என் மலர்
ஆன்மிகம்

மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஆடி முளைக்கொட்டு திருவிழா: அன்ன வாகனத்தில் மீனாட்சியம்மன்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் 2-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாவாகும்.
இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழாவின் முதல் நாளில் உற்சவர் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினார். அங்கு திருவிழாவுக்கு காப்பு கட்டிய ரவி பட்டரால் விநாயகர் பூஜை, கும்ப பூஜையுடன் யாகம் வளர்க்கப்பட்டது.
விழா நாட்களில் மீனாட்சி அம்மன் காலை, இரவு நேரங்களில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 2-ம் நாளான நேற்று அன்னம், 3-ம் நாளில் (இன்று) காமதேனு, 4-ம் நாள் யானை, 5-ம் நாள் ரிஷபம், 6-வது நாள் கிளி, 7-வது நாள் மாலை மாற்றுதல், 8-ம் நாள் குதிரை, 9-ம் நாள் இந்திர விமானம், 10-ம் நாள் கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.

Next Story