என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளழகர்
    X
    கள்ளழகர்

    அழகர்கோவில் திருக்கல்யாண வைபவம் நாளை ஆன்லைனில் ஒளிபரப்பு

    மதுரை அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவிலில் வருகிற 29-ந் தேதி வரை திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் வீட்டிலிருந்து காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    மதுரை அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவிலில் வருகிற 29-ந் தேதி வரை திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. இதில் நாளை (28-ந்தேதி) காலை 10.50 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் சுவாமி, 4 பிராட்டிமார்களுடன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் www.tnhrce.gov.in, www.alagarkovil.org, youtube arulmigu kallalagar thirukovil மூலம் பக்தர்கள் வீட்டிலிருந்து காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவலை கோவில் உதவி ஆணையர் அனிதா தெரிவித்து உள்ளார்.

    கொரோனா பரவலை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×