என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும், 8-ம் திருமுறையாக விளங்குகின்றன. 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த மாணிக்கவாசகர், ஒரு ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்.
    இன்று மாணிக்கவாசகர் குரு பூஜை

    சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராக அறியப்படுபவர், மாணிக்கவாசகர். இவரது இயற் பெயர் வாதவூரார் என்பதாகும். இவர், தேவாரம் பாடிய திரு நாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவருக்கும் மூத்தவர் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இவர் கி.பி. 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக இவரது பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. இவர் அரிமர்த்தன பாண்டியன் என்ற மன்னனின் அரசவையில், முதன்மை அமைச்சராக பணியாற்றி வந்தவர். பின்னாளில் சிவபெருமானின் மீதான பக்தியின் காரணமாக பல பதிகங்களைப் பாடி, 63 நாயன்மார்களில் ஒருவராக மாறினார். இவர் பாடிய பாடல்கள் ‘திருவாசகம்’ என்று அழைக்கப் படுகிறது. ‘திருவாசகத்திற்கு உருகாதார், ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பது சொல் வழக்கு. அத்தகைய நெகிழ்வுத் தன்மை கொண்ட பாடல்களாக ‘திருவாசகம்’ சிறப்புற்று விளங்குகிறது.

    ஒரு முறை சோழநாட்டில் வளமான குதிரைகள் கிடைப்பதாக அறிந்தான், பாண்டிய மன்னன். வாதவூராரை அனுப்பி, குதிரை களை வாங்கி வரும்படி பணித்தான். குதிரை வாங்குவதற்கு தேவையான பொன், பொருட்களையும் கொடுத்து அனுப்பினான். குதிரைகள் இருக்கும் இடத்தை அடைய, திருப்பெருந்துறை திருத்தலத்தைக் கடந்து செல்ல வேண்டியதிருந்தது. இந்த நிலையில் தன்னை ஒரு குருவாக மாற்றிக்கொண்டு, அங்கிருந்த குருந்த மரம் ஒன்றின் அடியில் அமர்ந்து தவம் இயற்றிக்கொண்டிருந்தார், சிவபெருமான்.

    திருப்பெருந்துறை வழியாக வந்த வாதவூரார், குருந்த மரத்தின் அடியில் இருந்த குருவை, அருகில் சென்று பணிந்து வணங்கினார். அப்போது சிவபெருமானின் பாதம், வாதவூராரின் தலை மீது பட்டது. அடுத்த நொடியே இறைவனை நினைத்து பாடல்களைப் பாடத் தொடங்கினார். அவரது பாடலைக் கேட்டு ஈசனே உள்ளம் உருகிப்போனார். “உன் நாவில் இருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும் மாணிக்கம் போன்றது, ஆகையால் நீ இனிமேல் மாணிக்கவாசகன் என அழைக்கப் படுவாய்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    இறையருள் கிடைத்த மகிழ்ச்சியில், தன்னையே மறந்து போன மாணிக்கவாசகருக்கு, மன்னன் சொன்ன வேலை எப்படி நினைவிருக்கும். மன்னன் கொடுத்தனுப்பிய பொன், பொருட் களைக் கொண்டு அங்கேயே தங்கியிருந்து ஈசனுக்கு ஆலயம் எழுப்பத் தொடங்கிவிட்டார். வெகு காலம் ஆகியும் வாதவூரார் வராததால், மன்னன் அவருக்கு ஒரு ஓலை அனுப்பினான்.

    தன்னை வந்தடைந்த மன்னனின் ஓலையை எடுத்துக் கொண்டு, குருந்த மரத்தடியில் இருந்த குருவிடம் ஓடினார். “சுவாமி... மன்னன் கொடுத்த பொன்னையெல்லாம் திருப் பணிக்காக செலவிட்டுவிட்டேன். இப்போது நான் என்ன செய்வது?” என்று வருந்தினார்.

    “ஆடி மாதம் முடிவதற்குள் குதிரைகள் வந்துசேரும் என்று மறு ஓலை அனுப்பு” என்று இறைவன் சொன்னதை, அப்படியே செய்தார். சிறிது நாள் கழித்து மாணிக்கவாசகரை, மதுரைக்கு திரும்பும்படி ஈசன் கூறினார். அதன்படி மதுரை திரும்பியவரிடம், “குதிரைகள் எங்கே?” என்று கேட்டான், மன்னன்.

    குதிரைகள் வந்துகொண்டிருப்பதாக மாணிக்கவாசகர் சொன்ன பதிலைக் கேட்டு கோபம் கொண்ட மன்னன், அதுவரை சிறையில் இருக்கும்படி உத்தரவிட்டான். மாணிக்கவாசகர் சிறையிலடைக்கப்பட்டார். இதையடுத்து காட்டில் இருந்த நரிகளை எல்லாம், பரிகளாக (குதிரை) மாற்றி மதுரைக்கு அனுப்பினார், சிவபெருமான். அதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தான் மன்னன். ஆனால் அன்றிரவே, குதிரைகள் அனைத்தும் மீண்டும் நரிகளாக மாறி காட்டிற்குள் ஓடிவிட்டன.

    இதனால் கோபம் கொண்ட மன்னன், மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தினான். அவர் ஈசனை நினைத்து வேண்டினார். அப்போது ஆற்றில் உருவான வெள்ளம் மதுரையைச் சூழ்ந்தது. ஆனாலும் கூட மாணிக்கவாசகரை சுற்றிலும் தண்ணீர் கால் அளவுக்கே ஓடியது. ‘ஆற்றின் கரையை அடைக்க வீட்டிற்கு ஒருவர் வரவேண்டும்’ என்று மன்னன் உத்தரவிட்டான்.

    அவ்வூரில் வந்தி என்ற மூதாட்டி புட்டு விற்று பிழைத்து வந்தாள். தினமும் ஒரு புட்டை ஈசனுக்கு படைத்து, அடியவர் களுக்கு அளிப்பாள். வயோதிகம் காரணமாக தன்னால் ஆற்றின் கரையை அடைக்கும் பணிக்கு செல்ல முடியாது என்பதால், கூலிக்கு ஆள் தேடினாள். அப்போது ஈசன், பணியாள் வேடம் கொண்டு தனக்கு புட்டு தந்தால், பணிக்கு செல்வதாக கூறி, பாட்டியிடம் புட்டு வாங்கி சாப்பிட்டு விட்டு பணிக்கு சென்றார்.

    அங்கு பணியை கவனிக்காமல், ஓரிடத்தில் படுத்து உறங்கினார். அங்கு வந்த மன்னன், பிரம்மால் பணியாள் வேடத்தில் இருந்த ஈசனை அடிக்க, அந்த அடி உலகம் முழுவதும் இருந்த உயிர்கள் அனைத்தின் மீதும் விழுந்தது. மன்னன் திகைத்தான். அப்போது பணியாள் உருவில் வந்த ஈசன், ஒரு கூடை மண்ணை ஆற்றின் கரையில் கொட்டியதும் வெள்ளம் வடிந்தது. “இது தன்னுடைய திருவிளையாடல். மாணிக்கவாசகனை விடுதலை செய்” என்று மன்னனுக்கு சொல்லி மறைந்தார்.

    பின்னாளில் ஒவ்வொரு சிவதலமாக சென்று பாடல்கள் பாடிய மாணிக்கவாசகர், இறுதியில் சிதம்பரம் வந்துசேர்ந்தார். அங்கு ஈசனே, ஒரு வேதியர் வடிவில் வந்து, அவர் இதுநாள் வரை ஈசன் மீது பாடிய பாடல்கள் அனைத்தையும் மீண்டும் பாடச் செல்லி அதைத் தொகுத்து, அதன் இறுதியில் ‘திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது’ என்று கையெழுத்திட்டு, சிற்றம்பலத்தின் சன்னிதியில் வைத்துவிட்டு மறைந்தார்.

    பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும், 8-ம் திருமுறையாக விளங்குகின்றன. 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த மாணிக்கவாசகர், ஒரு ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்.
    குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமணம் நடக்க, புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்க இங்குள்ள பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
    கோவில் பெயர்   : அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில்

    சிவனின் பெயர்   :  தான்தோன்றீஸ்வரர்

    அம்மனின் பெயர் :  சவுந்தர்யநாயகி

    தல விருட்சம்     :  வில்வம்

    கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

    முகவரி : அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில், பூண்டி-602 023, திருவள்ளூர் மாவட்டம்.Ph: 044 2763 9725, 2763 9895.
    Ph:0 4561 - 221 810, 94420 43493.

    கோவில் சிறப்பு :

    * 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

    வாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள குட்டி விநாயகர் சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம். அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது.நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.

    * இங்குள்ள பைரவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் எனப்படுகிறார்.இரட்டை நாய் வாகன பைரவர் இருப்பது சிறப்பம்சம். தலவிநாயகரின் திருநாமம் வரசித்தி விநாயகர். நடராஜர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பெருமாள், மகாலட்சுமி, முருகன், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன.

    * குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமண, புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்க இங்குள்ள பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். திருமணத்தடையுள்ள பெண்கள் வாராகிக்கு சந்தனக்காப்பு செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
    மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று இரவு மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதியை வலம் வந்தார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாவாகும்.

    இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் முதல் நாளான நேற்று உற்சவர் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினார். அங்கு திருவிழாவுக்கு காப்பு கட்டிய ரவி பட்டரால் விநாயகர் பூஜை, கும்ப பூஜையுடன் யாகம் வளர்க்கப்பட்டது. அதை தொடர்ந்து காலை 10.25 மணிக்கு மீனாட்சி அம்மன் சன்னதி கொடிமரத்தில் திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது.

    மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று இரவு மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதியை வலம் வந்தார்.

    விழா நாட்களில் மீனாட்சி அம்மன் காலை, இரவு நேரங்களில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 2-ம் நாளான இன்று அன்னம், 3-ம் நாளில் காமதேனு, 4-ம் நாள் யானை, 5-ம் நாள் ரிஷபம், 6-வது நாள் கிளி, 7-வது நாள் மாலை மாற்றுதல், 8-ம் நாள் குதிரை, 9-ம் நாள் இந்திர விமானம், 10-ம் நாள் கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.

    நேற்றைய கொடியேற்ற விழாவில் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை, பட்டர்கள் ராஜா, ஹாலஸ், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
    ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் திறப்பது குறித்து அரசு மூலம் எந்த ஒரு அறிவிப்பும் வராததால் யாத்திரை பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் ஜூலை மாதம் 5-ந் தேதி முதல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராட தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ஊரடங்கு தளர்வில் 22 தீர்த்த கிணறுகள் திறப்பதற்கு அனுமதி கிடைக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் பக்தர்கள் இருந்தனர். ஆனால் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் திறப்பது குறித்து அதிகாரப் பூர்வமாக எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

    இதனால் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தடை தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் மூடப்பட்ட நிலையில் 3 மாதங்கள் கடந்தும் தீர்த்த கிணறுகள் திறக்கப்படாததால் அதை நம்பி வாழும் 400-க்கும் மேற்பட்ட யாத்திரை பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் முழுமையாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

    எனவே அடுத்த வாரம் முதலாவது தீர்த்த கிணறுகளை திறந்து பக்தர்கள் நீராட அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதே யாத்திரை பணியாளர்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையாகும்.
    கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில்களில் பக்தர்கள் அர்ச்சனைகள், சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்த அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது.
    கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் கோவிலில் பக்தர்கள் அர்ச்சனைகள், சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்த அனுமதி இல்லை.

    இதனால் சிறப்பு யாக பூஜைகளுக்கு பிரசித்திப்பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. சிறப்பு பூஜைகள், யாகங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து திருக்கடையூரை சேர்ந்த சமூக ஆர்வலர் வைத்தியநாதன் கூறுகையில், ‘அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

    இங்கு பக்தர்கள் நலனுக்காக ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், பீமரத சாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெறும். இதன் மூலமாக கோவில் அருகே பூ, தேங்காய், பழம் வியாபாரம் செய்பவர்கள், புகைப்பட, வீடியோ கலைஞர்கள், நாதஸ்வர கலைஞர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் வருமானம் கிடைக்கும். எனவே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மேற்கண்ட சிறப்பு யாகங்கள், பூஜைகளை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்றார்.
    சாயல்குடி அருகே உள்ள திருமாலுகந்தான் கோட்டைகோவில் பாண்டிய மன்னர்களின் கட்டிடக் கலை, சிற்ப கலைக்கு சான்றாக விளங்குகிறது.
    ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிதும் அறியப்படாத பழமை வாய்ந்த கோவில்களில் திருமாலுகந்தான் கோட்டை சிவன் கோவிலும் ஒன்று. இங்கு சிவன் அம்மனுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இதில் சிவன் சன்னதி கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. கல்லிலே கலை வண்ணம் கண்ட பாண்டிய மன்னர்களின் கட்டிடக் கலை, சிற்பக் கலைக்கு சான்றாக உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இதுமட்டுமே முழு கற்றளி என்பது இதன் சிறப்பு முற்கால பாண்டியர்களால் முழுவதும் கல்லால் கட்டப்பட்ட கழுகுமலை வெட்டுவான் கோவில், திருப்பத்தூர் சிவன் கோவில் ஆகியவற்றிற்கு இணையான சிறப்புடையதாக இந்த கோவில் திகழ்கிறது. இவை மூன்றும் சதுர வடிவில் அமைந்த நாகர் விமானம் கொண்டவை.

    திருப்பத்தூர் கோவில் 3 தளங்களுடனும் மற்றவை 2 தளங்களுடனும் உள்ளன. 3 கோவில்களிலும் முதல் தளத்தில் உள்ள கர்ணக்கூடுதேர் போன்ற அமைப்பிலும் வண்டிக்கூடு போன்ற அமைப்பில் உள்ள சாலை சிறிய கோவில் போன்றும் உள்ளன. இதில் சிற்பங்கள் உள்ளன. கழுகுமலையில் உள்ள யாழி வரிசைகள் சிம்ம யாழிகளாகவும் மற்றவற்றில் மகர யாழியாகவும் உள்ளன. திருப்பத்தூர் கோவில் விமானத்தின் மேல் தளங்களில் அமைத்து அழகு படுத்தி உள்ளார்கள். விமானத்தின் வெளிப்பகுதி சுவரில் சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன. இதில் லிங்கத்தின் மீது கால் வைத்த கண்ணப்ப நாயனார், நந்தி மேல் உமாமகேசுவரர் என பல சிற்பங்கள் அழகுற இடம்பெற்றுள்ளன.
    கடந்த 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பேராலயம் திறக்கப்பட்ட 5 நாட்கள் வரை பக்தர்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் காணப்பட்டது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து நகர்' என அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்திற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகளும் வந்து செல்வார்கள்.

    கொரோனா 2-வது அலை மிக தீவிரமாக பரவி வந்ததால் தமிழகத்தில் ஆலயங்களில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி காலை 6 மணி வரை ஆலயங்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா தொற்று குறைந்ததால் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஊரடங்கில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கடந்த 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பேராலயம் திறக்கப்பட்ட 5 நாட்கள் வரை பக்தர்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 71 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணியில் பக்தர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. பேராலய வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும் வேளாங்கண்ணி மாதா குருக்கள்கள் தங்கும் விடுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    தஞ்சை பெரியகோவிலில் உள்ள வராஹி வராஹி அம்மனுக்கு 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். வராகி அம்மனுக்கு நேற்று சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.
    தஞ்சை பெரியகோவிலில் வராஹி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராஹி அம்மனுக்கு 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் 9-ம் தேதி தொடங்கியது.

    பின்னர் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வராஹி அம்மனுக்கு 10-ம்தேதி (சனிக்கிழமை) வராஹி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    3-வது நாளான நேற்று வராஹி அம்மன் குங்கும அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    4-ம் நாளான நேற்று சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை தேங்காய்பூ அலங்காரமும், 14-ந் தேதி மாதுளை அலங்காரமும், 15-ந் தேதி நவதானிய அலங்காரமும், 16-ந் தேதி வெண்ணெய் அலங்காரமும், 18-ந் தேதி காய்கனி அலங்காரமும் நடைபெறுகிறது.

    ஆஷாட  நவராத்திரி விழா வருகிற 19-ந் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம்  வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
    கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக சபரிமலையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 21 -ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

    கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக சபரிமலையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இணையதள முகவரி sabarimalaonline.org என்றும் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு செய்த பக்தர்கள் 17-ந் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    இன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும்.
    ஆனி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கின்ற அற்புதமான பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    ஆனி மாதம் தெய்வ வழிபாடு, விரதங்கள், பூஜைகள் மேற்கொள்வதற்கு ஒரு சிறந்த மாதமாக இருக்கிறது. ஆனி மாத சங்கடஹர சதுர்த்தியான இன்று விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினமாகும். இந்த தினத்தில் விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சிறப்பான நன்மைகள் ஏற்படும்.

    ஆனி தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வசமிக்க பூக்கள், அபிஷேக பொருட்கள் தந்து, ஆராதனை பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

    இன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். வீடு கட்டுவது, சொத்துக்கள் வாங்கல் போன்ற முயற்சிகளில் தடைகள் நீங்கி, வெற்றிகள் உண்டாகும். நீதிமன்றங்களில் இருக்கும் வழக்கங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வர வழிவகை செய்யும் ஆனி மாதம் மிதுன ராசியில் பிறந்ததால் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு புதன் கிரக தோஷங்கள் நீங்கும்.
    நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்காவில் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.
    நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் செய்யது முகமது யூசுப் சாஹிப் தாதா சமாதி உள்ளது. ஆண்டு தோறும் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த ஆண்டு விழா கொரோனா ஊரடங்கு காரணமாக மிக எளிமையான முறையில் நடைபெற்றது. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா நேற்று இரவு தொடங்கியது.

    முன்னதாக தர்கா அலங்காரவாசல் முன்பு தொட்டில் அமைக்கப்பட்டது. இதில் திரளானோர் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.

    ஈத்தாமொழி அருகே உள்ள இலந்தையடி தட்டு தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 14-ந்தேதி நாக பஞ்சமி ஆனி உத்தரத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.
    ஈத்தாமொழி அருகே இலந்தையடி தட்டில் தென்காளஹஸ்தி சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 14-ந்தேதி நாக பஞ்சமி ஆனி உத்தரத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    அன்று பகல் 12 மணிக்கு நடராஜருக்கு 9 வகை அபிஷேகமும், திருமஞ்சன காப்பு சாத்தப்பட்டு, மாணிக்க வாசகர் பெருமானின் சிவபுராணம் பாடப்பட்டு, தீபாராதனை நடைபெறுகிறது. மேலும் இங்குள்ள நாகராஜர் மற்றும் ராகு-கேதுவுக்கு அபிஷேக அலங்காரமும், சந்தன காப்பும் நடக்கிறது.

    காளசர்ப்ப தோஷம், திருமண தடை, செவ்வாய் நேரடி பார்வை பெற்ற ஜாதகர்களுக்கு ஹோம பரிகாரமும், நாகருக்குரிய 108 கவச பாடல்களும் பாடப்படுகிறது. அதை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தென்காளஹஸ்தி பக்தர்கள் சேவா சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.
    ×