என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதப் பெருமாள், சுமார் 4,500 நோய்களையும், அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்லவராக இங்கு எழுந்தருளியுள்ளார்.
    சோழவள நாட்டில் அமைந்த சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்று, வைத்தீஸ்வரன் கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர், ‘வைத்தியநாதர்.’ அம்பாள் பெயர் ‘தையல்நாயகி’ என்பதாகும். வைத்தியநாதப் பெருமாள், சுமார் 4,500 நோய்களையும், அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்லவராக இங்கு எழுந்தருளியுள்ளார்.

    வைத்தீஸ்வரன் ஆலயத்தில், நவக்கிரகங்கள் வரிசையாக, மூலவரின் சன்னிதிக்கு பின்புறம் அமைந்திருக்கின்றன. இங்கு அங்காரகனுக்கு தனிச் சன்னிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு, உற்சவர் விக்கிரகமும் காணப்படுகின்றன. அங்காரகனுக்கு ஏற்பட்ட செங்குஷ்ட நோயை, இத்தல இறைவன் தீர்த்து அருளினார். எனவே இந்த ஆலயம் அங்காரகத் தலமாக விளங்குகிறது. அங்காரக (செவ்வாய்) தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வழிபாடு செய்தால், அந்த தோஷங்கள் நீங்கும்.

    புதியதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது, வைத்தீஸ்வரன் கோவில். கும்பகோணம்- சீர்காழி நெடுஞ்சாலையில் உள்ளது மயிலாடுதுறை. இங்கிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திலும், சீர்காழியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.

    வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ‘சித்தாமிர்த தீர்த்தம்’ சிறப்புக்குரியது. இந்த தீர்த்தத்தில் நீராடினால், சகல நோய்களும் தீரும். நோய் தீர்வதற்காக, குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும், பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் முக்கியமான பிரார்த்தனையாக இருக்கிறது.

    வைத்தீஸ்வரன் கோவில் ஜடாயு  குண்டத்தில் உள்ள சாம்பலை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
    சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு வஸ்திரங்களை அணிந்துகொண்டு ஸ்ரீரெங்கநாதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பிறந்த தினம் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு வஸ்திரங்களை அணிந்துகொண்டு ஸ்ரீரெங்கநாதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவரது பிறந்த நட்சத்திரமான ரேவதி நட்சத்திரம் வருகிறது. எனவே ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு அந்த பட்டு வஸ்திரங்களை கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று நடைபெற்றது.

    இதற்காக பிரத்தியேக பட்டு வஸ்திரங்கள் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு, பின்னர் ஒரு கூடையில் அவற்றை வைத்து கொண்டு செல்லப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பக்தர்கள் யாரும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை. கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பட்டு வஸ்திரங்களை நாளை நடைபெறும் கருடசேவை நிகழ்ச்சியின்போது ெரங்கநாதர் அணிந்துெகாண்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போல் ஆண்டாளுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள திருப்பாவை பாடல்கள் அடங்கிய பட்டுப்புடவை ஒன்றை பக்தர் ஒருவர் நேற்று வழங்கினார். இந்த புடவையில் ஆண்டாளின் உருவம் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த புடவையும் நேற்று ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.

    சோழவள நாட்டில் அமைந்த சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்று, வைத்தீஸ்வரன் கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர், ‘வைத்தியநாதர்.’ அம்பாள் பெயர் ‘தையல்நாயகி’ என்பதாகும்.
    சோழவள நாட்டில் அமைந்த சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்று, வைத்தீஸ்வரன் கோவில். பழங்காலத்தில் இந்த தலம் ‘புள்ளிருக்கு வேளூர்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. ‘புள்’ என்பது ஜடாயு என்ற பறவையையும், ‘இருக்கு’ என்பது ரிக் வேதத்தையும், ‘வேள்’ என்பது முருகனையும், ‘ஊர்’ என்பது சூரியனையும் குறிக்கும். இந்த நால்வரும் வழிபட்ட தலம் என்பதால் இது ‘புள்ளிருக்கு வேளூர்’ என்றானது. காவிரியின் வடகரை தலங்களில் அமைந்த 16-வது தலம் இது. நவக்கிரகங்களில் செவ்வாய் என்று அழைக்கப்படும் அங்காரகன் வழிபட்ட தலம் என்பதால் ‘அங்காரகபுரம்’ என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர், ‘வைத்தியநாதர்.’ அம்பாள் பெயர் ‘தையல்நாயகி’ என்பதாகும். வைத்தியநாதப் பெருமாள், சுமார் 4,500 நோய்களையும், அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்லவராக இங்கு எழுந்தருளியுள்ளார். அம்பாளும், இறைவனுக்கு உதவியாக தனது கையில் தைல பாத்திரம், அமிர்த சஞ்சீவி, வில்வ மரத்தடி மண் ஏந்தி இருக்கிறார். இப்படி அம்பாளும், சுவாமியும் தீவினை தீர்க்கும் சக்தி படைத்தவர்களாக அருள்பாலிக்கிறார்கள்.

    சூரபத்மனை வெல்வதற்காக, இத்தல அம்பிகையை முருகப்பெருமான் வழிபாடு செய்தாராம். இங்கு முருகப்பெருமான் ‘செல்வமுத்துக்குமரன்’ என்னும் திருப்பெயரோடு விளங்குகிறார். ‘கோளிலித் தலம்’ என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் ஆலயத்தில், நவக்கிரகங்கள் வரிசையாக, மூலவரின் சன்னிதிக்கு பின்புறம் அமைந்திருக்கின்றன. இங்கு அங்காரகனுக்கு தனிச் சன்னிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு, உற்சவர் விக்கிரகமும் காணப்படுகின்றன. அங்காரகனுக்கு ஏற்பட்ட செங்குஷ்ட நோயை, இத்தல இறைவன் தீர்த்து அருளினார். எனவே இந்த ஆலயம் அங்காரகத் தலமாக விளங்குகிறது. அங்காரக (செவ்வாய்) தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வழிபாடு செய்தால், அந்த தோஷங்கள் நீங்கும்.

    ஆலய அமைப்பு

    நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோவிலாக, வைத்தீஸ்வரன் கோவில் திகழ்கிறது. இங்கு இறைவன், மேற்கு நோக்கிய சன்னிதியிலும், இறைவி தெற்கு நோக்கிய சன்னிதியிலும் வீற்றிருக்கிறார்கள். இறைவனின் சன்னிதிக்கு பின்புறம் உள்ள நக்கிரகங்களுக்கு அடுத்ததாக 63 நாயன்மார்கள், சப்த கன்னியர்கள் உள்ளனர். மேலும் மருத்துவ கடவுள் என்று அழைக்கப்படும் தன்வந்திரி பகவான், இங்கு விஷ்ணு பகவானின் உருவத்தில் அமர்ந்திருக்கும் காட்சி அரிதிலும் அரியது. இங்குள்ள துர்க்கை மற்றும் சகஸ்ர லிங்கமும் விசேஷமானவை.

    இந்தக் கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கு நடைபெறும் விழாக்களில் பங்குனி உற்சவம் சிறப்பு வாய்ந்தது. அதே போல் கார்த்திகை திருவிழாவும் விமரிசையாக நடைபெறும். இது அங்காரக தலமாக விளங்குவதால், செவ்வாய்க்கிழமைகளில், கோவில் பிரகாரத்தில் அங்காரகன் வலம் வருவார். கார்த்திகை மாத சோம வாரங்களில், வைத்தியநாதப் பெருமானுக்கு சங்காபிஷேகம் சிறப்பான முறையில் செய்யப்படும்.

    அமைவிடம்

    புதியதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது, வைத்தீஸ்வரன் கோவில். கும்பகோணம்- சீர்காழி நெடுஞ்சாலையில் உள்ளது மயிலாடுதுறை. இங்கிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திலும், சீர்காழியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.

    திருச்சாந்து உருண்டை

    வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டம்) இருந்து விபூதியையும், சித்தாமிர்த தீர்த்தத்தின் நீரையும் சேர்த்துக் குழைப்பார்கள். அதனை ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ என்ற வார்த்தையை உச்சரித்தபடியே, செல்வமுத்துக்குமரனின் சன்னிதியில் இருக்கும் குழி அம்மியில் அரைத்து, சிறுசிறு உருண்டைகளாக பிடிப்பார்கள். பின்னர் அதனை அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சிப்பார்கள். அதன்பிறகு, இத்தல இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, இறைவனின் பிரசாதமாக வழங்கப்படும். இதனை ‘திருச்சாந்து உருண்டை’ என்பார்கள். இதனை உண்பவர்களுக்கு, எப்பேர்ப்பட்ட வியாதியாக இருந்தாலும் விரைவாக நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தவளை வசிக்காத குளம்

    வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ‘சித்தாமிர்த தீர்த்தம்’ சிறப்புக்குரியது. நான்கு புறங்களிலும் மண்டபத்தோடும், படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் இந்த தீர்த்தக்குளம் அமைந்திருக்கிறது. கிருத யுகத்தில், காமதேனு பசு, தன்னுடைய பால் கொண்டு இறைவனுக்கு திருமஞ்சனம் செய்ததாம். அந்த பாலே பெருகி ஓடி, தீர்த்தமாக மாறியதாக நம்பப்படுகிறது. இதனை ‘கோட்சர தீர்த்தம்’ என்றும் அழைப்பார்கள்.

    இந்த ஆலயத்தில் ஒரு முறை, சதானந்த முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது பாம்பால் துரத்திவரப்பட்ட தவளை ஒன்று, இந்த தீர்த்தக் குளத்தில் குதித்தது. அப்போது தெறித்த தண்ணீர், முனிவரின் முகத்தில் பட்டு அவரது தவம் கலைந்தது. இதையடுத்து இந்தக் குளத்தில் பாம்பும், தவளையும் வசிக்கக் கூடாது என்று சபித்தார். இதன் காரணமாக இன்றளவும் இக்குளத்தில் தவளைகள் வசிப்பதில்லை என்கிறார்கள். இந்த தீர்த்தத்தில் நீராடினால், சகல நோய்களும் தீரும். நோய் தீர்வதற்காக, குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும், பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் முக்கியமான பிரார்த்தனையாக இருக்கிறது.

    சித்தாமிர்த தீர்த்தம் தவிர, கோதண்ட தீர்த்தம், கவுதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்களும் இங்கு உள்ளன.

    சடாயு குண்டம்

    ராவணன், சீதையை சிறைபிடித்துச் சென்றான். அப்போது அதைப் பார்த்த ஜடாயு பறவை, ராவணனோடு சண்டையிட்டது. இதில் ஜடாயுவின் சிறகை வெட்டி வீழ்த்தினான், ராவணன். ராமனும், லட்சுமணனும் சீதையை தேடி வந்த போது, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜடாயுவை பார்த்தனர். அந்தப் பறவை, ராவணன், சீதையை தூக்கிச் சென்றதையும், தான் அவனோடு போரிட்டதையும் சொல்லியபடியே உயிர்விட்டது. இதையடுத்து ராமபிரான், ஜடாயுவின் உடலுக்கு தீமூட்டி இறுதிச் சடங்கு செய்தார். ஜடாயுவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடம், வைத்தீஸ்வரன் கோவிலில் ‘ஜடாயு குண்டம்’ என்ற பெயரில் உள்ளது. இன்றும் இக்குண்டத்தில் உள்ள சாம்பலை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஜடாயு குண்டத்திற்கு அருகில் ஜடாயு மோட்சத்தை சிலை வடிவில் காணலாம். ஜடாயு உற்சவ மூர்த்தியாகவும் இங்கு வீற்றிருக்கிறார்.
    தன்வந்தரி பகவானை அவருக்குரிய மூல மந்திரங்களை முழங்கி மூலிகைகளை கொண்டு யாகம் செய்தால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நொடி நீங்குவதோடு நோயின் தீவிரம் குறைந்து உடல்நலம் பாதுகாக்கப்படும் என்ற நம்பப்படுகிறது.
    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா முதல் பரவலை விட தற்போது 2-வது அலை பரவல் மிகவேகமாக பரவி வருகிறது. நாள் தோறும் ஏராளமானோர் பாதிக்கப்படுவதோடு பலர் பலியாகி வருகின்றனர். தொடர்ந்து ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதால் நோயில் இருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் ராமநாதபுரம் கன்னிகாபரமேசுவரி ஆலயத்தில் மக்கள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து காக்க வேண்டிய தன்வந்தரி மகா யாகம் நடைபெற்றது.

    கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் வர தடைவிதிக்கப்பட்டு அதிகாலை 4 மணிக்கு ரமேஷ்குருக்கள் தலைமையில் ஏராளமான வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு விதமான மூலிகைகளை கொண்டு இந்த யாகம் நடைபெற்றது. தன்வந்தரி பகவானை அவருக்குரிய மூல மந்திரங்களை முழங்கி மூலிகைகளை கொண்டு யாகம் செய்தால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நொடி நீங்குவதோடு நோயின் தீவிரம் குறைந்து உடல்நலம் பாதுகாக்கப்படும் என்ற நம்பப்படுகிறது.

    இதன்காரணமாக மக்களை கொரோனாவில் இருந்து காக்க இந்த தன்வந்தரி மகா யாகம் நடத்தப்பட்டதாக வேதவிற்பன்னர்கள் தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் சிவாச்சாரியார்கள் மட்டும் இந்த யாகத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து கொரோனா நோய் தொற்றில் இருந்து பொதுமக்களை காக்க கன்னிகா பரமேசுவரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவின் 7-ம் நாளில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். பின்னர் திருவந்திக்காப்பு கண்டருளினார்.
    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார்.

    சித்திரை தேர்த்திருவிழாவின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கண்ணாடி அறையிலிருந்து கொட்டார வாசல் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்தடைந்தார். அங்கிருந்தவாறு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சன்னதிக்கு மாலை 4.45 மணிக்கு சென்றார். அங்கு திருவந்திக்காப்பு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு திருமஞ்சம் கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
    வாயு மைந்தனாக, ஸ்ரீ ராமனின் சேவகனாக, சிவ பெருமானின் அவதாரமாக இருப்பவர் ஆஞ்சநேயர். அனுமனை வணங்கினால் அனைத்து தெய்வங்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் அனைத்து வித பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றம் அனுமனின் உருவம் நடுவிலும் ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீஹயக்ரீவ சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீமஹாவீர கருட சுவாமி ஆகியோரின் முகங்கள் இணைந்த பஞ்ச முக வடிவை வணங்குவதாலும், பஞ்ச முக ஆஞ்சநேயருக்கான மாலா மந்திரத்தை தினமும் 8 முறை படித்து ஆஞ்சநேயரை வணங்கி வந்தால், ஜாதக தோஷம், கிரக பீடைகள், கிரக பெயர்ச்சி கெடுபலன்கள், கெட்ட கனவுகள் என பல்வேறு துன்பங்களிலிருந்து உங்களை காத்து அனைத்து வகை நன்மைகளைப் பெற்று இனிய வாழ்வும், ஆரோக்கியமும் பெற்று வாழலாம்.

    பஞ்சமுக ஹனுமான் மந்திரம்:

    ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய
    வாயு புத்ராய மகா பலாய
    சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
    மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
    கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
    சப்த சமுத்ர நிராலங்கிதாய,

    பிங்கள நயனாய அமித விக்ரமாய
    சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய
    சஞ்சீவினி சமாநயன
    சமார்த்தாய அங்கதலட்சுமண
    கபி சைன்ய ப்ராண நிர்வாககாய

    தசகண்ட வித்வம்ஸனாய
    இராமேஷ்டாய பல்குணசகாய
    சீதா சகித இராமச்சந்திர
    ப்ராசதகாயட் ப்ரயோகாங்க
    பஞ்சமுக ஹனுமதே நம!
    இந்த ஆலயத்தில் ஒரு பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டால், ஆயிரம் பிரதோஷம் பார்த்த பலன் கிடைக்குமாம். அது எந்த கோவில் என்று அறிந்து கொள்ளலாம்.
    சென்னை கோயம்பேட்டில் குசலவபுரீஸ்வரர் கோவில் இருக்கிறது. இது ராமாயணத்தோடு தொடர்புடைய ஆலயம். ராமபிரானின் மகன்களான லவன் மற்றும் குசன் இருவரும், யார் என்று தெரியாத காரணத்தால், ராமரோடும், அவரது சேனைகளோடும் போரிட்டனர்.

    அந்த தோஷம் நீங்குவதற்காக, வால்மீகி முனிவரின் உத்தரவுப்படி 12 ஆண்டு காலம், இத்தலத்தில் தங்கியிருந்து பிரதோஷ பூஜை செய்து வந்தனர். அப்போது வால்மீகி முனிவருடன் சேர்ந்து லவனும், குசனும் ஆதரவற்ற பசுக்களை பாதுகாத்து வந்தனர்.

    இதன் காரணமாகவே இத்தல இறைவன் ‘குசலவபுரீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தில் ஒரு பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டால், ஆயிரம் பிரதோஷம் பார்த்த பலன் கிடைக்குமாம்.
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய நோய்களிலிருந்து மாத்திரம் விடுதலை தருகிறார் என்று வேதம் சொல்லவில்லை. நம்முடைய சகல தரித்திரங்களிலிருந்தும் விடுதலை தருகிறார் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.
    ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே, அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே’ (II கொரிந்தியர் 8:9)

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய நோய்களிலிருந்து மாத்திரம் விடுதலை தருகிறார் என்று வேதம் சொல்லவில்லை. நம்முடைய சகல தரித்திரங்களிலிருந்தும் விடுதலை தருகிறார் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

    நம்முடைய வாழ்க்கைக்கு பணம் மிகவும் முக்கியமானதாகும். இந்த பெரிய வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய நம்முடைய தேவன் ஐசுவரியமுள்ளவர். ‘பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது’ என நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். அப்படியானால் ஒருவேளை தரித்திரம் அல்லது கடன்பாரம் நம்முடைய வாழ்வில் இருந்தாலும் அதைப் போக்குவதற்கு வழிகளை தேவன் கொடுத்துள்ளார். அந்த வழிகள் என்ன?

    1. உங்கள் கண்கள் கர்த்தரையே நோக்க வேண்டும், மனிதனை ஒருநாளும் நம்பாதீர்கள்.

    2. உங்கள் செலவு உங்கள் வருமானத்திற்குள் அமைய வேண்டும்.

    3. வீணான ஆடம்பரம் வேண்டாம். மற்றவர்களைப் பார்த்து, அவர்களைப் போல வாழ வேண்டும் என விரும்பாதீர்கள்.

    4. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை உற்சாகமாக கர்த்தருக்கென்று கொடுத்து லூக்கா 6:38-ன்படி பலமடங்கு ஆசீர்வாதத்தை சுதந்தரியுங்கள்.

    உங்கள் வாழ்வில் இதை அப்பியாசப்படுத்த முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்கள் பொருளாதார வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள்.

    சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், சென்னை-54
    கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மாநிலம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) முதல் கேரள அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்

    வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி திறக்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார். 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

    கடந்த மாதம் மாத பூஜையையொட்டி கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுகளுடன் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மாநிலம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) முதல் கேரள அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

    முதல் கட்டமாக வருகிற 16-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது. 18-ந் தேதிக்கு பிறகு, புதிய அரசு பதவி ஏற்ற பிறகு ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் சபரிமலை தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    நோன்பு ஒரு உயர்ந்த வணக்கம். அதைப் பற்றிக்கொள்வதால் கண்ணியமான வாழ்க்கை கிடைக்கும். கண்ணியமானவர்களாகவும் மாற்றம் பெறலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற நோன்பு நோற்போம், உயர்வை அடைவோம்.
    புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருன் அழீம்’ - ‘கண்ணியமான மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

    கண்ணியம் நிறைந்த, உயர்வான சிந்தனைகளை இம்மாதம் விதைக்கிறது. சாதாரண அடியார்களை கண்ணியமிக்கவர்களாக மாற்றம் அடையச்செய்கிறது.

    மனிதனின் உயர்வான சிந்தனைகள் வருமாறு:

    1) வாய்மை, 2) அமானிதம் (நம்பி ஒப்படைக்கப்பட்டதை திரும்பக் கொடுப்பது), 3) நிதானம், 4) சாந்தம், 5) பொறுமை, 6) உபகாரம், 7) நேர்மை, 8) கொடைத்தன்மை, 9) பிறருக்கு முன்னுரிமை, 10) நீதி, 11) மென்மை, 12) நன்றி, 13) நாவடக்கம், 14) பத்தினித்தனம், 15) கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது, 16) பணிவு, 17) பிறரின் குறைகளை மறைத்தல், 18) மன்னிக்கும் மனப்பான்மை, 19) ஒருவருக்கொருவர் உதவிடும் தன்மை, 20) இரக்க சிந்தனை, 21) போதும் என்ற மனப்பான்மை, 22) நன்மை, 23) நாணம், 24) பிறரை நேசிக்கும் மனப்பான்மை, 25) சேவை மனப்பான்மை, 26) பிறரை மதிக்கும் மனப்பான்மை, 27) இருப்பதைக் கொண்டு திருப்தியோடு இருப்பது, 28) சமமாக நடக்கும் தன்மை.

    இது போன்ற உயர்வான பல சிந்தனைகளை மனித மனதில் விதைத்து, கண்ணியமானவர்களை உருவாக்கும் செயல்களைத்தான் புனித ரமலான் நோன்பு செய்கின்றது. அதிகமான நற்சிந்தனைகளை விதைத்து, பல நல்ல உள்ளங்களையும், கண்ணியமான மனிதர்களையும் உருவாக்கும் மாதம் தான் ரமலான்.

    அபூ உமாமா (ரலி) அறிவிப்பதாவது: “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே, எனக்கு பயன்தரும் ஒரு விஷயத்தை என்னிடம் ஏவுங்கள்’ என வேண்டியபோது ‘நோன்பு நோற்பதை நீர் அவசியமாக்கிக் கொள்வீராக, அதைப் போன்று வேறெதுவும் கிடையாது’ என நபி (ஸல்) கூறினார்கள்”.

    ‘செயலில் சிறந்தது எது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நோன்பை பற்றிக் கொள்வீராக, அதற்கு ஈடானது வேறு எதுவும் வரமுடியாது’ என்று கூறினார்கள்.

    பிறகு நான் நபியவர்களிடம் வந்து, ‘நான் போரில் கலந்து கொள்ளும் பாக்கியம் வேண்டி எனக்காக பிரார்த்தனை புரியுங்கள்’ என வேண்டியபோது, ‘இறைவா அவர்களை போரில் கலந்து கொள்ளச் செய்து, வெற்றி வாகை சூடி, போரின் செல்வங்களை அவர்களுக்கு வழங்குவாயாக’ என மூன்று தடவை நபி (ஸல்) வேண்டினார்கள்.

    பிறகு நான் நபியவர்களிடம் வந்து ‘இறைவனின் தூதரே, நீங்கள் பிரார்த்தித்தது போலவே நடந்துவிட்டது. ‘நான் சொர்க்கத்தில் நுழையும்படி ஒரு செயலை எனக்கு ஏவுங்கள்’ என்று கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ‘உம் மீது நோன்பு நோற்பதை கடமையாகக் கொள்வீராக. அதற்கு நிகரானது வேறு எதுவும் கிடையாது’ என்று கூறினார்கள். (நூல்: இப்னு ஹிப்பான்)

    இதற்குப் பிறகு அபூஉமாமா (ரலி) அவர்களின் வீட்டில் புகை வருவதை பார்க்க முடியாது. பகலில் அவரின் வீட்டில் அடுப்பு எரியாது. அதிகமாக நோன்பு நோற்றுக் கொண்டே இருந்தார்கள்.

    அவரின் வீட்டில் புகை வெளியே வந்தால், மக்கள் விளங்கிக் கொள்வார்கள் ‘இன்று அவரின் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருப்பார்கள்’ என்பதாக.

    அந்தளவுக்கு நோன்பு ஒரு உயர்ந்த வணக்கம். அதைப் பற்றிக்கொள்வதால் கண்ணியமான வாழ்க்கை கிடைக்கும். கண்ணியமானவர்களாகவும் மாற்றம் பெறலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற நோன்பு நோற்போம், உயர்வை அடைவோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.40 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.23 மணி
    சித்திரை மாதத்தில் பல நிகழ்வுகள் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. சித்திரை மாதத்தில் எந்த தெய்வங்களை விரதம் இருந்து வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம் என்று பார்க்கலாம்.
    * சித்திரை மாதத்தின் முதல் நாள்தான், பூமியை பிரம்மன் படைத்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    * சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் பார்வதியை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

    * சித்ரா பவுர்ணமி அன்று, நெய்தீபம் ஏற்றிவைத்து குபேரனையும், அவரது மனைவி சித்ராதேவியையும் வழிபட்டால் செல்வம் சேரும். சித்ரகுப்தனை வழிபட்டால், புண்ணியம் சேரும்.

    * சித்திரை மாத பரணி நட்சத்திரத்தில் பைரவரை நினைத்து விரதம் இருந்தால் காரிய தடை நீங்கும்.

    * சித்திரை மாத மூல நட்சத்திரம் அன்று, லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.

    * சித்திரை மாத வளர்பிறை திருதியை அன்று, அட்சய திருதியை வருகிறது. இந்த நாளில் சிறிதளவு பொன் அல்லது உப்பு வாங்கினால் செல்வம் பெருகும்.

    * சித்திரை முதல்நாள் திருச்செந்தூர் முருகன் கோவிலில், அன்னாபிஷேகம் நடைபெறும்.

    * சித்திரை மாத திருதியை நாளில்தான் மகாவிஷ்ணு, மச்ச அவதாரம் எடுத்ததாக சொல்லப்படுகிறது.

    * சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில்தான், லட்சுமி தேவி வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு வந்ததாக புராணம் சொல்கிறது. அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    * சித்திரை மாத சுக்லபட்ச அஷ்டமியில், அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. அன்றைய தினம் புனித நதிகளில் நீராடுவது சிறப்பான பலனைத் தரும்.
    ஒவ்வொருவருடைய ராசிக்கும் 8-ல் சந்திரன் வரும் இரண்டே கால் நாட்களும், மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். எச்சரிக்கை தேவை. அன்றைய தினம் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும்.
    ஒவ்வொருவருடைய ராசிக்கும் 8-ல் சந்திரன் வரும் இரண்டே கால் நாட்களும், மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். அந்த நேரத்தில் பிறருக்கு நீங்கள் நன்மைகள் செய்தாலும் அது தீமையாக முடியும். சந்திராஷ்டம நாட்களில் எதிர்பார்த்தது நடைபெறாது. குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். நிம்மதி குறையும். நினைத்தது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருக்கும். வீண் விரயங்கள் ஏற்படும்.

    பிறருக்கு பொறுப்புச் சொல்வதால் சிக்கல்கள் ஏற்படும். பயணங்களால் தொல்லை ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. எனவே தான் சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கை தேவை. அன்றைய தினம் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு 8-ல் சந்திரன் உலாவரும் பொழுது, பொறுமை, அமைதி, நிதானம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதோடு ஆலய வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.
    ×