என் மலர்
ஆன்மிகம்

பொன்னப்பன், பூமிதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியபோது எடுத்தபடம்.
திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது
திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது பூலோக வைகுண்டம், திருவிண்ணகர் என்றெல்லாம் இக்கோவிலை பக்தர்கள் அழைக்கிறார்கள். பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி உற்சவர் பொன்னப்பன், பூமிதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story