என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் தெப்ப உற்சவம் இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் தாயுமானவர் திருமேனியில் மாலை நேரத்தில் சூரிய ஒளிபட்டு பொன் வண்ணமாக பக்தர்களுக்கு தாயுமானசுவாமி காட்சி அளிப்பார்.
தாயுமான சுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கில் பிரம்ம தீர்த்தம் என்ற (சோம ரோகிணி) தெப்பகுளம் கரிகால் சோழனால் கட்டப்பட்டுள்ளது. இந்த தெப்பக்குளத்தின் நடு பகுதியில் அழகிய நீராழி மண்டபம் விஸ்வநாத நாயக்கரால் அமைக்கப்பட்டது.
இந்த தெப்பகுளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமிக்கு தெப்பத்திருவிழா ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் உத்திரத்திற்கு முந்தைய நாள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தெப்பத் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று மாலை முதல் சுவாமி அம்பாளுக்கு ஒவ்வொருநாளும் இரவு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் புறப்பாடு நடைபெற்று வருகிறது. தெப்பக்குளத்தின் நடு பகுதியில் உள்ள நீராழி மண்டபம் மற்றும் மலைக்கோட்டை மேலே உள்ள கோபுரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று(சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் வெவ்வேறு வாகனங்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள திருகொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார்.
பின்னர் சித்திரை வீதிகளில் வலம்வந்து ஆழ்வார் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதிக்கு இரவு 8.30 மணிக்கு வந்து சேர்ந்தார். இரவு 11.30 மணியளவில் தாயார் சன்னதியில் திருமஞ்சனம் கண்டருளினார்.
திருவிழாவின் 8-ம் நாளான இன்று (சனிக்கிழமை) நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி எல்லைக்கரை ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 11 மணிக்கு சென்றடைகிறார். அங்கிருந்து நம்பெருமாள் குதிரை வாகனத்தில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகள் வலம் வந்து இரவு 8.45 மணிக்கு கோரதம் அருகே வையாளி கண்டருளுகிறார்.
திருவிழாவின் 9-ம்நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும், தாயாரும் ஒரு சேர காட்சி அளிப்பார்கள். இந்த காட்சியை சேர்த்தி சேவை என்று அழைப்பர். தாயாரையும், பெருமாளையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம். இந்த சேர்த்தி சேவையை தரிசிக்க லட்சக்கணக்கான தம்பதிகள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தருவர்.
ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தினத்தன்று நடைபெறும் இந்நிகழ்ச்சியையொட்டி நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியே காலை 9.30 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைகிறார். பின்னர் சமாதானம் கண்டருளி பகல் 12 மணிக்கு முன்மண்டபம் வந்து சேருகிறார். 12.30 மணியிலிருந்து 1.15 மணிவரை முதல் ஏகாந்தம் நடைபெறுகிறது.
பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு பகல் 2மணிக்கு வந்து சேருகிறார். மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் சேர்த்தி மண்டபத்தை பகல் 2.15 மணிக்கு வந்தடைகிறார். பகல் 3 மணிமுதல் இரவு 10.30 மணி வரை நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. 30-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்டசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. 1-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நண்பகல் 12 மணிக்கு பதியில் இருந்து அய்யா வழி பக்தர்கள் தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு நெற்றியில் நாமம் இட்டு அய்யா அரகரா சிவசிவா என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி பால் கடலில் தீர்த்தமாட ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். பின்னர் வெள்ளியல் பாறையைச் சென்றடைந்ததும் அங்குள்ள கடலில் அய்யா வழி பக்தர்கள் தீர்த்தமாடினர். இரவு 7 மணிக்கு கருட வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதியை சுற்றி பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.
2-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) முதல் 5-ம் திருவிழா வரை இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 6 மற்றும் 7-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு சப்பர வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும், 8-ம் திருவிழாவான 2-ந் தேதி கலி வேட்டை நிகழ்ச்சியும் நடக்கிறது.
கலிவேட்டையையொட்டி அன்று இரவு 8 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று முட்டப்பதியின் வடக்கே கடலில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
11-ம் திருவிழாவான 5-ந் தேதி மாலை 5 மணிக்கு அய்யா சப்பர வாகனத்தில் எழுந்தருளி பதியைசுற்றி பவனி வந்து விடியற்காலை வரை திரு ஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் திருவிழாவையொட்டி 11 நாட்களும் இரவு 7 மணிக்கு வாகன பணிவிடையும், அன்னதானமும் நடைபெறும். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை முட்டப்பதி தலைமை தர்மகர்த்தா பாலசுந்தரம், தர்மகர்த்தாக்கள் செல்வராஜன், ராஜபிரபு ஆகியோர் செய்துள்ளனர்.

மன்னார்குடியில் உள்ள லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் தீராத துன்பங்களும் தீரும் என்பதும் நீண்ட நாள் சொத்து பிரச்சினைகள் அகலும் என்பதும் இங்கு வந்து வழிபட்டு செல்பவர்களின் வாக்குமூலமாக உள்ளது.
‘நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில்’ என்பது கூற்று. அதாவது எப்படி தன்னுடைய பக்தன் பிரகலாதன் உயிருக்கு ஆபத்து என்றவுடன் நொடிப்பொழுதும் தாமதிக்காமல் தூணை பிளந்து அவதாரம் எடுத்து பிரகலாதனை காப்பாற்றினாரோ அதே போல நரசிம்மனை வேண்டுபவர்களுக்கு உடனடியாக துன்பத்தை போக்குபவர் என்பதால் இந்த கூற்று உருவாயிற்று.
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ராஜகோபுரத்திற்கு முன்பு தென்புறமாக அகோபில மடத்திற்குச் சொந்தமான ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் தீராத நாட்பட்ட துன்பங்களும் தீரும் என்பதும் நீண்ட நாள் சொத்து பிரச்சினைகள் அகலும் என்பதும் இங்கு வந்து வழிபட்டு செல்பவர்களின் வாக்குமூலமாக உள்ளது.
இந்த லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரதோஷம் மற்றும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு திருமஞ்சனம் மற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பக்தர்கள் லட்சுமி நரசிம்மரின் பூரண அருளை பெறலாம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பசாமிக்கு ஆறாட்டும் நடைபெறும். தொடர்ந்து மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது.
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மாத பூஜையை முன்னிட்டு 19-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பிறகு அதன் தொடர்ச்சியாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் விழாவில், வழக்கமான பூஜைகளுடன், ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெற்று வந்தது. இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், நாளை காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பசாமிக்கு ஆறாட்டும் நடைபெறும்.
தொடர்ந்து மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
பின்னர் சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 14-ந் தேதி விஷு பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து 18-ந் தேதி வரை கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற உள்ளது.

லால்குடியில் சப்தரிஷீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடியில் சப்தரிஷீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சப்தரிஷிகளும் வழிபட்டு முக்தி தந்த தலமாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பங்குனி தேரோட்டம் மிகச் சிறப்பாக நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தேரோட்டம் நடைபெற வில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டு பங்குனி தேரோட்டம் கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 21-ந்தேதி நாயன்மார்கள் வீதிஉலா, 23-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், சுவாமி தேர், அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய 5 தேர்களில் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து லால்குடி மற்றும் சுற்றுப்புற கிராமமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு லால்குடியில் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேம் நடைபெற்று 6-ம் ஆண்டுகள் ஆனதையொட்டி சங்காபிஷேக விழா இன்று (சனிக்கிழமை) மாலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது.

மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை மணக்குள விநாயகருக்கு கலசாபிஷேம், 1,008 சங்காபிஷேகமும், உற்சவமூர்த்திக்கு 108 சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து நாதஸ்வர கச்சேரியும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக சாயரட்சை பூஜைக்கு பிறகு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமார சுவாமி எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமார சுவாமி உலா வந்தார்.
பின்னர் நடந்த தங்கரத புறப்பாட்டில் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை, உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு, வடம் பிடித்து ரதத்தை இழுத்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவ விழாவின் 3-வது நாளில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து, தெப்பத்தில் எழுந்தருளினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து, தெப்பத்தில் எழுந்தருளினர்.
ெதப்பத்தில் எழுந்தருளிய உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில் பெரிய ஜீயர்சுவாமிகள், கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டி.பி.ஆனந்தா, சிப்பகிரி வரபிரசாத், தேவஸ்தான என்ஜினீயர் ரமேஷ் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அறுபத்து மூவர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. வீதி உலாவின் போது, பக்தர்கள், கபாலீ... ஓம் நமச்சிவாய... தென்னாடுடைய சிவனே போற்றி... போன்ற கோஷங்களை எழுப்பினர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அதைதொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான அறுபத்து மூவர் வீதி உலா நேற்று நடைபெற்றது. அதன்படி, கபாலீசுவரர் வெள்ளி வாகனத்தில் எழுந்தருளி 63 நாயன்மார்களுடன் திருஞானசம்பந்தர், அங்கம் பூம்பாவை, சிவநேச செட்டியார் ஆகியோருக்கு காட்சி அளிப்பதாக ஐதீகம்.
அறுபத்து மூவர் வீதி உலாவையொட்டி, கபாலீசுவரர் வெள்ளி வாகனத்தில் கோபுர வாசலில் உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அதேபோல் கற்பகாம்பாள், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானும் ஐம்பொன் வாகனத்தில் தனித்தனியே எழுந்தருளினர். இவர்களுக்கு முன்னால் திருஞானசம்பந்தர், அங்கம் பூம்பாவை, சிவநேச செட்டியார் ஆகியோர் தனித்தனி பல்லக்கில் வந்து இறைவனை தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து 63 நாயன்மார்கள் வாகனத்திற்கு 4 பேர் வீதம் 16 சிறிய வாகனங்களில் எழுந்தருளினர். அவர்களுக்கு கபாலீசுவரர் வாகனத்தின் முன்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், சைவ குறவர்களும் வாகனங்களில் எழுந்தருளினர். பின்னர் மேள தாளம், சங்க நாதம், பஞ்சவாத்தியம் முழங்க அறுபத்து மூவர் வீதி உலா நிகழ்ச்சி தொடங்கியது.
வீதி உலாவில் மயிலாப்பூர் காவல் தெய்வமான கோலவிழி அம்மன் வாகனம் முதலில் செல்ல அதைதொடர்ந்து பிள்ளையார் வாகனம் மற்றும் திருஞானசம்பந்தர், அங்கம் பூம்பாவை, சிவநேச செட்டியார் ஆகியோரின் பல்லக்குகள், 63 நாயன்மார்கள் வாகனங்கள் செல்ல அவர்களை தொடர்ந்து கபாலீசுவரர், கற்பகாம்பாள், வள்ளி, தெய்வானை சமேத முருகன், சண்டிகேசுவரர் வாகனங்களும் தொடர்ந்து சென்றன.
அதைதொடர்ந்து திருவள்ளுவர்-வாசுகி எழுந்தருளிய வாகனம், மந்தைவெளி சிங்கார வேலர் வாகனங்களும் வரிசையாக சென்றன. மேலும் முண்டகக்கண்ணி அம்மன், வீரபத்திரர் சுவாமிகள் வாகனங்களும் வீதி உலா வந்தன. அறுபத்து மூவர் வீதி உலாவையொட்டி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் 4 மாட வீதிகளிலும் பெண்கள் சாமிக்கு இனிப்புகளை படைத்து வழிபட்டுவிட்டு, அவற்றை மக்களுக்கு வழங்கினர். ஆங்காங்கே அன்னதானங்கள் மற்றும் நீர் மோர், இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிறைவாக நேற்று இரவு 63 நாயன்மார்கள் வாகனங்களும் மீண்டும் கோவில் கோபுர வாசலில் உள்ள 16 கால் மண்டபத்துக்கு வந்தடைந்து வீதி உலா நிறைவடைந்தது. வீதி உலாவின் போது, பக்தர்கள், கபாலீ... ஓம் நமச்சிவாய... தென்னாடுடைய சிவனே போற்றி... போன்ற கோஷங்களை எழுப்பினர்.
விழாவில் முன்னதாக, திருஞானசம்பந்த சுவாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், ‘அங்கம் பூம்பாவையாக்கி அருளுதல்' நிகழ்ச்சியும் நடைபெற்றது. அறுபத்து மூவர் வீதி உலாவையொட்டி, போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் தவக்காலத்தின் 6-வது வெள்ளியான சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் தவக்காலத்தின் 6-வது வெள்ளியான நேற்று சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக ஜெபமாலை பாடல்களை பாடினர். தொடர்ந்து கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தை அருண் சவரிராஜ், ஆன்மீக தந்தையர் அருளானந்தம், கருணைதாஸ் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
திருப்பலிக்கு பின்னர் ஏசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வுகளை விவரிக்கும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏசுநாதரை சிிலுவையில் அறைய தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்தது வரையான நிகழ்வுகள் விவரிக்கப்பட்டது.

திருப்புவனத்தில் புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. அப்பர், சுந்தரர், அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர், கருவூர்த்தேவர் போன்ற சமய புலவர்களால் பாடப்பெற்ற சிறப்பு மிக்க தலம் ஆகும்.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா 11 நாட்கள் நடைபெறும். அது போல் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதையொட்டி புஷ்பவனேசுவரர்- சவுந்தரநாயகி அம்மன் கண்ணூஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்கள்.
அங்கு சுவாமிக்கு மாலை மாற்றி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு சுவாமி -அம்பாள் திருக்கல்யாண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்பு பெருமாள் கோவிலில் இருந்து அழகிய மணவாள ரங்கநாதபெருமாள் திருக்கல்யாண மேடைக்கு அழைத்து வரப்பட்டார். அதன்பிறகு பாபு பட்டர் தலைமையில் மந்திரங்கள் ஓதப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டு தரிசித்தனர்.
பெண்களுக்கு புதிய மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்புவனம் போலீசார் செய்திருந்தனர்.