என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இன்றைய தினம் விரதம் இருந்து இல்லத்து பூஜையறையில் நடராஜர் படம் வைத்து பஞ்சமுக விளக்கேற்றி சிவபுராணம் பாடி சிந்தை மகிழ வழிபட்டால் நலம் யாவும் தருவார் நடராஜப் பெருமான்.
    ஆனி மாதம் ஓர் அபூர்வமான மாதமாகும். சூரியன் மிதுனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. இம்மாதத்தில் பிறந்தவர்கள், பிறர் ஆச்சரியப்படும் அளவுக்கு புகழ்பெற்றவர்களாக விளங்குவர். காரணம் அந்த மாதத்தில்தான் தெய்வ தரிசனம் நமக்கு கிடைக்கிறது. சிவபெருமானுக்குரிய இரண்டு தரிசனங்களில் முதல் தரிசனம் ஆனி மாதத்திலும், இரண்டாவது தரிசனம் மார்கழி மாதத்திலும் நடைபெறும். ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரமன்று நடைபெறும் நடராஜர் அபிஷேகம் சிறப்பு வாய்ந்ததாகும். அன்றைய தினம் ஆடல் அரசனைப் பாடிப்பணிந்து வழிபட்டால், கோடி கோடியாய் நன்மை கிடைக்கும். குடும்ப முன்னேற்றமும் அதிகரிக்கும். பொதுவாக நடனம் மற்றும் கலைத் துறையில் சிறந்து விளங்க நடராஜப் பெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.

    ஆனிக்கு அடுத்து வரக்கூடிய மாதம் ஆடி. அந்த மாதத்தில் நாம் ஓடி ஆடி சம்பாதித்து வாழ்க்கையில் சிறக்க, ஆனி மாத நடராஜர் தரிசனம் வழிகாட்டுகிறது. மிதுன ராசி, நவக்கிரகங்களில் புதனுக்குரிய வீடாகும். புதன் கல்விக்குரிய கிரகமாகக் கருதப்படுகிறது. எனவே இம்மாதத்தில் நடைபெறும் நடராஜர் தரிசனம் போன்ற விழாக்களில் கலந்து கொண்டால் படிப்பில் முதன்மை பெற வழிவகுக்கும். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.

    ஆனி மாதத்தில் உத்ரம் அன்று, நடராஜப் பெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். அவர் சன்னிதியில் சிவபுராணம் படிப்பார்கள். நம்மையும் உலகம் போற்றிக் கொண்டாடும். எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல், உள்ளம் உருகி வழிபடும் இறைவழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு முழுமையான நம்பிக்கை தேவை.

    அந்த நம்பிக்கையை முழுமையாக நடராஜர் மீது வைக்க வேண்டிய மாதம், இந்த ஆனி மாதம் ஆகும். நடராஜரை ‘தில்லைக் கூத்தன்’ என்றும், ‘ஆடலரசன்’ என்றும், ‘கூத்தபிரான்’ என்றும் அழைப்பது வழக்கம். கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ்பெற வேண்டுமென்று விரும்பும் மாந்தர்கள், நடராஜப் பெருமானை முழுமையாக வழிபட வேண்டும். அதற்கு உகந்த நாளாக ஆனி மாதம் 31-ந் தேதி (15.7.2021) (இன்று)வியாழக்கிழமை அன்று உத்திர நட்சத்திரம் வருகின்றது. ஆனி உத்திர தரிசனமும், நடராஜர் அபிஷேகமும் நடைபெறுகின்ற நாள் அதுவாகும். இன்றைய தினம் விரதம் இருந்து இல்லத்து பூஜையறையில் நடராஜர் படம் வைத்து பஞ்சமுக விளக்கேற்றி சிவபுராணம் பாடி சிந்தை மகிழ வழிபட்டால் நலம் யாவும் தருவார் நடராஜப் பெருமான்.

    சிவாலயங்களில் சிவகாமியம்மன் உடனாய நடராஜப் பெருமான், சிவன் சன்னிதிக்கு அருகிலேயே இருப்பார். பெரும்பாலான ஆலயங்களில் உற்சவ விக்கிரகமாகவே காட்சி தருவார். ஆனால் பேரையூர், ஊட்டத்தூர் போன்ற சில இடங்களில் ‘கல்’ விக்கிரகமாக நடராஜர், சிவகாமி அம்மன் தோற்றம் இருக்கும். எப்படியிருந்தாலும் கலைத்துறையில் பிரகாசிக்க நினைப்பவர்கள் சிதம்பரம் போன்ற நடராஜப் பெருமான் வீற்றிருந்து அருள்வழங்கும் ஆலயத்திற்கு வாய்ப்பு அமையும் பொழுது யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபடலாம். மற்ற நாட்களில் மாதம் தோறும் உத்திரம் நட்சத்திரம் வரும் நாளில் விரதமிருந்து இல்லத்து பூஜையறையில் நடராஜர் படம் அல்லது விக்கிரகம் வைத்து வழிபாடு செய்யலாம்.

    நடராஜர் அபிஷேகம் நடைபெறும் பொழுது பால் அபிஷேகம் பார்த்தால் பலன்கள் அதிகம் கிடைக்கும். பன்னீர் அபிஷேகம் பார்த்தால் எண்ணிய காரியம் நடைபெறும். சந்தன அபிஷேகம் பார்த்தால் சந்தோஷங்கள் அதிகரிக்கும். நாம் வாழ்வாங்கு வாழ வெற்றிகளைக் குவிக்க தில்லைக் கூத்தனை ஆனி உத்திரத்தில் வழிபடுவோம். தேனினும் இனிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

    ‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா நேற்று நடந்தது. ஆனால், கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த விழா நாளில் காலையில் அம்மன் தங்கமுக அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். மதியமும், இரவிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து தரிசனம் செய்வது வழக்கம். கோவிலை ஒட்டியுள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துவர்.

    ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. கடந்த வாரம் கோவில்கள் திறக்கப்பட்டன.

    ஆனால், கோவில்களில் கொடைவிழா மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் குரங்கணி முத்து மாலை அம்மன் கோவிலில் நேற்று ஆனி கொடைவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை

    வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும், தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ஆழ்வார்திருநகரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கோவிலுக்கு வெளியே நின்ற பக்தர்களும், முடி காணிக்கை செலுத்திய பக்தர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் வலியுறுத்தினார்கள்.
    அம்பாசமுத்திரம் அருகே சின்ன சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடந்தது.
    அம்பாசமுத்திரம் அருகே சின்ன சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பக்தர்கள் இன்றி கோவில் நிர்வாகத்தினர் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது.

    விழா நாட்களில் சுவாமி-அம்பாள் வீதியுலா கோவில் வளாகத்திலேயே நடைபெறுகிறது. வருகிற 23-ந் தேதி தாமிரபரணி நதிக்கரையில் நடைபெறும் தபசு காட்சியும் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆடித்தபசு நிகழ்ச்சியை தொடர்ந்து 24, 25-ந் தேதிகளில் நடைபெறும் தெப்ப உற்சவமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் சங்கரலிங்க சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருக சாமிநாதன், அகஸ்தீஸ்வர சுவாமி அறங்காவலர் குழு தலைவர் சங்கு சபாபதி, முன்னாள் செயலாளர் சங்கரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வேலாயுதம், ராஜகோபால், வள்ளிநாயகம், ரவி சங்கரன், சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக ஆடித்தபசு திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடித்தபசு திருவிழா 12 நாட்கள் நடைபெறும். 11-ம் திருநாளில் நடைபெறும் ஆடித்தபசு காட்சி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக ஆடித்தபசு திருவிழா நடைபெறவில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலையில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொடிப்பட்டம் உள் பிரகாரம் சுற்றி வந்ததும் கோமதி அம்பாள் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் காலை 6.20 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின்னர் அபிஷேகம் மற்றும் அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கோவில் உள்ளே நடக்கிறது. அன்று பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    சயனக் கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கும் தலங்கள் ஏராளமாக இருக்கின்றன. சயனக் கோலத்திலும் கூட விதவிதமான கோலங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
    திருமால் படுத்த கோலத்தில் அருளுவதை, ‘பள்ளிகொண்ட திருக்கோலம்’ என்று அழைப்பார்கள். அதையே ‘சயனக் கோலம்’ என்றும் சொல்வார்கள். சயனக் கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கும் தலங்கள் ஏராளமாக இருக்கின்றன. சயனக் கோலத்திலும் கூட விதவிதமான கோலங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    ஜல சயனம்

    பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பட்ட ஆலயங்களை `திவ்ய தேசங்கள்’ என்று வர்ணிப்பார்கள். அப்படி 108 திவ்ய தேசங்கள் இருக்கின்றன. அவற்றில் 107-வது திருத்தலமாக சொல்லப்படுவது, வைகுண்டம். இது பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் திருப்பாற்கடலைக் குறிக்கும். கடலில் பள்ளிகொண்டிருக்கும் இந்த கோலத்தையே, ‘ஜல சயனம்’ என்கிறார்கள். பக்தர்கள் தங்கள் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத இடம் இது.

    வீர சயனம்

    திருவள்ளூரில் அமைந்துள்ளது, வீரராகவப் பெருமாள் திருக்கோவில். இது திவ்ய தேசங்களில் 59-வது தலமாகும். இங்கு பெருமாள் கொண்டிருக்கும் கோலத்தின் பெயர், ‘வீர சயனம்’ ஆகும். சாலிஹோத்ர முனிவரிடம், பெருமாள் “நான் எங்கே உறங்குவது?” என்றதற்கு, அந்த முனிவர் காட்டி அருளிய இடம் தான் ‘திருஎவ்வுள்ளூர்.’ இதுவே பின்னாளில் ‘திருவள்ளூர்’ என்றானது.

    தல சயனம்

    ‘கடல் மல்லை’ என்று புராணங்களில் குறிப்பிடப்படும் மாமல்லபுரத்தில், தலசயனப் பெருமாள் கோவில் இருக்கிறது. இது திவ்ய தேசங்களில் 63-வது தலமாகும். இங்கு திருமால் தன்னுடைய வலது கரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, ஆதிசேஷன் மீது சயனித்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இதனை ‘தல சயனம்’ என்கிறார்கள்.

    போக சயனம்

    சிதம்பரம் நடராஜப் பெருமான் கோவிலில், கோவிந்தராஜப் பெருமாள் என்ற பெயரில் திருமாலுக்கும் தனிச் சன்னிதி அமைந்திருக்கிறது. இங்கு புண்டரீகவல்லி தாயாருடன் பெருமாள் வீற்றிருக்கிறார். இங்கு அவர் அருளும் கோலம் ‘போக சயனம்’ ஆகும். இந்த ஆலயம் திவ்ய தேசங்களில் 40-வது திருத்தலமாகும்.

    புஜங்க சயனம்

    108 திவ்ய தேசங்களில் முதலாவதாக குறிப்பிடப்படும் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் தான், இந்த சயனக்கோலத்தை நாம் தரிசிக்க முடியும். இங்க திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கிறார்.

    தர்ப்ப சயனம்

    திவ்ய தேசங்களில் 105-வது திருத்தலமாக இருப்பது, ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோவில். இங்கே பெருமாள், தர்ப்ப சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். பொதுவாக பெருமாள், ஆதிசேஷன் என்ற பாம்பை படுக்கையாகக் கொண்டுதான் பள்ளிகொண்டிருப்பார். ஆனால் இங்கு தர்ப்பை புல்லை படுக்கையாகக் கொண்டு அவர் பள்ளிகொண்டிருக்கிறார். இதுவும் வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்புக்குரியது.

    உத்தியோக சயனம்

    திவ்ய தேசங்களில் 12-வது தலமாக இருப்பது, திருக் குடந்தை எனப்படும் கும்பகோணத்தில் உள்ள சாரங்க பாணிப் பெருமாள் திருக்கோவில். இங்கு பெருமாள் இருக்கும் சயனக் கோலத்தை ‘உத்தியோக சயனம்’ என்கிறார்கள். ‘உத்தான சயனம்’ என்றும் சொல்கிறார்கள். திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போன்ற பாவனையில் இந்தப் பெருமாள் காட்சி தருகிறார். இது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு தரிசனமாகும்.

    பத்ர சயனம்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ரெங்கமன்னார் திருக்கோவில், திவ்ய தேசங்களில் 99-வது தலமாக போற்றப்படுகிறது. இங்கு வடபத்ர சயனக் கோலத்தில், பெருமாள் பள்ளிகொண்டிருக்கிறார். ‘பத்ரம்’ என்பது ஆலமர இலையைக் குறிக்கும்.

    மாணிக்க சயனம்

    சென்னை அடுத்த பல்லாவரத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருநீர்மலை. இது திவ்ய தேசங்களில் 61-வது திருத்தலம் ஆகும். இங்கு பெருமாள், அரங்கநாயகி உடனாய அரங்கநாதராய் அருள்புரிகிறார். பாம்பு படுக்கையில் நான்கு கரங்களுடன் மாணிக்க சயனத்தில் அவர் அருள்கிறார். இந்த ஆலயத்தில் நின்ற கோலம், இருந்த கோலம், கிடந்த கோலம், நடந்த கோலம் என நான்கு விதமான நிலைகளில் பெருமாளை தரிசிக்க முடியும்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் 2-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாவாகும்.

    இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் முதல் நாளில் உற்சவர் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினார். அங்கு திருவிழாவுக்கு காப்பு கட்டிய ரவி பட்டரால் விநாயகர் பூஜை, கும்ப பூஜையுடன் யாகம் வளர்க்கப்பட்டது.

    விழா நாட்களில் மீனாட்சி அம்மன் காலை, இரவு நேரங்களில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 2-ம் நாளான நேற்று அன்னம், 3-ம் நாளில் (இன்று) காமதேனு, 4-ம் நாள் யானை, 5-ம் நாள் ரிஷபம், 6-வது நாள் கிளி, 7-வது நாள் மாலை மாற்றுதல், 8-ம் நாள் குதிரை, 9-ம் நாள் இந்திர விமானம், 10-ம் நாள் கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.
    கணவனின் ஆயுள் நிலைக்கவும் மனைவியின் மாங்கல்யம் நிலைப்பதற்காகவும் குருவின் அருள் நிறைந்த திருமாங்கல்யம் அணியப்படுகிறது.
    1.ஜோதிடத்தில் புனிதமான விஷயங்களுக்கெல்லாம் குரு பகவான் தான் காரகராவார். குருபகவானை குறிக்கும் விதமாக தான் திருமாங்கல்யம் மஞ்சள் கயிற்றில் தங்கத்தில் செய்யப்படுகிறது. வேதம் ஓதும் அந்தணர்களுக்கும் காரகர் குருபகவானே ஆகும். கணவனின் ஆயுள் நிலைக்கவும் மனைவியின் மங்கலத்தன்மை நிலைப்பதற்க்காகவும் குருவின் அருள் நிறைந்த திருமாங்கல்யம் அணியப்படுகிறது.

    2.கணவன் மனைவி இருவர் ஜாதகத்திலும் லக்னம் பலம் பெற்று மனைவியை குறிக்கும் சுக்கிரனும் கணவனை குறிக்கும் மங்களன் எனும் செவ்வாயும் நல்ல நிலையில் ஆட்சி உச்சம் மூல திரிகோன பலம் மற்றும் திக் பலம் பெற்று இருக்க வேண்டும்.

    3.பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் ஏழாமிடத்தோடு தொடர்பு கொண்டிருக்க கூடாது. ஏழாமிடம் சுத்தம் நன்மை பயக்கும். மேலும் ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் செவ்வாய் அசுபர்களுடன் சேர்ந்து லக்னம்,குடும்பம்,சுகம், களத்திரம், ஆயுள் மற்றும் மாங்கல்யம், அயன சயன சுகம் ஆகிய வீடுகளில் தொடர்பு பெறகூடாது.

    4. லக்னம், குடும்பம், களத்திரம், ஆயுள் மற்றும் மாங்கல்யம் (1,2,7,8) ஸர்ப கிரஹங்களான ராகு கேது தொடர்பு கொள்ள கூடாது.

    5.பலமிழந்த நீச சந்திரன் 68 வீடுகளில் தொடர்பு பெறாமல் இருக்க வேண்டும்.

    6.அசுப கிரகங்கள் உச்சம் பெற்று எட்டாமிடத்தில் நிற்க கூடாது.

    7. செவ்வாயும் ராகுவும் அல்லது செவ்வாயும் சனியும் சேர்க்கை பெற்று 78ம் வீடுகளில் நிற்க்க கூடாது.

    8. இரண்டு மற்றும் ஏழாமிடங்கள் மற்றும் அதன் அதிபதியோடு உச்ச கிரஹ தொடர்புகள் இருக்க கூடாது.

    இவற்றோடு ரஜ்ஜு பொருத்தம் இருக்க வேண்டும்.
    பெருந்தொற்றால் தொடர்ந்து 2-வது ஆண்டாக சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் சாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் ஆனி திருமஞ்சன விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தற்போது கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பக்தா்கள் இன்றி விழா கோவில் உள்பிரகாரத்திலேயே நடைபெற்று வருகிறது. அதே வேளையில் சாமிக்கு விழாவுக்கான சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் சிகர திருவிழாவான தேரோட்டம் இன்றும் (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஆனிதிருமஞ்சன விழாவும் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், மேலும் திருவிழா முன்பு எப்படி நடைபெறுமோ அதே போன்று நடைபெற அனுமதி அளித்திட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால் மாவட்ட நிர்வாகம் தனது முடிவை மாற்றி கொள்ள முன்வரவில்லை. மேலும் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக, தேரோட்டத்தை கோவிலுக்கு வெளியேவும், ஆனிதிருமஞ்சன விழாவையும் நடத்த அனுமதி அளிக்கவில்லை. பக்தர்கள் யாரும் இன்றி, கோவில் உள் பகுதியிலேயே தேரோட்டம் மற்றும் ஆனிதிருமஞ்சன விழாவை நடத்தி கொள்ளலாம் என்று அறிவுறுத்தியது.

    நடராஜர்

    அதன்படி இன்று நடைபெற இருந்த பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நிகழ்வு ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கமாக தேரோட்டத்தின் போது நடராஜருக்கு கோவிலுக்கு உள்ளே நடைபெறும் பூஜைகள், இன்றும் அதே போன்று நடக்கிறது.

    அதன்படி இன்று நடராஜரும் சிவகாம சுந்தரியும் சித்ர சபையில் இருந்து புறப்படுகின்றனர். அதை தொடர்ந்து உள் பிரகாரத்தை வலம் வரும் சுவாமி அங்கிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள உள்ளார். அதன் பின்பு காலை 9 மணி முதல் 2 மணி வரை சுவாமியை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன் பின்பு பக்தர்கள் அனுமதி முற்றிலுமாக நிறுத்தப்படும்.

    தொடர்ந்து தரிசன நாளான நாளை(வியாழக்கிழமை) ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. பின்பு
    மாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆனி திருமஞ்சன விழாவில் தொடர்ந்து 2-வது ஆண்டாக தேரோட்டம் ரத்து செய்யப்படுவதுடன், ஆனி திருமஞ்சனமும் பக்தர்கள் இன்றி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடதக்கதாகும். இது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது.
    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி ஆகும். அதன்படி இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது.

    கோவிலின் முன்பகுதி கிழக்கு பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூ.2½ கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடந்து முடிந்தது. மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

    இந்தநிலையில் ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் காலதாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, விரைவில் ராஜகோபுரத்தின் கட்டுமான பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் வைத்து இருந்தனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த பொன்னர்-சங்கர் என்ற உபயதாரர் ராஜகோபுரம் கட்டி தர முன்வந்தார். இதையடுத்து திட்ட மதிப்பீடு செய்து ரூ.2½ கோடி செலவில், 73 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி முடிவுற்றது. அதைத்தொடர்ந்து, ராஜ கோபுரத்தின் ஏழு நிலைகளிலும் உள்ள மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு சாமி சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற வேண்டி இருந்தது.

    விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழிலாளர்கள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். இதன் காரணமாக தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தார்.

    அப்போது ராஜகோபுரத்தின் கட்டுமான பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று கோவில் இணை ஆணையர் கல்யாணியிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும், ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களுக்கு தரமான வர்ணம் தீட்ட வேண்டும் என்றும், அந்த பணி காலதாமதமின்றி நடைபெறவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாமி சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    ஆனிமாத உத்திர நட்சத்திர தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    புதன் பகவானுக்குரிய மிதுன ராசியில் சூரிய பகவான் பிரவேசிக்கும் மாதம் ஆனி மாதமாகும். தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமாக ஆனி மாதம் வருகிறது. ஆனி மாதம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிதம்பரத்தில் நடராசப் பெருமானாக ஆக இருக்கும் சிவபெருமானுக்கு செய்யப்படும் ஆனித்திருமஞ்சனம் சிறப்பு பூஜை வழிபாடு தான். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆனித் திருமஞ்சனம் ஆனிமாத உத்திர நட்சத்திர தினத்தன்று செய்யப்படுகிறது. அந்த ஆனிமாத உத்திர நட்சத்திர தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    ஒரு வருட காலத்தில் சிவபெருமானுக்கு விரதம் மேற்கொண்டு வழிபடுவதற்கு ஆறு நாட்கள் மிக சிறந்த தினங்களாக கூறப்படுகின்றன. அதில் ஒன்றுதான் ஆனி உத்திர நட்சத்திர தினம். பல சிறப்புகளைக் கொண்ட ஆனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திர தினத்தன்று, சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபடுவது மிகுந்த நன்மை அளிக்கக் கூடியதாகும்.

     தமிழகத்தில் இருக்கும் பல புகழ்பெற்ற சிவாலயங்களில் ஆனிமாத உத்திர நட்சத்திர தினத்தன்று ஆனித் திருமஞ்சனம் மற்றும் நடேசரபிஷேகம் ஆகியவை செய்யப்படுகிறது. இந்த தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று, சிவனுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபடுவதால் உடற்பிணிகள் நீங்கும். வாழ்வில் இருக்கின்ற கஷ்ட நிலை குறைந்து வளமை பொங்கும். உத்திரம் நட்சத்திரம் என்பது சூரிய பகவானுக்குரிய நட்சத்திரமாகும். ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்பட்டிருக்கின்ற தோஷங்களின் பாதிப்புகளைக் குறைத்து நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

    மேலும் நாளைய ஆனி உத்திர தினம் முருகப்பெருமானுக்குரிய தினமான சஷ்டி தினத்தில் வருவது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த தினத்தில் காலையில் சிவபெருமானை வழிபட்டு முடித்தவர்கள், மாலையில் முருகப்பெருமானுக்கு மலர் மாலைகள் சாற்றி, தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வதால் செவ்வாய் கிரக தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி, திருமண பாக்கியம், புத்திர பாக்கியம், வீடு நிலம் போன்ற சொத்துகள் அமைப்பு போன்றவை கிடைக்கப் பெறுவார்கள்.
    தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று வராஹி அம்மன் தேங்காய்த்துருவல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    தஞ்சை பெரிய கோவிலில் வராஹி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராஹி அம்மனுக்கு 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் 9-ம் தேதி தொடங்கியது. பின்னர் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வராஹி அம்மனுக்கு 10-ம்தேதி (சனிக்கிழமை) வராஹி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    3-வது நாளான 11-ம்தேதி வராஹி அம்மன் குங்கும அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    4-ம் நாளான 12-ம்தேதி சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    4-ம் நாளான நேற்று வராஹி அம்மன் தேங்காய்த்துருவல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை மாதுளை அலங்காரமும், 15-ந் தேதி நவதானிய அலங்காரமும், 16-ந் தேதி வெண்ணெய் அலங்காரமும், 18-ந் தேதி காய்கனி அலங்காரமும் நடைபெறுகிறது.

    ஆஷாட  நவராத்திரி விழா வருகிற 19-ந் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம்  வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
    திருப்பதியில் ஆனி மாத ஆஸ்தானம் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி மூலிகைகளால் கோவிலை சுத்தப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உகாதி, ஆனிமாத ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி விழாக்களின்போது கோவிலை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியான ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. அதன்படி ஆனி மாத ஆஸ்தானம் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி மூலிகைகளால் கோவிலை சுத்தப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் அனைத்து உற்சவர் சிலைகளும் தற்காலிகமாக தண்ணீர் புகா வண்ணம் மூடப்பட்டது. பின்னர் ஸ்ரீ சூரணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமப்பூ போன்ற மூலிகை பொருட்களுடன், புனித வாசனை திரவிய நீர் கொடிமரம், மேற்கூரை, சன்னதிகள் உள்பட, கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சி நடைபெற வசதியாக அனைத்து பூஜைகளும் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்த நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆழ்வார் திருமஞ்சனம் முடிந்தபின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
    ×