என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து பங்குனி தேர்த்திருவிழா நிறைவுபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நம்பெருமாள் தங்க கருட வாகனம், சேஷ வாகனம், கற்பக விருட்ச வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 28-ந் தேதி விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. 29-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் கோவில் வளாகத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் மாலை 3 மணிக்கு புறப்பட்டு கருட மண்டபத்திற்கு மாலை 3.15 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு வாகன மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு சென்றார்.
வாகன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு கோவில் வளாகத்தில் வலம் வந்து வாகன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி திருவிழாவில் விசேஷ நிகழ்ச்சியாக இன்று(31-ந்தேதி) பகல் 11.50 மணி அளவில் கோவிலுக்குள் முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் பங்குனிப் பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையிலும், இரவிலுமாக பல்வேறு வாகனங்களில் தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி நகர் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக கடந்த28-ந்தேதி பங்குனி உத்திரமும் 29-ந்தேதி சூரசம்கார லீலையும ்நடைபெற்றது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று கோவிலுக்குள் உள்ள ஆறுகால் மண்டபத்தில் முருகப் பெருமானுக்கு கிரீடம் சூட்டி, சேவல் கொடி சாற்றப்பட்டு நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் வழங்க பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இத்தகைய கண்கொள்ளாக்காட்சியை கண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் எழுப்பி பயபக்தியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்
திருவிழாவில் விசேஷ நிகழ்ச்சியாக இன்று(31-ந்தேதி) பகல் 11.50 மணி அளவில் கோவிலுக்குள் முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடக்கிறது. இதனையொட்டி மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சொக்கநாதர் எழுந்தருளுகின்றனர். ்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை 1-ந் தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

அம்மையப்பனின் இணைவாக பங்குனி மாதம் சிறப்புப் பெறுவதால் சைவ, வைணவ பேதமின்றி அனைத்து ஆலயங்களிலும் தெய்வத் திருமணங்கள் இந்த மாதத்தில் நடைபெறுகின்றன.
தெய்வ திருமணங்கள் பலவும் நடந்தேறிய மாதம் பங்குனி மாதம். பார்வதி - பரமேஸ்வரன், ஆண்டாள் - ஸ்ரீரங்கநாதர், தெய்வானை - முருகன் என தெய்வத் திருமணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. காமாட்சி அன்னை ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்த பங்குனி மாதத்தில்தான்.
ஜோதிடத்தில் சந்திரனை தாயாகவும், சூரியனைத் தந்தை என்றும் உருவகப்படுத்துவார்கள். சந்திரனாகிய தாய், தந்தையாகிய சூரியனுக்கு உரிய நட்சத்திரமான உத்திரத்தில் சஞ்சரித்து பவுர்ணமியைத் தோற்றுவிப்பது பங்குனி மாதத்தில். கார்த்திகை மாதத்தைப் போலவே, அம்மையப்பனின் இணைவாக இந்த மாதமும் சிறப்புப் பெறுவதால் சைவ, வைணவ பேதமின்றி அனைத்து ஆலயங்களிலும் தெய்வத் திருமணங்கள் இந்த மாதத்தில் நடைபெறுகின்றன.
நவகிரகங்களின் தலைவனான சூரியன் தனது ஆசிரியரான குருவின் வீட்டில் அதாவது மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. ஆண்டு முழுவதும் தான் பெற்ற பயிற்சியை தனது ஆசிரியரிடம் செய்து காட்டி தெளிவு பெறுவதாகக் கொள்ளலாம். பங்குனியில் குருவின் வீட்டில் சஞ்சரித்து முழுமையாக பக்குவம் அடைந்து அடுத்துவரும் சித்திரை மாதத்தில், அதாவது மேஷ ராசியில் சூரியன் முழுமையான உச்ச பலத்தோடு ஒளி வீசுவார். உச்ச வலிமை பெறுவதற்கு முன்னதாக ஆசிரியரிடம் பயிற்சி பெற்று பக்குவப்பட வேண்டும் என்பதை இந்தப் பங்குனி மாதம் நமக்கு நன்றாக உணர்த்துகிறது.
அதே போன்று கணக்குத் தணிக்கையாளர் என்று நவகிரகங்களில் குரு பகவானைக் குறிப்பிடுவார்கள். அரசு அலுவலகங்கள், கருவூலங்கள், வங்கிகள் என சூரியன் சார்ந்த அனைத்துத் துறைகளும் கணக்குத் தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதும் இந்த மாதத்தில்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது.

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தேர் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. சித்திரை தேரோட்ட விழா கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடக்கிறது.
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. இக்கோவில் வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் தை முதல் நாளில் தை தேரோட்டமும், சித்திரை பவுர்ணமியில் சித்திரை பெரிய தேரோட்டமும் நடத்தப்படுவது வழக்கம்.
சாரங்கபாணி கோவில் தேர் திருவாரூர் கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அடுத்ததாக மிகப்பெரிய தேர் என்ற சிறப்பை உடையது. இந்த ஆண்டு அடுத்த மாதம் (ஏப்ரல்) 26-ந் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதையொட்டி நேற்று முன்தினம் மாலை தேர் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையடுத்து தேர் கட்டுமான பணிகள் தொடங்கின. சித்திரை தேரோட்ட விழா கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடக்கிறது. 21-ந் தேதி கருட சேவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது பூலோக வைகுண்டம், திருவிண்ணகர் என்றெல்லாம் இக்கோவிலை பக்தர்கள் அழைக்கிறார்கள். பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி உற்சவர் பொன்னப்பன், பூமிதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

சிவபெருமான், இந்தத் தலத்தில் மார்க்கண்டேயருக்கு காட்சி தந்ததோடு, மழு என்னும் ஆயுதம் தாங்கி, நடனம் புரிந்த தலம் என்பதால் ‘மழுபாடி’ என்று பெயர் பெற்று, அதுவே தற்போது ‘திருமழப்பாடி’ என்று அழைக்கப்படுவதாகவும் புராணத் தகவல் ஒன்றும் இருக்கிறது.
கொள்ளிடத்தின் வடகரையில், திருமழப்பாடி என்ற கிராமத்தில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது. முற்காலத்தில் வெள்ளாற்றிற்கும், வடகாவிரிக்கும் இடையில் இருந்த இவ்வூரில், மழவர்கள் என்ற பழங்குடியினர் வசித்து வந்தனர். இவர்களில் சிறந்த போர்வீரர்களின் சேனைகள் தங்கியிருந்த இடம் ‘மழவர்பாடி’ என்று அழைக்கப்பட்டது. இதுவே பின்னாளில் ‘திருமழப்பாடி’ என்று மருவியதாக சொல்கிறார்கள்.
சிவபெருமான், இந்தத் தலத்தில் மார்க்கண்டேயருக்கு காட்சி தந்ததோடு, மழு என்னும் ஆயுதம் தாங்கி, நடனம் புரிந்த தலம் என்பதால் ‘மழுபாடி’ என்று பெயர் பெற்று, அதுவே தற்போது ‘திருமழப்பாடி’ என்று அழைக்கப்படுவதாகவும் புராணத் தகவல் ஒன்றும் இருக்கிறது.
தல வரலாறு
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் சிலாத முனிவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாக குழந்தைப் பேறு இல்லை. இதையடுத்து சிவபெருமானை நோக்கி, புத்திரப்பேறு கிடைக்க வேண்டி தவம் இருந்தார், சிலாத முனிவர். அவர் முன்பாக தோன்றிய ஈசன், “நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய். அதற்காக யாகபூமியை உழும் போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை உன் மகனாக வளர்த்து வா. அவன் 16 வயது வரை உன்னுடன் இருப்பான்” என்று அருளினார்.
அதன்படியே பூமியில் இருந்து பெட்டகத்தை கண்டெடுத்த சிலாத முனிவர், அதனுள் ஓர் அதிசய குழந்தையைக் கண்டார். அந்தக் குழந்தை நான்கு தோள்களும், மூன்று கண்களும், சந்திரனை அணிந்த முடியும் கொண்டு விளங்கியது. அப்போது ஒரு அசரீரி, “பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திற” என்று ஒலித்தது. சிலாத முனிவரும், பெட்டியை மூடி மீண்டும் திறந்தார். இப்போது முந்தைய வடிவம் நீங்கி, அதில் அழகிய ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு ‘செப்பேசன்’ என பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதுக்குள் வேதங்கள் கற்றதோடு, அனைத்து கலைகளிலும் அக்குழந்தை சிறந்து விளங்கியது.
மகன் வளர்ந்து வருவதை நினைத்து சிலாத முனிவருக்கு வருத்தம் உண்டானது. இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் செப்பேசன் நம்முடன் இருப்பான் என்று நினைத்து, முனிவரின் மனைவியும் துயருற்றார். இதையறிந்த செப்பேசன், ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று ஈசனை நினைத்து கடும் தவம் புரிந்தார். அவருக்கு ஈசன் தனது அருளாசியை வழங்கியதோடு, சிவகணங்களுக்கு தலைவராகும் பதவியையும், ஈசனின் வாசலில் இருந்து காவல் காக்கும் உரிமையையும் அளித்தார். இத்தகைய சிறப்புகளைப்பெற்ற இவரே, நந்தியம்பெருமான் ஆவார்.
இதையடுத்து மற்றொரு சிறப்புமிகு நாளில், சிலாத முனிவர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய முன்வந்தார். இதற்காக திருமழப்பாடியில் ஆசிரமம் அமைத்து, தவமும், அறமும் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசையை மணப்பெண்ணாக பேசி முடித்தார். இவர்களின் திருமணம் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெற முடிவுசெய்யப்பட்டது. இதற்காக திருவை யாற்றில் இருந்து நந்தியம்பெருமான், குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திரு மணம் செய்து வைப்பதற்காக ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர். திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்திய நாதப் பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தியம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்ட திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இதையடுத்து நந்தியம்பெருமானுக்கும், சுயம்பிரகாசைக்கும் வெகு சிறப்பாக திரு மணம் நடைபெற்றது.
இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், நந்தியம்பெருமான்- சுயம்பிரகாசை திருமணம் திருமழப்பாடியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐயாறப்பரும், அறம் வளர்த்தநாயகி அன்னையும் கலந்து கொள்கிறார்கள்.
இங்குள்ள வைத்தியநாதசாமி கோவில், கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. இந்தக் கோவிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. தல விருட்சமாக பனை மரம் இருக்கிறது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இதுவாகும். நடராஜர் சன்னிதிக்கு அருகே நடராஜர் மண்டபமும், வெளிப்பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில் இருந்து தான் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
இந்தக் கோவிலின் நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேசுவரர், தனது மனைவி சுயம்பிரகாசையுடன் காட்சி தருகிறார். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியம்பெருமானுக்கும், சுயம் பிரகாசைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு, அடுத்த வருட நந்தி கல்யாணத்திற்கு முன்பாக திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.
அமைவிடம்
திருமழப்பாடி வைத்தியநாதசாமி கோவிலானது, புள்ளம் பாடிக்கு தென்கிழக்கில் 20 கிலோமீட்டர் தூரத்திலும், திருவையாறுக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், அரியலூருக்கு தெற்கில் 28 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இந்த ஊருக்கு திருச்சி, லால்குடி, அரியலூர், திருமானூர் மற்றும் தஞ்சையில் இருந்து பஸ் வசதி உள்ளது. திருச்சி- விழுப்புரம் ரெயில் வழித்தடத்தில் அரியலூர், புள்ளம்பாடி ரெயில் நிலையங்களில் இருந்தும் இங்கு வரும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.
திருமழப்பாடி ஆலய சிறப்பு
தக்கன் தனது 27 பெண்களையும், சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அன்பு கொண்டிருந்தான். இதனால் மற்ற மனைவியர், தனது தந்தை தக்கனிடம் முறையிட்டனர். இதையடுத்து ‘எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தவில்லை எனில் எனது சாபத்திற்கு ஆளாவாய்’ என சந்திரனை தக்கன் எச்சரித்தான்.
ஆனாலும் சந்திரன் முன்பு போலவே ரோகிணியிடம் மட்டும் அன்போடு பழகி வந்தான். இதனால் சந்திரன் தேய்ந்து போகும்படி தக்கன் சாபமிட்டான். அந்த சாபம் நீங்குவதற்காக இத்தலம் வந்து இறைவனை நினைத்து தவம் இருந்தான் சந்திரன்.
இறைவன் சந்திரனின் முன்பாகத் தோன்றி, முற்றிலும் அழிந்துவிடாத வகையில் ‘தேய்வதும், வளர்வதுமான நிலையிலிருப்பாய்’ என்று சந்திரனுக்கு அருள்பாலித்தார். சந்திரனின் நோய் போக்கியதால், இத்தல இறைவன் வைத்தியநாதன் என்று பெயர் பெற்றார்.
இதே போல், முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமிதேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சன்னிதிக்கு எதிரே, லட்சுமி தேவி நீராடிய குளம், ‘லட்சுமி தீர்த்தம்’ என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இந்த நீரை உடலில் தெளித்துக் கொண்டால் சரும நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திங்களூர் சந்திரன் கோவிலில் லட்சார்ச்சனை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவையாறு அருகே திங்களூரில் உள்ள கைலாசநாதர் கோவில் நவக்கிரக தலங்களில் சந்திரனுக்குரிய கோவிலாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனிமாதம் பவுர்ணமி அன்று காலை சூரிய ஒளியானது மூலவர் கைலாசநாதர் மீது படும் நிகழ்வு நடக்கிறது.
இதை சூரிய தரிசனம் என அழைக்கிறார்கள். அதேபோல சந்திரபகவானும் கைலாசநாதரை தரிசனம் செய்வதாக கூறப்படுகிறது. இதையொட்டி பங்குனி மாதம் பவுர்ணமி நாளில் சந்திர பகவானுக்கு லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி பங்குனி பவுர்ணமியையொட்டி நேற்று லட்சார்ச்சனை விழா நடந்தது. இதையொட்டி சந்திரபகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனுமனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்த பின்னர் தொடங்கினால் வெற்றி கிடைப்பது உறுதி.
அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.
""நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!
நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!!
""நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!
நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!!
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோரமூர்த்திக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் அகோரமூர்த்தி சுவாமியாக தனி சன்னதியில் இந்த கோவிலில் அருள்பாலித்து வருகிறார். இவரின் திருமேனியின் அடிப்பகுதியில் அஷ்ட பைரவர்கள் காட்சியளிப்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இவரை வழிபட்டால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், நீ்ங்கி, செல்வ செழிப்பு கிடைப்பதாக ஐதீகம்.
பல்வேறு சிறப்புகளைப் பெற்ற அகோரமூர்த்தி சுவாமிக்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி அகோரமூர்த்தி சன்னதி முன்பு 1008 சங்குகள் புனித நீரால் நிரப்பி, சிறப்புயாகம் நடந்தது. தொடர்ந்து அகோரமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சங்காபிஷேகமும் நடந்தது. பின்னர் அகோர பூஜையும் தீபாராதனையும் காட்டப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று முன் தினம் நம்பெருமாள் ரெங்கநாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளினார்.
விழாவின் சிரக நிகழ்ச்சியான நேற்று பங்குனி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5.45 மணி அளவில் நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து கோரதம் என்னும் பங்குனிதேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.
பின்னர் காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 11 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
அப்போது, தேரின் முன் பக்தர்கள் சூடம், நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று (30-ந்தேதி) ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிகிறார். அத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனிப் திருவிழாவின் 11-வது நாளான இன்று (செவ்வாய்கிழமை) கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 18-ந் தேதிகொடியேற்றத்துடன் பங்குனிப் பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்கார லீலைநேற்று இரவு நடைபெற்றது.
தங்கமயில் வாகனத்தில் முருகப் பெருமான் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். திருவிழாவின் 11-வது நாளான இன்று (செவ்வாய்கிழமை) கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
இதில் முருகப்பெருமானுக்கு கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடக்கிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நாளை 31-ந்தேதி பகல் 11.50 மணிக்கு கோவிலுக்குள் முருக பெருமான் தெய்வானைக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது.
இதனையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் புறப்பட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் எழுந்தருள்கிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஏப்ரல் 1 -ந் தேதி கிரிவலப்பாதையில் மகா தேரோட்டம் நடக்கிறது விழா ஏற்பாடுகளைகோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

நாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை கோஷங்கள் எழுப்பிவாறு 4 ரத வீதிகள் வழியாக இழுத்து சென்றனர்.
நாமக்கல் மலைக்கோட்டையின் மேற்கு புறத்தில் பிரசித்தி பெற்ற நரசிம்மசாமி குடவறை கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நரசிம்மசாமி கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. கடந்த 27-ந் தேதி சாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மொய் செலுத்தி வழிபாடு செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று காலையில் நரசிம்மசாமி கோவில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நரசிம்மசாமி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேருக்கு எழுந்தருளினார்.
பின்னர் காலை 10 மணி அளவில் உதவி கலெக்டர் கோட்டைக்குமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேரை கோஷங்கள் எழுப்பிவாறு 4 ரத வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். மதியம் 12.20 மணி அளவில் தேர் நிலையை அடைந்தது.
இதேபோல் நேற்று மாலையில் அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த தேர்கள் தட்டாரத்தெரு, சேந்தமங்கலம் ரோடு, ரெங்கர் சன்னதி வழியாக நிலைக்கு வந்தன. இந்த தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது.
இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. மேலும் போக்குவரத்திலும் போலீசார் சிறிய அளவில் மாற்றம் செய்து இருந்தனர்.