search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்
    X
    நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா: நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவின் 7-ம் நாளில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். பின்னர் திருவந்திக்காப்பு கண்டருளினார்.
    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார்.

    சித்திரை தேர்த்திருவிழாவின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கண்ணாடி அறையிலிருந்து கொட்டார வாசல் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்தடைந்தார். அங்கிருந்தவாறு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சன்னதிக்கு மாலை 4.45 மணிக்கு சென்றார். அங்கு திருவந்திக்காப்பு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு திருமஞ்சம் கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
    Next Story
    ×