என் மலர்
ஆன்மிகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
சிதம்பரத்தில் தேரோட்டம் ரத்து:கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்த நடராஜர்
தேரோட்டம் நேற்று கோவில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. பின்னர் காலை 9 மணி முதல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருமஞ்சன விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டுக்கான ஆனித்திருமஞ்சன விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழா பக்தர்கள் இன்றி கோவில் உட்பிரகாரத்திலேயே நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் தேரோட்டம் நேற்று கோவில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. பின்னர் காலை 9 மணி முதல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்படி பக்தர்கள் கீழ சன்னதி வாசல் வழியாக கோவிலுக்கு வந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர், நடராஜர், சிவகாமசுந்தரி, சுப்பிரமணியா் சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் மதியம் 2 மணி வரை சென்று சாமி தரிசனம் செய்தனர். இதன்பிறகு பக்தர்கள் உள்ளே செல்ல நிறுத்தப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது.

Next Story