search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர்
    X
    ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர்

    ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் முப்பெரும் விழா

    ஆரணி பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் முப்பெரும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ஆரணி புதுகாமூர் பகுதியில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சங்கம் சார்பாக கோவில் திருப்பணி விரைவில் தொடங்கிடவும், கொரோனா தொற்று ஒழிந்திட வேண்டி சிறப்பு யாக பூஜையும், மாணிக்கவாசகர் குருபூஜை விழாவும் என முப்பெரும் விழா நடந்தது.

    காலை முதல் பகல் 2 மணிவரை திருவாசக முற்றோதலும் அதனை தொடர்ந்து குரு பூஜையும் நடைபெற்றது. சிவனடியார்கள் ஓதுவார்கள் கலந்துகொண்டு திருவாசகம், திருப்புகழ் பாடல்களைப் பாடினர். இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில், காட்டுக்காநல்லூர் கிராமத்தில் உள்ள ராமநாதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது. மாலையில் மாணிக்கவாசகர் திருமேனி உட்பிரகார உலா நடைபெற்றது.
    Next Story
    ×