என் மலர்
ஆன்மிகம்

மாணிக்கவாசகர்
வாடிப்பட்டி அண்ணாமலையார் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை
வாடிப்பட்டி அண்ணாமலையார் கோவிலில் மாணிக்கவாசகருக்கு குரு பூஜை விழா நடந்தது. இதில் மாணிக்கவாசகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.
வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய்க் கரையில் அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சைவ சமய அடியார்கள் திருஞானசம்மந்தர், சுந்தரமூர்த்தி, திருநாவுக்கரசு, மாணிக்கவாசகர் ஆகியோர் பரிவார தெய்வங்களோடு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மாணிக்கவாசகர் குரு பூஜை விழா நடந்தது.
இந்த விழாவையொட்டி நால்வருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டது. இதில் மாணிக்கவாசகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சிவபக்த குழுவினர் திருவாசகப்பாடல்களை பாடினர். அதன்பின் அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கோபிநாத் டாக்டர் ராஜேஸ்வரி மற்றும் பலர் செய்திருந்தனர்.

Next Story