என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமங்கலக்குடி மங்களாம்பிகை கோவிலில் திருக்கல்யாணம்
    X
    திருமங்கலக்குடி மங்களாம்பிகை கோவிலில் திருக்கல்யாணம்

    திருமங்கலக்குடி மங்களாம்பிகை கோவிலில் திருக்கல்யாணம்

    திருமங்கலக்குடி மங்களாம்பிகை கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    கும்பகோணம் அருகே திருமங்கலக்குடியில் மாங்கல்ய பாக்கியம் அருளும் கோவிலாக மங்களாம்பிகை பிராணநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உத்திர மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது. இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் சிறப்பாக நேற்று முன்தினம் நடந்தது.

    விழாவில் கோவிலின் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து ஏராளமான பெண்கள் புடைசூழ சீர்வரிசை கொண்டு வந்தனர். பின்னர் சுவாமி - அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை, ஹோமங்களுடன் மாலை மாற்றுதல் நிகழ்வுகளும் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க ஓதுவா மூர்த்திகள் தேவாரம் திருவாசகம் பாடி நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க திருக்கல்யாண பிரம்மோற்சவம் நடந்தது. விழாவில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×