search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்ம
    X
    லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்ம

    லால்குடியில் சப்தரிஷீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம்

    லால்குடியில் சப்தரிஷீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி மாவட்டம் லால்குடியில் சப்தரிஷீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சப்தரிஷிகளும் வழிபட்டு முக்தி தந்த தலமாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பங்குனி தேரோட்டம் மிகச் சிறப்பாக நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தேரோட்டம் நடைபெற வில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டு பங்குனி தேரோட்டம் கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 21-ந்தேதி நாயன்மார்கள் வீதிஉலா, 23-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், சுவாமி தேர், அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய 5 தேர்களில் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து லால்குடி மற்றும் சுற்றுப்புற கிராமமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு லால்குடியில் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.
    Next Story
    ×