என் மலர்

  ஆன்மிகம்

  திருப்பரங்குன்றம் முருகன்
  X
  திருப்பரங்குன்றம் முருகன்

  திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு இன்று பட்டாபிஷேகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனிப் திருவிழாவின் 11-வது நாளான இன்று (செவ்வாய்கிழமை) கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
  திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 18-ந் தேதிகொடியேற்றத்துடன் பங்குனிப் பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்கார லீலைநேற்று இரவு நடைபெற்றது.

  தங்கமயில் வாகனத்தில் முருகப் பெருமான் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். திருவிழாவின் 11-வது நாளான இன்று (செவ்வாய்கிழமை) கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

  இதில் முருகப்பெருமானுக்கு கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடக்கிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நாளை 31-ந்தேதி பகல் 11.50 மணிக்கு கோவிலுக்குள் முருக பெருமான் தெய்வானைக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது.

  இதனையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் புறப்பட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் எழுந்தருள்கிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஏப்ரல் 1 -ந் தேதி கிரிவலப்பாதையில் மகா தேரோட்டம் நடக்கிறது விழா ஏற்பாடுகளைகோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
  Next Story
  ×