என் மலர்

  ஆன்மிகம்

  கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
  X
  கும்பகோணம் சாரங்கபாணி கோவில்

  சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தேர் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. சித்திரை தேரோட்ட விழா கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடக்கிறது.
  கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. இக்கோவில் வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் தை முதல் நாளில் தை தேரோட்டமும், சித்திரை பவுர்ணமியில் சித்திரை பெரிய தேரோட்டமும் நடத்தப்படுவது வழக்கம்.

  சாரங்கபாணி கோவில் தேர் திருவாரூர் கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அடுத்ததாக மிகப்பெரிய தேர் என்ற சிறப்பை உடையது. இந்த ஆண்டு அடுத்த மாதம் (ஏப்ரல்) 26-ந் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது.

  இதையொட்டி நேற்று முன்தினம் மாலை தேர் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையடுத்து தேர் கட்டுமான பணிகள் தொடங்கின. சித்திரை தேரோட்ட விழா கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடக்கிறது. 21-ந் தேதி கருட சேவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
  Next Story
  ×