என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கள்ளழகர் கோவில் திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
    X
    கள்ளழகர் கோவில் திருக்கல்யாண திருவிழா தொடங்கியது

    கள்ளழகர் கோவில் திருக்கல்யாண திருவிழா தொடங்கியது

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பங்குனி மாத திருக்கல்யாண திருவிழா விருஷப லக்னத்தில் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவும் ஒன்றாகும். நேற்று காலை 10 மணிக்கு விருஷப லக்னத்தில் திருக்கல்யாண திருவிழா தொடங்கியது.

    மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத, கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். பின்னர் பட்டர்களின் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க பூஜைகள் நடந்தன. பின்னர் இரவு 7.25 மணிக்கு சன்னதிக்குள் சுவாமி தேவியர்களுடன் சென்றார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்றும், நாளையும் அதே மண்டபத்தில் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. 29-ந்தேதி மஞ்சள் நீர் சாற்று முறையுடன் திருக்கல்யாண திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×