளி
* பஞ்சமி திதி
* சந்திராஷ்டமம் -பரணி
3-ம் தேதி சனிக்கிழமை :
* தேய்பிறை சஷ்டி
* ஹோலி பண்டிகை
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் -கார்த்திகை
4-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* தேய்பிறை சப்தமி
* இன்று சூரிய வழிபாடு நன்று
* ஈஸ்டர்
* சந்திராஷ்டமம் - ரோகிணி
5-ம் தேதி திங்கள் கிழமை :
* தேய்பிறை அஷ்டமி
* சந்திராஷ்டமம் - மிருகசீருஷம்

திருவாரூர் கோவிலுக்கு மேற்கே கமலாலய குளத்தின் கீழ் கரையில் வடகோடியில் கோவில் கொண்டிருப்பவர் மாற்றுரைத்த விநாயகர். இவருக்கு பின்னே ஓர் அருமையான வரலாறு கூறப்படுகிறது.
திருவாரூர் கோவிலுக்கு மேற்கே கமலாலய குளத்தின் கீழ் கரையில் வடகோடியில் கோவில் கொண்டிருப்பவர் மாற்றுரைத்த விநாயகர் இவருக்கு பின்னே ஓர் அருமையான வரலாறு கூறப்படுகிறது.
சுந்தரர் மணி முத்தாற்றில் பொன்னை இட்டு திருவாரூர் கமலாலயத்தில் எடுத்த அதிசயம் பெரிய புராணத்தில் காணப்படுகிறது. விருத்தாசலம் என்று இந்நாளில் வழங்கும் திருமுதுகுன்றத்தில் இறைவன் தந்த ஆயிரம் பொற்காசுகளையும் இட்டார் சுந்தரர் பெருமான். மணிமுத்தாறு நதியில் இட்ட பொன்னை திருவாரூர் கமலாலய குளத்தில் தர வேண்டும் என்று பெருமானிடம் வேண்டினார். பெருமானும் அவ்வாறே செய்வதாக அருளினார்.
சுந்தரர் பெருமானின் தோழர் பெருமான் தம்மிடம் விளையாடுவார் என்பதை அறிந்து ஆற்றில் இட்ட பொன்னின் சிறுதுண்டினை மச்சமாக வைத்துக் கொண்டார். கமலாலயத்தில் பெருமானும் சுந்தரருக்குப் பொற்காசுகளை வரச் செய்தார். தாம் கையில் வைத்துள்ள மச்சத்தின்படி கமலாலயத்தில் வந்த பொன் இருக்கிறதா? என்பதை அறிய விரும்பி, வந்த பொற்காசுகளையும் வைத்துள்ள மச்சத்தையும் குளக்கரை ஓரம் இருந்த விநாயகர் இடம் தந்து சரிபார்க்கச் சொன்னார்.
விநாயகர் சரி பார்த்தார். பின்பு கமலாலயத்தில் கிடைத்த பொன்மாற்று குறைவாக இருப்பதாக விநாயகர் நீதி கூறினார். அதை பின் தம்பிரான் தோழராகிய சுந்தரர் பெருமானிடம் அதை மாற்றி கேட்டு பெற்று கொண்டார். இவ்வாறு மாற்றினை உரைத்த காரணத்தால் மாற்று உரைத்த விநாயகராக அமைந்து அருள் பாலிக்கிறார் வீதியின் ஓரமாக அமைந்து இருப்பதால் எல்லோராலும் எளிமையாக வழிபட வசதியாகவும் இந்த கோவில் உள்ளது.

இந்த பங்குனி உத்திர நாளில்தான், முருகப்பெருமான் - தெய்வானையின் திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன.
ஒவ்வொரு மாதமும் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம் தான் சிறப்புக்குரியதாக இருக்கிறது. இதற்கு இந்த நாள், தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற மாதமாகவும், இந்த நாளில் விரதம் இருந்தால் திருமணங்கள் விரைவில் கைகூடும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
ஒருவருக்கு திருமணம் நடைபெற, ஜாதகத்தில் குருவின் அருள் நிறைந்திருக்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, குருவின் பூரண ஆசி பெற்ற அவரது சொந்த வீடான மீன ராசியில், சூரியன் சஞ்சரிக்கும் சிறப்பு மிகு மாதமாக பங்குனி திகழ்வதால், இதில் வரும் பங்குனி உத்திரம் சிறப்பு பெறுகிறது. அதனால்தான் தெய்வங்களே, இந்த நாளை தங்களின் நல்வாழ்வுக்காக தேர்ந்தெடுத்து, மக்களுக்கும் வழிகாட்டி இருக்கிறார்கள்.
இந்த பங்குனி உத்திர நாளில்தான், முருகப்பெருமான் - தெய்வானையின் திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. இமயவானின் மகளாக பிறந்த பார்வதியை, சிவபெருமான் மணம் முடிக்க தேர்ந்தெடுத்த நாள் இது. மதுரையில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருமணம் நடைபெற்றதும் இந்த நாளில்தான். ராமாயணத்தில் ராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்ணன் - ச்ருதகீர்த்தி ஆகியோரின் திருமணம் நடைபெற்றதும் பங்குனி உத்திர தினத்தில்தான்.
அதே போல், மகாலட்சுமி விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் மார்பில் இடம் பிடித்ததும் இந்த நாள்தான். முருகனை காதல் மணம் முடித்த வள்ளி அவதரித்த நாளாகவும், பங்குனி உத்திரம் சொல்லப்படுகிறது. அதோடு படைப்புக் கடவுளான பிரம்மதேவன், வாக்குக்கு அதிபதியான சரஸ்வதியை தன்னுடைய நாவில் அமர்த்திக் கொள்ளும் வரத்தைப் பெற்றதும், இந்த இனிய நாளில் என்று புராணம் எடுத்துரைக்கிறது.
இந்திரன் தன்னைவிட்டு பிரிந்திருந்த மனைவி இந்திராணியை சேர்ந்தது, இதுபோன்ற ஒரு பங்குனி உத்திர நாளில்தான். சந்திரன், ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை தன்னுடைய மனைவியராக அடைந்த புண்ணிய தினமும் இதுவே. ஆண்டாள்- ரங்கமன்னார் திருமணம் நடந்ததும் இந்த நாளில்தான் என்று சொல்லப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் அவதரித்தது, அர்ச்சுனன் பிறந்தது, சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, மணக்கோலத்தில் சிவபெருமான் காட்சி தந்தது என்று பங்குனி உத்திர நாள், தெய்வங்களே தேர்வு செய்த தினம் என்பதால் அது சிறப்புக்குரியதாக மாறி நிற்கிறது.

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து 13-வது மாதமாக இந்த மாதமும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு மார்ச் 24-ந்தேதி முதல் கொரோனா ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் கிரிவலம் செல்ல தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 28-ந்தேதி அதிகாலை 3.22 மணிக்கு தொடங்கி 29-ந்தேதி அதிகாலை 1.29 மணிக்கு நிறைவடைகிறது.
இதற்கிடையில் தொடர்ந்து 13-வது மாதமாக இந்த மாதமும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
எனவே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அண்ணாமலையார் கோவிலில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி உண்டு.
மேலும் பவுர்ணமி நாளில் தடை உத்தரவை மீறி பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுக்க கிரிவலப் பாதையில் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

மதுரை அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவிலில் வருகிற 29-ந் தேதி வரை திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் வீட்டிலிருந்து காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவிலில் வருகிற 29-ந் தேதி வரை திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. இதில் நாளை (28-ந்தேதி) காலை 10.50 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் சுவாமி, 4 பிராட்டிமார்களுடன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் www.tnhrce.gov.in, www.alagarkovil.org, youtube arulmigu kallalagar thirukovil மூலம் பக்தர்கள் வீட்டிலிருந்து காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவலை கோவில் உதவி ஆணையர் அனிதா தெரிவித்து உள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

கீழ்காணும் மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில் 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும்.
“ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே.”
- என்ற ஸ்லோகத்தை சதா மனதிற்குள் சொல்லிக்கொண்டு இருந்தாலே போதும். அதோடு கீழ்காணும் மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில் 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும்.
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம:
வஸுதே வஸுதாரே வஸூகரீ தனகரீ தான்யகரீ
ரத்னகரீ சௌபாக்யகரீ சாம்ராஜ்யகரீ ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ ”

திருப்பரங்குன்றம் கோவில் தேர் இழுக்க பாரம்பரிய பழக்க வழக்கப்படி கிராமம், கிராமமாக வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை தொடர்ந்து திருவிழா நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற ஏப்ரல் 1-ந்தேதி 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, மகா தேரோட்டம் நடக்கிறது.
இதையொட்டி கோவில் வாசல் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய தேரை 6 அடுக்குகளாக அலங்கரித்தல், தேரினை இழுத்து செல்வது போல மரத்திலான 4 குதிரைகள் பொருத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
இதற்கிடையில் நேற்று கோவில் முதல் ஸ்தானிகர் சுவாமிநாதன் தலைமையில் நாட்டாமை வைராவி, காவல் மிராசு, மற்றும் கோவில் பணியாளர்கள் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, வடிவேல்கரை விளாச்சேரி, தனக்கன்குளம், தோப்பூர், நிலையூர், கூத்தியார்குண்டு, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று நாட்டாமை மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வெற்றிலை, பாக்கு மற்றும் பங்குனிப் பெருவிழாவின் அழைப்பிதழை தாம்பூலத்தில் வைத்து பாரம்பரிய வழக்கப்படி அழைப்பு விடுத்தனர்.
கொரோனா பரவலின் காரணமாக கோவில் தேர் இழுக்க பக்தர்கள் வரும்போது முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இது தொடர்பாக அழைப்பு பெற்ற முக்கிய பிரமுகர்கள் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் கோவிலுக்கு தேரை அரிச்சந்திர மகாராஜா வழங்கியதாக செவிவழி செய்தி கூறுகிறது. பழங்காலத்தில் மரத்திலான சக்கரங்கள் பொருத்தப்பட்டது. தேரில் எண்ணற்ற சிற்பங்கள் இருந்தாலும் முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் வேலுக்கு பதிலாக "தராசு" பிடித்தப்படி அமைந்துள்ள சிற்பமானது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
அதாவது நீதி நேர்மையை நிலைநாட்டக் கூடிய தராசுக்கார பூமியாக திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. நீதி, நேர்மை தவறி நடந்தால் தராசு போல எடை போட்டு உரியவர் தண்டிக்கப்படுவர் என்று அந்த சிற்பம் உணர்த்துகிறது. இதே சமயம் முருகப்பெருமானுக்கு துலாம் ராசி (தராசு) என்பதையும் அந்த சிற்பம் உணர்த்துவதாக சொல்லப் படுகிறது. மரத்தில் ஆன சக்கரங்கள் கொண்ட தேரானது காலத்திற்கேற்ப இரும்பு சக்கர பட்டயம் மற்றும் ஹைட்ராலிக் எனும் பிரேக் பொருத்தப்பட்டு கம்ப்யூட்டர் யுகத்திற்கு மாறிய போதிலும் பாரம்பரிய பழக்கவழக்கத்தின்படி தேர் இழுக்க அழைப்பு விடுத்து மரியாதை செய்வது இன்றும் தொன்று தொட்டு தொடர்கிறது.
மேலும் தேர் இழுக்கப்பட்டு நிலைக்கு வந்ததும் நாட்டாண்மை மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சோற்று பொட்டலங்கள் வழங்கப்படும். பின்னர் மாலையில் தேருக்கு முன்பாக முருகப்பெருமான் அருள் பார்வையில் பரிவட்ட மரியாதை கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.