என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இத்தல தீர்த்தத்தில் ஞாயிறுதோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருவேற்காடு தலத்தில் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை இங்கு வழிபட்டதால் இத்தலம் வேற்காடு என்று பெயர் பெற்று விளங்குகிறது. திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில் சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும்.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு. இத்தலம் நவக்கிரக தோஷங்கள் நீங்குவதற்குரிய ஒரு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இத்தலத்து அம்பிகையையும், திருவலிதாயம் பாலாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவுடையாம்பிகையையும், ஒரே நாளில் சென்று வழிபடுவோர் , இம்மை மறுமை நலன்களைப் பெறுவர் என்று கூறப்படுகிறது.
சிவன் ஒரு முறை பார்வதியிடம், “இத்தலத்தை மனதால் நினைத்தாலும், ஒரு பொழுதாவது இங்கு தங்கியிருந்தாலும், இத்தலம் வழியாக சென்றாலும் முக்தியடைவர்” என்று கூறியுள்ளார். பாற்கடலை விநாயகர் பருகி விளையாடும் போது திருமால் தன் கையில் இருந்த வலம்புரி சங்கை தவற விட்டார். பின் இத்தல சிவனை வழிபட்டு பெற்றார். திருமால் சுதர்சன சக்கரத்தை பெறுவதற்காக இத்தலத்தை அடைந்து பூஜை செய்த போது, உடனிருந்து ஆதிசேஷனும் இங்கு வழிபட்டு, இத்தலத்தின் எல்லைவரை வாசம் செய்பவர்களை தீண்டமாட்டேன் என கூறியதாக வரலாறு. அன்றிலிருந்து இத்தலத்தில் யாரும் பாம்பு கடித்து இறந்தது கிடையது. இதனால் இத்தலத்திற்கு “விடந்தீண்டாப்பதி” என்ற பெயரும் உண்டு.
மகா சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் மிகக் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்தல தீர்த்தத்தில் ஞாயிறுதோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர்.

ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நடராஜ பெருமான், சிவகாம சுந்தரி முன்னும் பின்னும் ஆனந்த நடனம் ஆடிய படியே சித்சபைக்கு சென்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் இன்றி கோவில் உட்பிரகாரத்திலேயே விழா நடைபெற்று வருகிறது. மேலும் விழாவுக்கான பூஜைகள் முடிந்த பின்னர் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதற்கு பதிலாக கோவில் உட்பிரகாரத்திலேயே பக்தர்கள் இன்றி தேரோட்டம் மற்றும் ஆனித்திருமஞ்சன விழா தரிசனத்தை நடத்தலாம் என்றும் அறிவுறுத்தியது.
அதன்படி நேற்று முன்தினம் 5 மணியளவில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள், கோவில் உட்பிரகாரத்திலேயே வலம் வந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் நடை அடைக்கப்பட்டது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தரிசன நிகழ்ச்சி நேற்று பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணி முதல் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகா அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நடராஜ பெருமான், சிவகாம சுந்தரி முன்னும் பின்னும் ஆனந்த நடனம் ஆடிய படியே சித்சபைக்கு சென்றனர்.
தரிசன விழாவை காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதற்கிடையே நடராஜரை தரிசனம் செய்வதற்காக மதியம் முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து மாலை 5.45 மணியளவில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டனர். இரவு 11 மணி வரை பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

கொளஞ்சியப்பர் கோவிலில் நேற்று சஷ்டியையொட்டி சித்தி விநாயகர் மற்றும் கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் சித்திவிநாயகர், கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சஷ்டியையொட்டி சித்தி விநாயகர் மற்றும் கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல விருத்தாசலம் வேடப்பர், ஆதி கொளஞ்சியப்பர், முதனை செம்புலிங்க அய்யனார், விருத்தகிரிகுப்பம், ஆலிச்சிக்குடி கிராமங்களில் அமைந்துள்ள சுப்பிரமணியர் கோவில்களில் நேற்று சஷ்டியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.
ஸ்ரீவைகுண்டத்தில் குருசுகோயில் என்றழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 5.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது.
மாலை 6.30 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் சிறப்பு கொடிகளை மந்திரித்து பங்குதந்தை கிஷோக் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் சிறப்பு ஆசிர்வாத நிகழ்வு நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு திருப்பலி நடத்துகிறார். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.
இணையதளத்தில் கொடியேற்ற நிகழ்வுகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படு கிறது. ஆலயத்திருத்தேர் திருவிழா நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.26-ந்தேதி காலை கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை காயாரோகணசாமி, நீலாயதாட்சியம்மன் கோவில் சப்த விடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த கோவிலில் உள்ள நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக நடராஜர், சிவகாம சுந்தரிக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி, இளநீர், பால், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பக்கர்கள் முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் நாகை அமரநந்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கட்டியப்பர் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், அழகிய நாதர் கோவில், வீரபத்திர சுவாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்,, நாகநாதர் கோவில், சட்டையப்பர்கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமானுக்கு ஆனி உத்தரம் திருமஞ்சனத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் மிக எளிமையாக திருமஞ்சன விழாவை நடத்தியது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தன

ஆனி மாத சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
ஆனிமாத சஷ்டியையொட்டி நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி நாமக்கல் காந்திநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் சாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இறுதியாக தங்ககசவம் அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் ஆனி மாத சஷ்டியையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன்படி கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி, பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஆறுமுகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர், அருணகிரிமலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வேலூர் சக்தி நகர் முருகன், பேட்டை பகவதியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன் உள்ளிட்ட முருகன் கோயில்களில் ஆனி மாத சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று ஆனி திருமஞ்சன விழாவையொட்டி நடராஜர் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவாலயங்களில் நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆனி திருமஞ்சனமும் மிகவும் சிறப்புக்குரியது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா நேற்று நடைபெற்றது.
அதையொட்டி நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது சிறப்பு ஆராதனை நடந்தது.
தொடர்ந்து நேற்று காலை நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 9.20 மணியளவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். பின்னர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் ஆயிரங்கால் மண்டபத்தின் வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வழக்கமாக நடராஜர் கோவிலில் உள்ள திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு நான்கு மாட வீதியில் உலா நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக சாமி உலா கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. முன்னதாக பராம்பரிய முறைப்படி சாமி திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்து பிரகார உலா நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது லேசான சாரல் மழை பெய்தது.
தொடர்ந்து கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான நேற்று கோவில் வளாகத்தில் உள்ள மகிழ மரம் அருகில் நடராஜர் ஊடல் நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக சின்ன நடராஜர் உற்சவம் மூலம் ஊடல் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிலையில் நேற்று பெரிய நடராஜர் உற்சவம் மூலம் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தான் பெரிய நடராஜர் உற்சவத்தின் மூலம் ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால் விரதம் இருந்து துர்க்கா மாதாவின் திருவடி நிழலைப் பிரார்த்திக்க வேண்டும்.
* அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்கு அணிவிக்கலாம்.
* துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும். இவை சக்தி வாய்ந்தவை.
* துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் துர்கா சப்தசதி என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.
* பிறவி வந்து விட்டால் கஷ்டங்கள் துன்பங்கள் அதிகம். துக்கங்கள் அதிகமாகும். அந்த துக்கத்தைப் போக்குபவளே துர்காதேவி.
* கோர்ட்டு விவகாரங்கள் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் துர்காதேவியை சரண் புகுந்தால், வெற்றியும் பந்த நிவாரணமும் சித்திக்கும்.
* மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால் விரதம் இருந்து துர்க்கா மாதாவின் திருவடி நிழலைப் பிரார்த்திக்க வேண்டும்.
* துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. மனத்தளர்ச்சியோ சோகமோ ஏற்படுவதில்லை.
* ஸ்ரீ துர்கையின் வாகனம் சிம்மம். இவளுடைய கொடி மயில்தோகை.
* ஸ்ரீ துர்க்காவை பூஜை செய்தவன் சொர்க்க சுகத்தை அனுபவித்து பின் நிச்சயமாக மோட்சத்தையும் அடைவான்.
* ஒரு வருஷம் துர்க்கையை பூஜித்தால் முக்தி அவன் கைவசமாகும்.
* தாமரை இலையில் தண்ணீர் போல துர்க்கா அர்ச்சனை செய்பவனிடத்தில் பாதகங்கள் எல்லாம் தங்குவதில்லை.
* தூங்கும் போதும் நின்ற போதும், நடக்கும் போதும் கூட தேவி துர்க்கையை வணங்குபவனுக்கு சம்சார பந்தம் ஏற்படுவதில்லை.
* ஸ்ரீ துர்கா தேவிக்கு மிகப்பிடித்த புஷ்பம் நீலோத்பலம். இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது.
* துர்க்கையின் முன் புல்லாங்குழல் வாத்யம் வாசிக்கக் கூடாது.
* துர்க்கையை ஒன்பது துர்க்கைகளாக ஒன்பது பெயரிட்டுக் கூறுகின்றது. மந்திர சாஸ்திரம். 1. குமாரி, 2. த்ரிமூர்த்தி, 3. கல்யாணி, 4. ரோஹிணி, 5. காளிகா, 6. சண்டிகை, 7. சாம்பவி, 8. துர்கா, 9. சுபத்ரா.
* சுவாஸினி பூஜையிலும் 1. சைலபுத்ரி, 2. ப்ரம்ஹசாரிணி, 3. சந்த்ரகண்டா, 4. கூஷ்மாண்டா, 5. மகாகௌரி, 6. காத்யாயனி, 7. காளராத்ரி, 8. மகாகௌரி, 9. சித்திதார்ரி என்ற ஒன்பது துர்க்கைகள் இடம் பெறுகின்றனர்.
* துர்க்கை என்ற பெயரையும் சதாக்சி என்ற பெயரையும் எவர் கூறுகின்றனரோ அவர் மாயையினின்று விடுபடுவர்.
* துர்க்கை என்ற சொல்லில் `த்’, `உ’, `ர்’, `க்’, `ஆ’ என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்’ என்றால் அசுரர்களை அழிப்பவள். `உ’ என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள். `ர்’ என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்’ என்றால் பாபத்தை நலியச் செய்பவள். `ஆ’ என்றால் பயம் சத்ரு இவற்றை அழிப்பவள் என்பது பொருளாகும்.

திருமஞ்சனம் என்றால் ‘புனித நீராட்டல்’ என்று பொருள். ஆனி திருமஞ்சன நாளில், சிதம்பரம் நடராஜப் பெருமானை பல்வேறு வகைப் பொருட்களால் நீராட்டுவார்கள்.
மிகவும் பழமையான, பெருமைக்குரிய ஆலயங்களில் 6 கால பூஜைகள் நடைபெற்று வருவதைக் காணலாம். ஒரு நாளில் வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என்று 6 பொழுதுகள் உண்டு. இந்த பொழுதுகளானது மனிதர்களாகி நமக்கும், வானுலகில் வாழும் தேவர்களுக்கும் மாறுபடும் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. மனிதர் களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள்தான்.
அந்த வகையில் தேவர்களுக்கு வைகறை நேரம் என்பது நமக்கு மார்கழி மாதமாகும். தேவர்களுக்கு காலை பொழுது நமக்கு மாசி மாதமாகும். தேவர் களுக்கு உச்சி காலம் என்பது நமக்கு சித்திரை மாதத்தைக் குறிக்கும். தேவர் களுக்கு மாலை நேரம் என்பது நமக்கு ஆனி மாதத்தைக் குறிக்கும். அதுபோல தேவர்களுக்கு இரவு நேரம் என்பது நமக்கு ஆவணி மாதத்தைக் குறிக்கும். அர்த்த ஜாமம் என்பது புரட்டாசி மாதத்தைக் குறிக்கும்.
இந்த 6 காலங்களில் நடக்கும் பூஜைகள், அபிஷேகங்கள் இறைவனை மிகவும் குளிர்ச்சிப்படுத்தும். அதை பிரதிபலிக்கும் வகையில் சிதம்பரம் நடராஜருக்கு ஆண்டுக்கு 6 தடவை அபிஷேகம் செய்வார்கள். மாசி சதுர்த்தசி, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகியவையே அந்த 6 அபிஷேக நாட்கள். இந்த 6 நாட்களில் மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம் ஆகிய இரு நாட்களில் நடைபெறும் அபிஷேகம், பூஜைகள் சிறப்பானதாக கருதப்படுகிறது.
திருமஞ்சனம் என்றால் ‘புனித நீராட்டல்’ என்று பொருள். ஆனி திருமஞ்சன நாளில், சிதம்பரம் நடராஜப் பெருமானை பல்வேறு வகைப் பொருட்களால் நீராட்டுவார்கள். மற்ற சிவாலயங்களிலும் சிவலிங்கத்திற்கு இத்தகைய அபிஷேகங்கள் நடைபெறும். மன அமைதியும், உடல் வலிமையும் தரக்கூடிய மகத்துவம் வாய்ந்த இந்த புண்ணிய தினத்தில் சிவாலயங்களுக்குச் சென்று இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் நம்முடைய வாழ்வு சிறப்பாக அமையும்.
ஆனி பவுர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது ‘ஆனி திருமஞ்சனம்’ கொண்டாடுவார்கள். உத்திரம் நட்சத்திர நேரத்தில் கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு ‘ஆனி உத்திரம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு மனம் குளிர்விக்கும் வகையில் விதம் விதமான பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். அதை நேரில் கண்டு வழிபட்டால் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அபிஷேகம் முடிந்ததும் கண்கவர் வகையில் அலங்காரம் செய்யப்படும். அபிஷேக, அலங்காரம் முடிந்த பிறகு நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ‘ஷோடச ஆராதனை’ காட்டுவார்கள்.
நடராஜரின் இடது பாகம், சக்தி தேவியின் பாகமாக கருதப்படுகிறது. எனவே நடராஜரை வழிபடும்போது அவரது இடது பக்கம் மற்றும் இடது காலையும் சேர்த்து பார்த்து வழிபடுதல் வேண்டும். அப்படி வழிபாடு செய்தால் சிவன்-சக்தி இருவரது அருளாசியையும் பெறலாம். அதுபோல நடராஜரின் வலது பாகம் செல்வத்தை குறிக்கும். அந்த பாகத்தை பார்த்து தரிசனம் செய்தால் குடும்பத்தில் செல்வ வளம் அதிகரிக்கும். ஆனித் திருமஞ்சனம் விழா முதன் முதலில் பஞ்ச பூதத்தலங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் சிதம்பரம் தலத்தில்தான் தோன்றியது. பதஞ்சலி மகரிஷி இந்த திருவிழாவைத் தொடங்கி வைத்ததாக சொல்லப்படுகிறது.
ஆனித் திருமஞ்சனத்தை நேரில் பார்த்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். முதலாவது பலன்- நாடு முழுவதும் போதும், போதும் என்று சொல்லும் அளவுக்கு மழை பெய்து, விவசாயம் செழிக்குமாம். விவசாயம் செழித்தால், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். சுமங்கலிகள் இந்த விழாவில் கலந்து கொண்டால் நீடூழி வாழ்வார்கள். கன்னிப்பெண்கள் பங்கேற்றால் விரைவில் அவர்களுக்கு உரிய இடத்தில் திருமணம் நடைபெறும். எல்லாவற்றுக்கும் மேலாக சிவ-சக்தியின் பேரருள் கிடைக்கப் பெறும்.

இத்தலத்தில் வேண்டுதல் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சேலம் நகரின் அருகில் உடையாபட்டி என்ற இடத்தில், இயற்கை எழில் சூழ்ந்து முற்றிலும் மலைகளுடன் காட்சியளிக்கிறது அருள்மிகு கந்தாஸ்ரமம் திருக்கோயில். ஸ்ரீமத் சாந்தானந்த சரஸ்வதி சுவாமிகள் நெஞ்சத்தில் கனவு போல தோன்றிய, மலைகளும், அருவிகளும் நிறைந்த சிறிய குன்றே இன்று சேலம் அருகில் கந்தாஸ்ரமமாக மாறியுள்ளது.
முருகனும், தாயும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. முருகன் சந்நிதியை சுற்றி மனைவியுடன் கூடிய நவகிரகங்களின் விக்கிரகங்கள் உள்ளன. 16 அடி உயர தத்ராத்ரேய பகவான் (குருவருள்) உள்ளார். சொர்ண ஆகர்ஷண பைரவர் இத்தலத்தில் உள்ளார். இத்தலத்தில் உள்ள சங்கடஹர பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.
4 வேதங்களுக்குரிய உருவங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகனை சுற்றிவந்தால் நவகிரக தோஷம் விலகும் என்று, ஜோதிட சாஸ்திரப்படி, முருகனைச் சுற்றி மனைவியுடன் சேர்ந்த நவகிரகங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளார். பிரதோஷத்தன்று பூஜை செய்வதற்காக நர்மதா நதியிலிருந்து கொண்டு வந்துள்ள பாணலிங்கமான புவனேஸ்வரர், புவனேஸ்வரி, முருகன் சன்னிதானத்தில் உள்ளது. வேத விநாயகர், ஆதி சங்கரர் உட்பட பல விக்கிரகங்கள் அழகுற மொத்தமாக ஒரே இடத்தில் அமைந்துள்ளது இங்கு மட்டுமே.
கார்த்திகை தீபம், வைகாசி, ஆடி 18 நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. இத்தலத்தில் வழிபட்டால் கல்யாணபாக்கியம், குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. மேலும் குருவருள் கிடைக்கும். நோயற்ற வாழ்வு(தன்வந்திரி பகவான்), குறைவற்ற செல்வம்(ஸ்வர்ணாகர்ஷன பைரவர்), சங்கடங்கள் தீர (சங்கட ஹர கணபதி) பக்தர்கள் வழிபடலாம். இவை தவிர பஞ்சமுக அனுமானை வணங்கி பக்தி, பலம், தைரியம், பூமி செழிப்பு, கல்வி செல்வம் ஆகியவற்றை பெறலாம். வேண்டுதல்; நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இந்தாண்டும் கொரோனா பரவலைத் தடுக்கும் அரசு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், இந்த ஆண்டு ஆடி 18ம் பெருக்கு விழா கொண்டாட காவிரி ஆற்றுப் படித்துறைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்விஎழுந்துள்ளது.
இந்து மதத்தைச் சார்ந்தவர்களின் ஆன்மீக வழிபாடு மற்றும் பண்டிகைகளுக்கு உரிய தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பிடம் பெற்றது. வருகிற 17-ந்தேதி சனிக்கிழமையன்று ஆடி மாதம் தொடங்குகிறது.
இந்த ஆடி மாதத்தில் தான் காவிரி அன்னையை அகத்தியரின் கமண்டலத்திலிருந்து விடுவித்து தமிழகமெங்கும் பாய்ந்தோடி விவசாயத்தை வளம் கொழிக்கச் செய்து மக்களை மகிழ்வுடன் வாழச் செய்த வினாயகப் பெருமானுக்கு தமிழக மக்கள் காவிரிக் கரைதோறும் கோவில் கட்டி ஆடிப் 18 தோறும் காவிரியில் புனித நீராடி, எள், வெல்லம் கலந்த பச்சரிசி, பழங்கள் முதலிய விளைபொருட்களை படையலிட்டு வழிபட்டு வருவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.
ஆடிப்பெருக்கு அன்று புதுமணத் தம்பதிகளும், கன்னிப் பெண்களும், குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு கோடி கொடுத்தாலும் கிடைக்காத மங்கள விழாவாகவேக் கருதி மகிழ்ந்து இன்புறுவர். இந்த ஆடி மாதத்தில் தான் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோருக்கு நன்றிக் கடனாம் பித்ருக் கடன் செலுத்தும் ஆடி அமாவாசையும், திருவையாறில் அப்பர் பெருமானுக்கு சிவபெருமான் கயிலாயக் காட்சி தந்தப் பெருவிழாவும் (ஆக.8-ந்தேதி) நடக்கிறது.
காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் சுற்று வட்டார கிராம மக்களால் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்பட்டு வரும் ஆடி மாத விழாக்கள் கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அரசால் தடை செய்யப்பட்டு காவிரி ஆற்றில் புனித நீராட முடியாமலும், விழாக் கொண்டாட முடியாமலும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தாண்டும் கொரோனா பரவலைத் தடுக்கும் அரசு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், இந்த ஆண்டு ஆடி 18ம் பெருக்கு விழா கொண்டாட காவிரி ஆற்றுப் படித்துறைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்விஎழுந்துள்ளது. மேலும், இந்த ஆண்டு ஆடி மாதத்தில் காவிரி கரைபுரண்டு ஓடி விவசாயப் பெருங்குடி மக்களை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திக் கொண்டிருப்பதால் இந்த ஆண்டு ஆடி 18 விழா நடத்த காவிரி ஆற்றின் கரைகளுக்கு மக்கள் செல்வதற்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டாம் என்றும், விழா நடத்த வசதி செய்து தருமாறும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைபெற்று வரும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவின் 3-ம் நாளான நேற்று காமதேனு வாகனத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாவாகும்.
இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழாவின் முதல் நாளில் உற்சவர் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினார். அங்கு திருவிழாவுக்கு காப்பு கட்டிய ரவி பட்டரால் விநாயகர் பூஜை, கும்ப பூஜையுடன் யாகம் வளர்க்கப்பட்டது.
விழா நாட்களில் மீனாட்சி அம்மன் காலை, இரவு நேரங்களில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
2-ம் நாளான 13-ம் தேதி அன்ன வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
3-ம் நாளான நேற்று காமதேனு வாகனத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும். சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
4-ம் நாளான இன்று யானை வாகனத்தில் அருள்பாலிக்க உள்ளார்.
மேலும் 5-ம் நாள் ரிஷபம், 6-வது நாள் கிளி, 7-வது நாள் மாலை மாற்றுதல், 8-ம் நாள் குதிரை, 9-ம் நாள் இந்திர விமானம், 10-ம் நாள் கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.