என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. வைணவ கோவில்களில் இக்கோவிலுக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வேறு எந்த ஊரிலும் இல்லாத வகையில் 18 நாட்கள் நடைபெறுகிறது.

திருவிழாவின் 5-ம் நாளில் பஞ்சமுக அனுமார் வாகனம், 6-ம் நாள் கண்ட பேரண்ட பட்சி (ஓருடல் இரண்டு தலைகள் கொண்ட பறவை) வாகனத்தில் ராஜகோபாலசாமி எழுந்தருள்கிறார். இந்த வாகனங்கள் வேறு எந்த ஊரிலும் இல்லாத ஒரு தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. திருவிழாவின் நிறைவாக தேரோட்டம் நடக்கிறது. இதில் 80 ஆண்டுகளாக மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேரினை வடம் பிடித்து நிலைக்கு சேர்ப்பது இந்த ஊரில் மட்டுமே காண முடியும்.
ஒற்றுமைக்கு சான்று
18 நாட்கள் திருவிழா முடிந்து தொடர்ந்து 12 நாட்கள் விடையாற்றி என்கின்ற திருவிழாவும் கலை விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆக ஒரு மாதம் ஊரெங்கும் கோலாகலம் தான்.
இந்த 30 நாட்கள் திருவிழாவை பல்வேறு சாதி அமைப்புகள், பல்வேறு அரசுத் துறை ஊழியர் சங்கங்கள் பன்னெடுங்காலமாக உபயமாக ஏற்று நடத்தி வருவது மிகச் சிறந்த நல்லிணக்கத்திற்கும், ஊரின் ஒற்றுமைக்கும் சான்றாக அமைகிறது.
4 யுகம் கண்ட பெருமாள்
ஒவ்வொரு நாளும் எந்த வாகனத்தில் ராஜகோபாலன் வருகிறாரோ அதனை கோவிலின் 4 வீதிகளிலும் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு வாசலில் தனி மேடை அமைத்து வர்ண பொடிகள் கொண்டு கோலமாக வரைந்து ராஜகோபாலனை வரவேற்பதை காண கண் கோடி வேண்டும்.
ராஜகோபாலன் 4 யுகங்களிலும் சேவை சாதித்தமையால் சதுர் யுகம் கண்ட பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். கோவிலில் எழுந்தருளியிருக்கும் செங்கமலத்தாயார் நம் பண்பாட்டு மரபிற்கு ஏற்ப படிதாண்டா பத்தினி என்று அழைக்கப்படுகின்றார். காரணம் தாயார் கோவிலை விட்டு வெளியே வருவதில்லை.
ஆடிப்பூரம் திருவிழா
தாயாருக்கான ஆடிப்பூரம் திருவிழா 10 நாட்கள் கோயில் வளாகத்திற்குளேயே நடைபெறுகிறது. தாயாருக்கான தேர் கோவிலுக்கு உள்ளேயே அமைக்கப்பட்டுள்ள தாயார் பிரகாரத்தில் வலம் வருகிறது. இந்த தேரினையும் பள்ளி மாணவர்களே இழுத்து நிலைக்கு சேர்ப்பர்.
இக்கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆண்டில் 300 நாட்கள் உற்சவங்கள் தான். எனவே திருவரங்கத்தை போலவே மன்னார்குடி ராஜகோபாலனும் நித்ய உற்சவ பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.
மன்னார்குடியில் நீர்நிலைகள் ஏராளம். சுமார் 96 குளங்கள் இருந்ததாக வரலாறு. கோவில் பாதி குளம் பாதி என்கின்ற பழமொழிக்கேற்ப நகரில் 23 ஏக்கர் பரப்பளவுடைய பிரம்மாண்டமான ‘ஹரித்ராநதி’ என்கின்ற தெப்பக்குளம் மிகவும் புகழ் பெற்றது.
32 திருக்கோலங்கள்
ஹரித்ராநதியில் ஜலக்ரீடை செய்த பெருமாள் துவாரகைக்கு இணையாக 32 திருக்கோலங்களில் காட்சி அருளினார். ஜலக்ரீடை செய்து களைப்புற்ற பெருமாளுக்கு மன்னார்குடி சிவன்கோவிலில் அருள்பாலிக்கும் ஜெயங்கொண்டநாதர் திரட்டுப்பால் செய்து அனுப்பியதாக ஐதீகம். அந்த நடைமுறை இன்றளவும் தொடர்கிறது. இது சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவ விழாவின் 2-வது நாளில் உற்சவர்களான சத்தியபாமா, ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று மாலை உற்சவர்களான சத்தியபாமா, ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தனர்.
பின்னர் தெப்பத்தேரில் உற்சவர்கள் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஸ்ரீவாரி புஷ்கரணியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
விழாவில் பெரிய ஜீயர்சுவாமிகள், திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சிப்பகிரி பிரசாத், டி.பி.ஆனந்தா, என்ஜினீயர் ரமேஷ்ரெட்டி, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் இஸ்கான் கோவிலின் இணையதள பக்கம் மூலமும், இஸ்கான் கோவில் யூ-டியூப் சேனல் மூலம் ஆன்லைனில் கவுரி பூர்ணிம பண்டிகை சிறப்பு மற்றும் பூஜைகள், நிகழ்ச்சிகளை பார்த்து சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கலியுகத்தில் யுக-தர்மகராக கிருஷ்ணன் அவதரித்தார். அவர் புராணத்தின்படி பால்குன மாதத்தில்(பிப்ரவரி-மார்ச் இடைப்பட்ட காலம்) பூர்ணிமா எனும் ஸ்ரீதாம மாயாபுரத்தில் சைதன்யராக அவதரித்தார் என்று கூறப்படுகிறது. அவர் சைதன்யராக அவதரித்த தினமே கவுரி பூர்ணிமா பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெங்களூரு கார்ட் ரோட்டில் அமைந்துள்ள இஸ்கான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இங்கு மூலவராக கிருஷ்ணன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இஸ்கான் கோவிலில் கவுரி பூர்ணிமா பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கவுரி பூர்ணிமா பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இது சைதன்யராக கிருஷ்ணன் அவதரித்த 535-வது ஜெயந்தி விழா ஆகும்.
இந்த விழா வருகிற 28-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 6 மணிக்கு கோவிலில் தொடங்குகிறது. இதையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற இருக்கின்றன. குறிப்பாக 108 நதிகளில் இருந்து கொண்டுவரப்படும் புனிதநீர் மூலம் அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் சைதன்யரின் பல்லக்கு ஊர்வலமும் நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
அதனால் பக்தர்கள் இஸ்கான் கோவிலின் இணையதள பக்கம் மூலமும், இஸ்கான் கோவில் யூ-டியூப் சேனல் மூலம் ஆன்லைனில் கவுரி பூர்ணிம பண்டிகை சிறப்பு மற்றும் பூஜைகள், நிகழ்ச்சிகளை பார்த்து சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வரதராஜபெருமாளும், வெங்கடாஜலபதி சுவாமிகளும் விஷேச அலங்காரத்தில் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர்.
களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினசரி பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 5-ம் திருநாளன்று சிறப்பு நிகழ்ச்சியாக கருட சேவை நடந்தது.
இதனை முன்னிட்டு வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து வரதராஜபெருமாளும், வெங்கடாஜலபதி சுவாமிகளும் விஷேச அலங்காரத்தில் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
நாளை (சனிக்கிழமை) இரவில் வரதராஜபெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 29-ந் தேதி நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நம்பெருமாள்- கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் இரண்டாவது வைணவத் தலம் என்ற பெருமைக்குரிய உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நம்பெருமாள் -கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த அடிப்படையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று அதிகாலை 3:30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநெடுக வழிநடை உபயங்கள் கண்டருளி 11 மணி அளவில் உறையூர் நாச்சியார் கோவில் வந்து சேர்ந்தார்.
கோவில் மகாஜனம் உபய மண்டபத்தில் நம் பெருமாளுக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாச்சியார் முன் மண்டபத்தில் பகல் 2 மணிக்கு நம்பெருமாள் எழுந்தருளினார். 1.15 மணிக்கு அந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சேர்த்தி மண்டபம் சென்றடைந்தார். பிற்பகல் 2 மணிக்கு சேர்த்தி மண்டபத்தில் நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இந்த காட்சியை காண்பதற்காகவும் நம்பெருமாள்- நாச்சியாரின் அருள் பெறுவதற்காகவும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவராக வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக ரூ.50 சிறப்பு தரிசன கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விரைவாக தரிசனம் செய்ய வேண்டும் என நினைத்த பக்தர்கள் சிறப்பு வழியில் சென்று தரிசனம் செய்தனர்.மற்றவர்கள் கோவில் வளாகத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் நின்றனர்.
நம்பெருமாள்- கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை விழாவையொட்டி கோவில் வளாகம் மட்டுமின்றி உறையூர் பகுதி முழுவதுமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. கோவில் அருகில் தற்காலிக கடைகள், பேன்சி பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகை புரிந்ததால் அவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். வெயிலில் வரும் பக்தர்களுக்காக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு குளிர்பானங்களும் இலவசமாக வழங்கப்பட்டன.
பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை நம்பெருமாள்- கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை நடைபெற்றது. அதிகாலை 1.30 மணிக்கு நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் கோவிலில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவில் கண்ணாடி அறையை அடைந்தார்.

திருமால் எடுத்த அவதாரங்களோடு இனி எடுக்கப்போகும் கல்கி அவதாரமும் சேர்த்து தசாவதாரங்கள் என போற்றப்படுகின்றன். அந்த அவதாரங்களின் தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அபூர்வ ஸ்லோகமாய் வழங்குகிறோம்.
தியான ஸ்லோகம்
த்யாயாமி கல்கிம் விஷ்ணும் ஹரிம் அஷ்வ வாஹனம்
கட்க கேடக ஹஸ்தாப்யாம் பஜே கல்கி ரூபிணம்,
மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் நமோ பகவதே
கல்கி ரூபாய துஷ்டநிக்ரஹ
சிஷ்டபரிபாலனாய ஸ்வாஹா,
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் தீய குணங்கள் அழிந்து நல்ல குணங்கள் வளரும்.

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் பூசாரி மட்டுமே தீ மிதித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி தாயே, மாரியம்மன் தாயே என பக்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடியில் கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள மலைக்கிராமம் தாளவாடி. இங்கு பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் திருவிழா கடந்த 23-ந் தேதி சிறப்பு வழிபாட்டுடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு மலர் மற்றும் ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையடுத்து தாளவாடி மாரியம்மனுடன், கும்டாபுரம் மாரியம்மனும் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் இரவு 9 மணிக்கு அம்மன் வீதி உலா தாளவாடியில் உள்ள அனைத்து வீதிகளிலும் நடந்தது. பின்னர் நேற்று காலை 5 மணிக்கு கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க உற்சவ சிலைகள் தாளவாடி ஆற்றுக்கு புறப்பட்டன. பின்னர் அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் பக்தர்கள் 4 பேர் காவல் தெய்வங்கள் வேடம் அணிந்து முன்னே சென்றனர். இதையடுத்து அங்கிருந்து கோவிலுக்கு அம்மன் ஊர்வலம் சென்றது.
கோவிலை சென்றடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மேளதாளங்கள், தாரை, தப்பட்டைகள் முழங்க தலைமை பூசாரி சிவண்ணா மாரியம்மன் உற்சவ சிலையை சுமந்தபடி குண்டத்தை நோக்கி சென்றார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி தாயே, மாரியம்மன் தாயே என பக்தி கோஷங்கள் எழுப்பினர். பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த 20 அடி நீள குண்டத்தில் பூசாரி சிவண்ணா இறங்கி தீ மிதித்து நேராக கோவிலின் கருவறைக்கு சென்றார். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பூசாரியை தவிர பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை.
இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா ராகவேந்திரா கூறுகையில், ‘தாளவாடி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோவிலின் குண்டம் அருகில் உள்ள முஸ்லிம் மசூதி வரை அமைக்கப்பட்டு உள்ளது. எனவே மத நல்லிணக்கத்துக்கு எடுத்து காட்டாக இந்த குண்டம் விழா நடைபெறுகிறது,’ என்றார்.

காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அம்மையப்பர் சாமி படத்தை வைத்து பூஜை செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இது விநாயகப் பெருமான் முருகனை வணங்கும் தலம் என்ற சிறப்பு உண்டு. இங்கு நாட்டில் வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பாக ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது.
சுப்பிரமணிய சாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சுவாமியிடம் பூபோட்டு கேட்பார்கள். அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. இதற்கு முன்பு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் சைக்கிள், துப்பாக்கி தோட்டா, மண், தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்டது. இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள் ஏதாவது ஒருவகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.
இந்த நிலையில், காங்கேயம் தாலுகா முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எஸ்.கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் முருகன் தோன்றி கைலாய மலையில் அம்மையப்பருடன் விநாயகரும், முருகரும் இருப்பது போன்றும், இருபக்கவாட்டிலும் அகோர வீர பத்ரர், ஒரு தெய்வ ஜாதகம், ஒரு திருமாங்கல்யம், ரூ.32 மதிப்புள்ள நாணயங்கள் வைத்து பூஜிக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து அந்த பக்தர் கோவிலுக்கு வந்து, ஆண்டவன் தனது கனவில் வந்து உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்க கூடிய படம் குறித்து கூறினார். இதையடுத்து சாமியிடம் உத்தரவு பெற்று, அந்த பக்தர் கூறிய சாமி படத்தை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இது குறித்து பக்தர்கள் தரப்பில் கூறியதாவது:-
தற்போது உலகத்தில் அன்பு, அறம், சத்யம் ஆகிய மூன்றும் குறைந்து விட்டது. இந்த மூன்றையும் சாமி மீட்கப்போவதாகவும், மேலும் திருமண சுபகாரியங்கள் கைகூடும். திருமண தடை அகலும். சுபகாரிய நிகழ்ச்சிகள் அதிகமாக நடக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்களுக்கு நிறைவானதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி முதல் மக்காச்சோளம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

இக்கோவிலில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற கோரிக்கை மனு எழுதி அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90 நாட்களில் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற கோரிக்கை மனு எழுதி அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90 நாட்களில் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள் அலகு போட்டுக்கொண்டும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் அன்றைய தினம் கொளஞ்சியப்பர் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் எழுந்தருள, தீர்த்தவாரி நடைபெறும்.
பக்தர்கள் தங்களின் அனைத்து வித நியாயமான கோரிக்கைகளையும், எழுத்து மூலம் சுவாமியிடம் பிராது செலுத்தும் நடைமுறை இங்கு வழக்கத்தில் உள்ளது. அப்படி பிராது செலுத்திய நாளிலிருந்து 90 நாட்களுக்குள், அந்த கோரிக்கை முழுவதுமாக நிவர்த்திப் பெறுவதும், வேண்டுதல் பலித்தவர்கள் சுவாமியிடம் செலுத்திய பிராதினை திரும்பப் பெற்றுக் கொள்வதும் நடைமுறை வழக்கமாகும்.
இதற்கு சுவாமி உள்ள இடமான மணவாளநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு கோரிக்கை உள்ள ஊரின் தொலைவினை கணக்கிட்டு, கிலோமீட்டர் ஒன்றுக்கு இருபத்தைந்து பைசா கட்டணமாகவும், சம்மன் மற்றும் தமுக்கு பணமாக இருபது ரூபாயும் செலுத்த வேண்டும். அதேபோன்று கோரிக்கை நிறைவேறியவர்கள், பிராது வாபஸ் கட்டணமாக ஐம்பது ரூபாய் செலுத்தி பிராதினை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். பிரார்த்தனையுடன் கூடிய இவ்வழிபாடு இவ்வாலயத்தின் பிரசித்திப் பெற்ற வழிபாடாகும்.

கபாலீஸ்வரர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை திருஞானசம்பந்த சாமிகள் எழுந்தருளலும், பூம்பாவை உயிர்பெற்று எழுகின்ற நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து 63 நாயன்மார்களோடு திருக்காட்சி திருவிழா நடக்கிறது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து தினமும் சாமி, அம்பாள், வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
அம்மை மயில் வடிவில் சிவபூஜை காட்சி, புன்னை மரம், கற்பக மரம், வேங்கை மர வாகனங்கள், வெள்ளி சந்திர வட்டம், கிளி, அன்ன வாகனங்கள், வெள்ளி பூரம், பூதகி தாரகாகரன் நாகம், காமதேனு, சிங்கம், புலி வாகனங்கள், வெள்ளி ரிஷப வாகனங்கள் காட்சி ஆகியவை நடந்தன.
23-ம் தேதி ஐந்திருமேனிகள் யானை வாகன வீதி உலா நடந்தது. பங்குனி பெருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை திருஞானசம்பந்த சாமிகள் எழுந்தருளலும், பூம்பாவை உயிர்பெற்று எழுகின்ற நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 2.45 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் 63 நாயன்மார்களோடு திருக்காட்சி திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி விநாயகர் முன்செல்ல, தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் நாயன்மார்களுடன் கபாலீசுவரர்- கற்பகாம்பாள், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும், சண்டிகேசவருடன் மாட வீதிகளில் வலம் வருகின்றனர்.
அவர்களுடன் திருவள்ளுவர்-வாசுகி, முண்டககண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, திரவுபதி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், கோலவிழி அம்மன் என பலரும் சேர்ந்து கொண்டு வீதி உலா வருகின்றனர்.
28-ந் தேதி திருக்கூத்த பெருமான் திருக்காட்சி ஐந்திருமேனிகள் விழா, தீர்த்தவாரி, மாலையில் புன்னை மரத்தடியில் உமா தேவியார் மயிலுருவுடன் மாதேவதை வழிபாடு, திருக்கல்யாணம், கைலாய ஊர்தி, கொடியிறக்கம், சண்டேஸ்சுவரர் விழா நிறைவு நடக்கிறது.
29-ந் தேதி பந்தம் பறிவிழாவும், 30-ந்தேதி நிறைவு திரு முழுக்கும் நடைபெறுகிறது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேவைப்படும் நேரங்களில் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்படுகிறது. அதன்படி 25-ந்தேதி மற்றும் 26-ந்தேதி கோவில் சன்னதி தெரு, கிழக்கு மாட வீதி ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை.
தேரோட்டம், அறுபத்து மூவர் திருவிழா நடைபெறு வதை முன்னிட்டு மயிலாப்பூரில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

வருகிற 26-ந்தேதி பிரதோஷம் மற்றும் 28-ந்தேதி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. மலைமேல் உள்ள கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோச நாட்களில் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
அதன்படி வருகிற 26-ந் தேதி பிரதோஷம் மற்றும் 28-ந் தேதி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அனுமதி கிடையாது.
அவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். மலை அடிவாரத்தில் 26-ந் தேதி காலை 7 மணி முதல் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் மலையேற அனுமதிக்கப் படுவார்கள். பிற்பகல் ஒரு மணிக்கு பின் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி இல்லை.
மேற்கண்ட நாட்களில் கோவிலில் தங்கவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் வருகையையொட்டி அடிப்படை வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வ நாத் ஆகியோர் செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவில் வருகிற 28-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகின்றது.
ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் இரவு சூரிய பிரபை வாகனத்தில் சாமி எழுந்தருளி அருள் பாலித்தார். விழாவையொட்டி தினமும் சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், ஹம்ச வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இரு கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஆதிஜெகநாத பெருமாள், பட்டாபிஷேக ராமர் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து அருள்பாலித்தனர். விழாவில் இன்று மாலை பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி வருகிற 28-ந் தேதி நடைபெறுகிறது. விழா வருகிற 31-ந் தேதி உற்சவ சாந்தியுடன் நிறைவு பெறுகிறது.