search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாலமுருகன்
    X
    பாலமுருகன்

    பெரிய காலாப்பட்டு பாலமுருகன் கோவிலில் 28-ந்தேதி செடல் உற்சவம்

    பெரியகாலாப்பட்டில் உள்ள பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் 28-ந்தேதி செடல் உற்சவம் நடக்கிறது. 29-ந்தேதி தெப்ப உற்சவமும், 30-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.
    புதுவை மாநிலம் உழவர்கரை நகராட்சி பெரியகாலாப்பட்டில் ஸ்ரீபாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு திருவிழா கடந்த 18-ந் தேதி ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 19-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து தினமும் வீதிஉலா நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு செடல் உற்சவம், பகல் 12 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    29-ந்தேதி இரவு வாணவேடிக்கையுடன் தெப்ப உற்சவமும், 30-ந்தேதி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×