என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சங்கடஹர சதுர்த்தி எனப்படும் தேய்பிறை சதுர்த்தி திதி அன்று, விநாயகர் கவசம் பாடினால், நம்முடைய சந்ததியினர், கல்வியிலும், செல்வத்திலும், வீரத்திலும் தலைசிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.
விநாயகரை வழிபட உகந்த நாளாக, சதுர்த்தி திதி உள்ளது. இந்த நாளில் விநாயகரை வழிபாடு செய்தால், எடுத்த காரியங்கள் எந்த தடையும் இன்றி நடந்தேறும் என்பது ஐதீகம். சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம் பாடி வழிபாடு செய்யலாம். சங்கடஹர சதுர்த்தி எனப்படும் தேய்பிறை சதுர்த்தி திதி அன்று, விநாயகர் கவசம் பாடினால், நம்முடைய சந்ததியினர், கல்வியிலும், செல்வத்திலும், வீரத்திலும் தலைசிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஆனைமுகன் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் கூட விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். இதனைத் தான் ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று பழமொழியாக நாட்டுப்புறத்தில் சொல்லுவர். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இப்படிச் சொல்லி வைத்தார்கள். கும்பத்திலும், கூர்ச்சத்திலும், ஓமாக்கினி யிலும் விநாயகப்பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடுவர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம்.
விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். அங்கு திரும்பிய இடமெல்லாம் விநாயகர் கோவிலும், வழிபாடும் நிகழ்வதைக் காண முடியும். தமிழ்நாட்டிலும் விநாயகர் இல்லாத இடம் இல்லை என்றே சொல்லலாம். ஒவ்வொரு தெருவிலும் ஒரு விநாயகர் கோவில் சிறிய அளவிலாவது இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு விநாயகர் வழிபாடு மக்கள் மத்தியில் இரண்டற கலந்து போய்விட்டது.
வெள்ளிக்கிழமை விரதம், செவ்வாய்க்கிழமை விரதம், சதுர்த்தி விரதம், குமார சஷ்டி விரதம், தூர்வா கணபதி விரதம், சித்தி விநாயகர் விரதம், துர்வாஷ்டமி விரதம், நவராத்திரி விரதம், வெள்ளிப் பிள்ளையார் விரதம், செவ்வாய்ப் பிள்ளையார் விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகியவை விநாயகருக்கான விரதங்கள் ஆகும். இவற்றில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதம் மிகவும் சிறப்புவாய்ந்தது.

பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களைத் தண்டிக்க அம்மனிடம் முறையிடுவதும், தீய சக்திகளால் பிரிய நேர்ந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து சேர்ந்து கொள்வதும் இக்கோவிலின் தனிச்சிறப்பு.
வெட்டுடையாரைக் கருப்பவேளார், காரிவேளார் என்ற பக்தர்கள் பூசித்து வந்தனர். ஒருசமயம் நள்ளிரவில் அய்யனார் சன்னதிக்கு அருகில் ஒரு ஈச்சமரத்தடியில் பேரொளி மின்னியதைக் கண்டனர். மறுநாள் காலையில் அங்கு அம்பிகையின் இயந்திரம் இருந்தது. அவ்விடத்தில் அம்பிகைக்கு சிலை வடித்து பிரதிட்டை செய்தனர். சுவாமியின் பெயரால் அவளுக்கு “வெட்டுடையார் காளி” என்றே பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் இவள் பிரசித்தி பெறவே, இவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்பெற்றது.
இப்பகுதியை ஆட்சி செய்த வீரப்பெண்மணி வேலுநாச்சியாருக்கு பிறந்த குழந்தை, பேசாமல் இருந்தது. அக்குழந்தை பேசவைக்கும்படி வேலுநாச்சியார் அம்பிகையை வேண்டி, குழந்தைக்கு பேச்சு வந்தது. இதனால், மகிழ்ந்த வேலுநாச்சியார் அம்பிகைக்கு வைரத்தாலி காணிக்கை செய்து கொடுத்தார்.
குழந்தை வரம் கிடைக்கவும், பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர். இவளை வேண்டி பிரார்த்தனை நிறைவேறி, பக்தர்கள் உபயமாகக் கிடைத்த 20 கிலோ தங்கத்தில் இருந்தே கோவில் கொடிமரம், தங்க குதிரை வாகனம் மற்றும் தேர் திருப்பணி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நோய் நீங்க, திருமணம் நடக்க, புத்திர தோஷங்கள் நீங்க, அம்பிகைக்கு அபிசேகம் செய்வித்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் வழிபடுகின்றனர். மாங்கல்ய தோசம் நீங்க, அம்பாள் பாதத்தில் தாலி வைத்து வாங்கிச் செல்கின்றனர். குழந்தைச் செல்வம் கிட்ட, கோவிலுக்கு வெளியே உள்ள விசிறி மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர். பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.
நான்தான் பெரியவன் என்னும் கருவத்தால் பிரிந்தவர்கள் பலர். இவர்கள் மீண்டும் ஒன்று சேர வழிபடும் பிரதானத் தலம் இது. பிரச்னையால் பிரிந்துவிட்டு மீண்டும் சேர விரும்பும் தம்பதியர், உறவினர், சகோதரர்கள் இங்கு “கூடுதல் வழிபாடு” என்னும் பிரார்த்தனை செய்கின்றனர். பிரிந்து சென்றோர் இங்கு வந்து அம்பாளுக்கு பொங்கல் வைத்து, அதை அம்பிகை சன்னதி முன் வைத்து ஒன்றாகக் கூடுகின்றனர். பின், அம்பிகைக்கு முன், பிரச்னை ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் சமரசம் செய்து, தாங்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வழிபடுகின்றனர். அம்பிகையே இவர்களுக்கு நடுநாயகமாக இருந்து சேர்த்து வைப்பதாக ஐதீகம்.
பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களைத் தண்டிக்க அம்மனிடம் முறையிடுவதும், தீய சக்திகளால் பிரிய நேர்ந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து சேர்ந்து கொள்வதும் இக்கோவிலின் தனிச்சிறப்பு.
அருள்மிகு வெட்டுடையார் காளி கோவில்,
கொல்லங்குடி வழி,
விட்டனேரி போஸ்ட்,
அரியாக்குறிச்சி- 623 556.
சிவகங்கை மாவட்டம்.

நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலுக்கு யானை மீது சந்தனகுடம் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மண்டைக்காடு அருேக நடுவூர்க்கரை சிவசக்தி கோவில் பங்குனி திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் 9-ம் நாளன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, திருப்பள்ளி உணர்த்தல், தீபாராதனை, புஷ்பாபிஷேகம், சிறப்பு பூஜை, அன்னதானம் ஆகியவை நடந்தது.
அதைத்தொடர்ந்து கருமன்கூடல் அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கலில் இருந்து சமய வகுப்பு மாணவ-மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்ற யானை மீது சந்தனகுடம் பவனி நடந்தது.
இந்த பவனியை நிழல்தாங்கல் நிர்வாகி கிருஷ்ணானந்தம் தொடங்கி வைத்தார். இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜரெத்தினம், குமரேசன், சடையன் நாகராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், இளைஞர் மன்ற தலைவர் நிகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யானை ஊர்வலமானது சிங்காரி மேளத்துடன் புறப்பட்டு கருமன்கூடல், லெட்சுமிபுரம், பருத்திவிளை, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், மணலிவிளை வழியாக கோவிலை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார பூைஜ நடந்தது.
விழாவின் 10-ம் நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளி உணர்த்தல், தீபாராதனை, கடலுக்கு சென்று புனித நீர் எடுத்து வருதல், மதியம் சிலம்பாட்டம், மாலை நாதஸ்வர கச்சேரி, இரவு 7 மணிக்கு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சமய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் ஆகியவை நடந்தது.
நிகழ்ச்சியில் தலைவர் சுந்தரபாலன் தலைமை தாங்க, பொருளாளர் சிவராஜ், அமைப்பாளர் முருகன், மண்டைக்காடு பேரூராட்சி முன்னாள் தலைவி மகேஸ்வரி முருகேசன், தொழிலதிபர் கல்யாணசுந்தரம், சமய வகுப்பு ஆசிரியர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் சுந்தர் வரவேற்றார். பத்மநாபபுரம் கோர்ட்டு முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி தர்மபிரபு கலந்து கொண்டு பேசினார். முடிவில் நிர்வாக செயலாளர் குமாரதாஸ் நன்றி கூறினார். இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜை, அதிகாலை 2 மணிக்கு ஒடுக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வழக்கமாக அம்பாள் கோவில்களில், சன்னதியில் பூசித்த எலுமிச்சை கனிகளைத்தான் பிரசாதமாகத் தருவர். இக்கோவிலில் எலுமிச்சை சாற்றைக் கொடுக்கிறார்கள்.
மூலவர் - ஏகவுரி அம்மன்
பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் - வல்லம்
மாவட்டம் - தஞ்சாவூர்
மாநிலம் - தமிழ்நாடு
பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன், தேவர்களைத் துன்புறுத்தினான். இதனால், கலங்கிய தேவர்கள் சிவனிடம், தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், அம்பிகையை அனுப்பினார். அவள் அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து அம்பிகையுடன் சண்டையிட்டான். ஒரு கட்டத்தில் எருமை வடிவம் எடுத்தான். அம்பிகை, அவனை தன் சூலத்தால் குத்தி வதம் செய்தாள். இதனால், அம்பிகைக்கு உக்கிரம் அதிகமானது. முதலில் அசுரனால் துன்பப்பட்ட தேவர்களுக்கு, இப்போது தங்களைக் காக்க வந்த அம்பிகையாலேயே துன்பம் ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் சிவனை வேண்டினர். சிவன் அம்பிகையை நோக்கி,”ஏ கவுரி. சாந்தம் கொள்” (கவுரி என்பது அம்பிகையின் ஒரு பெயர்) என்றார். கணவன் சொல் கேட்ட அம்பிகை சாந்தமானாள். இவளுக்கு கரிகாலற்சோழ மன்னன் இங்கு கோவில் எழுப்பினான். சிவன் அழைத்த பெயரிலேயே இவளுக்கு “ஏகவுரியம்மன்” என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் வல்லன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் தலத்திற்கு வல்லம் என்றும், அம்பிகைக்கு “வல்லத்துக்காளி” என்றும் பெயர்கள் ஏற்பட்டது.
தீயது அழியும்; நல்லது நடக்கும்:
அம்பிகை அக்னி கிரீடம் அணிந்து, இரண்டு தலைகளுடன் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். ஒரு தலை கோரைப்பல்லுடன் உக்கிரமாக உள்ளது. இது, அசுரனை அழித்த கோப வடிவமாகும். இது, பக்தர்களுக்கு ஏற்படும் தீமைகளை அழிக்கும் சக்தியாகும். இதற்கு மேலுள்ள மற்றொரு தலை அமைதியே வடிவமாக உள்ளது. இது, நல்லதை அருளும் சாந்தமான நிலை ஆகும். எட்டு கைகளில் சூலம், கத்தி, உடுக்கை, நாகம், கேடயம், மணி, கபாலமும், பார்வதியின் அம்சத்தை உணர்த்தும் விதமாக கிளியும் உள்ளது. பாதத்தின் கீழே ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
எலுமிச்சை சாறு பிரசாதம்:
வழக்கமாக அம்பாள் கோவில்களில், சன்னதியில் பூசித்த எலுமிச்சை கனிகளைத்தான் பிரசாதமாகத் தருவர். இக்கோவிலில் எலுமிச்சை சாற்றைக் கொடுக்கிறார்கள். குழந்தைச் செல்வம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே, இந்த பிரசாதம் கொடுக்கப்படும். அம்பிகையை வேண்டி இங்கேயே எலுமிச்சை சாற்றை குடித்து விட வேண்டும். இதனால், விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மங்கலம் தரும் மஞ்சள்:
அம்பிகைக்கு இருபுறமும் ராகு, கேது நாக வடிவங்கள் உள்ளன. இவையிரண்டும் அம்பிகையின் கட்டுப்பாட்டின் கீழிருப்பதாக ஐதீகம். களத்திர தோடம், காலசர்ப்ப தோடத்தில் திருமணத்தடை ஏற்பட்ட பெண்களுக்கான பிரதான வழிபாட்டுத் தலம் இது. பெண்கள் அம்பிகைக்கு குளியல் மஞ்சள் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். பின், அதையே பிரசாதமாகத் தருகின்றனர். தினமும் அந்த மஞ்சள் தேய்த்து பெண்கள் நீராடி வர, விரைவில் நல்ல வரன் அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த மஞ்சளின் வடிவிலேயே அம்பிகை, பக்தர்களின் வீட்டிற்கு எழுந்தருளுவாள் என்பது ஐதீகம்.
காக்கும் தெய்வம்:
தஞ்சாவூரை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்களின், குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் வழிபடப்பட்ட அம்பிகை இவள். சோழ மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்பு இவளை வணங்கி, உத்தரவு கேட்டபின்பே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கரிகாற்சோழ மாகாளி, கைத்தலப்பூசல்நங்கை, வல்லத்துப்பட்டாரிகை, காளாப்பிடாரி, ஏகவீரி என்று இவளுக்குப் பெயர்களுண்டு. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அம்பிகைகக்கு ஹோமத்துடன் விசேட பூசை நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று அம்பிகைக்கு சண்டிஹோமம் நடக்கும். ஆடி கடைசி வெள்ளியன்று நடக்கும் விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கியும், பால் குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் அம்பிகைக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பிரகாரத்தில் வராகி, பிரத்யங்கிரா, சுப்பிரமணியர், காவல் தெய்வங்கள் சாலியங்காத்தான், லாடசன்னாசி, வெள்ளையம்மாள், பொம்மியுடன் மதுரை வீரன், கருப்பசாமி, ஏகாம்பரம், பட்டவராயர் மற்றும் சிவலிங்கம், சப்தகன்னியர் உள்ளனர்.
திருவிழா:
ஆடி கடைசி வெள்ளி, ஆடிப்பெருக்கு, அமாவாசை, பவுர்ணமி குழந்தைச் செல்வம் கிடைக்கவும், களத்திர தோடம், காலசர்ப்ப தோடத்தால் திருமணத்தடை ஏற்பட்ட பெண்கள் வழிபடும் தலம் இது. நோயால் பாதிக்கப்பட்ட கணவர் குணம் பெற, பெண்கள் இங்கு வேண்டி எருமைக்கன்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். எருமை எமதர்மனுக்குரிய வாகனம் என்பதன் அடிப்படையில் இந்த வழிபாட்டைச் செய்கின்றனர்.
காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
அருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோவில்
வல்லம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
+91 94435 86453, 98437 36037 (மாற்றங்களுக்குட்பட்டவை)

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் பஞ்சப்பிரகார விழாவையொட்டி சுவாமி அம்பாள் வேடத்திலும், அம்பாள் சுவாமி வேடத்திலும் உருமாறி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் கடந்த 16-ந் தேதி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
விழாவின் 29-ம் நாளான நேற்று பஞ்சப்பிரகார வைபவ காட்சி நடைபெற்றது. பிரம்மன் தான் படைத்த பெண்ணின் அழகில் மயங்கி படைக்கும் தொழிலை மறந்து இருந்தார். அவருக்கு புத்திபுகட்டும் வகையில் சுவாமி அம்பாள் வேடத்திலும், அம்பாள் சுவாமி வேடத்திலும் சென்று பிரம்மனுக்கு நல்புத்தி வழங்கியதே இந்த வைபவமாகும்.
இந்த வைபத்தையொட்டி சிவபெருமான் அம்பாள் வடிவத்திலும், அம்பாள் சிவபெருமாள் வடிவத்திலும் உருமாறி வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி ஆஸ்தான உற்சவமூர்த்தி சன்னதியில் எழுந்தருளி நள்ளிரவு 12 மணிவரை பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
விழாவின் 30-ம் நாளான இன்று (புதன்கிழமை) விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் மண்டலாபிஷேகத்துடன் பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

திருமால் எடுத்த அவதாரங்களில் ஏழாவது அவதாரமான ராம அவதாரத்திற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் பார்க்கலாம். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வித புருஷார்த்தங்களும் இம்மந்திர ஜப பலனால் கிட்டும்,
அயோத்யா நகரே ரம்யே ரத்நஸெளந்தர்ய மண்டபே
மந்தார புஷ்பைராபத்த விதாநே தோரணாங்கிதே
ஸிம்ஹாஸந ஸமாரூட்ம புஷ்பகோபரி ராகவம்
ரக்ஷோபிர் ஹரிபிர் தேவைர்திவ்ய யாநகதைஹி ஸுபைஹி
ஸம்ஸ்தூயமாநம் முநிபிஹி சர்வதஹ பரிஸேவிதம்
ஸீதாலங்க்ருத வாமாங்கம் லக்ஷ்மணேநோப ஸோபித்ம்
ஸ்யாமம் ப்ரஸந்ந வதநம் ஸர்வாபரண பூஷித்ம்
மூல மந்திரம்
ஓம் ஹும் ஜாநகீவல்லபாய ஸ்வாஹா,
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்வர். இம்மந்திரம் தாரக மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வித புருஷார்த்தங்களும் இம்மந்திர ஜப பலனால் கிட்டும்,

மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் வள்ளி-தெய்வானை சமேத முருகன் எழுந்தருளி மலை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
மயிலத்தில் மயில்வடிவ மலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் திருக்கல்யாணம், தேரோட்டம், தீர்த்தவாரி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் நேற்று முன்தினம் இரவு முத்து பல்லக்கில் சாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் வள்ளி-தெய்வானை சமேத முருகன் எழுந்தருளி மலை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20-ம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் எளிமையான முறையில் நடந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டு்ம் தீ மிதித்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
பண்ணாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் விவசாயிகள் தங்கள் வளர்ப்பு மாடுகளை குண்டம் இறங்க வைத்து அம்மனை வழிபடுவார்கள். இதுதவிர விவசாய நிலங்களில் விளையும் பயிர்களையும் குண்டத்தில் இட்டு வழிபடுவார்கள். இதனால் விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.
குண்டம் திருவிழா பூச்சாட்டுதல் தொடங்கியதும் மழை பெய்யும். அதே போல் இந்த ஆண்டு திருவிழாவுக்காக பூச்சாட்டப்பட்டதும் பண்ணாரியில் மழை கொட்டியது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா கட்டுப்பாடுகளுடன் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இதன்படி கடந்த 15-ந் தேதி எளிமையான முறையில் கோவிலில் பூச்சாட்டுதல் நிகழ்வுடன் திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெறும் அம்மன் திருவீதி உலாவும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று அதிகாலை முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 3.30 மணி அளவில் கோவிலில் இருந்து தாரை தப்பட்டை மற்றும் பீனாச்சி வாத்தியம் முழங்க பூசாரிகள் ஊர்வலமாக தெப்பக்குளத்துக்கு சென்று பூஜை செய்தனர். பின்னர் அங்கிருந்து படைக்கலத்துடன் மீண்டும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தடைந்தனர்.
அதன் பின்னர் கோவில் முன்பு ஏற்கனவே தயார் செய்யப்பட்ட குண்டத்துக்கு தலைமை பூசாரி ராஜேந்திரன் தலைமையில் பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் பற்ற வைக்கப்பட்டு தலைமை பூசாரி ராஜேந்திரன் பூ தூவி வணங்கி பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினார். தொடர்ந்து கோவில் பூசாரிகள் ஆறுமுகம், செந்தில்குமார் மற்றும் படைக்கல பூசாரிகள் என மொத்தம் 11 பேர் மட்டுமே குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை.
வழக்கமாக அதிகாலை 4 மணி அளவில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்வு தொடங்கி மாலை 4 மணி வரை 12 மணி நேரம் நடைபெறும். இதில் சுமார் 1½ லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு 11 பூசாரிகள் மட்டும் தீ மிதித்ததால் 5 நிமிடத்தில் குண்டம் இறங்கும் நிகழ்வு நிறைவு பெற்றது.
இதையடுத்து பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், வீணை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) இரவு 7.25 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 23-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர்.
திருவிழாவையொட்டி தினமும் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் முத்துமாரியம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
திருவிழாவை காண சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் கோவிலுக்கு வந்திருந்தனர்.
இதை தொடர்ந்து நேற்று அதிகாலை கோவிலை சுற்றி ஆங்காங்கே பொங்கல் பானை வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழிகளை பலியிட்டு அங்கேயே விருந்து வைத்து சாப்பிட்டனர்.
விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) இரவு 7.25 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நாளை (1-ந்தேதி) அன்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், மாவிளக்கு எடுத்தல், கரும்பு தொட்டில் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலையில் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை மறுநாள் (2-ந்தேதி) காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

காளையார்கோவில் அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காளையார்கோவில் அருகே உள்ள கொல்லங்குடி அரியாகுறிச்சி கிராமத்தில் வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. நீதி தேவதையாக உள்ள இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு திருவிழா கடந்த 22-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் இரவு பூதகி வாகனம், கிளி வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், காளை வாகனம், சிம்ம வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார். காலை 8 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதி்ல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கோவிலை சுற்றி நான்கு ரத வீதி வழியாக வந்து நிலையை வந்தடைந்தது.
தொடர்ந்து இரவு அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10-ம் திருநாளான இன்று(புதன்கிழமை) காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மாலை சந்தனக்குடம், பால்குடம் ஆகிய நிகழ்ச்சியும், இரவு மலர் பல்லக்கில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை காலை விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் மற்றும் இரவு மூலஸ்தான அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க ரத புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை இணை ஆணையர் தனபால் உத்தரவின்பேரில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் சிவலிங்கம், கோவில் செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழாவில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடந்தது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளியில் தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் கோவில் உள்ளது. திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற கோவிலான இங்கு சப்தஸ்தான விழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு அய்யம்பேட்டை சவுராஷ்டிரா சபைக்கு சொந்தமான கண்ணாடி பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் எழுந்தருளினார். அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோபுர தரிசனமும், சாமி தரிசனமும் செய்தனர்.
தொடர்ந்து பல்லக்கு அய்யம்பேட்டை எல்லைவரை சென்று பின்னர் வழுத்தூர், சரபோஜிராஜபுரம், சூலமங்கலம், நல்லிச்சேரி, பசுபதிகோவில் ஆகிய ஊர்களில் வலம் வந்தது. இரவு குடமுருட்டி ஆற்றில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) பல்லக்கு இலுப்பக்கோரை கிராமத்திற்கு சென்று மீண்டும் பசுபதிகோவிலை வந்தடைகிறது.
தொடர்ந்து அய்யம்பேட்டை முக்கிய வீதிகளில் வலம் வந்து இன்று மாலை மதகடி பஜார் அருகே உள்ள அழகுநாச்சி அம்மன் கோவில் முன்பாக பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் நிர்வாகிகள், அய்யம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஏழூர் கிராம மக்கள் செய்துள்ளனர்.
இன்று மாலை பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை - கும்பகோணம் சாலையில் மாலை 4 மணி முதல் பூ போடும் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன் படி தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் வாகனங்கள் திருவையாறு, கபிஸ்தலம், பாபநாசம் வழியாக கும்பகோணம் சென்றடையும். அதே போல கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் வாகனங்கள் பாபநாசம், கபிஸ்தலம், திருவையாறு வழியாக தஞ்சை சென்றடையும் என போலீசார் தெரிவித்தனர்.

பெரிய வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 28-ந் தேதி குருத்தோலை திருநாள் அனுசரிக்கப்பட்டது. அன்று முதல் ஈஸ்டர் வரை புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
புனித வாரத்தில் பெரிய வியாழன் எனப்படும் பாஸ்கா வியாழன் முக்கிய நாளாக அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முந்தைய தினம் தன்னுடைய 12 சீடர்களுடன் பாஸ்கா விருந்து (கடைசி இரவு உணவு) உண்டார். அப்போது அவர் ஒரு துண்டை எடுத்து தனது இடுப்பில் கட்டிக்கொண்டு 12 சீடர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவினார். பின்னர் அவர் "நான் செய்தது போல் நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்" என்று தனது சீடர்களிடம் கூறினார்.
அதன் நினைவாக நாளை (வியாழக்கிழமை) பெரிய வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை நடைபெறும் திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடுகளில் ஆயர்கள், பங்கு அருட்பணியாளர்கள் இயேசுவின் சீடர்களை குறிக்கும் வகையில் 12 பேர்களின் பாதங்களை கழுவுகிறார்கள். திருப்பலிக்கு பின்னர் நள்ளிரவு 12 மணி வரை நற்கருணை ஆராதனை நடக்கிறது.நாளை மாலை நடைபெறும் திருப்பலியில் "உன்னதங்களிலே" என்ற வானவர் கீதம் பாடப்படும் போது ஆலய மணிகள் ஒலிக்கும். அதன்பிறகு ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி வரை ஆலய மணிகள் ஒலிக்காது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது.