என் மலர்

  ஆன்மிகம்

  திருவையாறு அருகே திங்களூர் சந்திரன் கோவிலில் பங்குனி பவுர்ணமியையொட்டி லட்சார்ச்சனை நடைபெற்றபோது எடுத்த படம்.
  X
  திருவையாறு அருகே திங்களூர் சந்திரன் கோவிலில் பங்குனி பவுர்ணமியையொட்டி லட்சார்ச்சனை நடைபெற்றபோது எடுத்த படம்.

  திங்களூர் சந்திரன் கோவிலில் லட்சார்ச்சனை விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திங்களூர் சந்திரன் கோவிலில் லட்சார்ச்சனை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  திருவையாறு அருகே திங்களூரில் உள்ள கைலாசநாதர் கோவில் நவக்கிரக தலங்களில் சந்திரனுக்குரிய கோவிலாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனிமாதம் பவுர்ணமி அன்று காலை சூரிய ஒளியானது மூலவர் கைலாசநாதர் மீது படும் நிகழ்வு நடக்கிறது.

  இதை சூரிய தரிசனம் என அழைக்கிறார்கள். அதேபோல சந்திரபகவானும் கைலாசநாதரை தரிசனம் செய்வதாக கூறப்படுகிறது. இதையொட்டி பங்குனி மாதம் பவுர்ணமி நாளில் சந்திர பகவானுக்கு லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம்.

  அதன்படி பங்குனி பவுர்ணமியையொட்டி நேற்று லட்சார்ச்சனை விழா நடந்தது. இதையொட்டி சந்திரபகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  Next Story
  ×