search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமாலுகந்தான் கோட்டைகோவில்
    X
    திருமாலுகந்தான் கோட்டைகோவில்

    கல்லிலே கலைவண்ணம் கண்ட பாண்டிய மன்னர்கள்

    சாயல்குடி அருகே உள்ள திருமாலுகந்தான் கோட்டைகோவில் பாண்டிய மன்னர்களின் கட்டிடக் கலை, சிற்ப கலைக்கு சான்றாக விளங்குகிறது.
    ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிதும் அறியப்படாத பழமை வாய்ந்த கோவில்களில் திருமாலுகந்தான் கோட்டை சிவன் கோவிலும் ஒன்று. இங்கு சிவன் அம்மனுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இதில் சிவன் சன்னதி கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. கல்லிலே கலை வண்ணம் கண்ட பாண்டிய மன்னர்களின் கட்டிடக் கலை, சிற்பக் கலைக்கு சான்றாக உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இதுமட்டுமே முழு கற்றளி என்பது இதன் சிறப்பு முற்கால பாண்டியர்களால் முழுவதும் கல்லால் கட்டப்பட்ட கழுகுமலை வெட்டுவான் கோவில், திருப்பத்தூர் சிவன் கோவில் ஆகியவற்றிற்கு இணையான சிறப்புடையதாக இந்த கோவில் திகழ்கிறது. இவை மூன்றும் சதுர வடிவில் அமைந்த நாகர் விமானம் கொண்டவை.

    திருப்பத்தூர் கோவில் 3 தளங்களுடனும் மற்றவை 2 தளங்களுடனும் உள்ளன. 3 கோவில்களிலும் முதல் தளத்தில் உள்ள கர்ணக்கூடுதேர் போன்ற அமைப்பிலும் வண்டிக்கூடு போன்ற அமைப்பில் உள்ள சாலை சிறிய கோவில் போன்றும் உள்ளன. இதில் சிற்பங்கள் உள்ளன. கழுகுமலையில் உள்ள யாழி வரிசைகள் சிம்ம யாழிகளாகவும் மற்றவற்றில் மகர யாழியாகவும் உள்ளன. திருப்பத்தூர் கோவில் விமானத்தின் மேல் தளங்களில் அமைத்து அழகு படுத்தி உள்ளார்கள். விமானத்தின் வெளிப்பகுதி சுவரில் சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன. இதில் லிங்கத்தின் மீது கால் வைத்த கண்ணப்ப நாயனார், நந்தி மேல் உமாமகேசுவரர் என பல சிற்பங்கள் அழகுற இடம்பெற்றுள்ளன.
    Next Story
    ×