என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சென்னை :
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பகல், இரவு நேரங்களில் சாமி வீதி உலா நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில் முக்கிய திருவிழாவான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி அளவில் சாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். 8.45 மணிக்கு திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுந்தனர். இந்த தேர் கிழக்கு மாடவீதியில் இருந்து புறப்பட்டு தெற்கு மாட வீதி, ராமகிருஷ்ண மடம் சாலை, வடக்கு மாட வீதி வழியாக மீண்டும் கிழக்குமாட வீதி வழியாக தேர் நிலைக்கு வந்தடைகிறது. மாலையில் ஐந்திருமேனிகள் திருவீதி உலா நடக்கிறது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக தேரோட்டத்தை பொதுமக்கள் வீட்டில் இருந்து பார்க்கும் வகையில் https://www.youtube.com/c/MYLAPORE KAPALEESWARARTEMPLE என்ற ‘யூடியூப்’ சேனலில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பவர்கள், இந்த சாஸ்தாவை தரிசித்து மனம் உருகி வேண்டினால், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளெல்லாம் நீங்கி, அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழியும் என்று கூறப்படுகிறது.
கூட்டுக்குடும்பம் என்பது பழங்கதையாகி, கணவன்- மனைவி- ஒரு குழந்தை என்னும் சிறிய குடும்பமாக இன்றைய உலகம் மாறிவிட்ட நிலையில், தனது குல தெய்வம் எது என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. ஜோதிடம், பிரசன்னம் என்று பல வழிகளிலும் முயற்சித்த போதிலும் தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் கலங்கித் தவிக்கும் குடும்பங்கள் ஏராளம்.
இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது, ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ திருக்கோவில். தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பவர்கள், இந்த சாஸ்தாவை தரிசித்து மனம் உருகி வேண்டினால், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளெல்லாம் நீங்கி, அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாஸ்தாவை வழிபட்டால் சனி தோஷமும் நீங்குகிறதாம்.
அத்ரி மகிரிஷியும் அனுசூயா தேவியும் தங்கியிருந்த ஆசிரமம்தான் இன்று ‘ஆஸ்ராமம்’ என்றழைக்கப்படும் சிற்றூர். இந்த அத்ரி மகிரிஷியே இங்கு சாஸ்தாவாக அமர்ந்து அருள்பாலிப்பதாகக் கூறுவதும் உண்டு. அத்ரி மகரிஷி யாகம் செய்த ஓமகுண்டம்தான் கோவிலின் அருகில் உள்ள தீர்த்தக்குளம் என்கின்றனர். இக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடினால் எல்லா நோய்களும் நம்மைவிட்டு நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் ஆஸ்ராமம் அமைந்துள்ளது.

திருவாரூரில் தியாகராஜசுவாமி கோவிலில் இன்று 96 அடி உயர ஆழித்தேரோட்டம் தொடங்கியது. பக்தர்களின் ‘தியாகேசா, ஆரூரா’ பக்தி கோஷம் விண்ணை தொட்டது.
திருவாரூர் :
“ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடிய சிறப்பு மிக்கது திருவாரூர் ஆழித்தேராகும். திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராஜர் கோவில் சைவ சமய மரபில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது.
இக்கோயில் சைவ சமயத்திற்கே பெரிய பீடமாய் விளங்குவது மட்டுமல்லாமல் பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி அளிப்பது ஆகும். பஞ்ச பூத தலங்களுல் பூமிக்குரிய தலமாக விளங்கும் இக்கோயில் சனீஸ்வரனும், நளனும் வணங்கி சாபம் போக்கியதன் மூலம் சர்வதோஷ பரிகாரதலமாகவும் விளங்குகிறது.
இக்கோயில் ஆழித்தேர் ஆசியாவிலேயே பெரிய தேராக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு தியாகராஜருக்கும் தேருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. வேத ஆகமங்கள் ஒலிக்க தேரோட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கொடி அசைக்கப்பட்டவுடன் பக்தர்கள் ஆருரா! தியாகேசா!! என உற்சாக குரல் எழுப்பி வடம்பிடித்து தேரினை இழுத்தனர். 450 டன் எடையுள்ள 96 அடி உயர தேரினை இழுக்க 15 டன் எடை கொண்ட வடக்கயிறு கட்டப்பட்டது.ஒவ்வொரு வடக்கயிறின் நீளம் சுமார் 1 கி.மீ. தூரம் என்பது குறிப்பிதக்கது.
தேரோட்டத்தினை முன்னிட்டு கோயிலின் தேவாசிரிய மண்டபத்தில் இருந்து தியாகராஜர் அஜபா நடனத்துடன் நகர்வலமாக வந்து திருத்தேர் ஏறினார். அதுமுதல் தேரிலிருந்தே பக்தர்களுக்கு தியாகராஜர் காட்சி அளித்தார். முன்னதாக 5 மணிக்கு விநாயகர், முருகன் தேர்கள் பக்தர்களால் இழுத்து செல்லப்பட்டது. தியாகராஜர் ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் தேர்களும் இழுக்கப்பட்டது. 5 தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்ற காட்சி பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக இருந்தது.
அழகிய வண்ணதுணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பார்ப்பவர்களின் மனங்களை கவரும் வகையில் இருந்தது. 96 அடி உயரத்தில் கம்பீரமாய் அசைந்தாடி வந்த தேரினை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஆதீன கர்த்தர்கள் தருமபுரம் ஆதீனம், திருப்புகழூர் வேளாக்குறிச்சி ஆதீனம், திருவாடுதுறை மற்றும் திருப்பனந்தாள் ஆதீனங்கள் பங்கேற்றனர். தேரானது பல்வேறு வீதிகளின் வழியாக சென்றது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் வழக்கமாக 3 நாட்கள் நடைபெறும். இதற்கு முதல்நாள் விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டமும், ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் தேரோட்டமும் நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக இந்த 5 தேரோட்டமும் இரண்டு நாட்களாக மட்டுமே நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு ஒரே நாளில் 5 தேரோட்டமும் நடைபெற்றது. கால விரயத்தினை தவிர்க்கும் வகையிலும் பொருளாதார சிக்கனத்தை முன்னிட்டும் ஒரே நாளில் 5 தேர்களும் இழுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து கடைகள் அமைப்பர். பல அரிய பொருட்கள் இந்த கடைகளில் விற்கப்படுவதால் தேரோட்டம் காணவரும் பக்தர்கள் தவிர்க்காமல் இந்த கடைகளுக்கும் வந்து பொருள்களை வாங்கி செல்வர், கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு இக்கோயிலில் கடைகள் அமைக்கப்படவில்லை. இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் பொருட்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்திற்கே பெரிய கோயிலாக விளங்குவதாலும் சைவ சமய மரபில் பெரிய கோயில் எனப்படுவதாலும் இக்கோயில் தேரோட்டத்தினை காண தமிழகம் முழுவதும் இருந்து சிவனடியார்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு தேரோட்டத்திற்கும் ஏராளான சிவனடியார்கள் வந்திருந்தனர். இவர்கள் தியாகராஜரை தரிசித்துவிட்டு தேருக்கு முன்பகுதியில் உடுக்கு மற்றும் மேளம் இசைத்து அஜபா நடனம் ஆடி சென்றனர்.

திருப்பரங்குன்றம் கோவில் பங்குனி பெருவிழாவில் முருகப்பெருமானை பக்தர்கள் தங்களது உள்ளங்கைகளில் கைப்பாரமாக சுமந்து வந்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் வெகு விமரிசையாக பங்குனி பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனிப் பெருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 5-ம் நாளான நேற்று கைப்பாரம் எனும் விசேஷ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள வாகனங்களிலேயே அதிக எடை கொண்ட வாகனமான வெள்ளி யானை வாகனத்தில் தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி மேலரத வீதி சந்திப்பில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். அங்கு பக்தர்களுக்கு சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வெள்ளி யானை வாகனத்தில் தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமானை முருக பக்தர்களும், சீர்பாதத்தினரும் தங்களது உள்ளங்கைகளில் தூக்கினார்கள். மேலும் அவர்கள் தலைக்கு மேலாக முருகப் பெருமானை தூக்கி உள்ளங்கைகளில் சுமந்தபடி மேல ரத வீதியில் இருந்து கோவில் வாசல் வரை ஓட்டமும் நடையுமாக சென்றனர். அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
பொதுவாக, இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தள்ளுவண்டியில் வைத்து நகர் வீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை பங்குனிப் பெருவிழாவின் 5-ம் நாள் மட்டும் முருகப் பெருமானை பக்தர்கள் தங்களது உள்ளங்கைகளில் கைப்பாரமாக சுமப்பது விசேஷமாகும். அதுவும் பங்குனி பெருவிழாவின் 5-வது நாள் நிகழ்ச்சியானது கிராம திருவிழாவாக கொண்டாடப்படுவது விசேஷத்திலும் விசேஷமாகும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 28-ந்தேதி பங்குனி உத்திரமும், 29-ந்தேதி சூரசம்ஹாரமும், 30-ந்தேதி பட்டாபிஷேகமும் நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 31-ந்தேதி முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளுகின்றனர்.
திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகிற ஏப்ரல் 1-ந்தேதி மலையைச் சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்கின்றனர்.

வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து குத்துவிளக்கு பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுத்தால் நல்ல பலன்கள் வந்து சேரும்.
பெண் தெய்வ வழிபாட்டிற்கு பெருமை சேர்க்கும் மாதம், ஆடி மாதமாகும். கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாத வழிபாட்டில் கிடைக்கும் அற்புதப் பலன், வேறு எந்த மாதங்களுக்கும் கிடைப்பதில்லை. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதம் ஆடியாகும். கடகம் என்பது சந்திரனுக்கு சொந்த வீடு. மனதுகாரகன் சந்திரனுக்குரிய வீட்டில், ராஜகிரகமான சூரியன் சஞ்சரிக்கும் போது நாம் மனதில் எதை நினத்து வழிபடுகின்றோமோ அந்த வழிபாட்டால் வாழ்வில் வளம் கிடைக்கும். இதை நம் முன்னோர்கள் கண்டறிந்துதான் ஆடி மாதம் அம்பிகை வழிபாட்டிற்கென்று ஒதுக்கி இருக்கிறார்கள். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை வழிபட்டால் கோடி கோடியாய் நற்பலன்கள் கிடைக்கும்.
‘ஆடிச் செவ்வாய் தேடிப்பிடி’, ‘ஆடிப்பட்டம் தேடி விதை’, ‘ஆடிப்பெருக்கு கோடியாய் பெருகும்’ என்பதெல்லாம் முன்னோர் வாக்கு. தமிழ் வருடத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ணிய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே ஆடி வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை அலங்கரித்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும்.
ஆடி மாத செவ்வாய்க்கிழமை அன்று, செட்டி நாட்டுப் பகுதிகளில் பெண்கள் மட்டும் வழிபடும் அவ்வையார் பூஜை பிரசித்தி பெற்றது. ஒரு சந்திக் கொழுக்கட்டை நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வார்கள். இதன்மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்கு தொழில் மேன்மையும் அமையும் என்பது நம்பிக்கை.
ஆடி வெள்ளிக்கிழமை அன்று குத்துவிளக்கு பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுத்தால் நல்ல பலன்கள் வந்து சேரும். ஆடி அமாவாசை அன்று கடல் அல்லது நதியில் நீராடி முன்னோர் களுக்கு திதி கொடுத்தால், அவர்களுக்கு ஆசி கிடைக்கும். அதன்மூலம் இல்லத்தில் உள்ள தடைகள் அகன்று சுப காரியங்கள் முடிவடையும்.
ஆடி வெள்ளியன்று லட்சுமியை வழிபட்டால் நாம் பண மழையில் நனையலாம். ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான பொருள் வளம் கொடுப்பவளை ‘லட்சுமி’ என்றும், ‘திருமகள்’ என்றும் வர்ணிக்கிறோம். எட்டு வகை லட்சுமியின் அருள் இருந்தால் நாம் திட்டமிட்டபடி வாழ்க்கை நடத்த இயலும். அப்படி வரம் தரும் லட்சுமியை ‘வரலட்சுமி’ என்று அழைத்து, விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். அன்றைய தினம் அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து கோலமிட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, லட்சுமிக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். மாவிலைத் தோரணம் கட்டி லட்சுமிக்குரிய தாமரைக் கோலமிட்டு ‘திருமகளே வருக’ என்று கோல மாவினால் எழுதலாம்.
பூஜை அறையில் லட்சுமி படத்தைப் பலகையின் மேல் நடுவில் வைக்க வேண்டும். அதன் அருகில் ஐந்துமுக விளக்கில் பஞ்ச எண்ணெய் ஊற்றி, பஞ்சமுக தீபம் ஏற்ற வேண்டும். அருகில் நெல் பரப்பி, அதன்மேல் ஒரு தட்டில் அரிசி பரப்பிவைக்க வேண்டும். பூச்சூட்டிய குடம், மாவிலை, தேங்காய் போன்றவற்றை சேர்த்து வைக்க வேண்டும். சந்தனம், குங்குமம் பொட்டு குடத்திற்கு வைத்து தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, இனிப்பு பொருள் நைவேத்தியத்தோடு லட்சுமி கவசம், லட்சுமி வருகைப் பதிகம் பாடி வழிபாடு செய்தால் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
“அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம் இன்றோடு விலக வேண்டும்” என்று சொன்னால் லட்சுமியின் அருள் உங்களுக்கு கிடைக்கும். அவளது அருள் இருந்தால் வறுமை விலகும், வளங்கள் குவியும். மறுமலர்ச்சியால் வாழ்க்கை மலரும்.
அஷ்டலட்சுமி படத்தை இல்லத்தில் வைத்து லட்சுமிக்குரிய வருகைப் பதிகம் படித்தால், இமயத்தில் இருந்தாலும் சமயத்தில் கைகொடுத்து உதவுவாள். எல்லா தெய்வங்களுக்கும் போற்றிப் பதிகம் பாடலாம். ஆனால் லட்சுமியை வழிபடும்போது மட்டும் வருகைப் பதிகம் பாடி வழிபடுவதே நல்லது. லட்சுமி இல்லத்தில் அடியெடுத்து வைத்தால் நம்முடைய கலக்கம் அகலும். கவலை விலகும். அந்த அம்பிகையை ஆடிவெள்ளி தோறும் வழிபடுங்கள், வளமான வாழ்வு அமையும்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பால் ஊற்றினர்.
தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற திருவிழாக்களில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா முக்கியமான ஒன்றாகும். இந்தசிரசு திருவிழா வருகிற மே மாதம் 15-ந் தேதி நடக்கிறது. சிரசு திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து பால் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து பால் கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பால் ஊற்றினர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணி குழு தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்பட முன்னாள் அறங்காவலர்கள், திருப்பணி கமிட்டியினர், கோபாலபுரம் பொதுமக்கள், விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
கெங்கை அம்மன் கோவில் சிரசு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 30-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மே மாதம் 14-ந் தேதி தேர் திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறுகிறது.

கொரோனா தொற்று தீவிரமாவதால் ரோமன் கத்தோலிக்க திருச்சபைகள், சி.எஸ்.ஐ. திருச்சபைகள், இ.சி.ஐ. பெந்தேகோஸ்து, மெத்தஸ்டிங்ட், ஆர்க்காடு லூத்தரன் போன்ற ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி செல்லும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை :
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கிறிஸ்தவ, முஸ்லிம் பண்டிகைகளும் நெருங்கி வருவதால், பொது இடங்களில் கூடுவதற்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஏப்ரல் 4-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையும் அதற்கு முன்னதாக 2-ந் தேதி புனித வெள்ளி போன்ற சிறப்பு தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை பிடித்து பவனியாக இந்நாளில் செல்வது வழக்கம். ஆலயங்களை சுற்றியும், தங்கள் பகுதிக்கு உட்பட்ட தெரு வீதிகளிலும் குருத்தோலையை பிடித்து ஊர்வலமாக செல்லும் போது ‘ஓசன்னா’ என்று பாடல்களை முழங்கி செல்வார்கள்.
அடுத்த வாரம் முழுவதும் சிறப்பு நாட்களாக அனுசரிக்கப்படும். அதனால் ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
தற்போது தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கிறிஸ்தவர்களின் பண்டிகைகளும் வருவதால், அவற்றின் மூலம் தொற்று பரவக் கூடாது என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற அனைத்து கிறிஸ்தவ ஆலய மத போதகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபைகள், சி.எஸ்.ஐ. திருச்சபைகள், இ.சி.ஐ. பெந்தேகோஸ்து, மெத்தஸ்டிங்ட், ஆர்க்காடு லூத்தரன் போன்ற ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி செல்லும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆலயத்துக்குள்ளே இந்த நிகழ்ச்சியை எளிமையாக நடத்தி முடிக்க தலைமை போதகர்களிடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபை மக்களை அழைத்து ஊர்வலமாக செல்ல வேண்டாம் என அனைத்து திருச்சபைகளுக்கும் அதன் தலைமை அறிவுறுத்தி உள்ளது.
அதனால் 2-ந் தேதி குருத்தோலை பவனி நிகழ்ச்சிகள் பெரும்பாலான ஆலயங்களில் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் ஆலயங்களில் சமூக இடைவெளி, கிருமிநாசினி போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும், முககவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறு குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களில் முககவசம் அணியாமல் கூட வேண்டாம். ஆலயம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கவும் சுகாதாரத்துறை அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அனைத்து ஆலயங்களிலும் அறிவுறுத்தப்படுகிறது.

மேல்கோட்டையில் புகழ்பெற்ற செலுவநாராயணசாமி கோவிலில் வைரமுடி உற்சவம் கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடந்தது.
மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் மேல்கோட்டையில் பிரசித்தி பெற்ற செலுவநாராயணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது வைரமுடி திருவிழா. இந்த திருவிழாவையொட்டி சாமிக்கு வைர கிரீடம் அணிவிக்கப்படும். பின்னர் அந்த வைர கிரீடம் அணிந்த செலுவநாராயணசாமி கோவில் வளாகத்தில் திருவீதி உலா வருவார். இதை பார்க்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வைர முடி உற்சவ விழா நேற்று கோவிலில் நடந்தது. எப்போதும் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த வைரமுடி உற்சவ விழாவில் பங்கேற்பார்கள். ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்த விழாவில் வெளிமாவட்டம், வெளிமாநில பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதுவும் கோவிலுக்குள் 200 பேரும், கோவிலுக்கு வெளியே 2 ஆயிரம் பேரும் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இதனால் நேற்றைய வைர முடி உற்சவம் எளிமையாக நடந்தது. இதையொட்டி நேற்று காலை மாவட்ட கருவூலத்தில் இருந்து வைர கிரீடம் கலெக்டர் அஸ்வதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு பூஜை நடத்தி ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. வழியில் மண்டியா லட்சுமி ஜனார்த்தனா கோவிலில் வைர கிரீடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அந்த வைர கிரீடம் மேல்கோட்டை செலுவநாராயணசாமி கோவிலை வந்தடைந்தது. அங்கு அந்த வைர கிரீடத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் அந்த வைர கிரீடத்தை தரிசனம் செய்தனர். இரவு 8.30 மணி அளவில் செலுவநாராயண சாமிக்கு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் வைர கிரீடம் சாமிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து வைர கிரீடத்துடன் செலுவநாராயணசாமி தேரில் எழுந்தருளி, கோவிலின் ராஜவீதிகளில் வலம் வந்தார். அப்போது பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இந்த தேரோட்டம் விடிய, விடிய நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக 12.30 மணி அளவில் இந்த தேரோட்டம் முடிக்கப்பட்டது.
இதையொட்டி மேல்கோட்டை நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மேலும் ஆங்காங்கே போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து வெளிமாவட்டம், வெளிமாநில பக்தர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு வைரமுடி உற்சவம் ரத்து செய்யப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.

திருமால் எடுத்த அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்திற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் பார்க்கலாம்.
தியான ஸ்லோகம்
உத்யத் பாஸ்வத் ஸஹஸ்ரத்யுதி மம்ருத கரவ்யூஹ காந்தி பரபாவம்
த்வாப்யாம் தோர்ப்யாம் ச வேணும் விததத முபரிஷ்டாஸ்திதாப்யாம் மநோஜ்ஞம்
வாமாங்கஸ்தாப்தி கந்யாஸ்தந கலஸ மதோ வாம தோஷ்ணா ஸ்ப்ருஸந்த்ம்
வந்தே வ்யாக்யாந முத்ரோல்ஸதிதரகரம் போதய்ந்தம் ஸவமீஸம்.
மூலமந்திரம்
ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா.
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் மணமாகாத பெண்களுக்கு குணம் ரூபம் சீலம் நிறைந்த கணவர் கிடைத்து இல்லற வாழ்க்கை இனிமையாய் அமையும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவத்தில் ஸ்ரீவாரி புஷ்கரணியில் ஏற்பாடு செய்துள்ள தெப்பத்தேரில் உற்சவர்கள் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் 5 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று மாலை 6 மணியளவில் உற்சவர்களான சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ராமச்சந்திரமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டு, நான்கு மாடவீதிகளில் வலம் வந்து ஸ்ரீவாரி புஷ்கரணியை அடைந்தனர்.
ஸ்ரீவாரி புஷ்கரணியில் ஏற்பாடு செய்துள்ள தெப்பத்தேரில் உற்சவர்கள் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தெப்பத்தேர் மின் விளக்குகளாலும், பல வண்ணமலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
தெப்போற்சவத்தையொட்டி திருமலையில் உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் இந்து தர்மபிரசார பரிஷத், தாச சாகித்ய திட்டம், அன்னமாச்சாரியார் திட்டம் ஆகியவை சார்பில் பக்தி பாடல் நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள், நாட்டிய, நடன நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிகள் அனைத்தும் கொரோனா வழிகாட்டுதல் முறைப்படி நடந்தது.
விழாவில் பெரிய ஜீயர்சுவாமிகள், திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிலக்கோட்டையில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது, இங்கு பங்குனி மாத திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி கடந்த 21-ந்தேதி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். அப்போது அக்னிச்சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தி வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்தநிலையில் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று முன்தினம் இரவு அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பண்ணாரி அம்மன் கோவிலில் குழி கம்பம் நடப்பட்டது. இதில் சுமார் 25 பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். வருகிற 30-ந் தேதி முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நடைபெற உள்ளது.
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறும். திருவிழாவில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் மற்றும் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா தொற்று பரவி வருவதால் மிக எளிய முறையில் குண்டம் விழா நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
அதன்படி கடந்த 15-ந் தேதி பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட பூச்சாட்டு விழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சப்பரங்கள் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8 நாட்கள் திருவீதி உலா வரும். ஆனால் இந்த ஆண்டு சப்பரம் வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை கோவிலில் குழி கம்பம் நடப்பட்டது. இதில் சுமார் 25 பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். பின்னர் கோவில் முன்பு வெட்டப்பட்ட குழியில் பூசாரி மற்றும் பக்தர்கள் வேம்பு மற்றும் ஊஞ்ச மரங்களை போட்டு சூடம் ஏற்றி எரிய விட்டார்கள்.
அதைத்தொடர்ந்து மலைவாழ் மக்கள் பீனாட்சி வாத்தியம் வாசித்தபடி குழி கம்பத்தை சுற்றி நடனம் ஆடினார்கள். மேலும் எளியமுறையில் பூஜைகள் நடந்தது. வருகிற 30-ந் தேதி அதிகாலை 4 மணி அளவில் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. இதில் பூசாரிகள் மட்டுமே தீ மிதிக்கிறார்கள்.