search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவாமி அம்பாள் வேடத்திலும், அம்பாள் சுவாமி வேடத்திலும் உருமாறி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
    X
    சுவாமி அம்பாள் வேடத்திலும், அம்பாள் சுவாமி வேடத்திலும் உருமாறி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவிலில் பஞ்சப்பிரகார விழா

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் பஞ்சப்பிரகார விழாவையொட்டி சுவாமி அம்பாள் வேடத்திலும், அம்பாள் சுவாமி வேடத்திலும் உருமாறி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் கடந்த 16-ந் தேதி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    விழாவின் 29-ம் நாளான நேற்று பஞ்சப்பிரகார வைபவ காட்சி நடைபெற்றது. பிரம்மன் தான் படைத்த பெண்ணின் அழகில் மயங்கி படைக்கும் தொழிலை மறந்து இருந்தார். அவருக்கு புத்திபுகட்டும் வகையில் சுவாமி அம்பாள் வேடத்திலும், அம்பாள் சுவாமி வேடத்திலும் சென்று பிரம்மனுக்கு நல்புத்தி வழங்கியதே இந்த வைபவமாகும்.

    இந்த வைபத்தையொட்டி சிவபெருமான் அம்பாள் வடிவத்திலும், அம்பாள் சிவபெருமாள் வடிவத்திலும் உருமாறி வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி ஆஸ்தான உற்சவமூர்த்தி சன்னதியில் எழுந்தருளி நள்ளிரவு 12 மணிவரை பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    விழாவின் 30-ம் நாளான இன்று (புதன்கிழமை) விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் மண்டலாபிஷேகத்துடன் பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×