search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கருமன்கூடல் அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கலில் இருந்து யானை மீது சந்தனகுடம் பவனியாக வந்த போது எடுத்தபடம்.
    X
    கருமன்கூடல் அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கலில் இருந்து யானை மீது சந்தனகுடம் பவனியாக வந்த போது எடுத்தபடம்.

    நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலுக்கு யானை மீது சந்தனகுடம் பவனி

    நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலுக்கு யானை மீது சந்தனகுடம் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    மண்டைக்காடு அருேக நடுவூர்க்கரை சிவசக்தி கோவில் பங்குனி திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் 9-ம் நாளன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, திருப்பள்ளி உணர்த்தல், தீபாராதனை, புஷ்பாபிஷேகம், சிறப்பு பூஜை, அன்னதானம் ஆகியவை நடந்தது.

    அதைத்தொடர்ந்து கருமன்கூடல் அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கலில் இருந்து சமய வகுப்பு மாணவ-மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்ற யானை மீது சந்தனகுடம் பவனி நடந்தது.

    இந்த பவனியை நிழல்தாங்கல் நிர்வாகி கிருஷ்ணானந்தம் தொடங்கி வைத்தார். இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜரெத்தினம், குமரேசன், சடையன் நாகராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், இளைஞர் மன்ற தலைவர் நிகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யானை ஊர்வலமானது சிங்காரி மேளத்துடன் புறப்பட்டு கருமன்கூடல், லெட்சுமிபுரம், பருத்திவிளை, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், மணலிவிளை வழியாக கோவிலை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார பூைஜ நடந்தது.

    விழாவின் 10-ம் நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளி உணர்த்தல், தீபாராதனை, கடலுக்கு சென்று புனித நீர் எடுத்து வருதல், மதியம் சிலம்பாட்டம், மாலை நாதஸ்வர கச்சேரி, இரவு 7 மணிக்கு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சமய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் ஆகியவை நடந்தது.

    நிகழ்ச்சியில் தலைவர் சுந்தரபாலன் தலைமை தாங்க, பொருளாளர் சிவராஜ், அமைப்பாளர் முருகன், மண்டைக்காடு பேரூராட்சி முன்னாள் தலைவி மகேஸ்வரி முருகேசன், தொழிலதிபர் கல்யாணசுந்தரம், சமய வகுப்பு ஆசிரியர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் சுந்தர் வரவேற்றார். பத்மநாபபுரம் கோர்ட்டு முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி தர்மபிரபு கலந்து கொண்டு பேசினார். முடிவில் நிர்வாக செயலாளர் குமாரதாஸ் நன்றி கூறினார். இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜை, அதிகாலை 2 மணிக்கு ஒடுக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×