என் மலர்
நீங்கள் தேடியது "vayalur murugan temple"
- இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6-ம் கால யாக பூஜை நடைபெற்றது.
- நாளை முதல் மண்டலாபிஷேகம் நடைபெறும்.
ராம்ஜிநகர்:
முருகப்பெருமானின் 7-ம் படை வீடு என்ற பெருமைக்குரியதும், அருணகிரிநாதருக்கு முருகன் அருளியது என்ற சிறப்புக்குரியதுமாக திகழ்கிறது வயலூர் சுப்பிர மணியசுவாமி கோவில்.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு ரூ.5 கோடியில் திருப்பணிகள் தொடங்கின. இந்த பணிகள் நிறை வடைந்ததை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் கோலா கலமாக நடைபெற்றது. இதற்கானயாக பூஜைகள் கடந்த 14-ந்தேதி (வெள்ளி க்கிழமை) விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின.
தொடர்ந்து யஜமான சங்கல்பம், புண்யா ஹவாசனம், பஞ்சகவ்யம், தேவதா அனுக்ஞை மற்றும் மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், தன பூஜை, கஜ பூஜை, கோ பூஜை உள்ளிட்டவை நடை பெற்றன.
மறுநாள் (சனிக்கிழமை) மிருத்ஸங்கிர ஹணம் பூஜை நடந்தது. 16-ந்தேதி மாலை முதற்கால பூஜை, இரவு பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் காலை 2-ம் கால யாக பூஜை, மாலை 3-ம் கால யாக பூஜை நடந்தன.
நேற்று காலையில் 4-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 5-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
இதை தொடர்ந்து காலை 9.15 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சகல விமானங்கள். ராஜகோபுரங்கள், கும்பாபிஷேகமும், காலை 9.50 மணிக்குள் மூலாலய மஹா கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க நடத்தினர்.

அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, வயலூரா.. வயலூரா என விண்ணதிர கோஷம் எழுப்பினர். கும்பாபிஷேக விழாவில் பழனியாண்டி எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வாரியார் சுவாமிகளின் மாணவி தேசமங்கையர்கரசி கும்பாபிஷேக வர்ணனை ஆற்றினார். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பகல் 12.15 மணிக்கு மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பாகம் பல்வேறு பக்தர்கள் சார்பாகவும் ஆங்காகாங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் வயலூர் சாலை முழுவதும் கடும் நெருக்கடியாக காணப்பட்டது.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், இரவு 9 மணிக்கு சுவாமி திரு வீதி எழுந்தருளல் ஆகியவை நடக்கின்றன. நாளை முதல் மண்டலாபிஷேகம் தொடங்குகிறது.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி, ஸ்ரீரங்கம் ஆர்டிஓ சீனிவாசன், நிர்வாக அதிகாரி அருண் பாண்டியன், அறநிலையத் துறை அலுவலர்கள், கோயில் அறங் காவலர் குழு, திருப்பணிகள் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டி ருந்தன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் தரிசனம் செய்ய் வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வயலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
9-ம் திருநாளான வருகிற 11-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமியின் ரதாரோகணம் எனப்படும் தேரோட்டம் மாலை 4 மணிக்கு மேல் நடக்கிறது. 12-ந்தேதி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடக்கிறது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி வலம் வருவர். 13-ந்தேதி மாலை 6 மணிக்கு சங்காபிஷேகம், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம், 14-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்குடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் அறிவுரையின் பேரில், உதவி ஆணையர் லட்சுமணன், நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் தீர்த்தவாரி நடக்கிறது.
- நாளை(திங்கட்கிழமை) சங்காபிஷேகமும், தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
திருச்சி அருகே குமாரவயலூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி வீதி உலா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். இதையடுத்து 'அரோகரா' கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருக்கோவில் மாட வீதிகளில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது.
தேரோட்டம் மற்றும் வைகாசி விசாக திருவிழாவிற்காக சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து வயலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து வைகாசி விசாகமான இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் தீர்த்தவாரி நடக்கிறது. பகல் 12 மணியளவில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் மற்றும் அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
நாளை(திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சங்காபிஷேகமும், இரவு 8 மணி அளவில் மின்விளக்கு அலங்காரம் மற்றும் பூ அலங்காரத்துடன் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி ஆளும் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- நாளை பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
- நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சங்காபிஷேகம் நடக்கிறது.
திருச்சி அருகே குமாரவயலூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் இரவில் ஒவ்வொரு வாகனத்தில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.
நேற்று குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(சனிக்கிழமை) மாலை நடக்கிறது. இதில் மாலை 4 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி தேரில் எழுந்தருள செய்து, கோவில் மாடவீதிகளில் தேர் பவனி வரும். நாளை(ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி வருதல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சங்காபிஷேகமும், இரவு 8 மணி அளவில் மின்விளக்கு அலங்காரம் மற்றும் பூ அலங்காரத்துடன் தெப்ப உற்சவமும் நடக்கிறது.
14-ந் தேதி இரவு 8 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி ஆளும் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தேரோட்டம் மற்றும் விசாக திருவிழாவிற்காக சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து வயலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் அறிவுரையின்பேரில் உதவி ஆணையர் லட்சுமணன், நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு அழைத்து வரப்பட்டார். அதனை அடுத்து தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் ரதவீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
தேரோட்ட நிகழ்ச்சியில் திருச்சி, அதவத்தூர், வரகனேரி, அல்லித்துறை, சோமரசம்பேட்டை, எட்டரை, கோப்பு, நவலூர் குட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். தேர் வலம் வந்தபோது, ஆங்காங்கே சாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சுப்பிரமணியசாமி தேர்க்கால் பார்க்க புறப்பட்டு செல்லும் வைபவமும் நடந்தது.
இன்று (சனிக்கிழமை) காலை நடராஜர் தரிசனம், விசாக நட்சத்திரத்தில் தீர்த்தவாரியும், பிறகு பால்காவடிகள், அபிஷேகங்கள் நடைபெறும். இரவு வள்ளிதேவசேனா சமேத முத்துகுமாரசாமி வெள்ளி கவச அலங்காரத்துடன் வெள்ளி விமானத்தில் காட்சி அளித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அத்துடன் கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை சங்காபிஷேகமும், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. 20-ந் தேதி இரவு ஆளும் பல்லக்கு உற்சவம் நடைபெறும்.
நேற்று அதவத்தூரில் குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா வந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி காலை வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி ரதாரோகணம் நடக்கிறது. மாலை 4.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கி நடக்கிறது. இரவில் சுப்பிரமணியசாமி தேர்க்கால் பார்க்க புறப்பாடு நடைபெறுகிறது.
நாளை(சனிக்கிழமை) நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் பால்காவடி எடுத்து கோவிலுக்கு வருகின்றனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். இரவில் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி வெள்ளிக்கவச அலங்காரத்துடன் வெள்ளி விமானத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அத்துடன் கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை சங்காபிஷேகமும், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 20-ந் தேதி இரவு ஆளும் பல்லக்கு உற்சவத்துடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.
மதியம் 12 மணியளவில் சாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, முத்துக்குமாரசாமி புறப்பாடாகி உய்யகொண்டான் வாய்க்கால் செல்கிறார். அங்கு சாமிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. பின்னர் அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்னர், மீண்டும் கோவிலை வந்தடைவார். அன்று இரவு சர்வ அலங்காரத்துடன் முத்துக்குமார சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்று, வயலூர் வழியாக வரகாந்திடலை வந்தடைவார். அங்கு மண்டகப்படி பெற்று கீழவயலூர் தைப்பூச மண்டபத்திற்கு வந்தடைவார். பின்னர் அங்கிருந்து புறப்பாடாகி வடகாபுத்தூர் கிராமத்திற்கு வருவார்.
22-ந் தேதி காலை 10.31 மணிக்கு வடகாபுத்தூரில் இருந்து புறப்பட்டு, உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர், அல்லித்துறை பார்வதீஸ்வரர், சோழங்கநல்லூர்் காசிவிஸ்வநாதர், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய சாமிகளுக்கு சந்திப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். காலை 11 மணியளவில் 5 சாமிகளும் நான்கு வீதிகளிலும் வலம் வந்து சோமரசம்பேட்டையில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு வந்தடையும். அங்கு சாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு அன்றிரவு 7 மணியளவில், கோவில்களுக்கு புறப்பட்டு செல்லும். இதில் முத்துக்குமாரசாமி சோமரசம்பேட்டை தைப்பூச மண்டபத்தில் இருந்து புறப்பட்டு அதவத்தூர் மண்டபம் சென்றடைவார்.
தைப்பூசத்தையொட்டி கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு பணிகளை சோமரசம்பேட்டை போலீசார் செய்து வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் ராணி ஆகியோரின் ஆலோசனையின்படி கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
பின்னர் சுப்பிரமணியசாமிக்கு லட்சார்ச்சனையும், மதியம் சண்முகார்ச்சனையும் நடந்தது. அன்று இரவு 8 மணிக்கு முறையே சிங்கார வேலர் சேஷம், ரிஷபம், அன்னம், வெள்ளி மயில் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 11-ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும், நேற்று இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனையும், அதனை தொடர்ந்து 10.40 மணியளவில் சூரபதுமனை வதம் செய்வதற்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7.30 மணியளவில் சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனையடுத்து முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.
நாளை(புதன்கிழமை) காலை 9 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனையுடன் சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் தேவசேனா- சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவு பெறுகிறது.
விழாவையொட்டி இன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும் அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகார்ச்சனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு ரக்ஷா பந்தனமும்(காப்பு கட்டுதல்), அபிஷேக ஆராதனையும் நடைபெறுகிறது. இரவு சிங்காரவேலர் பச்சை மயில் வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்.
நாளை(வெள்ளிக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை காலை 8 மணியளவில் சிங்காரவேலர், கேடயத்தில் திருவீதி உலா வருகிறார். அதனை அடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கு லட்சார்ச்சனையும், மதியம் சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. அன்றைய தினங்களில் இரவு 8 மணிக்கு சேஷம், ரிஷபம், அன்னம், வெள்ளிமயில் போன்ற வாகனங்களில் உற்சவர் சிங்காரவேலர் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.
11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும், 12-ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 13-ந் தேதி காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனையும், அதனை தொடர்ந்து 10.40 மணிக்கு சூரபதுமனை வதம் செய்வதற்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அதனையடுத்து முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.
14-ந் தேதி காலை 9 மணிக்கு அபிஷேகம், ஆராதனையுடன் சண்முகார்ச்சனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேவசேனா சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழாவின் ஒவ்வொரு நாளும் இரவு இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
விழாவின் முதல் நாளன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும், அபிஷேகமும், அதனையடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ரக்ஷா பந்தனமும், அபிஷேக ஆராதனையும், இரவு சிங்காரவேலர் பச்சை மயில் வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை காலை 8 மணி அளவில் சிங்காரவேலர் கேடயத்தில் வீதி உலா வருகிறார். அதனையடுத்து சுப்பிரமணியசாமிக்கு லட்சார்ச்சனையும், மதியம் சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. அன்றைய நாட்களில் இரவு 8 மணிக்கு முறையே சிங்காரவேலர் சேஷ, அன்னம், வெள்ளிமயில் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
11-ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும், 12-ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
13-ந் தேதி காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனையும், அதனை தொடர்ந்து 10.45 மணியளவில் சூரபதுமனை வதம் செய்வதற்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7.30 மணியளவில் சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனையடுத்து முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளுகிறார்.
14-ந் தேதி காலை 9 மணிக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் தேவசேனா சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் இரவு கோவிலின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராணி ஆலோசனையின்பேரில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு மேல் வள்ளி தேவ சேனா சமேத சுப்பிரமணிசாமி ரதாரோகணம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை, அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்ட பின்னர் தேரில் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து மாலை 4 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் வயலூர், அதவத்தூர், அல்லித்துறை, சோமரசம்பேட்டை, எட்டரை, கோப்பு, நவலூர் குட்டப்பட்டு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற போது மழை பெய்தது. ஆனால், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நனைந்து கொண்டே தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். பின்னர் தேர் நிலையை அடைந்தது. அதைத்தொடர்ந்து இரவு சுப்பிரமணியசாமி தேர்க்கால் பார்க்க புறப்பட்டு செல்லும் வைபவமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்த பிரமுகர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
இன்று(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு நடராஜர் தரிசனமும், 11.30 மணிக்கு தீர்த்தவாரியும், பிறகு பால் காவடி, அபிஷேகங்கள் ஆகியவை நடைபெறுகின்றன. இரவு வள்ளிதேவசேனா சமேத முத்துக்குமாரசாமி வெள்ளி கவச அலங்காரத்துடன் வெள்ளி விமானத்தில் காட்சி அளிக்கிறார். நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை சங்காபிஷேகமும், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 30-ந் தேதி இரவு ஆளும் பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது.






