என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை சென்று சேர்ந்தது
    X
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை சென்று சேர்ந்தது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை சென்று சேர்ந்தது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்தது.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுத்தும், தொண்டு செய்து அவருக்கு மனைவியானார். ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்தமும், உறவும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வந்தது.

    எனினும் பல காரணங்களால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது. பின்னர் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை நடத்து வருகிறது.

    இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கவுள்ளதை முன்னிட்டு நேற்று காலை 8.30 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட ஆண்டாள் அணிந்த மாலை, பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பின்னர் அவை கோவில் வளாகத்திற்குள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன், ஸ்தானிகம் ரமேஷ்பட்டர் உள்ளிட்ட குழுவினர் வஸ்திரமரியாதையை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவஸ்ரீில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளிடம் அளித்தனர்.

     சித்திரை தேரோட்டத்தின் போது தேரில் எழுந்தருளும் நம்பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து தேரோட்டம் கண்டருளுவார். ஆனால் கொரோனா பரவல் தடை உத்தரவின் காரணமாக சித்திரை தேருக்கு பதிலாக இன்று காலை 6.30 மணிக்கு கருடமண்டபத்தில் நம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    நாளை (திங்கட்கிழமை) சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான நாளை  (செவ்வாய்க்கிழமை) நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுகிறார். இத்துடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    Next Story
    ×