என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    நம் வாழ்வின் குறிக்கோள் செல்வம் சேர்ப்பதல்ல என்றும், பேராசைக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் மக்கள் கூட்டத்தினருக்கும் தம் சீடருக்கும் அறிவித்தார். பின்பு இந்த உவமையைக் கூறினார்.
    யூதேயாவில் இயேசு மக்களிடம் நற்செய்தி அளித்தபோது, ஒரு மனிதர் இயேசுவின் உதவியை நாடி வந்தார். அவருடைய சகோதரருக்கும் அவருக்கும் சொத்து பிரிப்பதில் கருத்து வேறுபாடு இருந்தது. இருவரும் மிகுதியான பங்கைப் பெற விரும்பினார்கள். இந்த சொத்துத் தகராறை தீர்த்துவைக்கவேண்டும் என்று அவர் இயேசுவிடம் வேண்டினார். பேராசைமிக்க அவர்களின் பாகப்பிரிவினையில் தலையிடுவது தம் வேலையல்ல என்று இயேசு மக்கள் அனைவரிடமும் கூறினார். நம் வாழ்வின் குறிக்கோள் செல்வம் சேர்ப்பதல்ல என்றும், பேராசைக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் மக்கள் கூட்டத்தினருக்கும் தம் சீடருக்கும் அறிவித்தார். பின்பு இந்த உவமையைக் கூறினார்.

    ‘‘செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே.’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன். அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன். பின்பு, என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு, உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு’ எனச் சொல்வேன் என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், “அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?” என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.

    இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். உங்கள் உடைமைகளை விற்று தர்மம் செய்யுங்கள். இற்றுப்போகாத பணப்பைகளையும், விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள். அங்கே திருடன் நெருங்குவதில்லை. பூச்சியும் இருப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.’’

    இறைவன் நம் உள்ளத்தில் இறையாட்சியை நிறுவ விரும்புகிறார். அதற்குரிய வழியை இயேசு இங்கு அறிவிக்கிறார். நமக்கு அளிக்கப்பட்ட செல்வத்தாலும், திறமைகளாலும், எளியோருக்கு உதவிசெய்ய வேண்டும். அப்போது அச்செல்வம் அன்பு, பரிவு என்ற விண்ணக செல்வமாகிறது. அதைப் பூச்சி அரிப்பதில்லை, திருடரும் நெருங்குவதில்லை. அச்செல்வம் நம்மை நிலைவாழ்வுக்குத் தகுதியுள்ளவராக மாற்றுகிறது.
    ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 7-ம் நாள் விழாவான நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அம்பாளுடன் ராஜ அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் 5-ம் பிரகாரத்தில் உலா வந்தார்.
    திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    இதில் தட்சிணாய புண்ணிய கால உற்சவ விழாவும் ஒன்று. சூரியன் வடகிழக்கில் இருந்து தென்கிழக்கு நோக்கி செல்லும் மாத தொடக்கத்தில் இந்த திருவிழா நடைபெறும்.இதனை ஆனி பிரம்மோற்சவ விழா என்பார்கள்.
     
    கடந்த 7-ம் தேதி அருணாசலேஸ்வரர்  மூலவர் சன்னதிக்கு முன்புள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க ஆனி பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

    5-ம் நாளான 11-ம் தேதி சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் உற்சவர் சந்திரசேகரர் கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் உலா வந்தார்.

    7-ம் நாள் திருவிழாவான நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அம்பாளுடன் ராஜ அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் 5-ம் பிரகாரத்தில் உலா வந்தார். இதில் பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடித்து சமூக இடைவெளியுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தட்சிணாய புண்ணிய காலம் உற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் 10 நாட்கள் தினமும் 5-ம் பிரகாரத்தில் காலை 9 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சுவாமி -அம்மன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.
    சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    சதுர்த்தியையொட்டி நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல சேமங்கி, மரவாபாளையம், நொய்யல், குறுக்குச்சாலை, புன்னம்சத்திரம், பசுபதிபாளையம், புன்னம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கரைப்பாளையம், நடையனூர், திருக்காடுதுறை, புகளூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

    இதில், அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
    நாகூர் செய்யது முகமது யூசுப் சாஹிப் தாதா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
    நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் செய்யது முகமது யூசுப் சாஹிப் தாதா கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு சின்ன ஆண்டவர் கந்தூரி விழா கடந்த 11-ந் தேதி இரவு தொடங்கியது. தர்கா அலங்கார வாசல் முன்பு தொட்டி பந்தல் அமைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

    இதில் சின்ன ஆண்டவர் சமாதிக்கு தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார். நிகழ்ச்சி டிரஸ்டிகள், தர்கா ஆதீனஸ்தர்கள் உள்பட பலர் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ஆரணி பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் முப்பெரும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ஆரணி புதுகாமூர் பகுதியில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சங்கம் சார்பாக கோவில் திருப்பணி விரைவில் தொடங்கிடவும், கொரோனா தொற்று ஒழிந்திட வேண்டி சிறப்பு யாக பூஜையும், மாணிக்கவாசகர் குருபூஜை விழாவும் என முப்பெரும் விழா நடந்தது.

    காலை முதல் பகல் 2 மணிவரை திருவாசக முற்றோதலும் அதனை தொடர்ந்து குரு பூஜையும் நடைபெற்றது. சிவனடியார்கள் ஓதுவார்கள் கலந்துகொண்டு திருவாசகம், திருப்புகழ் பாடல்களைப் பாடினர். இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில், காட்டுக்காநல்லூர் கிராமத்தில் உள்ள ராமநாதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது. மாலையில் மாணிக்கவாசகர் திருமேனி உட்பிரகார உலா நடைபெற்றது.
    இந்த கூர்ம காயத்ரி மந்திரத்தை, தினமும் சொல்லி வருவதன் மூலமாக, திருமாலின் அருள் பரிபூரணமாக கிடைத்து, வாழ்க்கை செல்வச் செழிப்புடன் சுபிட்சமாக அமையும்.

    “ஓம் தராதராய வித்மஹ

    பாச ஹஸ்தாய தீமஹி

    தன்னோ கூர்ம ப்ரசோதயாத்”

    இந்த கூர்ம காயத்ரி மந்திரத்தை, தினமும் சொல்லி வருவதன் மூலமாக, திருமாலின் அருள் பரிபூரணமாக கிடைத்து, வாழ்க்கை செல்வச் செழிப்புடன் சுபிட்சமாக அமையும்.
    இந்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யும்போது, அவரது முகம் படிப்படியாக செந்தூர நிறுத்திற்கு மாறுவதைக் காணலாம். அவரது உடலில் நரம்புகள் ஓடுவதையும் நன்றாக பார்க்க முடியும்.
    தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் வழியில் இருக்கிறது, நவநீதகிருஷ்ணன் ஆலயம். இங்கு அருளும் ஆஞ்சநேயர், மிக அபூர்வமாக வடக்கு முகமாக காட்சி தருகிறார்.

    பக்தர்கள் தங்களுக்கு நிறைவேற வேண்டிய காரியங்களை நினைத்து, மட்டை தேங்காயை ஒரு துணியால் மூடி அதை ஆஞ்சநேயர் சன்னிதியில் கட்டிவிட்டு வந்தால், விரைவில் பிரார்த்தனை நிறைவேறும்.

    இந்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யும்போது, அவரது முகம் படிப்படியாக செந்தூர நிறுத்திற்கு மாறுவதைக் காணலாம். அவரது உடலில் நரம்புகள் ஓடுவதையும் நன்றாக பார்க்க முடியும்.
    இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், குமாரதாரா நதியில் நீராடிய பிறகே சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆற்றின் தண்ணீர் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
    கர்நாடகத்தில் உள்ள 7 முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக, பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியா கோவில் விளங்குகிறது. தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில், இந்த சுப்பிரமணியா கோவில் உள்ளது. இந்த ஆலயமானது, குமார பர்வதா மலையில் உற்பத்தியாகி ஓடி வரும் குமாரதாரா ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலுக்கு புராண வரலாறு ஒன்று உள்ளது.

    அதாவது முருகக் கடவுள், போரில் தாரகாசூரன், சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை சம்ஹாரம் செய்தார். பின்னர் தனது சகோதரர் விநாயகர் மற்றும் பக்தர்கள் புடைசூழ குமார பர்வதாவுக்கு வந்தார். அவரை இந்திரன் மற்றும் பிற தேவர்கள் வரவேற்றனர். மேலும் தனது மகள் தெய்வானையை திருமணம் செய்துகொள்ளும்படி, முருகப்பெருமானிடம் வேண்டுகோள் வைத்தான், இந்திரன். அந்த வேண்டுதலை முருகப்பெருமான் ஏற்றுக்கொண்டார்.

    அதன்படி முருகப்பெருமான்- தெய்வானை திருமணம் நடந்தது. அப்போது பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் மற்றும் தேவர்கள் அங்கு கூடினர். பல்வேறு புனித நதிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அந்த புனித நீர் ஆறாக ஓடியது. அதுவே குமாரதாரா நதியானதாக சொல்லப்படுகிறது.

    இதே போல் நாகர்களின் ராஜாவான வாசுகி பாம்பு, சிவபெருமானின் தீவிர பக்தர். அந்த வாசுகி நாகம், தன்னை கருடன் தாக்காமல் இருப்பதற்காக குக்கே சுப்பிரமணியாவில் உள்ள பிலாத் வாரா குகையில் தவம் இருந்தது. இதைத்தொடர்ந்து சிவனின் ஆணையை ஏற்று வாசுகியை, இந்த தலத்தில் தனது பரமபக்தராக தன்னோடு இருக்கும்படி முருகப்பெருமான் அருள்புரிந்தார்.

    இதனால் இங்கு வாசுகிக்கு பூஜை செய்தால், அது முருகப்பெருமானுக்கு பூஜை செய்ததாகவே கருதப்படுகிறது. இந்தக் கோவிலில் வெள்ளி கவசமிடப்பட்ட கருட கம்பம் ஒன்று உள்ளது. வாசுகி பாம்பின் விஷம் பக்தர்களை தாக்காமல் இருப்பதற்காக அந்த கருட கம்பம் இங்கு நிறுவப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், குமாரதாரா நதியில் நீராடிய பிறகே சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆற்றின் தண்ணீர் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த கோவிலில் எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் ‘உருளு சேவை’ என்னும் நிகழ்ச்சி பிரதானமாக உள்ளது.

    மங்களூருவில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூருவில் இருந்து 299 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த புனித ஆலயம் அமையப் பெற்று இருக்கிறது.
    திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில், ராமானுஜரின் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கெடாமல் இருப்பது வியப்புக்குரியதாக இருக்கிறது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோட்டையூர். இங்கு ‘நூற்றி ஒன்று சாமி மலை’ இருக்கிறது. இங்குள்ள குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கு உள்ளது. இதில் இளநீர் விட்டு தீபம் ஏற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயத்தைக் காணலாம்.

    திருப்பூர் அருகே உள்ள குண்டடம் என்ற இடத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான வடுகநாத பைரவர் கோவில் அமைந்திருக்கிறது. அறிவியல் வளர்ச்சி அடைவதற்கு முன்பாகவே தோன்றிய இந்த ஆலயத்தில், ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை, எந்த மாதத்தில் எந்த வடிவத்தில் எந்த நிலையில் இருக்கும் என்பதை கல்லில் சிற்பமாக செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

    ராமாயணக் கதையில் சுக்ரீவனின் அண்ணனான வாலியை, மறைந்திருந்து அம்பெய்து வீழ்த்தினார் ராமன். இதை நினைவுகூரும் வகையில் சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவில் தூண்களில் சிற்பம் வரையப்பட்டுள்ளது. ராமர் சிற்பம் இருக்கும் தூணில் இருந்து பார்த்தால் வாலியின் சிற்பம் தெரியும். அதுவே வாலியின் சிற்பம் இருக்கும் தூண் அருகில் நின்று பார்த்தால் ராமரின் சிற்பம் தெரியாது.

    புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் உள்ளது, கடையநல்லூர். இந்த ஊரின் அருகே உள்ள சுந்தரேஸ்வரபுரத்தில், சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டால், ஆலயத்தின் வெளியில் இருந்து வரும் ஒளி மூலவர் சிலை மீது விழுவதைக் காணலாம்.

    திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி என்ற இடத்தில் முருகன் கோவில் இருக்கிறது. இங்கு இரண்டு சுனைகள் காணப்படுகின்றன. அவை இரண்டும் ‘தெய்வானை சுனை’, ‘வள்ளி சுனை’ என்று அழைக்கப்படுகின்றன. இதில் தெய்வானை சுனையின் நீரானது எப்போதும் குளிர்ச்சியாகவும், வள்ளி சுனையின் நீரானது எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

    திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில், ராமானுஜரின் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கெடாமல் இருப்பது வியப்புக்குரியதாக இருக்கிறது.

    முருகப்பெருமானின் பெருவிழாக்களின் ஒன்று கந்தசஷ்டி. இதன் ஒரு பகுதியாக நடைபெறும் சூரசம்ஹார விழா பிரசித்தி பெற்றது. சூரசம்ஹாரத்தோடு தொடர்புடைய ஆலயங்களில் மிகவும் முக்கியமானது, சிக்கல் சிங்காரவேலர் திருக்கோவில். இந்த ஆலயத்தில்தான், சூரனை சம்ஹாரம் செய்வதற்கான ஞானவேலை, அம்பாளிடம் இருந்து முருகப்பெருமான் பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. இன்றளவும் இந்த ஆலயத்தில் கந்தசஷ்டி விழாவின் போது, வேல் வாங்கும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. அப்போது அம்பிகையிடம் வேல் வாங்கும் முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருக்கெடுக்கிறது. அர்ச்சகர் ஒருவர் பட்டுத்துணியால் அந்த வியர்வையை ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்திருப்பதை காண முடியும்.
    விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் லட்சுமிதேவியானவள், 108 இடங்களில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த 108 இடங்கள் எவை என்பதை இங்கே பார்க்கலாம்.
    இறைவனை சிந்தித்து வாழும் மக்கள் அனைவரும் விரும்புவது, லட்சுமி கடாட்சத்தைத் தான். லட்சுமியின் அருள் கிடைத்து விட்டால், அனைத்து செல்வங்களும் வந்து சேர்ந்து விடும் என்பது ஐதீகம். விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் லட்சுமிதேவியானவள், 108 இடங்களில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த 108 இடங்கள் எவை என்பதை இங்கே பார்க்கலாம்.

    வெற்றிலை மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜெபமாலை, வலம்புரி சங்கு, மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவ தாரு, அகில், பஞ்சபாத்திரம், கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக்கற்பூரம், கலசம், சிருக் சுருவம், கமண்டலநீர், நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை, கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், பாணலிங்கம், பஞ்ச கவ்யம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங் கிழங்கு, ஆல விழுது. தேங்காய்க்கண், தென்னம் பாளை, சங்கு புஷ்பம், இலந்தை, நெல்லி, எள், கடுக்காய், கொம்பரக்கு, பவளமல்லி, மாதுளை. திருநீற்று பச்சை, அத்திக் கட்டை, ஆகாசகருடன், வெட்டிவேர், அருகம்புல், விளாமிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு.

    நெற்கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, மணிநாக்கு, சோளக்கதிர், பாகற்காய், அகத்திக்கீரை, காசினிக்கீரை, பசலைக்கீரை, கூந்தல்பனை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, யானை, மூங்கில், பசு நீர்த்தாரை, குளவிக்கூட்டு மண், நண்டுவளை மண், காளை கொம்பு மண், யானை கொம்பு மண், ஆல அடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப்பழம், மோதகம், அவல், காதோலை, கடல்நுரை, கண்ணாடி, மோதிரம் (தந்தம்), பட்டு, தையல் இல்லாத புதுத் துணி, பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர், கீரிப்பிள்ளை, நுனிமுடிந்த கூந்தல், படிகாரம், அரச சமித்து, பன்றிக்கொம்பு, சந்திர காந்தக்கல், பிரம்பு, நாயுருவி, வாசல் நிலை, நெற்றி.
    இத்தல தீர்த்தமான குப்த கங்கையில் நீராடி, இறைவனையும், இறைவியையும், மகாலட்சுமியையும் வணங்கி வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள் என்பது ஐதீகம்.
    கும்பகோணத்தை அடுத்துள்ளது ஸ்ரீவாஞ்சியம். காசிக்கு சென்றால் பாவமும் வளரும், புண்ணியமும் வளரும். ஆனால் இந்த ஸ்ரீவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளரும். அவ்வளவு சிறப்புக்குரியது இந்தத் திருத்தலம்.

    இந்த ஆலயத்தில் ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரு கிறார்கள். ஏழரைச்சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனிகளுக்கான பரிகாரத் தலமாகவும் இது திகழ்கிறது. இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்யதால் நீண்ட ஆயுள் கிட்டும்.

    இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு- கேதுவை வழிபட்டு வந்தால், கால சர்ப்ப தோஷம் நீங்கும். இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும் என்கிறார்கள்.

    இத்தல தீர்த்தமான குப்த கங்கையில் நீராடி, இறைவனையும், இறைவியையும், மகாலட்சுமியையும் வணங்கி வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள் என்பது ஐதீகம்.

    சிவனை முதன்மை தெய்வமாக ஏற்ற அடியார்களுக்கு, அரைஞாணுக்கு கீழே கட்டும் கீழாடை மற்றும் கோவணத்தை வழங்கி வந்தார். சிவனடியாருக்கு செய்யும் தொண்டு, சிவனுக்கு செய்யும் தொண்டு என தருமங்கள் செய்து வந்தார்.
    சோழவள நாட்டில் உள்ள பழையாறை என்ற பகுதியைச் சேர்ந்தவர், அமர்நீதி நாயனார். வணிக குலத்தில் பிறந்த இவர், சிறந்த சிவபக்தராக திகழ்ந்தார். இவர் பட்டு, பருத்தி ஆடை, பொன், நவரத்தினங்கள் போன்றவை, எந்த பகுதியில் சிறப்பாக இருக்குமோ, அங்கேயே சென்று கொள்முதல் செய்து வந்து அதை நியாயமான விலைக்கு விற்று தொழில் செய்து வந்தார். அதில் கிடைக்கும் செல்வத்தைக் கொண்டு சிவபெருமானுக்கும், அவரது அடியவர்களுக்கும் தொண்டாற்றிவந்தார்.

    சிவனை முதன்மை தெய்வமாக ஏற்ற அடியார்களுக்கு, அரைஞாணுக்கு கீழே கட்டும் கீழாடை மற்றும் கோவணத்தை வழங்கி வந்தார். சிவனடியாருக்கு செய்யும் தொண்டு, சிவனுக்கு செய்யும் தொண்டு என தருமங்கள் செய்து வந்தார். அமர்நீதி நாயனார், திருநல்லூர் தலத்திற்குச் சென்று அங்குள்ள ஈசனை வழிபடுவது வழக்கம். எப்போதும் ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தபடியே இருப்பார். திருநல்லூர் திருத்தலத்தில் திருவிழா வந்தால், அன்னதானம் வழங்குவார். அடியவர்களுக்கு ஆடைகளை தானம் செய்வார். நாளடைவில் திருநல்லூரில் மடம் ஒன்றை நிறுவினார். இதற்காக தன்னுடைய குடும்பத்துடன், அங்கேயே குடியேறினார்.

    அமா்நீதி நாயனார், தன் மீதும் தன்னுடைய அடியார்கள் மீதும் கொண்டுள்ள அன்பை உலகறியச் செய்ய வேண்டும் என்று எண்ணினார், சிவபெருமான். அதன்படி சிவ அடியார் போல் வேடம் பூண்ட சிவபெருமான், திருநல்லூர் திருத்தலத்திற்கு வந்து, அங்கு வசித்து வந்த அமர்நீதிநாயனாரை சந்தித்தார். சிவனடியாரைக் கண்டதும், அவரை வணங்கி வரவேற்று மகிழ்ந்தார், அமர்நீதி நாயனார்.

    அடியவர் உருவில் வந்த இறைவன், “அன்பனே.. உன்னுடைய வள்ளல் தன்மையை அறிந்துதான், இங்கு வந்தேன். உன்னைப் பார்த்து ஆடைகள் வாங்க வந்தேன்” என்றார்.

    அதைக் கேட்டு மகிழ்ந்த அமர்நீதி நாயனார், “சுவாமி.. அது என் பாக்கியம். முன்பாக தாங்கள் இங்கு அளிக்கப்படும் உணவை சாப்பிட்டு பசியாற வேண்டும்” என்று அடியவரை வேண்டினார்.

    “சரி.. உணவருந்துகிறேன். அதற்கு முன்பாக நான் நீராட வேண்டும். எனவே ஆற்றக்கரைக்குச் சென்று வருகிறேன். வானம் மேகமூட்டமாக காணப்படுவதால், என்னிடம் இருக்கும் கோவணம் நனைந்து விட வாய்ப்பிருக்கிறது. எனவே நான் வரும் வரை பத்திரமாக வைத்து கொடுப்பாயாக” என்று கூறி தன்னுடைய கைத் தடியில் முடிந்து வைத்திருந்த இரண்டு கோவணத்தில் ஒன்றை அவிழ்த்துக் கொடுத்தார். அமர்நீதி நாயனார் அதைப் பெற்றுக்கொண்டார்.

    அடியவர் கொடுத்த கோவணத்தை, தனியொரு இடத்தில் அமர்நீதி நாயனார் வைத்திருந்தார். காவிரியில் நீராடி விட்டு திரும்பிய இறைவன், அமர்நீதி நாயனாரின் திருமடம் நோக்கி வந்தாா். அப்போது அவர் முழுவதுமாக மழையில் நனைந்ததுபோல் காணப்பட்டார். அவரது உடைகளும், கைத்தடியில் முடிந்து வைத்திருந்த மற்றொரு கோவணமும் கூட, நீரில் நனைந்து போயிருந்தது.

    அவர் அமர்நீதி நாயனாரிடம், “என் உடைகள் நனைந்துவிட்டன. உன்னிடம் இருக்கும் என்னுடைய கோவணத்தை எடுத்துவா” என்று கட்டளையிட்டார். திருமடத்தில் வைத்திருந்த கோவணத்தை எடுக்கச் சென்ற அமர்நீதி நாயனார், அதைக் காணாது திகைத்தார். அங்கிருந்த பலரிடம் கேட்டும், அது பற்றி எவருக்கும் தெரியவில்லை. அடியவர் ஈரத்துடன் நிற்கிறாரே என்று நினைத்தவர், தன்னிடம் இருந்ததில் சிறந்த கோவணத்தை எடுத்துக் கொண்டு போய் அடியவரிடம் நீட்டினார்.

    “சுவாமி.. தாங்கள் கொடுத்த கோவணத்தை தனியொரு இடத்தில் வைத்திருந்தேன். அது எப்படியோ காணாமல் போய்விட்டது. என்னை மன்னிக்க வேண்டும். வேறு ஒரு நல்ல கோவணம் கொண்டுவந்திருக் கிறேன். தங்கள் உடையை களைந்து விட்டு, இதை அணிந்து கொள்ளுங்கள்” என்று வேண்டினார், அமர்நீதி நாயனார்.

    கடும் கோபம் கொண்டார், அடியார். “நான் வைத்திருந்த உயர்ந்த கோவணத்தை தொலைத்து விட்டாயா? அல்லது திருடிக்கொண்டாயா?” என்று கேட்டார். அதைக் கேட்டு பதறிய அமர்நீதி நாயனார், “சுவாமி.. நான் திருடவில்லை. உங்கள் கோவணம் காணாமல்தான் போய்விட்டது. அதற்கு பதிலாக வேறு ஒரு உயர்ந்த கோவணத்தைத் தருகிறேன். இல்லை என்றால் பொன், பொருள், நவமணிகளைத் தருகிறேன்” என்றார்.

    “நீ தரும் பொன், பொருளை வைத்து நான் என்ன செய்வது. என்னிடம் இருந்த கோவணம் மதிப்பு மிகுந்தது. தற்போது என்னிடம் ஈரமாக உள்ள இந்த கோவணத்தை தராசின் ஒரு தட்டில் வைக்கிறேன். அதற்கு நிகரான எந்த ஒரு பொருளை வேண்டுமானாலும் நீ தரலாம்” என்றார், அடியவர்.

    நிம்மதி பெருமூச்சு விட்ட அமர்நீதி நாயனார், தராசின் ஒரு பக்கத்தில் அடியவரின் கோவணத்தையும், மற்றொரு பக்கத்தில் தன்னிடம் இருந்த உயர்தர கோவணத்தையும் வைத்தார். ஆனால் தராசு நேராகவில்லை. பல ஆடைகளை வைத்தார். இப்போதும் தராசு நேராகவில்லை. பொன், நவமணிகள் கொண்டு வந்து குவித்தார். தராசு முள் அசையக்கூட இல்லை. இறுதியில் தன்னுடைய மனைவி, பிள்ளைகளுடன், தானும் தராசு தட்டில் ஏறி நின்று, “நான் சிவதொண்டில் எந்த ஒரு பிழையும் செய்யாமல் இருந்தது உண்மையானால், தராசு நேராகட்டும்” என்று ஈசனை வேண்டினார். மறு நொடியே தராசு முள் நேரானது.

    அப்போது அடியவர் மறைந்து, அங்கே இடப வாகனத்தில் சிவபெருமான் காட்சியளித்தார். அவர் முன்பாக அமர்நீதி நாயனார், தன்னுடைய குடும்பம் சகிதமாக விழுந்து வணங்கினார். ஈசன் அவர்களை ஆட்கொண்டு சிவலோகம் அழைத்துச் சென்றார்.
    ×