என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
தேரோட்டம் நேற்று கோவில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. பின்னர் காலை 9 மணி முதல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருமஞ்சன விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டுக்கான ஆனித்திருமஞ்சன விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழா பக்தர்கள் இன்றி கோவில் உட்பிரகாரத்திலேயே நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் தேரோட்டம் நேற்று கோவில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. பின்னர் காலை 9 மணி முதல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்படி பக்தர்கள் கீழ சன்னதி வாசல் வழியாக கோவிலுக்கு வந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர், நடராஜர், சிவகாமசுந்தரி, சுப்பிரமணியா் சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் மதியம் 2 மணி வரை சென்று சாமி தரிசனம் செய்தனர். இதன்பிறகு பக்தர்கள் உள்ளே செல்ல நிறுத்தப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது.

சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோவிலில் ஆடித்தபசு விழா வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இதில் சங்கரஈஸ்வரர், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது.
ஏரல் அடுத்துள்ள சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடித்தபசு திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
இக்கோவிலில் நேற்று காலையில் அரசு வழிகாட்டுதல்படி கொடியேற்றத்துடன் ஆடித்தபசு திருவிழா தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு கோவிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
முக்கிய விழாவான ஆடித்தபசு விழா வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இதில் சங்கரஈஸ்வரர், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது.
திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கொரோனா தொற்று ஊரடங்கால் அரசு நெறிமுறைகளுக்கு உட்பட்டு எளிய முறையில் நடத்திட கோவில் நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில் இந்த ஆண்டும் தேரோட்டம் உள் பிரகாரத்திலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் பிரமோற்சவ திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழா 11 நாட்கள் நடைபெறும். தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகிற இன்று முதல் 26-ந்தேதி வரை ஆடி திருவிழா கோவிலின் உள் பிரகார வளாகத்தில் பக்தர்கள் இன்றி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்திருவிழாவில் வருகிற 16-ந்தேதி (நாளை) கொடியேற்றமும் மற்றும் 24-ந்தேதி தேரோட்டமும் கோவில் உள் பிரகாரத்திலேயே நடைபெறும்.
திருவிழா நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கொடியேற்றம் நடைபெறும் 16-ந்தேதி (நாளை) காலை 9 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்று காலை 6 மணிக்கு மேல் 9 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 24-ந்தேதி ஆடி பவுர்ணமி அன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பிற்பகல் 2 மணிக்கு மேல் கோவிலுக்குள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2-வது ஆண்டாக ஆடி தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அரசின் மறு உத்தரவு வரும் வரை கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் தங்குவதற்கும், நூபுர கங்கை தீர்த்தத்தில் குளிப்பதற்கும், கிடாய் வெட்டி பொங்கல் வைப்பதற்கும் தடை நீடிக்கும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆனி திருமஞ்சனம் பக்தர்கள் இன்றி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடதக்கதாகும். இது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் ஆனி திருமஞ்சன விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தற்போது கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பக்தா்கள் இன்றி விழா கோவில் உள்பிரகாரத்திலேயே நடைபெற்று வருகிறது. அதே வேளையில் சாமிக்கு விழாவுக்கான சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் தேரோட்டம் நேற்று கோவில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
இன்று மாலையில் (வியாழக்கிழமை) ஆனிதிருமஞ்சன விழா நடைபெற உள்ளது. தொடர்ந்து தரிசன நாளான இன்று(வியாழக்கிழமை) ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. பின்பு மாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆனி திருமஞ்சனம் பக்தர்கள் இன்றி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடதக்கதாகும். இது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தற்போது கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பக்தா்கள் இன்றி விழா கோவில் உள்பிரகாரத்திலேயே நடைபெற்று வருகிறது. அதே வேளையில் சாமிக்கு விழாவுக்கான சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் தேரோட்டம் நேற்று கோவில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
இன்று மாலையில் (வியாழக்கிழமை) ஆனிதிருமஞ்சன விழா நடைபெற உள்ளது. தொடர்ந்து தரிசன நாளான இன்று(வியாழக்கிழமை) ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. பின்பு மாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆனி திருமஞ்சனம் பக்தர்கள் இன்றி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடதக்கதாகும். இது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நம் முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு ஒவ்வொரு வருடமும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை என்று மூன்று நாட்கள் கண்டிப்பாக தர்ப்பணம் தரவேண்டும்.
நம்முடைய அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து சுகமாக வாழ சித்தர்களின் தலைவரும் தமிழ்மொழியின் தந்தையும் நம் அனைவருக்கும் ஆதிமூல முதல் குருவும் ஆகிய அகத்திய மகரிஷி அவர்கள் நமக்கு முக்கியமான ஒரு உபதேசம் அளித்துள்ளார். கலியுகத்தில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நோய் அல்லது வம்பு வழக்கு அல்லது தேவையில்லாத பிரச்சனை அல்லது நிம்மதி இல்லாத வாழ்க்கை அல்லது கடன் அல்லது கந்துவட்டி முழுவதும் வாட்டிக் கொண்டே இருக்கும்.
இரண்டு முக்கிய தெய்வீக காரியங்களை செய்யாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று அகத்தியர் உபதேசம் செய்துள்ளார்.
முதல் காரணம்: நாம் மாதம் ஒருமுறை அமாவாசை திதி அல்லது வளர்பிறை பஞ்சமி திதி அன்று குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழி விடாமல் இருப்பது.
இரண்டாவது காரணம்: மாதம் ஒரு நாள் அல்லது வருடத்திற்கு மூன்று நாட்கள் இறந்த முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் தராமல் இருப்பது.
நம் முன்னோர்களாகிய நீத்தார் என்ற பித்ருக்களுக்கு ஒவ்வொரு வருடமும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை என்று மூன்று நாட்கள் கண்டிப்பாக தர்ப்பணம் தரவேண்டும். தொடர்ந்து 12 ஆண்டுகள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் விடுபட்ட பித்ரு கடன் ஒரே ஒரு புரட்டாசி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வதால் நீங்கிவிடும். தொடர்ந்து 100 ஆண்டுகள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் விடுபட்ட பிதிர்க்கடன் ஒரே ஒரு தை முதல் நாள் அன்று தர்ப்பணம் செய்வதால் நீங்கிவிடும்.
மாசி மாதம் வரும் அமாவாசை சதய நட்சத்திரம் அன்று வந்தால் அன்று செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பலகோடி மடங்கு புண்ணியத்தை அள்ளித்தரும். கலியுகத்தில் சதய நட்சத்திரமும் மாசி அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வது 100 கோடி பேரில் ஒருவர் மட்டுமே செய்ய இயலும்.
மாசி மாதம் வரும் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் என்று வந்தால் அன்று செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் நம்முடைய முன்னோர்கள் ஆகிய பித்ருகளுக்கு 10,000 ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்ததற்கு சமமான புண்ணியத்தினை தந்துவிடும். பத்தாயிரம் ஆண்டுகள் என்பது பூமி ஆண்டுகள் அல்ல. 10 ஆயிரம் தேவ ஆண்டுகள் ஆகும். பூமியில் 365 ஆண்டுகள் வந்தால் அது பித்ருக்களுக்கு ஒரு பித்ரு வருடமாகும்.
மாசி மாத அமாவாசை பூரட்டாதி நட்சத்திர நாளில் வந்தால் அவை மிகவும் அற்புதமான பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு உரிய நாள் ஆகும். இந்த நாளில் யாரொருவர் நீத்தார் என்ற முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்கிறார்களோ அது அவர்களுடைய இந்த பிறவியில் இருந்து அடுத்த நூறு பிறவி வரை சகல வளங்களும் பெற்று மகத்தான வாழ்க்கை வாழ வைக்கும்.
மாசி மாத அமாவாசையில் பூரட்டாதி நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் முன்னோர்களுக்கு பரம திருப்தியை தரும். இந்த பரம திருப்தியால் முன்னோர்களாகிய பித்ருக்கள் ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள். ஒரே ஒரு மாசி மாத அமாவாசை பூரட்டாதி நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணத்தால் நமக்கு கிடைக்கும் பித்ருக்களின் ஆசி மறு நாளிலிருந்து இந்த பிறவி முழுவதும் கிடைத்துக் கொண்டே இருக்கும். அடுத்த நூறு பிறவிகள் வரை நமக்கு சகல விதமான செல்வ வளங்களையும், நல்ல குணங்களையும், சிறப்பான கல்வியும் திருப்தியான ஜென்மாந்திர வாழ்க்கையும் அள்ளி தரக்கூடிய சக்தி வாய்ந்தது.
ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நேற்று வராஹி அம்மனுக்கு மாதுளை முத்துக்களால் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தஞ்சை பெரிய கோவிலில் வராஹி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராஹி அம்மனுக்கு 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் 9-ம் தேதி தொடங்கியது. பின்னர் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வராஹி அம்மனுக்கு 10-ம்தேதி (சனிக்கிழமை) வராஹி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
3-வது நாளான 11-ம்தேதி வராஹி அம்மன் குங்கும அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
4-ம் நாளான 12-ம்தேதி சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
4-ம் நாளான 13-ம் தேதி வராஹி அம்மன் தேங்காய்த்துருவல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
5-ம் நாளான நேற்று மாலை வராஹி அம்மன் மாதுளை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலை நவதானிய அலங்காரமும், 16-ந் தேதி வெண்ணெய் அலங்காரமும், 18-ந் தேதி காய்கனி அலங்காரமும் நடைபெறுகிறது.
ஆஷாட நவராத்திரி விழா வருகிற 19-ந் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

வீராணம் அருகே கொம்பேரிக்காடு பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வராஹி அமமன் சன்னதி இருக்கிறது. இங்கு பஞ்சமி திதியையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பஞ்சமி திதி அன்று வராஹி அம்மனை வழிபட உகந்த நாள். இந்த நாட்களில் வராஹி அம்மனை வழிபட்டு நாம் வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைப்பாள்.
வீராணம் அருகே கொம்பேரிக்காடு பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வராஹி அமமன் சன்னதி இருக்கிறது. இங்கு பஞ்சமி திதியையொட்டி வராஹி அம்மனுக்கு சந்தனம். பால், தயிர் போன்ற 16 வகையான பொருட்களால் அபிஷேகமும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
பின்னர் வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கையில் உறுதியோடு நிலைத்து இருந்தால் பாறை போன்று கடுமையாய் வந்ததெல்லாம் பனித்துளிகள் போல் நீங்கி விடும்.
உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ். மனிதனை தன்னுடைய அடியானாக படைத்தது மட்டுமல்லாமல், அவனை சுற்றி சூழ்ந்த அத்தனையுமே மனிதனின் பயன்பாட்டிற்காக உருவாக்கினான்.
தனக்கு நிகழ்கின்ற நன்மை-தீமை எதுவாகிலும் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருகின்றது என்பதை மனிதன் நம்புவதே இறையச்சத்தின் அடையாளம். அந்த உறுதி ஏற்படும் போது மனிதன் எதற்காகவும் அச்சப்படத் தேவையில்லை. இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“ஏதேனும் துன்பத்தை அல்லாஹ் உமக்குக் கொடுத்தால், அதனை அகற்றுபவர் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. மேலும், உமக்கு ஏதேனும் நன்மை அளிக்க அவன் நாடினால், அவனுடைய அருளைத் தடுப்பவரும் யாரும் இல்லை. தன்னுடைய அடியார்களில், தான் நாடுபவருக்குத் தன் அருளை அவன் வழங்குகின்றான். மேலும், அவன் மாபெரும் மன்னிப்பாளனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 10:107).
அதேநேரத்தில் “எந்த மனிதனையும் அதிகமாக சோதிக்கமாட்டேன்” என்றும் இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்.
“நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை”. (திருக்குர்ஆன் 6:152).
சிலருக்கு பல திசையிலிருந்தும் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். அதில் இருந்து மீண்டுவரவும் வழி உள்ளது. இதையே, “பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்” என்று திருக்குர்ஆனில் (2:153) குறிப்பிடுகின்றான்.
தனக்கு ஏற்படும் கஷ்டங்களையும், சோதனைகளையும் பொறுமையுடன் ஏற்றுக் கொள்பவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான். அதன்பொருட்டு இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை அள்ளி வழங்க காத்திருக்கின்றான்.
எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு, அதற்காகவே அல்லாஹ் ‘துவா’ (பிரார்த்தனை) என்ற கவசத்தை நமக்கு வழங்கியுள்ளான். நமக்கெல்லாம் வழிகாட்டியாக வந்த நபிமார்களும் தங்கள் வாழ்வில் பல்வேறு சோதனைகளை சந்தித்தவர்கள் தான். அவற்றிலிருந்து மீள்வதற்கு துஆவையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளான்.
ஐயுபு நபி (அலை) அவர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டார்கள். “யாஅல் லாஹ் நிச்சயமாக என்னை நோய் பீடித்துள்ளது அதை நீக்கி விடு. நீ கிருபையாளருக்கெல்லாம் மகா கிருபையாளன்” (திருக்குர்ஆன் 21:83) என்று துஆச் செய்தார்கள், இறையருளால் நலம் அடைந்தார்கள்.
நபி யூனுஸ் (அலை) மீன் வயிற்றில் கடும் இருட்டில் மாட்டிக் கொண்டார்கள். தப்பிப்பதற்கு வழியே இல்லை, இருந்தும் நம்பிக்கை இழக்கவில்லை. “எங்களின் இறைவா! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீயோ மிகப் பரிசுத்தமானவன், என்னை மன்னித்து அருள்புரிவாயாக” (திருக்குர்ஆன் 21:87) என்று இரு கரம் ஏந்தி துஆ செய்தார்கள். இறையருளால் அவர்கள் கடற்கரையில் கொண்டு வந்து விடப்பட்டார்கள்.
எத்தனைப்பெரிய நெருக்கடிகள் இருந்தாலும், நாம் நினைத்தறியாத திசைகளிலிருந்து அல்லாஹ் உதவி செய்வான், என்ற நம்பிக்கையில் துஆ செய்தால் நிச்சயமாக வழி பிறக்கும். அது நம்பிக்கையின் உறுதித்தன்மையை பொறுத்தே அமையும்.
நோய், வறுமை, கடன், மற்றும் பிரச்சினைகள் எல்லாம் இறைவன் விதித்தபடியே நடந்தது என்று நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை, மன அழுத்தங்களை நம்மை விட்டும் தூரமாக்கும்.
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கையில் உறுதியோடு நிலைத்து இருந்தால் பாறை போன்று கடுமையாய் வந்ததெல்லாம் பனித்துளிகள் போல் நீங்கி விடும். தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். காலம் மனதிற்கு ஆறுதலைத் தந்து, மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும்.
நம்பிக்கையோடு காத்திருப்போம், எல்லா நிலைகளிலும் இறைவனிடம் கையேந்துவோம், ஈருலக நன்மைகள் அனைத்தும் பெற்றுக்கொள்வோம்.
“மன அழுத்தங்களை மறப்போம், மனமகிழ்ச்சியை மனதில் நிறைப்போம்”.
மு. முகமது யூசுப், உடன்குடி.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆனி மாத பூரத்தையொட்டி சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. பெரியார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம். 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் இது பெற்றுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பல்வேறு விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த 5-ம் தேதியில் இருந்து கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மாதம்தோறும் வரும் பூரம் விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தற்போது எளிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஆனி மாத பூரத்தையொட்டி ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

வாடிப்பட்டி அண்ணாமலையார் கோவிலில் மாணிக்கவாசகருக்கு குரு பூஜை விழா நடந்தது. இதில் மாணிக்கவாசகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.
வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய்க் கரையில் அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சைவ சமய அடியார்கள் திருஞானசம்மந்தர், சுந்தரமூர்த்தி, திருநாவுக்கரசு, மாணிக்கவாசகர் ஆகியோர் பரிவார தெய்வங்களோடு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மாணிக்கவாசகர் குரு பூஜை விழா நடந்தது.
இந்த விழாவையொட்டி நால்வருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டது. இதில் மாணிக்கவாசகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சிவபக்த குழுவினர் திருவாசகப்பாடல்களை பாடினர். அதன்பின் அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கோபிநாத் டாக்டர் ராஜேஸ்வரி மற்றும் பலர் செய்திருந்தனர்.

இயேசுவோ எல்லோரையும்போல் சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்த அவர்களை வெறுக்கவோ ஒதுக்கவோ கூடாது என்பதைத் தன் வாழ்வின் வழியே எடுத்துக்காட்டினார்.
இயேசுவின் காலத்தில் யூதர்கள், மதத் தலைவர்கள், குருக்கள் ஆகியோரால் வெறுக்கப்பட்ட மக்களாக சமாரியர்கள் வாழ்ந்து வந்தனர். இயேசுவோ எல்லோரையும்போல் சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்த அவர்களை வெறுக்கவோ ஒதுக்கவோ கூடாது என்பதைத் தன் வாழ்வின் வழியே எடுத்துக்காட்டினார். அனைவரும் கடவுளின் குழந்தைகளே என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இயேசுவை மடக்க நினைத்து அவரை நெருங்கி வந்த திருச்சட்ட வல்லுநர் ஒருவர் இயேசுவைப் பார்த்து “போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? ” என்று கேட்டார். அதற்கு அவர், “திருச்சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது, நீங்கள் என்ன வாசித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது திருச்சட்ட வல்லுநர், “‘உங்கள் கடவுளாகிய பரலோகத் தந்தையின் மேல் உங்கள் முழு மனதோடு அன்பு காட்ட வேண்டும்’ என்றும், ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல சக மனிதர்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது”என்றார். உடன் இயேசு, “சரியாகச் சொன்னீர்கள்; அப்படியே செய்துகொண்டிருங்கள்; அப்போது உங்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்”என்று சொன்னார்.
ஆனால் அந்தத் திருச்சட்ட வல்லுநர், தன்னை ஒரு நீதிமான் எனக் காட்டிக்கொள்வதற்காக, “ நான் அன்பு காட்ட வேண்டிய அந்த சக மனிதர்கள் உண்மையில் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு இயேசு ஒரு கதையைக் கூறினார்.
“ஒருவன் எருசலேம் நகரத்திலிருந்து கீழ்நோக்கி எரிக்கோ நகரத்துக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்போது, திருடர்களின் கையில் மாட்டிக்கொண்டான். அவர்கள் அவனிடமிருந்த எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு, அவனை பலமாகத் தாக்கி, கிட்டத்தட்டச் சாகும் நிலையில் குற்றுயிராக விட்டுவிட்டுப் போனார்கள். அந்தச் சமயத்தில் ஆலய குரு ஒருவர் தற்செயலாக அந்த வழியில் வந்துகொண்டிருந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவனைப் பார்த்தபின், எதிர்ப்பக்கமாகப் போய்விட்டார். ஒரு லேவியர் அந்த வழியில் வந்தார். மதகுருவைப் போலவே அவரும் கண்டும் காணதவரைப்போல் நடந்துகொண்டார். ஆனால், அந்த வழியில் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அவனைப் பார்த்தபோது மனம் உருகினார். அவன் பக்கத்தில் போய், அவனுடைய காயங்கள்மேல் எண்ணெய்யையும் திராட்சைரச மதுவையும் ஊற்றி, அவற்றுக்குக் கட்டுப்போட்டார். பின்பு, அவனைத் தன்னுடைய கழுதையின் மேல் ஏற்றி, ஒரு சத்திரத்துக்குக் கூட்டிக்கொண்டுபோய்க் கவனித்துக்கொண்டார்.
அடுத்த நாள் அங்கிருந்து புறப்படும்முன் இரண்டு தினாரியூ பணத்தை எடுத்து சத்திரக்காரரின் கையில் கொடுத்து, ‘இவனைக் கவனித்துக்கொள்ளுங்கள்; இதற்குமேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொன்னார். அப்படியென்றால், இந்த மூன்று பேரில், திருடர்களின் கையில் மாட்டிக்கொண்டவனிடம் உண்மையிலேயே அன்பு காட்டியவர் யாரென்று நினைக்கிறீர்கள்?” என்று இயேசு கதையின் முடிவில் கேட்டார். அதற்குத் திருச்சட்ட வல்லுநர், “அவனிடம் இரக்கத்தோடு நடந்துகொண்டவர்தான்”என்று சொன்னார். அப்போது இயேசு, “நீங்களும் போய் அதேபோல் நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.
சக மனிதரிடம் பாரபட்சமும் வெறுப்பும் இல்லாமல் அன்பு காட்டுவதே சிறந்த வாழ்க்கை என்பதை விளக்கவே இயேசு இந்த உவமைக் கதையைப் பயன்படுத்தினார். கதை கூறியதோடு நின்றுவிடாமல் தாம் சொன்னதைச் செயலிலும் காட்டினார் இயேசு. தொழுநோயாளியாக இருந்த ஒரு சமாரியனைக் குணப்படுத்தினார். தன்னை நோக்கி ஆர்வத்துடன் நாடிவந்த சமாரியர்களுக்கு அவர் போதித்தார். ஒரு சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி அருந்தியபின் அவளிடம் மனம்விட்டு உரையாடினார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதிக்கு எடுத்துச்செல்லப்படும் வஸ்திரங்கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
மெகலாய (முகலாய) மன்னர்களின் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம் அவர்களிடம் கிடைக்காமல் இருக்க திருப்பதியில் 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆடி 1-ந் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதிக்கு எடுத்துச்செல்லப்படும் வஸ்திரங்கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் அனைத்தும் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் மங்கல பொருட்கள் அடங்கிய ஒரு தட்டை யானை மீது வைத்தும், மற்ற தட்டுகளை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் கையில் எடுத்து கொண்டும் ஊர்வலமாக வலம் வந்து மீண்டும் கோவிலுக்கு வந்தனர்.
இதையடுத்து வஸ்திர மரியாதைகளுடன் இன்று(வியாழக்கிழமை) திருப்பதிக்கு செல்கிறார்கள். இவர்கள் ஆடி முதல் தேதியன்று திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்து விட்டு ஸ்ரீரங்கம் திரும்புவார்கள். இந்தநிகழ்ச்சியில் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.