என் மலர்

  நீங்கள் தேடியது "Aadi Thapasu"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடித்தபசு திருவிழா கடந்த மாதம் 31 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

  கல்லிடைக்குறிச்சி:

  அம்பையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சின்ன சங்கரன் கோவில் என்று அழைக்கப்படும் கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித் தபசு திருவிழா கடந்த மாதம் 31 -ந் தேதி கோவிலில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

  தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலை என இரு வேலைகளிலும் அபிஷேகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டு தினம்தோறும் ஒவ்வொரு வாகனங்களில் சுவாமி - அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் வழங்கினர்.

  ஆடித்தபசு நாளான நேற்று கோமதியம்மனை தரிசனம் செய்ய சின்ன சங்கரன்கோவிலில் அம்பை, வி.கே.புரம், கல்லிடை உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

  தொடர்ந்து ஆடித்தபசுவையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து சங்கரநாராயணராக வந்து கோமதி அம்மனுக்கு காட்சியளித்தார்.

  இதனைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து கோவிலில் திருக்கல்யாணமும் நடைபெற்றது.

  இந்த திருவிழாவையொட்டி அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமை‌யிலான போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  ×