என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள்தரும்.
ஓம் திருவே போற்றி
ஓம் திருவளர் தாயே போற்றி
ஓம் திருமாலின் தேவி போற்றி
ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி
ஓம் திருப்புக ழுடையாய் போற்றி
ஓம் திருஞான வல்லி போற்றி
ஓம் திருவருட் செல்வி போற்றி
ஓம் திருமால் மகிழ்வாய் போற்றி
ஓம் திருமார்பி லமர்ந்தாய் போற்றி
ஓம் தினமெமைக் காப்பாய் போற்றி
ஓம் தீபசோதியே போற்றி
ஓம் தீதெலாம் தீர்ப்பாய் போற்றி
ஓம் தூப ஜோதியே போற்றி
ஓம் தூயரந்தீர்த் தருள்வாய் போற்றி
ஓம் திருப்பாற் கடலாய் போற்றி
ஓம் திருவமு தருள்வாய் போற்றி
ஓம் அன்னையே அருளே போற்றி
ஓம் அழகெலாம் உடையாய் போற்றி
ஓம் அயன்பெறு தாயே போற்றி
ஓம் ஆறுமுகன் மாமி போற்றி
ஓம் அமரர் குல விளக்கே போற்றி
ஓம் அமரேசன் தொழுவாய் போற்றி
ஓம் அன்பருக் கினியாய் போற்றி
ஓம் அண்டங்கள் காப்பாய் போற்றி
ஓம் ஆனந்த் வல்லியே போற்றி
ஓம் ஆருயிர்க் குயிரே போற்றி
ஓம் ஆவிநல் வடிவே போற்றி
ஓம் ஆக்கம தருள்வாய் போற்றி
ஓம் இச்சை கிரியை போற்றி
ஓம் இருள்தனைக் கடிவாய் போற்றி
ஓம் இன்பப் பெருக்கே போற்றி
ஓம் இகபர சுகமே போற்றி
ஓம் ஈகையின் பொலிவே போற்றி
ஓம் ஈறிலா அன்னை போற்றி
ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
ஓம் எண்குண வல்லி போற்றி
ஓம் ஓங்கார சத்தி போற்றி
ஓம் ஒளிமிகு தேவி போற்றி
ஓம் கற்பக வல்லி போற்றி
ஓம் காமரு தேவி போற்றி
ஓம் கனக வல்லியே போற்றி
ஓம் கருணாம் பிகையே போற்றி
ஓம் குத்து விளக்கே போற்றி
ஓம் குலமகள் தொழுவாய் போற்றி
ஓம் மங்கல விளக்கே போற்றி
ஓம் மங்கையர் தொழுவாய் போற்றி
ஓம் தூங்காத விளக்கே போற்றி
ஓம் தூயவர் தொழுவாய் போற்றி
ஓம் பங்கச வல்லி போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் பொன்னி அம்மையே போற்றி
ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
ஓம் நாரணன் நங்கையே போற்றி
ஓம் நாவலர் துதிப்பாய் போற்றி
ஓம் நவரத்தின மணியே போற்றி
ஓம் நவநிதி நீயே போற்றி
ஓம் அஷ்ட லக்குமியே போற்றி
ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி
ஓம் ஆதிலட்சுமியே போற்றி
ஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கள்ளமும் கரைப்பாய் போற்றி
ஓம் தைரியலட்சுமியே போற்றி
ஓம் தயக்கமும் தவிர்ப்பாய் போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தனதானியம் தருவாய் போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் வெற்றியைத் தருவாய் போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஓம் வரமெலாம் தருவாய் போற்றி
ஓம் முத்துலட்சுமியே போற்றி
ஓம் முத்தியை அருள்வாய் போற்றி
ஓம் பூவேந்தர் தொழுவாய் போற்றி
ஓம் முத்தமிழ் தருவாய் போற்றி
ஓம் கண்ணே எம் கருத்தே போற்றி
ஓம் கவலையை ஒழிப்பாய் போற்றி
ஓம் விண்ணே எம் விதியே போற்றி
ஓம் விவேகம தருள்வாய் போற்றி
ஓம் பொன்னேநன் மணியே போற்றி
ஓம் போகம தருள்வாய் போற்றி
ஓம் பூதேவி தாயே போற்றி
ஓம் புகழெலாம் தருவாய் போற்றி
ஓம் சீதேவி தாயே போற்றி
ஓம் சிறப்பெலாம் அருள்வாய் போற்றி
ஓம் மதிவதன வல்லி போற்றி
ஓம் மாண்பெலாம் தருவாய் போற்றி
ஓம் நித்திய கல்யாணி போற்றி
ஓம் நீதிநெறி அருள்வாய் போற்றி
ஓம் கமலக்கன்னி போற்றி
ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி
ஓம் தாமரைத் தாளாய் போற்றி
ஓம் தவநிலை அருள்வாய் போற்றி
ஓம் கலைஞானச் செல்வி போற்றி
ஓம் கலைஞருக் கருள்வாய் போற்றி
ஓம் அருள்ஞானச் செல்வி போற்றி
ஓம் அறிஞருக் கருள்வாய் போற்றி
ஓம் எளியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் ஏழ்மையைப் போக்குவாய் போற்றி
ஓம் வறியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி
ஓம் வேத வல்லியே போற்றி
ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
ஓம் பிறர்பொருள் கவர எண்ணாப்
பெரியர்க் கருள்வாய் போற்றி
ஓம் நடுநிலை நீங்கிடாத நல்லவர்க்
கருள்வாய் போற்றி
ஓம் அறநெறி வழுவிலாத அடியவர்க்
கருள்வாய் போற்றி
ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
ஓம் அருள்மிகு இலக்குமிதாயே
போற்றி போற்றி போற்றி
ஓம் திருவளர் தாயே போற்றி
ஓம் திருமாலின் தேவி போற்றி
ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி
ஓம் திருப்புக ழுடையாய் போற்றி
ஓம் திருஞான வல்லி போற்றி
ஓம் திருவருட் செல்வி போற்றி
ஓம் திருமால் மகிழ்வாய் போற்றி
ஓம் திருமார்பி லமர்ந்தாய் போற்றி
ஓம் தினமெமைக் காப்பாய் போற்றி
ஓம் தீபசோதியே போற்றி
ஓம் தீதெலாம் தீர்ப்பாய் போற்றி
ஓம் தூப ஜோதியே போற்றி
ஓம் தூயரந்தீர்த் தருள்வாய் போற்றி
ஓம் திருப்பாற் கடலாய் போற்றி
ஓம் திருவமு தருள்வாய் போற்றி
ஓம் அன்னையே அருளே போற்றி
ஓம் அழகெலாம் உடையாய் போற்றி
ஓம் அயன்பெறு தாயே போற்றி
ஓம் ஆறுமுகன் மாமி போற்றி
ஓம் அமரர் குல விளக்கே போற்றி
ஓம் அமரேசன் தொழுவாய் போற்றி
ஓம் அன்பருக் கினியாய் போற்றி
ஓம் அண்டங்கள் காப்பாய் போற்றி
ஓம் ஆனந்த் வல்லியே போற்றி
ஓம் ஆருயிர்க் குயிரே போற்றி
ஓம் ஆவிநல் வடிவே போற்றி
ஓம் ஆக்கம தருள்வாய் போற்றி
ஓம் இச்சை கிரியை போற்றி
ஓம் இருள்தனைக் கடிவாய் போற்றி
ஓம் இன்பப் பெருக்கே போற்றி
ஓம் இகபர சுகமே போற்றி
ஓம் ஈகையின் பொலிவே போற்றி
ஓம் ஈறிலா அன்னை போற்றி
ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
ஓம் எண்குண வல்லி போற்றி
ஓம் ஓங்கார சத்தி போற்றி
ஓம் ஒளிமிகு தேவி போற்றி
ஓம் கற்பக வல்லி போற்றி
ஓம் காமரு தேவி போற்றி
ஓம் கனக வல்லியே போற்றி
ஓம் கருணாம் பிகையே போற்றி
ஓம் குத்து விளக்கே போற்றி
ஓம் குலமகள் தொழுவாய் போற்றி
ஓம் மங்கல விளக்கே போற்றி
ஓம் மங்கையர் தொழுவாய் போற்றி
ஓம் தூங்காத விளக்கே போற்றி
ஓம் தூயவர் தொழுவாய் போற்றி
ஓம் பங்கச வல்லி போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் பொன்னி அம்மையே போற்றி
ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
ஓம் நாரணன் நங்கையே போற்றி
ஓம் நாவலர் துதிப்பாய் போற்றி
ஓம் நவரத்தின மணியே போற்றி
ஓம் நவநிதி நீயே போற்றி
ஓம் அஷ்ட லக்குமியே போற்றி
ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி
ஓம் ஆதிலட்சுமியே போற்றி
ஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கள்ளமும் கரைப்பாய் போற்றி
ஓம் தைரியலட்சுமியே போற்றி
ஓம் தயக்கமும் தவிர்ப்பாய் போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தனதானியம் தருவாய் போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் வெற்றியைத் தருவாய் போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஓம் வரமெலாம் தருவாய் போற்றி
ஓம் முத்துலட்சுமியே போற்றி
ஓம் முத்தியை அருள்வாய் போற்றி
ஓம் பூவேந்தர் தொழுவாய் போற்றி
ஓம் முத்தமிழ் தருவாய் போற்றி
ஓம் கண்ணே எம் கருத்தே போற்றி
ஓம் கவலையை ஒழிப்பாய் போற்றி
ஓம் விண்ணே எம் விதியே போற்றி
ஓம் விவேகம தருள்வாய் போற்றி
ஓம் பொன்னேநன் மணியே போற்றி
ஓம் போகம தருள்வாய் போற்றி
ஓம் பூதேவி தாயே போற்றி
ஓம் புகழெலாம் தருவாய் போற்றி
ஓம் சீதேவி தாயே போற்றி
ஓம் சிறப்பெலாம் அருள்வாய் போற்றி
ஓம் மதிவதன வல்லி போற்றி
ஓம் மாண்பெலாம் தருவாய் போற்றி
ஓம் நித்திய கல்யாணி போற்றி
ஓம் நீதிநெறி அருள்வாய் போற்றி
ஓம் கமலக்கன்னி போற்றி
ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி
ஓம் தாமரைத் தாளாய் போற்றி
ஓம் தவநிலை அருள்வாய் போற்றி
ஓம் கலைஞானச் செல்வி போற்றி
ஓம் கலைஞருக் கருள்வாய் போற்றி
ஓம் அருள்ஞானச் செல்வி போற்றி
ஓம் அறிஞருக் கருள்வாய் போற்றி
ஓம் எளியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் ஏழ்மையைப் போக்குவாய் போற்றி
ஓம் வறியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி
ஓம் வேத வல்லியே போற்றி
ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
ஓம் பிறர்பொருள் கவர எண்ணாப்
பெரியர்க் கருள்வாய் போற்றி
ஓம் நடுநிலை நீங்கிடாத நல்லவர்க்
கருள்வாய் போற்றி
ஓம் அறநெறி வழுவிலாத அடியவர்க்
கருள்வாய் போற்றி
ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
ஓம் அருள்மிகு இலக்குமிதாயே
போற்றி போற்றி போற்றி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூச்சாண்டி ேசவை நேற்று நடைபெற்றது. இதனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ரோத்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விழா வருகிற 26-ந் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவின் இரண்டாம் நாளான நேற்று கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர் உற்சவர் உள்பட சிறிய பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூழிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதற்கு நூழிலைத் திருவிழா என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்த விழாவே ஸ்ரீரங்கத்தில் திருப்பவித்ரோத்சவம் என்ற பெயரில் நடைபெறுகிறது.
இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்த பவித்ரோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டிசேவை எனப்படும் அங்க, உபாங்க சேவை நேற்று மதியம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பவித்ரோத்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 24-ந் தேதி மாலை உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் கோவில் கொட்டாரத்தில் நெல் அளவு கண்டருளுகிறார். 26-ந் தேதி காலை சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பிடப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
பிரியமானவர்களே! சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.
இன்றைய சூழ்நிலையிலே அநேக சமயங்களிலே மனிதர்கள், ‘என்னை யாருமே நினைப்பதேயில்லை, எனக்கென்று இந்த உலகிலே யார் இருக்கிறார்கள்?’ என்று கூறுவதுண்டு.
இப்படி பலவிதமான சோர்வோடு காணப்படுகிற அன்பான சகோதர, சகோதரியே! உங்களுக்கு ஓர் நற்செய்தி, ‘ஆண்டவர் நம்மை மறப்பதேயில்லை. நாம் ஒரு நாளும் அவரால் மறக்கப்படுவதில்லை’.
ஏன் தெரியுமா? ‘அவர் நம்மை நினைத்திருக்கிறார்’.
‘நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன். நீ என் தாசன், இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை’. (ஏசா.44:21)
தாய் மறந்தாலும் நான் மறப்பதில்லை
‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை’. (ஏசா.49:15)
ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். எத்தனை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். அந்தந்த நேரத்தில் அதற்கு என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலே தந்து அதை அன்போடு வளர்ப்பவள்தான் தாய். அவள் எப்போதும் தன் குழந்தையை நினைத்துக் கொண்டிருப்பாள்.
ஆனால் இன்றைய சமுதாயத்தில் அப்படிப்பட்ட தாய் கூட தன் பிள்ளைகளை மறந்துவிடுகிறாள். தன் சொந்த இச்சைகளை நிறைவேற்றுவதற்காக குழந்தைகளை அநாதையாய் விட்டுவிட்டு ஓடு கிறாள். அல்லது தன் சொந்த குழந்தைகளையே கொலை செய்து விடுகிறாள். அப்படிப்பட்ட கொடிய, அன்பில்லாத காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் நம் அருமை ஆண்டவரோ, ஒருநாளும் நம்மை மறப்பதேயில்லை. நமக்கு இன்னது தேவை என்பதை அறிந்து பரம தகப்பன் நம்மை ஒருநாளும் கைவிடுவதேயில்லை.
ஒருநாளும் மனிதனைத் தேடிப்போகாதீர்கள். ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். ஆண்டவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் அவர் உங்களை நினைத்து, ஆசீர்வதித்து உயர்த்துவார்.
உங்கள் பிரயாசங்களை மறப்பதில்லை
‘உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான் களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடு கிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே’. (எபி. 6:10)
ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்: ‘எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பிரயாசத்தின் பலன் எனக்குக் கிடைக்கவில்லையே. என் குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய்ப் பார்க்கிறார்களே, என்னை தரக்குறைவாய்ப் பேசுகிறார் களே’.
பிரியமானவர்களே! நீங்கள் படுகிற பாடுகளை நம் தேவன் அறிந் திருக்கிறார். நீங்கள் ஆண்டவருக்காக செய்கிற ஒவ்வொரு பிரயாசங்களையும், கிரியைகளையும் தேவன் மறக்கவே மாட்டார்.
மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு பிள்ளைகள் பிறக்கும் போது, அவர்களை உயிரோடே விட்டு விட்டார்கள். அவர்கள் செய்த இந்த பிரயாசங்களை தேவன் மறக்கவில்லை. அவர்களுக்கு தேவன் நன்மை செய்தார்.
‘மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்’. (யாத்.1:21)
பிரியமானவர்களே! சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.
‘கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்’. (சங்.115:12)
சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இன்று இரவு ஏழு மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடைபெற்றது.
முதல் நாள் விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதலும், காலை 5 மணிக்கு நடைதிறப்பும், 6 மணிக்கு கொடி பட்டம் தயாரித்தலும், பின்னர் கொடிப் பட்டம் தலைமைப் பதியை சுற்றி வரும் நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து காவி உடை தரித்த அய்யா வழி பக்தர்களின் அய்யா சிவ சிவா, அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்திற்கிடையே கொடியேற்றம் நடைபெற்றது. குரு.பால. ஜனாதிபதி தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார்.
குரு. ராஜவேல், குரு. பால.லோகாதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறைவான பக்தர்களுடன் எளிய முறையில் திருகொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து வாகன பவனியும், வடக்கு வாசலில் அன்னதானமும் நடைபெற்றது.
பள்ளியறை பணி விடைகளை ஜனா.யுகேந்த், ஜனா. வைகுந்த் ஆகியோர் செய்து இருந்தனர். இரவு ஏழு மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.
விழாவின் இரண்டாம் நாளான நாளை இரவு வைகுண்ட சாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், மூன்றாம் திருவிழாவில் அன்ன வாகன பவனியும், நான்காம் திருவிழாவில் பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதலும், ஐந்தாம் நாள் பச்சை சாற்றி சப்பர வாகனத்தில் பவனி வருவதாலும், ஆறாம் நாள் கற்பக வாகனத்தில் பவனியும், ஏழாம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
வருகின்ற 27-ம் தேதி வெள்ளிக்கிழமை எட்டாம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒன்பதாம் திருவிழாவில் இரவு அனுமன் வாகன பவனியும், பத்தாம் திருவிழாவில் இரவு இந்திர வாகன பவனியும் நடைபெறுகிறது. வருகிற 30-ஆம் தேதி திங்கள் கிழமை 11-ம் நாள் திருவிழா நடைபெறுகிறது.
திருவிழா நாட்களில் காலை மாலை பணிவிடையும் இரவு வாகன பவனியும் நடைபெறுகிறது. திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு எளிய முறையில் நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொரோனா பரவல் தடுப்புக்காக பிட்டுக்கு மண் சுமந்த லீலையும் கோவிலுக்கு உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில் சிவபெருமான் நிகழ்த்திய லீலைகள் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரமாக நடந்து வருகின்றன.
நேற்று மதியம் முத்தாய்ப்பாக “இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த லீலை” நடந்தது. இதையொட்டி கோவிலின் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரேசுவரர் தங்க மண்வெட்டி, தங்க மண் கூடை சுமந்த திருக்கோலத்தில், மீனாட்சியுடன் காட்சி தந்தார்.
அப்போது சுந்தரேசுவரராக ஹலாஸ் பட்டரும், பாண்டிய மன்னராக அசோக் பட்டரும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலையை நடித்து காண்பித்தனர். பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்மன் ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.
வழக்கமாக இந்த திருவிழா பொன்னகரம் வைகை ஆற்றின் தென்கரையில் புட்டுத்தோப்பில் உள்ள கோவிலில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளி நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா பரவல் தடுப்புக்காக பிட்டுக்கு மண் சுமந்த லீலையும் கோவிலுக்கு உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடைபெற்றது.
“பிட்டுக்கு மண் சுமந்த லீலை” குறித்த புராண வரலாறு வருமாறு:-

முன்பொரு முறை வைகை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை அடைக்க வீட்டுக்கு ஒருவர் பணிக்கு வர வேண்டும் என்று பாண்டிய மன்னன் ஆணையிட்டார். அப்போது வந்தி என்ற பிட்டு விற்கும் மூதாட்டியின் வீட்டில் இருந்து செல்ல வேறு யாரும் இல்லாததால் தவித்தார். அப்போது இறைவனே கூலி ஆளாக வந்து, வந்தி தந்த பிட்டுக்காக மண் சுமக்கிறேன் என்று கூறியுள்ளார். இறைவனோ, அவரது பங்கிற்கு ஒதுக்கிய கரையை அடைக்காமல் பிட்டு சாப்பிட்டு, ஆடிப்பாடி, ஆழ்ந்த துயில் கொண்டார். அப்போது அந்த பணியை பார்வையிட வந்த பாண்டிய மன்னன், தன் கையில் இருந்த பிரம்பால் படுத்திருந்த இறைவன் முதுகில் அடித்துள்ளார். அந்த அடி அனைத்து உலக உயிர்கள் முதுகிலும் பட்டது. அரசன் உண்மை உணர்ந்தார். அப்போது இறைவன் அசரீரியாக மாணிக்கவாசகர் பெருமையையும், வந்திக்கு சிவலோக பதவி தருவதற்காக தாம் இவ்வாறு செய்ததாகவும் மன்னருக்கு உரைத்தார். மன்னரும் மாணிக்கவாசகரை இறை பணிக்கு விடுவித்து, தானும் சிவலோக பதவியை தக்க காலத்தில் அடைந்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.
அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்ள தேவர்களும் அசுரர்களும் சண்டையிட்ட போது அந்த அமிர்த கலசத்திலிருந்து சில துளிகள் பூமியில் விழ அவையே பூமியெங்கும் துளசிச் செடிகளாக உற்பத்தியாயின என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
துளசி தெய்வ அம்சம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும். துளசியை துளசி, திருத்துழாய் என்றும் சொல்வார்கள். இந்த சொற்களுக்கு தெய்வீக சக்தி என்பதே பொருளாகும். துளசியில் கருந்துளசி எனும் கிருஷ்ண துளசி, வெள்ளை துளசி, காட்டுத் துளசி எனப் பல ரகங்கள் உள்ளன.
பாற்கடலில் அமிர்தம் கடைந்த காலத்தில் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமான ஸ்ரீதன்வந்திரி பகவான் அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார். அப்போது ஏற்பட்ட ஆனந்த மிகுதியால் விஷ்ணுவுக்கு ஆனந்தக் கண்ணீர் வெளிப்பட்டு அதில் சில துளிகள் அமிர்த கலசத்தினுள் விழுந்தது.
அதுவே மரகதப் பச்சை நிறத்தில் ஸ்ரீதுளசி தேவியாக உருவெடுத்தது என்று சொல்வார்கள். அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்ள தேவர்களும் அசுரர்களும் சண்டையிட்ட போது அந்த அமிர்த கலசத்திலிருந்து மேலும் சில துளிகள் பூமியில் விழ அவையே பூமியெங்கும் துளசிச் செடிகளாக உற்பத்தியாயின என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
துளசிதேவி பகவானிடம் பெற்ற வரத்தின்படியே வீட்டில் துளசி மாடம் வைத்து அதற்கு பூஜை செய்பவர்களுக்கும், துளசி பறித்து அதன் திவ்யதளங்களால் ஸ்ரீமகாவிஷ்ணுவை ஸ்ரீமகாலட்சுமியை அர்ச்சிப்பவர்களுக்கும், இருவரும் சகல சவுபாக்கியங்களையும் தந்து நிறைவில் விஷ்ணு லோகத்திலும் இடம் தந்து அருளுகின்றார்கள்.

நம்மைப் பெற்றெடுத்து வளர்த்து பேணிக்காத்த நம் தாயாரை மதித்துக் காப்பாற்றி அவள் அருளாசிகளைப் பெறுவதும், தந்தையை பக்தி சிரத்தையுடன் உபசரித்து ஆசி பெறுவதும், துளசிச்செடி வைத்து அதற்கு பூஜித்து சேவைகள் புரிவதும் இம்மூன்றும் மனிதருக்கு உத்தம கதியை தரவல்ல சேவைகள் என மகான்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க..வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பவர்கள் மறக்கக்கூடாதவை
முகரம் பண்டிகையையொட்டி, திருச்செங்கோடு பெரிய பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி சந்தனக்கூடு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
முகரம் பண்டிகையையொட்டி, திருச்செங்கோடு பெரிய பள்ளிவாசலில் உள்ள காஜா அகமது ஷா வலியுல்லா தர்கா ஷெரிப் 420-வது ஆண்டு சந்தனக்கூடு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருச்செங்கோடு பெரிய பள்ளிவாசல் முத்தவல்லி முபாரக் அலி தலைமை தாங்கினார்.
பொருளாளர் ஷாஜகான் முன்னிலை வகித்தார். பள்ளி வாசலின் இமாம் ஜலாலுத்தீன் துவா செய்தார். தொடர்ந்து சந்தனக்கூடு விழா நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் கனிபாய், நவாப் ஜான், கமால் மற்றும் ஜமாத்தார்கள்,
இதயத்துல்லா, காஜா நசீமுதீன், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி சந்தனக்கூடு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான நேருவீதியில் உள்ள பட்டாபிராம மந்திரத்துக்கு பஞ்சலோகத்தாலான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சிலைகளை காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான நேருவீதியில் உள்ள பட்டாபிராம மந்திரத்துக்கு திருப்பதியைச் சேர்ந்த பக்தர்களான மோகன்ரெட்டி-பாக்கியலட்சுமி தம்பதியினர் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பஞ்சலோகத்தாலான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சிலைகளை காணிக்கையாக வழங்கினர்.
அந்தப் பஞ்சலோக சிலைகளை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு பெற்றுக் கொண்டார். அந்தப் பக்தர்களுக்கு கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.

சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.
பிரதோஷ தினத்தில் சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் வணங்கி ஆசி பெறும் இத்தருணத்தில் நாமும் வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக் கொள்ள பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.
உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக்கொண்டார் ஈசன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்.
11-ம் திதியாகிய ஏகாதசியில் சிவன் விஷம் உண்டார். 12-ம் திதியாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13-ம் திதியான திரயோதசி அன்று மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.
பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திரு முறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண் டும்.
நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டகச்சனி, அஷ்டமச்சனி காலகட்டத்தில் பலன் கொடுத்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பகவானின் கோபம் தணிந்து துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷ வழிபாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறணிந்து சிவ நாமம் ஆன ‘நமசிவாய’ ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.
ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.

சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.
ஆவணி மாதத்தில் வரக்கூடிய முதல் வெள்ளிக்கிழமையன்று இன்று வரலட்சுமி விரத நோன்பு அனுஷ்டிக்கபடுகிறது. இந்நாளில் வரலட்சுமி அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானித்து, அவளைச் சரணடைய வேண்டிய நாள்.
மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், 'வரலக்ஷ்மி நமஸ்துப்யம்' க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றி முழுமையாக பாடியிருக்கிறார். வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, மற்றும் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.
பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள் அதனால் மகிழ்ந்த மகாலட்சுமி அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.
இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம், தனம், போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு. திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். பூஜை முடிந்த மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.
எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி பிரசாதத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.
பூஜைக்குத் தேவையானவை:
மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.
சாமிக்கு நிவேதனப் பொருள்கள்:
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.
பழ வகைகள்:
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை...
பூஜைக்கான முன்னேற்பாடுகள்:
வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், வெள்ளி,ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.
பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்ளவேண்டும். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.
விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் ராகு காலத்துக்கு முன் (மாலை வேளையிலும் செய்யலாம்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும்.
மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.
எங்கள் வீட்டில் எழுந்தருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டினால் வரலட்சுமியின் அருள் நமது இல்லங்களில் நீடித்திருக்கும் ஓம் வரலட்சுமி அன்னையே போற்றி. போற்றி.. போற்றி...
கே.ரங்கராஜன் ஐய்யங்கார்,

வில்லிவாக்கம்
இதையும் படிங்க... மகிழ்ச்சியோடு அழைத்தால் லட்சுமி வருவாள்
வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் நாள் முழுவதும் அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம், போன்றவற்றை கூறிக் கொண்டிருக்க வேண்டும்.
பெண்கள் கொண்டாடும் முக்கியமான விரதங்களில் வரலட்சுமி விரத பூஜை குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமி வரங்களை அள்ளிக்கொடுப்பதற்கு பிரசித்தி பெற்ற தெய்வம் என்பதால் லட்சுமியை நினைத்து மேற்கொள்ளும் இந்த விரதம் வரலட்சுமி விரதம் என்று அழைக்கப்படுகிறது.
எல்லா பெண்களும் இந்த விரதத்தில் பங்குகொள்வர் என்றாலும் திருமணமான பெண்கள் இந்த விரதத்தை தங்கள் மாங்கல்யம் பலம் நிலைக்கவும், வீட்டில் சுபீட்சம் நிலைத்திருக்கவும் இந்த விரதத்தை அதிகம் மேற்கொள்வர்.
அன்பு, அமைதி, புகழ், இன்பம், வலிமை ஆகிய இந்த சக்திகள் வரலட்சுமியின் அம்சங்கள் எனவே வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும்போது நம் வாழ்வில் இந்த அம்சங்கள் எல்லாம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். சிவனுக்கு வில்வம், விஷ்ணுவுக்கு துளசி, என்பதை போல மகாலட்சுமிக்கு அருகம்புல்.
அதன் மீது மகாலட்சுமிக்கு அதிக பிரியம் உண்டு. ஆவணி மாத சுக்கிலபட்ச வெள்ளிக்கிழமையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று சந்தியாகால வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. முதலில் வீட்டை நன்கு சுத்தமாகக் கழுவி மாக்கோலமிட்டு விளக்கேற்றி வீடெல்லாம் வாசனை புகை நிரம்பியிருக்க செய்ய வேண்டும்.
பின்னர் அழகான மண்டபம் அமைத்து அதில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி சுவற்றில் சித்திரமாகவோ அல்லது வெள்ளியிலான வரலட்சுமி முகத்தை அமைத்து பின்னர் அம்மனுக்கு தோடு, மூக்குத்தி, சங்கிலி, வளையல் போன்றவற்றை பூட்டி அலங்காரம் செய்ய வேண்டும்.. பின்னர் தாழம்பூ பின்னலிட்டு பூச்சூட்டி கலசம் வைத்துப் பூஜிக்க வேண்டும்.
கலசத்தில் வரலட்சுமியை ஆவாஹணம் செய்து பூஜையை பயபக்தியுடன் தொடங்க வேண்டும். அழகிய மேடை மீது கும்ப கலசத்தை வைத்து கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், சிறிய தங்க டாலர் ஆகியவற்றை வைக்க வேண்டும். பின்னர் வெண்மையான பட்டு ஆடை கொண்டு கும்பத்தை அலங்கரித்து அம்பாளின் திருமுகத்தை அதில் அமைக்க வேண்டும்.
மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாற்றி அம்பாளை கிழக்குமுகமாக எழுந்தருளச் செய்து வலது பக்கத்தில் அமர்ந்து மஞ்சள் சரடை கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும். பின்னர் பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்பாளை ஆராதித்து மஞ்சள் சரடை வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் நிவேதனம் படைக்க வேண்டும்.
இனிப்பு, கொலுக்கட்டைகளை படைத்து, பதினாறு வகை உபசரணங்களை செய்து பூஜையில் கலந்துகொள்ள வந்திருப்பவர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் கொடுக்க வேண்டும். பிறகு விரதம் மேற்கொள்ளுபவர்கள் உண்ண வேண்டும்.
வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் நாள் முழுவதும் அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம், போன்றவற்றை கூறிக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு பக்தி சிரத்தையுடன் வரலட்சுமி விரதம் மேற்கொள்வதனால் மாங்கல்ய பலம், செல்வச்செழிப்பு, ஐஸ்வர்யங்கள் கிடைத்து வாழ்வு மேலோங்கும் என்பது ஐதீகம்.

வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒருசமயம் லட்சுமிதேவி எந்த வீட்டில் வாசம் செய்யலாம் என்று பார்க்க வந்தாள். ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு வீட்டில் மாடும், கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும், குப்பையுமாக இருந்தது. மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை. மனைவி தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து அந்த இல்லத்தரசி ஸ்லோகங்களாக சொல்லிக் கொண்டு இருந்தாள். வாசலில் நின்ற வரலட்சுமியை பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள். மனையை போட்டு அமர வைத்து விட்டு உள்ளே போய் பால் எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் அந்த சுமங்கலி இல்லை.
பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடந்தது. அதாவது லட்சுமிதேவி எங்கும், எப்பொழுது வேண்டுமானாலும் வருவாள்.'