என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி முருகன் கோவில்
    X
    பழனி முருகன் கோவில்

    பழனி கோவிலில் இன்று முதல் 5 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு நடைபெறாது

    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது.
    பழனி :

    பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் வௌ்ளியானை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் கிரிவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பழனி முருகன் கோவிலில் நவராத்திரி, கந்தசஷ்டி சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழா ஆகிய நாட்களில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும்.

    அந்தவகையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது. அதேவேளையில், கோவில் நிர்வாகம் சார்பில் இன்று தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது.
    Next Story
    ×