
விழாவையொட்டி கடந்த 21-ந்தேதி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். அப்போது அக்னிச்சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தி வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்தநிலையில் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று முன்தினம் இரவு அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.