search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா திருக்கோவில்
    X
    அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா திருக்கோவில்

    குலதெய்வம் தெரியாதவர்கள் வழிபட வேண்டிய கோவில்

    தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பவர்கள், இந்த சாஸ்தாவை தரிசித்து மனம் உருகி வேண்டினால், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளெல்லாம் நீங்கி, அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழியும் என்று கூறப்படுகிறது.
    கூட்டுக்குடும்பம் என்பது பழங்கதையாகி, கணவன்- மனைவி- ஒரு குழந்தை என்னும் சிறிய குடும்பமாக இன்றைய உலகம் மாறிவிட்ட நிலையில், தனது குல தெய்வம் எது என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. ஜோதிடம், பிரசன்னம் என்று பல வழிகளிலும் முயற்சித்த போதிலும் தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் கலங்கித் தவிக்கும் குடும்பங்கள் ஏராளம்.

    இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது, ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ திருக்கோவில். தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பவர்கள், இந்த சாஸ்தாவை தரிசித்து மனம் உருகி வேண்டினால், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளெல்லாம் நீங்கி, அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாஸ்தாவை வழிபட்டால் சனி தோஷமும் நீங்குகிறதாம்.

    அத்ரி மகிரிஷியும் அனுசூயா தேவியும் தங்கியிருந்த ஆசிரமம்தான் இன்று ‘ஆஸ்ராமம்’ என்றழைக்கப்படும் சிற்றூர். இந்த அத்ரி மகிரிஷியே இங்கு சாஸ்தாவாக அமர்ந்து அருள்பாலிப்பதாகக் கூறுவதும் உண்டு. அத்ரி மகரிஷி யாகம் செய்த ஓமகுண்டம்தான் கோவிலின் அருகில் உள்ள தீர்த்தக்குளம் என்கின்றனர். இக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடினால் எல்லா நோய்களும் நம்மைவிட்டு நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் ஆஸ்ராமம் அமைந்துள்ளது.
    Next Story
    ×