
ஸ்ரீவாரி புஷ்கரணியில் ஏற்பாடு செய்துள்ள தெப்பத்தேரில் உற்சவர்கள் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தெப்பத்தேர் மின் விளக்குகளாலும், பல வண்ணமலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
தெப்போற்சவத்தையொட்டி திருமலையில் உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் இந்து தர்மபிரசார பரிஷத், தாச சாகித்ய திட்டம், அன்னமாச்சாரியார் திட்டம் ஆகியவை சார்பில் பக்தி பாடல் நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள், நாட்டிய, நடன நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிகள் அனைத்தும் கொரோனா வழிகாட்டுதல் முறைப்படி நடந்தது.
விழாவில் பெரிய ஜீயர்சுவாமிகள், திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.