என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருமங்கலக்குடி மங்களாம்பிகை கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே திருமங்கலக்குடியில் மாங்கல்ய பாக்கியம் அருளும் கோவிலாக மங்களாம்பிகை பிராணநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உத்திர மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது. இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் சிறப்பாக நேற்று முன்தினம் நடந்தது.
விழாவில் கோவிலின் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து ஏராளமான பெண்கள் புடைசூழ சீர்வரிசை கொண்டு வந்தனர். பின்னர் சுவாமி - அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை, ஹோமங்களுடன் மாலை மாற்றுதல் நிகழ்வுகளும் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க ஓதுவா மூர்த்திகள் தேவாரம் திருவாசகம் பாடி நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க திருக்கல்யாண பிரம்மோற்சவம் நடந்தது. விழாவில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் கர்ப்பகிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து அருள்பாலிப்பது மிக மிக சிறப்பு. இத்தகைய படைப்பை மிக அரிதாகவே காண இயலும்.
மூலவர் – முருகன்
பழமை – 500 வருடங்களுக்கு முன்
ஊர் – இராமநாதபுரம்
மாவட்டம் – இராமநாதபுரம்
மாநிலம் – தமிழ்நாடு
தற்போது கோவில் உள்ள இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அரசமரம் இருந்தது. மரத்தின் கீழ் ஒரு சிறிய வேல் நடப்பட்டு அதற்கு பூஜை செய்யப்பட்டு வந்தது. அருகிலேயே கோர்ட் இருந்ததால் விசாரணைக்காக வருபவர்கள், வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிச் செல்வார்கள். சொத்து வழக்குகளில் சிக்கி, வாழ வழியற்று நிற்பவர்கள், கிரிமினல் வழக்குகளில் சிக்கிய நிரபராதிகள் எல்லாம் இந்த முருகனை வணங்கி வாழ வழிபெற்றனர். எனவே வழிவிடும் முருகன் என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டது. இவரை வந்து வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்க்கை முழுவதும் துணை வருவதாகவும் நம்பிக்கை உள்ளது.
பொதுவாக கோவில்களில் நுழைந்தவுடன் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் இருப்பார்கள். விநாயகரை முதலில் வணங்கி விட்டு கோவிலுக்குள் சென்று திரும்பி வரும் போது முருகனை வணங்குவது போன்ற அமைப்பு இருக்கும். ஆனால், இங்கே கர்ப்பகிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து அருள்பாலிப்பது மிக மிக சிறப்பு. இத்தகைய படைப்பை மிக அரிதாகவே காண இயலும்.
கோவிலின் உள்ளே “சாயா” என அழைக்கப்படும் மரம் ஒன்று உள்ளது. சனிபகவானின் தாயார் பெயர் சாயா. இந்த மரத்தை சாயாதேவியின் அம்சமாக இப்பகுதி மக்கள் பூஜை செய்கிறார்கள். எனவே இத்தலத்திற்கு வந்து வழிபடுவோரை, தனது தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, சனி பகவான் துன்பங்களை குறைப்பதாக ஐதீகம். இந்த மரம் இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகன் கோவிலிலும் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை
வேண்டுகோள்:
சொத்துக்காக சண்டையிட்டு, கோர்ட் படியேறும் சகோதரர்கள் இங்குவந்து வழிபட்டால் சமாதானமாக போகவும், இருவரும் வாழவும் வழி பிறக்கிறது.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோவில்,
இராமநாதபுரம்,
இராமநாதபுரம் மாவட்டம்.

வயலூர் முருகன் கோவில் பங்குனி உத்திர விழா கோவிலில் பங்குனி உத்திரவிழா வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
திருச்சி அருகே உள்ள குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி (முருகன்) கோவில் தென்னாட்டில் புகழ்வாய்ந்த திருத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. அருணகிரிநாதருக்கு காட்சி தந்து திருப்புகழ் பாட அருளிய தலமாகும்.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தம் வாழ்நாள் எல்லாம் போற்றி வணங்கிய சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கோவிலில் பங்குனி உத்திரவிழா வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
பங்குனி உத்திரவிழாவினை முன்னிட்டு 28-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. காலை 8 மணி முதல் பால்காவடி, அபிஷேகம் நடக்கிறது. இரவு 9 மணியளவில் சிங்கார வேலவர் வெள்ளிமயில் வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது.
30-ந் தேதி மாலை 5 மணிக்கு தினைப்புனம் காத்தல் விழாவும், 31-ந் தேதி இரவு 8 மணியளவில் முருகப்பெருமான் வேலன், வேடன் விருத்தனாக வருதல் மற்றும் யானை விரட்டல் காட்சி நடக்கிறது. வருகிற 1-ந்தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வள்ளித் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
28-ந் தேதி அன்று நடைபெறும் பங்குனி உத்திர விழாவிற்கு திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணிவரை அரசு போக்குவரத்து கழகத்தால் சிறப்பு பஸ்கள் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் சுதர்சன் அறிவுரையின்படி உதவி ஆணையர் மோகனசுந்தரம், கோவில் நிர்வாக அதிகாரி ராமநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பங்குனி மாத திருக்கல்யாண திருவிழா விருஷப லக்னத்தில் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவும் ஒன்றாகும். நேற்று காலை 10 மணிக்கு விருஷப லக்னத்தில் திருக்கல்யாண திருவிழா தொடங்கியது.
மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத, கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். பின்னர் பட்டர்களின் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க பூஜைகள் நடந்தன. பின்னர் இரவு 7.25 மணிக்கு சன்னதிக்குள் சுவாமி தேவியர்களுடன் சென்றார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்றும், நாளையும் அதே மண்டபத்தில் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. 29-ந்தேதி மஞ்சள் நீர் சாற்று முறையுடன் திருக்கல்யாண திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர தேர்த்திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை வருதல், வள்ளி தேவசேனா சமேத காவடி பழனியாண்டவருக்கு திருக்கல்யாண உற்சவம், மஞ்சள் இடித்தல், மாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதல், மகா தீபாராதனை நடைபெறும்.
திருமணம் ஆகாத ஆண், பெண் பக்தர்கள் இந்த திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டால் திருமணம் நடைபெறும். நாளை (சனிக்கிழமை) வள்ளி தேவசேனா காவடி பழனியாண்டவருக்கு பக்தர்கள் கையினால் அரைத்த சந்தன சாந்தில் அத்தர், அரகசா, ஜவ்வாது போன்றவை கலந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படும். பக்தர்கள் யார் வேண்டுமானாலும் கோவிலில் அமைந்துள்ள சந்தனக்கல்லில் சந்தனம் அரைத்து தந்தால் அவர்கள் நினைத்த காரியம் கைக்கூடும் என்பது நம்பிக்கை ஆகும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக, பங்குனி உத்திர தேரோட்டம் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று காலை காவடி பழனியாண்டவருக்கு சுவர்ணமுருகன் அலங்காரம், தங்க சாத்துப்படி நடைபெறும். காலை 5 மணிக்கு கோமாதா பூஜை, சிறப்பு அபிஷேகம், ஹோமம், பூஜை, தீபாராதனை, காவடிகள் புறப்பாடு, அருள்வாக்கு நடைபெறும். காலை 11 மணிக்கு திருப்புகழ் பஜனையும், மதியம் 1 மணிக்கு 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடைபெறும். தொடர்ந்து நாட்டிய நடன நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடைபெறும்.
மாலை 5 மணிக்கு 1,008 பால்குட ஊர்வலம் நடைபெறும். இதில் பங்கேற்கும் பக்தர்கள் அவரவர் கைப்பட காவடி பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்வார்கள். மாலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சினிமா மெல்லிசை கச்சேரி நடக்கிறது. நிறைவாக இரவு 7 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. மேலும் ஒரு ஆண்டுக்கு முன்பு செய்த அபூர்வ பஞ்சாமிர்தம் சன்னதியில் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் எஸ்.சோமசுந்தரம், எஸ்.செல்வி ஆகியோர் செய்து வருகின்றனர்.

பெண்கள் விரும்பிய வாழ்க்கை துணை கிடைக்க சில தெய்வங்களை விரதம் இருந்து வழிபட வேண்டும். இவர்களை விரதம் இருந்து வழிபாடு செய்தால் அன்பான, மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவது உறுதி.
இந்த உலகத்தின் கண்கள் நான்கு வயதாகி, ஒருவரை காதலிக்கும்போது, எதுவும் சொல்ல முடியாது. நேசிப்பது எளிது, ஆனால் அதை அடைவது சமமாக கடினம். இந்த விஷயத்தில், உங்கள் கிரக விண்மீன்களுக்கும் ஒரு பெரிய பங்களிப்பு உள்ளது. ஆனால் அவர்கள் விரும்பிய அன்பால் மகிழ்ச்சியாகக் காணக்கூடிய சில தெய்வங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் வணங்கும் அதே கடவுள்களைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். அவர்களின் ஆசீர்வாதம் பெற்று நீங்கள் விரும்பிய அன்பைப் பெறுவோம். எனவே அந்த கடவுள்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.
மன்மதன்
காமா என்றால் காதல், ஆசை, ஆசை மற்றும் பாலியல். தேவ் என்றால் தெய்வீக அல்லது பரலோக. அதர்வ வேதத்தில், காமா ஆசைகளுக்காகவே தவிர பாலியல் இன்பத்திற்காக அல்ல என்று கூறப்படுகிறது. மன்மதன் பெரும்பாலும் கிரேக்க கடவுளான ஈரோஸுடன் ஒப்பிடப்படுகிறார். அவை சில சமயங்களில் மேற்கத்திய நாடுகளில் நிலவும் மன்மதனாகக் காட்டப்படுகின்றன. காமதேவா நம் ஆசைகள், அன்பு மற்றும் காமத்திற்கு காரணமான கடவுளாக கருதப்படுகிறார். இளம் மற்றும் அழகான மன்மதன் பிரம்மாவின் மகனாக கருதப்படுகிறார். அவர் மன்மதன் அல்லது காமா என்று அழைக்கப்படுகிறார்.
பகவான் கிருஷ்ணர்
கிருஷ்ணர் இந்து நம்பிக்கைகளுக்கு ஏற்ப ராசா மற்றும் காதல் கடவுள். அவர்கள் அன்பு மற்றும் ஆவிக்காக வணங்கப்படுகிறார்கள். பகவான் கிருஷ்ணரையும் ராதாவையும் வணங்கும் தம்பதியினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணா-ராதாவைப் போல ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள்.
ரதி
காதல் தேவி, ஹஸ்ரத், காமம் மற்றும் பாலியல் இன்பம். பிரஜாபதி தக்ஷாவின் மகள் என்று நம்பப்படுகிறது. அவள் காமதேவருக்கு உதவியாளர். பெண்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் ரதியை அன்பு மற்றும் உடல் தொடர்புக்காக வணங்குகிறார்கள்.
சிவபெருமான்
சிவன் பார்வதி பிரபஞ்சத்தின் மிகவும் அன்பான ஜோடி, இது அவரது முதல் காதல் திருமணமாகவும் கருதப்படுகிறது. ஒரு நல்ல வாழ்க்கைத் துணையைப் பெற பெண்கள் சிவனை வழிபடுகிறார்கள். இதற்காக சிவனை மகிழ்விக்க நாடு முழுவதும் ஒரு பாரம்பரியம் உள்ளது. மகாசிவராத்திரி மற்றும் திங்கட்கிழமைகளில், பெண்கள் விரும்பிய வாழ்க்கை துணையை கேட்கிறார்கள்.
சந்திரன் மற்றும் சுக்கிரன்
சந்திரன் என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரன் எப்போதும் அன்பின் அடையாளமாக இருந்து வருகிறது. அவருடன் அன்பின் எத்தனை உருவகங்கள் உருவாக்கப்பட்டன என்று தெரியவில்லை. எத்தனை கவிதைகள் எழுதப்பட்டன. இது பல காலமாக நடந்து வருகிறது. சந்திரனை வணங்குவது நீங்கள் விரும்பும் அதே அன்பைத் தருகிறது. மூலம், சந்திர தேவ் மற்றும் சுக்கிரன் மனதின் நுட்பமான உணர்வுகளின் தெய்வங்களாக கருதப்படுகிறார்கள்.

பெரியகாலாப்பட்டில் உள்ள பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் 28-ந்தேதி செடல் உற்சவம் நடக்கிறது. 29-ந்தேதி தெப்ப உற்சவமும், 30-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.
புதுவை மாநிலம் உழவர்கரை நகராட்சி பெரியகாலாப்பட்டில் ஸ்ரீபாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 18-ந் தேதி ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 19-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து தினமும் வீதிஉலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு செடல் உற்சவம், பகல் 12 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
29-ந்தேதி இரவு வாணவேடிக்கையுடன் தெப்ப உற்சவமும், 30-ந்தேதி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

காளியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்துதல், பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்தல், பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் முக்கிய நிகழ்வான அலகு குத்துதல், பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்தல், பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதையொட்டி ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்றனர்.
பின்னர் அங்கு புனிதநீராடி பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் பலர் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், பறவை காவடி எடுத்து வந்தும் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஊர்வலம் கோவிலை சென்றடைந்ததும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் மாசித்திருவிழா மண்டகப்படி தாரர்கள், பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிறப்பு அனுமதி பெற்று நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி சிறப்பு வழிபாடுகள் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில் நடை திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழாவில் மாரியம்மன் பூப்பல்லக்கில் அமர்ந்து வீதி உலா வந்தார்.அப்போது, முளைப்பாரிகளுடன் பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.
இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா, கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் மாரியம்மன் அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, பூப்பல்லக்கில் அமர்ந்து வீதி உலா வந்தார்.
கோவிலில் இருந்து தொடங்கிய வீதி உலா மெயின்பஜார், நால்ரோடு, பெரியகாளியம்மன் கோவில் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்களும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். பூப்பல்லக்கு வீதி உலாவை தொடர்ந்து மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அப்போது, முளைப்பாரிகளுடன் பெண்கள் ஊர்வலமாக சென்றனர். அம்மனும் பூஞ்சோலையை வந்தடைந்தார்.
இந்த விழாவில் எஸ்.தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ., நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் யாகப்பன், மு.வ.மாணிக்கம் அன்கோ உரிமையாளர் ஜெயச்சந்திரன், வர்த்தக சங்க தலைவர் பிரபாகரன், மு.வ.அமுல்ராஜ் அன்கோ உரிமையாளர் அசோகன், நகர செயலாளர் சேகர், நகர துணைச்செயலாளர் முத்து, நகர பொருளாளர் பூக்கடை சரவணன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணை தலைவர் மூர்த்தி, எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர் முனியப்பன், தி.மு.க நகர செயலாளர் கதிரேசன், தி.மு.க. நகர நிர்வாகிகள் ஜோசப், பால் ரத்தினராஜ், நிலக்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் கோகுல்நாத், வீலிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வீருசின்னுமுருகன், ஸ்ரீ கண்ணன் மோட்டார்ஸ் நவநீதகிருஷ்ணன், அ.தி.மு.க. முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை நூற்றாண்டு கண்ட இந்து நாடார் உறவின்முறை காரியதரிசிகள் சுசீந்திரன், பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு, கருமலைப்பாண்டியன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது.
பழனி :
பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் வௌ்ளியானை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் கிரிவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பழனி முருகன் கோவிலில் நவராத்திரி, கந்தசஷ்டி சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழா ஆகிய நாட்களில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும்.
அந்தவகையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது. அதேவேளையில், கோவில் நிர்வாகம் சார்பில் இன்று தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது.

பேரூர் பட்டீசுவரர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவில் பட்டாடை, அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.
கோவை அருகே உள்ள பேரூரில் பட்டீசுவரர் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, யாகசாலை பூஜை, மலர் பல்லக்கு நிகழ்ச்சிநடந்தது. தொடர்ந்து, காலைதோறும் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, யாகசாலை பூஜைகளும் நடந்தன.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து சாமி வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். இதையடுத்து, நேற்று காலை, 8.30 மணிக்கு பட்டாடை, அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.
முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி மாலை, 4.30 மணிக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். சிறுவாணி ரோடு மற்றும் ரத வீதிகள் வழியாக அசைந்து, அசைந்து சென்ற தேர்கள் நிலையை அடைந்தன. இதைத்தொடர்ந்து, நாளை (சனிக்கிழமை) இரவு தெப்பத் திருவிழாவும், வரும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, அதிகாலை நடராஜருக்கு மகா அபிஷேகம் மற்றும் பங்குனி உத்திர தரிசன காட்சியும் நடக்கிறது. இறுதியாக, இரவு 8 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா முடிகிறது.