search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வயலூர் முருகன் கோவில்
    X
    வயலூர் முருகன் கோவில்

    வயலூர் முருகன் கோவில் பங்குனி உத்திர விழா 28-ந்தேதி தொடங்குகிறது

    வயலூர் முருகன் கோவில் பங்குனி உத்திர விழா கோவிலில் பங்குனி உத்திரவிழா வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
    திருச்சி அருகே உள்ள குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி (முருகன்) கோவில் தென்னாட்டில் புகழ்வாய்ந்த திருத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. அருணகிரிநாதருக்கு காட்சி தந்து திருப்புகழ் பாட அருளிய தலமாகும்.

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தம் வாழ்நாள் எல்லாம் போற்றி வணங்கிய சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கோவிலில் பங்குனி உத்திரவிழா வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

    பங்குனி உத்திரவிழாவினை முன்னிட்டு 28-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. காலை 8 மணி முதல் பால்காவடி, அபிஷேகம் நடக்கிறது. இரவு 9 மணியளவில் சிங்கார வேலவர் வெள்ளிமயில் வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது.

    30-ந் தேதி மாலை 5 மணிக்கு தினைப்புனம் காத்தல் விழாவும், 31-ந் தேதி இரவு 8 மணியளவில் முருகப்பெருமான் வேலன், வேடன் விருத்தனாக வருதல் மற்றும் யானை விரட்டல் காட்சி நடக்கிறது. வருகிற 1-ந்தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வள்ளித் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

    28-ந் தேதி அன்று நடைபெறும் பங்குனி உத்திர விழாவிற்கு திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணிவரை அரசு போக்குவரத்து கழகத்தால் சிறப்பு பஸ்கள் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் சுதர்சன் அறிவுரையின்படி உதவி ஆணையர் மோகனசுந்தரம், கோவில் நிர்வாக அதிகாரி ராமநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×