என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    லட்சுமி கடாட்சதோடு சேர்ந்த, மன அமைதியை விரும்பும் எல்லோரும் தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலன் அடையலாம்.

    ஓம் வரப்ரதாய நமஹ!
    ஓம் பக்தவத்ஸலாய நமஹ!
    ஓம் ஆகாச ராஜ வரதாய நமஹ!

    காசு பணத்தை எப்பாடுபட்டாவது சம்பாதித்து விடலாம். ஆனால், மனநிம்மதியை எங்கு சென்றாலும் காசு கொடுத்து வாங்க முடியாது. அப்படிப்பட்ட மன நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாமல் இன்று பலபேர் தவித்து வருகிறார்கள். கோடி ரூபாய் காசு இருந்தாலும், அதை ஆண்டு அனுபவிக்க மகிழ்ச்சியான சூழ்நிலையில், மன அமைதியும், சந்தோஷமான குடும்பமும் ஒருவருக்கு கட்டாயம் இருக்க வேண்டும்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஊரடங்கை முன்னிட்டு வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் 9 நாட்கள் வசந்த உற்சவமும், ஒருநாள் விசாக விழாவுமாக 10 நாட்கள் வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். வசந்தஉற்சவத்தையொட்டி தினமும் இரவு 7 மணியளவில் உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி கோவிலுக்குள் உள்ள வசந்தமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இதற்காக வசந்த மண்டபத்தின் மைய பகுதியில் தெப்பம்போல தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் கோடை வெப்பம் தணியும் என்பது நம்பிக்கை.

    திருவிழாவின் 10-வது நாளாக மதுரை மாநகர் பகுதியில் இருந்தும், திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் ஏராளமான பக்தர்கள் பன்னீர்காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி, பறவை காவடி என்று பல்வேறு விதவிதமான காவடிகள் எடுத்து வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

    ஆண்டுக்கு ஒருமுறை விசாகத் திருநாளில் தெய்வானை மற்றும் வள்ளி சமேத சண்முகப் பெருமான் தன்இருப்பிடத்தை விட்டு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு சண்முகப்பெருமானுக்கு காலையிலிருந்து மாலை வரை இடைவிடாது குடம், குடமாக பாலாபிஷேகம் நடைபெறும். அவை கண்கொள்ளா காட்சியாக அமையும்

    இந்தஆண்டிற்கான வைகாசி விசாக விழா வருகின்ற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கப்பட வேண்டும். இதேபோல 25ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வைகாசி விசாக விழா நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா பரவல் 2-வது அலை அதிவேகமாக பரவுதலையொட்டி ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில் மூடப்பட்டுள்ளது. ஆகவே திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் துணை கமிஷனர் ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர்அந்த அறிக்கையில் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
    திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் புராதனவனேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடைபெறுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் புராதனவனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கி.பி. 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதற்கான வரலாற்று ஆவணங்களும், கல்வெட்டுகளும் உள்ளன. திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. இக்கோவிலில் மதுரை சவுண்ட கோப்பரகேசரவர்மன், ராஜகேசரி வர்மன், ராஜேந்திரசோழ தேவன், திரிபுவன சக்கரவர்த்தி ராஜராஜ தேவன், வரகுண மகாராஜன், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் மற்றும் விஜய நகரத்து வெங்கடபதி ராயர் ஆகியோர் திருப்பணி வேலைகள் செய்துள்ளதற்கான சான்றுகளும் கோவில் கல்வெட்டுகளில் கிடைக்கிறது. குடமுழுக்கு விழா நடைபெற்று 100 ஆண்டுகளை கடந்த நிலையில், திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2001-ம் ஆண்டு இக் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதன் பிறகு இன்னும் குடமுழுக்கு செய்யப்படவில்லை.

    பிரதி மாதம் நடைபெறும் பிரதோஷ வழிபாடு, சித்திரை தமிழ் வருட பிறப்பு, வைகாசி விசாக திருவிழா 12 நாட்கள், மாசிமகம் ஆகியன இக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் ஆகும். இதில் திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பெரியநாயகி அம்மனையும், புராதனவனேஸ்வரரையும் வழிபாடு செய்துவருகின்றனர். இவைதவிர வருடந்தோறும் எண்ணற்ற திருமணங்கள் இக்கோவிலில் நடைபெற்று வருகிறது

    பல்வேறு சிறப்புகள் பெற்றதும் காலத்தால் மிகவும் பழமையான இக்கோவில், தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் நிர்வாகத்தில் உள்ளது. கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வந்தன. தற்சமயம் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பக்தர்கள் வழிபாடு நடைபெறவில்லை. குடமுழுக்கு விழா நடைபெற்று 20 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கோவிலில் உள்ள சுதை சிற்பங்கள் பெரும்பாலானவை சேதமடைந்து விட்டன. வர்ணபூச்சுகள் அனைத்தும் மங்கி விட்டன. கோவில் கோபுரங்களில் செடிகள் வளர தொடங்கிவிட்டன.

    கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவிலில் இருந்த கொடி மரமும் சாய்ந்து விழுந்து விட்டது. ஆனால் இதுவரை மாற்று கொடிமரம் நடப்படவில்லை. கோவில் வளாகத்தில் வடபகுதியில் திருக்குளம் அமைந்துள்ளது. குளத்தில் தண்ணீர் நிரப்புவதற்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறும் கடந்த 2 மாதமாக செயல்படவில்லை. இதனால் குளத்தில் இருக்கும் தண்ணீரின் அளவு வெகு விரைவாக குறைந்து வருகிறது. இதனால் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து கோவிலுக்கு வரும் வருபவர்களும் தங்களது வேதனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    எனவே இனியும் தாமதிக்காமல் புராதனவனேஸ்வரர் கோவில் திருப்பணி வேலைகளை தொடங்கி குடமுழுக்கு விழாவை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்தது.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுத்தும், தொண்டு செய்து அவருக்கு மனைவியானார். ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்தமும், உறவும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வந்தது.

    எனினும் பல காரணங்களால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது. பின்னர் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை நடத்து வருகிறது.

    இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கவுள்ளதை முன்னிட்டு நேற்று காலை 8.30 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட ஆண்டாள் அணிந்த மாலை, பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பின்னர் அவை கோவில் வளாகத்திற்குள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன், ஸ்தானிகம் ரமேஷ்பட்டர் உள்ளிட்ட குழுவினர் வஸ்திரமரியாதையை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவஸ்ரீில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளிடம் அளித்தனர்.

     சித்திரை தேரோட்டத்தின் போது தேரில் எழுந்தருளும் நம்பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து தேரோட்டம் கண்டருளுவார். ஆனால் கொரோனா பரவல் தடை உத்தரவின் காரணமாக சித்திரை தேருக்கு பதிலாக இன்று காலை 6.30 மணிக்கு கருடமண்டபத்தில் நம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    நாளை (திங்கட்கிழமை) சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான நாளை  (செவ்வாய்க்கிழமை) நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுகிறார். இத்துடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்ய தொடங்கியதும் சிறிது சிறிதாக உங்கள் வீட்டில் பணவரவு உயர்வதை உணரலாம். இந்த எளிய பரிகார முறையை செய்து பயன்பெறுங்கள்.
    ஒவ்வொருவரும் நம் வீட்டில் லட்சுமி குடியிருந்து நமக்கு அருள வேண்டும் என்று ஆசைப்படுவோம் ஆனால் அதற்கு உண்டான முறைகளை செய்வதில்லை.

    அப்படியே செய்தாலும் முறையாக செய்வதில்லை இதற்கு ஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்து அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி, பருப்பு, நவ தானியம், புனுகு, குங்கும பூ, கஸ்துரி, ஜவ்வாது, ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, வெற்றிலை பாக்கு, இவை அனைத்தையும் வியாழக்கிழமையே வாங்கி வைத்துக்கொள்ளவும்.

    வெள்ளிகிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் சுக்கிர ஹோரையில் மேற்கூறிய அனைத்து பொருளையும் கலசத்தில் இட்டு மண்கலசத்திற்கு விபூதி பட்டையிட்டு சந்தனம் குங்குமம் வைத்து உங்கள் பூஜை அறையில் வைத்து மகாலட்சுமியை மனதாற வேண்டி தாயே நீ என்றும் என் குடும்பத்தில் இருந்து அருள வேண்டும் என பிராத்தனை செய்து விட்டு தூப தீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை 108முறை கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில் வைக்கவும்.

    இதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம் கூறி வணங்க வேண்டும், மண்கலசம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, தொடர்ந்து வணங்க தொடங்கியதும் சிறிது சிறிதாக பணவரவு உயர்வதை உணரலாம். இந்த எளிய பரிகார முறையை செய்து பயன்பெறுங்கள்.

    108முறை கூற வேண்டிய மந்திரம்:

    ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ
    ஜீவனுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே சிலுவையில் அறையப்பட ஒப்புக் கொடுத்ததின் நோக்கம் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்காகவே.
    ‘அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்’ (மத்தேயு 8:17).

    ஜீவனுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே சிலுவையில் அறையப்பட ஒப்புக் கொடுத்ததின் நோக்கம் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்காகவே. நம்முடைய சரீரத்தில் ஏற்படுகிற ஒவ்வொரு பலவீனங்களையும், ஒவ்வொரு நோய் களையும் சிலுவையில் சுமந்து விட்டார் என வேதம் சொல்லுகிறது.

    அப்படியானால் இனி நாம் வியாதிகளை சுமக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை முதலாவது நாம் விசுவாசிக்க வேண்டும். இச்செய்தியை வாசிக்கிற உங்களுக்குள்ளே தீராத நோய்களும் பலவீனங்களும் இருக்குமானால் கட்டாயம் ஆண்டவர் உங்களை சுகமாக்கி, உங்களுக்கு விடுதலைத் தர வல்லவராயிருக்கிறார்.

    இயேசு எனக்காக சிலுவையில் மரித்தார் என்றும், அவர் சிந்தின விலையேறப்பெற்ற ரத்தம் என்னுடைய வியாதிகளைப் போக்கும் என்றும் மனதார நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது கட்டாயம் அவரது தெய்வீக சுகத்தை அனுபவிக்க முடியும்.

    வாழ்நாளெல்லாம் வியாதியோடும், பலவீனத்தோடும் இருப்பதுதான் தேவனுடைய சித்தம் என அநேகர் தவறான கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.

    ‘பிரியமானவனே, உன் ஆத்மா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்’ (III யோவான் 2)

    மேற்கண்ட வசனத்தை கவனித்தீர்களா? நாம் ஆரோக்கியமாகவும், சுகமாகவும் இருப்பதுதான் தேவனுடைய விருப்பம். இதை மனப்பூர்வமாக விசுவாசியுங்கள். மாத்திரமல்ல, ‘நம் முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்’ (ஏசாயா 53:5) என வேதம் தெளிவாகக் கூறுகிறது.

    ஆகவே, எப்படிப்பட்ட வியாதிகளாக இருந்தாலும் சிலுவையில் சிந்தின தம்முடைய ரத்தத்தின் வல்லமையினால் பிசாசின் கிரியைகளை அழித்து தெய்வீக சுகத்தை கட்டாயம் இயேசு தருவார். ஏனெனில் அவர் இன்றும் ஜீவிக்கிறார்.
    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் மலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சாமி சன்னதியில் சரவிளக்கு ஏற்றப்பட்டு ஒளிமயமாக காட்சியளித்தது. பின்னர் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது

    இதில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோபுர வாசலில் சில பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில் ெகாரோனா காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    புனித ரமலானுக்கு ‘ரபீஉல் ஃபுகராயி’ - ஏழைகளின் வசந்த மாதம் எனும் தத்துவப் பெயரும் உண்டு. இது குறித்த நபிமொழிகள் கூறுவதை காண்போம்.
    புனித ரமலானுக்கு ‘ரபீஉல் ஃபுகராயி’ - ஏழைகளின் வசந்த மாதம் எனும் தத்துவப் பெயரும் உண்டு. இது குறித்த நபிமொழிகள் கூறுவதை காண்போம்.

    ‘ஷஃபான் அது எனது மாதம்; ரமலான் அது உங்கள் மாதம்; மேலும் புனித ரமலான் ஏழைகளின் வசந்த மாதமாகவும் உள்ளது; மேலும் தியாகத்திருநாளை உங்களின் ஏழைகள் மாமிசம் உண்டு வயிறு நிறையவும், மனநிறைவு அடையவும் இறைவன் ஏற்படுத்தி உள்ளான். எனவே அவர்களின் பசியைப் போக்க உண்ணக் கொடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அலி (ரலி).

    புனித ரமலானில் ஏழைகளின் பசியையும், வறுமையையும் போக்க, அவர்கள் பொருளா தாரத்தில் தன்னிறைவு அடைய, ‘ஜகாத்’ எனும் ஏழை வரியையும், ‘ஜகாத்துல் ஃபித்ர்’ எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தையும், ‘ஸதகா’ எனும் தர்மநிதியையும் இஸ்லாமிய மார்க்கம் கடமையாக்கியுள்ளது.

    புனித ரமலான் மாதத்தில்தான் ஜகாத் கடமையானது.

    ‘ஜகாத் எனும் நிதிகள் வறியவர்கள், ஏழைகள், நிதியை வசூலிக்கும் ஊழியர்கள், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டிய சகோதர(சமுதாயத்தவ)ர்கள், அடிமைகள் (விடுதலை செய்வதற்கும்), கடனாளிகள், அல்லாஹ்வின் பாதையில் அறப்போராட்டம் நடத்துபவர்கள், நாடோடிகள் ஆகியோருக்கு உரியவை. இது இறைவன் விதித்த கடமை; இறைவன் அறிபவன், ஞானமிக்கவன்’. (திருக்குர்ஆன் 9:60)

    நோன்புப் பெருநாளன்று வழங்கப்படும் தானிய அறத்திற்கு ‘ஜகாதுல் பித்ர்: நோன்புப் பெருநாள் தர்மம்’ என்று சொல்லப்படுகிறது.

    ஒரு முஸ்லிம் தமக்காகவும், அவர் ஜீவனாம்சம் கொடுக்க கடமைப்பட்டவர்களுக்காகவும் தலா நபர் ஒன்றுக்கு இரண்டரை கிலோ வீதம் நாம் உண்ணும் உணவு பண்டங்களான அரிசி அல்லது கோதுமை போன்ற தானியங்களை, அல்லது இதன் அன்றைய சந்தை விலையை சரிபார்த்து ஏழை எளியோருக்கு, பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன்பே வழங்கிட வேண்டும்.

    ‘நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி (ஸல்) கடமையாக்கினார்கள்; அது நோன்பாளியைச் சுத்தம் செய்கிறது; ஏழைகளின் பசியைப் போக்குகிறது. தொழுகைக்கு முன்பு கொடுப்பது ஜகாத்துல் பித்ராக அமைந்து விடுகிறது; அதற்கு பின்பு கொடுப்பது சாதாரண தர்மமாக அமைகிறது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத்)

    ஜகாத்தின் மூலமாகத்தான் இஸ்லாம் வறுமையை போக்கியது. அதைத்தான் நபியும், நபித்தோழர்களும் செயல்படுத்தினார்கள்.

    ஜகாத் கொடுக்காத செல்வந்தரும், கொடுக்கப்படாத செல்வமும் பெரும் அழிவை சந்திக்க நேரிடும் என்பதை இஸ்லாம் எச்சரிக்கிறது.

    ‘இன்னும் பொன்னையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு அதனை இறைவழியில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு என்று (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக’. (திருக்குர்ஆன் 9:34)

    ‘ஜகாத் நிதி (ஜகாத் அல்லாத இதர) செல்வத்துடன் கலந்து விடுமானால், அந்த செல்வம் அழிந்துவிடும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மது).

    இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான ‘ஜக்காத்’ என்னும் தர்மத்தை வாரிவழங்கிட இந்த ரமலான் வழிகாட்டுகிறது. இதன் மூலம் இறைவனின் நெருக்கமும், நன்மைகளும் நமக்கு பரிசாக கிடைக்கின்றது.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.40 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.23 மணி
    இந்த ஆண்டு 2-வது முறையாக பக்தர்கள் இன்றி பிரதோ‌‌ஷ வழிபாடு நடந்தது. அதாவது 14-வது முறையாக பிரதோ‌‌ஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை பெரியகோவிலில் பிரதோ‌‌ஷ வழிபாட்டின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். இந்தநிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த மாதம் 16-ந் தேதி தஞ்சை பெரியகோவில் மூடப்பட்டது. இருப்பினும், வழக்கம் போல் நான்கு கால பூஜையும், பிரதோ‌‌ஷ வழிபாடும் பக்தர்கள் இன்றி நடந்து வருகிறது.

    பிரதோ‌‌ஷ தினமான நேற்று நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், தயிர், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருட்களை கொண்டு சிவாச்சாரியார்கள் மட்டுமே அபிஷேகம் செய்து பிரதோ‌‌ஷ வழிபாட்டை நடத்தினர். பிரதோ‌‌ஷத்தின் போது பக்தர்கள் இன்றி பெரியகோவில் வெறிச்சோடி காணப்பட்டது.

    முன்னதாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கொரோனா தொற்று ஒழிய வேண்டியும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பூர்ண குணமடைய வேண்டியும் 54 குடங்கள் நீரை கொண்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சிவச்சாரியார்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

    ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி 12 முறை பிரதோ‌‌ஷ வழிபாடு நடந்தது.

    இந்த ஆண்டு 2-வது முறையாக பக்தர்கள் இன்றி பிரதோ‌‌ஷ வழிபாடு நடந்தது. அதாவது 14-வது முறையாக பிரதோ‌‌ஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    பிள்ளையார் விரத வழிபாடு மிகவும் எளிமையானது. எந்த காரணத்தை செய்வதற்கு முன்பும் விநாயரை வழிபாடு செய்த பின்னர் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.
    இந்தியாவிலேயே விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். அவர்கள் கணேஷ் சதுர்த்தி என்று சிறப்பான அளவில் மிகப் பிரம்மாண்டமாக இவ்விழாவைக் கொண்டாடுவர்.

    இங்கு திரும்பிய இடமெல்லாம் இவருக்கான கோயிலும் வழிபாடும் நிகழ்வதைக் காண முடியும். மங்கல்வார் என்னும் செவ்வாய்க்கிழமை உகந்தநாளாக எண்ணி ஆலய தரிசனம் செய்ய திரளாக விநாயகர் கோயிலுக்குச் செல்வார்கள்.

    பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.

    இதனைத் தான் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கைப் பழமொழியாக நாட்டுப்புறத்தில் சொல்லுவர். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம்(நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். கும்பத்திலும், கூர்ச்சத்திலும், ஓமாக்கினியிலும் விநாயகப்பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடுவர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம்.

    விநாயகருக்குரிய 11 விரதங்கள்

    1.வெள்ளிக்கிழமை விரதம்
    2. செவ்வாய்க்கிழமை விரதம்
    3. சதுர்த்தி விரதம்
    4. குமார சஷ்டி விரதம்
    5. தூர்வா கணபதி விரதம்
    6. சித்தி விநாயகர் விரதம்
    7.துர்வாஷ்டமி விரதம்
    8. நவராத்திரி விரதம்
    9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்
    10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
    11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்

    இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமானதாகும்.
    உலக இயக்கங்கள் அனைத்துக்கும் காரணமானவர் ஈசன் ஒருவரே என்பதை சொல்லும் விதமாக இத்தல இறைவனுக்கு ‘காரணீஸ்வரர்’ என்று பெயர் வழங்கப்படுகிறது.
    சென்னையின் மையப் பகுதியான மயிலாப்பூரில், கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோவில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

    சிஷ்ட முனிவர் வழிபட்ட சிறப்புக்குரிய தலம் இது. உலக இயக்கங்கள் அனைத்துக்கும் காரணமானவர் ஈசன் ஒருவரே என்பதை சொல்லும் விதமாக இத்தல இறைவனுக்கு ‘காரணீஸ்வரர்’ என்று பெயர் வழங்கப்படுகிறது. இத்தல இறைவியின் நாமம், சொர்ணாம்பிகை என்பதாகும். இந்த ஆலயம் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பிற்கால சோழர்கள் இந்த ஆலயத்திற்கு பல்வேறு திருப்பணிகளைச் செய்திருப்பதும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.

    இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மயிலாப்பூர் சப்த சிவாலயங்களில், முதலாவதாக வழிபட வேண்டிய தலம் இதுவாகும்.
    நமது ஏழேழு பிறவிக்கும் நற்பலன்கள் கிடைக்க ஏழு வகையான சிவலிங்கங்கள் இருக்கின்றன. அவற்றை முறைப்படி நாம் வழிபட்டால் எண்ணற்ற நற்பலன்கள் இல்லம் வந்து சேரும்
    நமது ஏழேழு பிறவிக்கும் நற்பலன்கள் கிடைக்க ஏழு வகையான சிவலிங்கங்கள் இருக்கின்றன. அவற்றை முறைப்படி நாம் வழிபட்டால் எண்ணற்ற நற்பலன்கள் இல்லம் வந்து சேரும். அவை வருமாறு:

    சுயம்புருவ லிங்கம் : தானாக உண்டானது

    தேவியகம் லிங்கம் : அம்பிகை வழிபட்டது

    தை விகம் லிங்கம் : தேவர்கள் வழிபட்டது

    மானுஷம் லிங்கம் : மனிதர்கள் வழிபட்டது

    ராட்சஸ லிங்கம் : அசுரர்கள் வழிபட்டது

    ஆரிஷம் லிங்கம் : ரிஷிகள் வழிபட்டது

    பாணம் லிங்கம் : பாணாசுரன் வழிபட்டது

    ×