என் மலர்
ஆன்மிகம்

நடராஜ பெருமானுக்கு பூஜை
சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை காயாரோகணசாமி, நீலாயதாட்சியம்மன் கோவில் சப்த விடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த கோவிலில் உள்ள நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக நடராஜர், சிவகாம சுந்தரிக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி, இளநீர், பால், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பக்கர்கள் முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் நாகை அமரநந்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கட்டியப்பர் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், அழகிய நாதர் கோவில், வீரபத்திர சுவாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்,, நாகநாதர் கோவில், சட்டையப்பர்கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமானுக்கு ஆனி உத்தரம் திருமஞ்சனத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் மிக எளிமையாக திருமஞ்சன விழாவை நடத்தியது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தன

Next Story