என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மகாலட்சுமியின் எட்டு விதமான தோற்றத் உருவங்களை, முழுமையான பக்தியோடு வழிபடும் எவரும் மகாலட்சுமியின் அருளால் இன்பமும் மகிழ்ச்சியும் இழையோடும் எட்டு விதமான அஷ்ட போக வாழ்க்கையைப் பெறுவார்கள்.
மனித வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் எட்டு வித செல்வங்களுக்கு மகாலட்சுமி அதி தேவதையாகும். மகாலட்சுமியின் எட்டு விதமான தோற்றத் உருவங்களை, முழுமையான பக்தியோடு வழிபடும் எவரும் மகாலட்சுமியின் அருளால் இன்பமும் மகிழ்ச்சியும் இழையோடும் எட்டு விதமான அஷ்ட போக வாழ்க்கையைப் பெறுவார்கள். அவை வருமாறு:-
1. குடும்பத்தில் அன்பும், பண்பும், அழகும் கொண்ட, கணவன்-மனைவி அமைவார்கள்.
2. மன உல்லாசத்துக்கு ஆதாரமாக விளங்கும் சிறந்த உடைகளைப் பெறுவார்கள்.
3. அழகு மிளிரும் அணிகலன்களை அடைவார்கள்.
4. ருசி மிளிரும் உணவு வகைகள் கிடைக்கும்.
5. நலன் தரும் தாம்பூல வகைகள் குறைவில்லாமல் கிடைக்கும்.
6. அற்புதமான நறுமணப் பொருள்களைப் பெறுவார்கள்.
7. மனத்திற்கு மகிழ்ச்சியூட்டும் இன்னிசை.
8. மன உல்லாசத்துக்கு உதவும் மண மலர்கள் கிடைக்கும்.
இந்த எட்டு போகங்களும் முழுமையாக அமையப் பெற்றதுதான் உயர்ந்த வாழ்க்கை.

ஆவணி மாதம் சிவாலயங்கள் தோறும், சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருநாளைக் கொண்டாடுவர். இந்த நிகழ்வில் பங்கேற்று வழிபாடு செய்தால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்
‘அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்’ என்பது பழமொழி. ஆண்டவனின் திருவடியைப் பற்றினால் அனைத்திலும் வெற்றி காணலாம் என்பதைக் குறிக்கும் விதத்திலே அமைந்ததுதான் அந்த பழமொழி. அப்படிப்பட்ட ஆண்டவனே, சாட்டையால் அடி வாங்கி திருவிளையாடல் புரிந்த சம்பவம் மதுரையில் நடந்தேறிய மாதமாக ஆவணி மாதம் விளங்குகிறது. ஆவணி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரம், ‘ஆவணி மூலம்’ என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.
அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும், சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருநாளைக் கொண்டாடுவர். இந்த நிகழ்வில் பங்கேற்று வழிபாடு செய்தால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். இறைவனே கூலிக்கு வேலை பார்த்த நாள் என்பதால், உத்தியோகத்தில் பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி மூலம் அன்று, சிவபெருமானை வழிபட்டால் எதிர்ப்புகள் அகன்று இனிய வாழ்க்கை அமையும்.
மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இந்த நிகழ்வு மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆவணி மூல வழிபாட்டில் கலந்து கொண்டால் மூல நட்சத்திர தோஷங்கள் கூட விலகிவிடும் என்பது நம்பிக்கை.
மேலும் வாழ்வில் முன்னேற்றங்கள் வந்து சேரும். மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் இருபாலரும் இந்த விழாவில் கலந்து கொள்வது நல்லது. மூல நட்சத்திரத்தில் சிவனை வழிபட்டால் ஞாலம் போற்றும் வாழ்க்கை அமையும்.
சிவாலயத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு ‘நான் வந்து நேரமாச்சு, நந்திக்கு தீபமாச்சு, பிரகாரம் மூன்றாச்சு, போய் வருகின்றேன் சண்டிகேஸ்வரா..’ என்று சொல்ல வேண்டும்.
சிவாலயங்களுக்குச் செல்லும் பொழுது, அங்கு நிறைவாக யோக நிலையில் இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டுதான் வரவேண்டும். அவர் சன்னிதியில் ‘நான் வந்து நேரமாச்சு, நந்திக்கு தீபமாச்சு, பிரகாரம் மூன்றாச்சு, போய் வருகின்றேன் சண்டிகேஸ்வரா..’ என்று சொல்ல வேண்டும்.
காரணம் நாம் கோவிலுக்கு வந்த கணக்கை அவர்தான் எழுதி வைத்துக் கொள்வார். தியானத்தில் இருக்கும் அவருக்கு இடையூறு இல்லாமல், மெதுவாக கைதட்ட வேண்டும். அதன்பிறகு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
காரணம் நாம் கோவிலுக்கு வந்த கணக்கை அவர்தான் எழுதி வைத்துக் கொள்வார். தியானத்தில் இருக்கும் அவருக்கு இடையூறு இல்லாமல், மெதுவாக கைதட்ட வேண்டும். அதன்பிறகு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஆவணி மாதத்தில் தொடர்ச்சியாக சுப முகூர்த்த நாட்கள் வருகிறது. ஆவணி மாதத்தில் (ஆகஸ்ட்- செப்டம்பர்) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
20.8.2021 வெள்ளி திரயோதசி உத்ராடம் சித்த காலை 6-7
27.8.2021 வெள்ளி பஞ்சமி அஸ்வினி அமிர்த காலை 6-7
1.9.2021 புதன் தசமி மிருகசீர்ஷம் சித்த காலை 9-10.30
9.9.2021 வியாழன் திருதியை ஹஸ்தம் சித்த காலை 10.30-12
10.9.2021 வெள்ளி சதுர்த்தி சித்திரை சித்த காலை 10-10.30
16.9.2021 வியாழன் தசமி உத்திராடம் சித்த காலை 11-12

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ேராற்சவம் நடக்கிறது. முதல் நாளான நேற்று பவித்ர பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக நேற்று காலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி பவித்ர மண்டபத்தில் உள்ள யாகசாலைக்குக் கொண்டு வரப்பட்டார்.
அங்கு வைதீக காரியமர்மங்கள் நடந்தன. காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை சம்பங்கி பிரகாரத்தில் உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 3 மணியளவில் விசேஷ சமர்ப்பணம் செய்யப்பட்டது.
மாலை 5 மணியில் இருந்து 6 மணிவரை ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 7 மணியில் இருந்து இரவு 10 மணிவரை யாகசாலை பூஜைகள் நடந்தன.
பவித்ரோற்சவத்தில் பெரிய ஜியர்சுவாமி, சின்னஜியர் சுவாமி, தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றம் பலர் கலந்து கொண்டனர்.

116 நாட்களை கடந்தும் ராமேசுவரம் கோவிலில் திறக்கப்படாத தீர்த்த கிணறுகளால் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் புனித நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. அதுபோல் ராமேசுவரம் கோவிலிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதல் கோவிலில் உள்ள 22 தீர்த்தகிணறுகளிலும் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு தீர்த்த கிணறுகள் மூடப்பட்டன.
இந்தநிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் மூடப்பட்டு 116 நாட்களை கடந்தும் இதுவரையிலும் திறக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் தீர்த்த கிணறுகளில் புனித நீராட முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தீர்த்தக் கிணறுகளேயே நம்பி வாழும் 450-க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்கள் குடும்பத்தினர் வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இதனால் யாத்திரை பணியாளர்கள் பலர் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே கட்டுப்பாடுகளுடனாவது ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளை திறந்து பக்தர்கள் நீராட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்களும் மற்றும் யாத்திரை பணியாளர்களும் இந்து அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாளின் திருநாமம், அபிராமி அம்மன் என்பதாகும். மார்கண்டேயனின் உயிரைக்காக்க, இறைவன் திருவிளையாடல் புரிந்த தலம் இது. எனவே விதியை மாற்றிய திருத்தலமாக இது அறியப்படுகிறது.
‘கடம்’ என்பது ‘குடம்’ என்று பொருள்படும். அமிர்த குடத்தை அருளியவர் திருக்கடவூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர். அம்பாளின் திருநாமம், அபிராமி அம்மன் என்பதாகும். மார்கண்டேயனின் உயிரைக்காக்க, இறைவன் திருவிளையாடல் புரிந்த தலம் இது. எனவே விதியை மாற்றிய திருத்தலமாக இது அறியப்படுகிறது.
இந்த ஆலயத்தில் தம்பதியர் தங்களின் 60-ம் வயதில் செய்யும் சிறப்பு பூஜையின் வாயிலாக ஆயுள் நீட்டிக்கும் என்று நம்பப்படுகிறது. அபிராமி பட்டருக்கு அமாவாசையன்று முழுநிலவு காட்சியை அளித்தவள், இத்தல அபிராமி அன்னை. இந்தக் கோவிலில் மணிவிழா பூஜை செய்து கொண்டால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

வாய்மேடு அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு நடைபெறுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தியில் கருங்கண்ணி அம்மன் உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஏற்கனவே சிதிலம் அடைந்து காணப்பட்ட இக்கோவில் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து கோவில் திருப்பணி செய்ய முடிவெடுத்தனர். அதன்படி திருப்பணிகள் மேற்கொள்வதற்காக கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலய பூஜைகள் நடந்தன. பின்னர் ரூ.1 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கின. திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் மகாமண்டபம், சுற்றுச்சுவர் அமைக்க வேண்டி உள்ளது. இந்த நிலையில் பொருளாதார பற்றாக்குறை காரணமாக திருப்பணிகளை முடிப்பதற்கு தாமதமாவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘25 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் பரம்பரை அறங்காவலராக இருந்த ராமாமிர்தம் திருப்பணிக்காக ரூ.5 லட்சத்தை கோவில் பெயரில் வங்கிகளில் டெபாசிட் செய்து இருந்தார். இதற்கான நிரந்தர வைப்பு நிதி பத்திரங்களை நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் ஒப்படைத்திருந்தார். அதன் மதிப்பு தற்போது ரூ.25 லட்சம் இருக்கும். இந்த நிதியை விடுவித்து, கைலாசநாதர் கோவிலில் திருப்பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்த இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

உடன்குடியில் அய்யா நிழல் தாங்கலில் அய்யா அன்ன வாகனத்தில் பவனி, குதிரை வாகனத்தில் பவனி வருதல், பக்தர்களுக்கு உம்பான் தர்மம் வழங்குதல், சந்தனக்குடம் நேமிசம் எடுத்தல், பூஞ்சப்பரத்தில் பவனி போன்றவை நடைபெற்றது.
உடன்குடி சந்தையடியூர் அய்யா நிழல் தாங்கல், தாகம் தணிந்த பதி என அழைக்கப்படும் முக்கிய பதியாகும். இங்கு ஆடி மாத பால்முறை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அய்யா அன்ன வாகனத்தில் பவனி, குதிரை வாகனத்தில் பவனி வருதல், பக்தர்களுக்கு உம்பான் தர்மம் வழங்குதல், சந்தனக்குடம் நேமிசம் எடுத்தல், பூஞ்சப்பரத்தில் பவனி போன்றவை நடைபெற்றது. வழி நெடுகிலும் அய்யாவிற்கு சுருள் வைத்து வழிபட்டனர். திருவிழா நாட்களில் காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை சந்தையடியூர் அய்யா வழி மக்கள் செய்திருந்தனர்.

அம்பாள் குடிகொண்டிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் ‘ஆடித்தபசு’ கொண்டாடப்படும் என்றாலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் கோமதி அம்மன் உடனாய சங்கரநாராயணர் திருத்தலம் ‘ஆடித்தபசு’ விழாவுக்கு பெரும் சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
‘தபசு’ என்பதற்கு ‘தவம்’ என்று பொருள். பார்வதி தேவி, ‘சிவனும் விஷ்ணுவும் வேறுவேறல்ல’ என்பதை மெய்ப்பிப்பதற்காக, சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் இருந்தாள். தவத்தின் முடிவில் சிவபெருமான் அன்னைக்கு, ‘சங்கரநாராயணர்’ கோலத்தில் காட்சி தந்தார். அம்பாளின் தவத்தை குறிப்பிடும் வகையில்தான் ‘ஆடித் தபசு’ விழா கொண்டாடப்படுகிறது.
அம்பாள் குடிகொண்டிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் ‘ஆடித்தபசு’ கொண்டாடப்படும் என்றாலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் கோமதி அம்மன் உடனாய சங்கரநாராயணர் திருத்தலம் ‘ஆடித்தபசு’ விழாவுக்கு பெரும் சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
தல வரலாறு
முன்காலத்தில் இரண்டு நாக அரசர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் சிவன் மீதும், மற்றொருவர் விஷ்ணுவின் மீதும் பக்தி கொண்டிருந்தனர். அவர்களுக்குள் ‘சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா?’ என்ற வாதம் எழுந்தது. இதை நிவர்த்தி செய்ய அம்பாளிடம் முறையிட்டனர்.
இருவருமே சம பலம் வாய்ந்தவர்கள் என்பதை அந்த நாக அரசர்களுக்கு நிரூபிக்க நினைத்த அம்பாள், ஊசி முனையில் நின்று கடுமையான தவத்தை மேற்கொண்டாள். இதையடுத்து ஈசன், ‘சங்கர நாராயணர்’ கோலத்தில் நாக அரசர்களுக்கு காட்சி தந்தார். பின் அவர் சங்கரலிங்கமாக மாறினார். அந்த லிங்கத்தை நாக அரசர்கள் இருவரும் வழிபட்டு வந்தனர். நாட்கள் செல்லச் செல்ல லிங்கத்தையும், நாகத்தையும் புற்று மண் மூடியது.
பின்னாளில் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது ரத்தம் வெளிப்பட்டது. உடனடியாக பாண்டிய மன்னனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மன்னன் வந்ததும் புற்று மண் அகற்றப்பட்டது. அப்போது அங்கே ஒரு லிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, ஆலயம் எழுப்பினான்.
இந்த ஆலயத்தில் சிவன் சன்னிதிக்கும், அம்பாள் சன்னிதிக்கும் இடையில் ‘சங்கரநாராயணர்’ தனிச் சன்னிதி கொண்டு அருள்புரிந்து வருகிறார். இதில் சிவனுக்குரிய வலது பக்கத்தில் தலையில் கங்கை, பிறைசந்திரன், ஜடாமுடி, நெற்றிக்கண், காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித் தோல் ஆடை ஆகியவை உள்ளது.
இடது பக்கத்தில் விஷ்ணுவுக்குரிய நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி, லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் காணப்படுகிறது. இந்த சன்னிதியில் காலையில் நடைபெறும் பூஜையின் போது துளசி தீர்த்தமும், மற்ற நேர பூஜைகளில் விபூதியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கரநாராயணருக்கு, சிவனுக்குரிய வில்வ மாலையும், விஷ்ணுவுக்குரிய துளசி மாலையும் அணிவிக்கப்படுகிறது.
இந்தத் திருக்கோவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக புற்றுமண் வழங்கப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்த புற்றுமண் பிரசாதத்தை தண்ணீரில் கரைத்து அருந்துகிறார்கள். வீடுகளில் விஷப்பூச்சிகளின் தொல்லை இருந்தால், பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வரும்போது, அந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வேண்டிக்கொண்டால், விஷப்பூச்சிகளின் தொல்லை மறையும் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் கோமதியம்மன்தான் முதன்மையான தெய்வமாக கருதப்படுகிறாள். ‘கோ’ என்பது பசுவைக்குறிக்கும். பசு அனைத்து உயிர்களுக்கும் ஒப்பானது. தவம் இயற்ற பூமிக்கு வந்த அம்பாளின் முகம், முழு சந்திரனைப் போல பிரகாசித்தது. சந்திரனுக்கு ‘மதி’ என்றொரு பெயர் உண்டு. அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமானவள் என்பதால் இந்த அன்னைக்கு ‘கோமதி’ என்ற பெயர் உண்டானது. இந்த ஆலயத்தில் அன்னைக்கு செய்யப்படும் ‘மலர் பாவாடை’, ‘தங்க பாவாடை’ அலங்காரம் மிகவும் சிறப்புக்குரியது.
ஆடித் தபசு விழா சங்கரன்கோவிலில் 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அம்பாளுக்கான விழா என்பதால், அம்மன் மட்டுமே தேரில் பவனி வருவாள். விழாவின் கடைசி நாளில், அம்மன் தவமியற்றுவாள். அன்று மாலை அம்மனுக்கு சங்கரநாராயணர் திருக்காட்சி தருவார். அதன்பிறகு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து ஆலயத்திற்குள் செல்வார். அந்த நேரத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் தொடங்கியது, முதல் நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவியுடன் வியூகசுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் 108 கோவில்களில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் 47-வதாக திகழ்கிறது. இந்த கோவிலில் ஆவணி மாதம் நடக்கும் பவித்ர உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கொரோனா பரவல் காரணமாக போன வருடம் பவித்ர உற்சவம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் இந்த வருடம் பவித்ர உற்சவம் கோவில் உள்ளே உள்விழாவாக நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த வகையில் 17-ம் தேதி பவித்ர உற்சவம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த திருவிழாவின் முதல் நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவியுடன் வியூகசுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.
ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
ஓம் அத்ரூஷ்டலட்சுமியே போற்றி
ஓம் அன்னலட்சுமியே போற்றி
ஓம் அபயலட்சுமியே போற்றி
ஓம் அலங்காரலட்சுமியே போற்றி
ஓம் அஸ்வாரூடலட்சுமியே போற்றி
ஓம் அஷ்டபுஜலட்சுமியே போற்றி
ஓம் அஷ்டாதசபுஜலட்சுமியே போற்றி
ஓம் அம்ருதலட்சுமியே போற்றி
ஓம் அனந்தலட்சுமியே போற்றி
ஓம் ஆதிலட்சுமியே போற்றி
ஓம் ஆனந்தலட்சுமியே போற்றி
ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
ஓம் இந்திரலட்சுமியே போற்றி
ஓம் ஐஸ்வர்யலட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார ரூபியே போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கனகலட்சுமியே போற்றி
ஓம் கற்பகலட்சுமியே போற்றி
ஓம் கனகாபிஷேகலட்சுமியே (20) போற்றி
ஓம் கன்யாலட்சுமியே போற்றி
ஓம் கமலாலட்சுமியே போற்றி
ஓம் கிருபாலட்சுமியே போற்றி
ஓம் கீர்த்திலட்சுமியே போற்றி
ஓம் கோலட்சுமியே போற்றி
ஓம் கோலாபுரிலட்சுமியே போற்றி
ஓம் சத்யலட்சுமியே போற்றி
ஓம் சர்வலட்சுமியே போற்றி
ஓம் சம்பத்ஸ்வரூபியே போற்றி
ஓம் சந்தானலட்சுமியே (30) போற்றி
ஓம் சாந்தலட்சுமியே போற்றி
ஓம் சாகரோத்பவலட்சுமியே போற்றி
ஓம் சித்தலட்சுமியே போற்றி
ஓம் சிவானந்தலட்சுமியே போற்றி
ஓம் சுபலட்சுமியே போற்றி
ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
ஓம் சுவர்ணலட்சுமியே போற்றி
ஓம் சுஸ்மிதலட்சுமியே போற்றி
ஓம் சுகாசனலட்சுமியே போற்றி
ஓம் சௌபாக்யலட்சுமியே (40) போற்றி
ஓம் ஸ்திதலட்சுமியே போற்றி
ஓம் சௌந்தர்யலட்சுமியே போற்றி
ஓம் சுவர்க்கலட்சுமியே போற்றி
ஓம் ஸைன்யலட்சுமியே போற்றி
ஓம் ஜயலட்சுமியே போற்றி
ஓம் ஜகல்லட்சுமியே போற்றி
ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
ஓம் ஜேஷ்டலட்சுமியே போற்றி
ஓம் ஷ்ட்புஜலட்சுமியே போற்றி
ஓம் ஷோடசலட்சுமியே (50) போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தனதலட்சுமியே போற்றி
ஓம் தயாலட்சுமியே போற்றி
ஓம் தான்யலட்சுமியே போற்றி
ஓம் த்ரிகுணலட்சுமியே போற்றி
ஓம் த்வாரலட்சுமியே போற்றி
ஓம் த்விபுஜலட்சுமியே போற்றி
ஓம் த்விபுஜவீரலட்சுமியே போற்றி
ஓம் திவ்யலட்சுமியே போற்றி
ஓம் தீபலட்சுமியே (60) போற்றி
ஓம் தைர்யலட்சுமியே போற்றி
ஓம் துளசிலட்சுமியே போற்றி
ஓம் துக்கநிவாரணியே போற்றி
ஓம் நாகலட்சுமியே போற்றி
ஓம் நித்தியலட்சுமியே போற்றி
ஓம் பாலலட்சுமியே போற்றி
ஓம் பங்கஜலட்சுமியே போற்றி
ஓம் பிரம்மசோதரியே (70) போற்றி
ஓம் பிரசன்னலட்சுமியே போற்றி
ஓம் பிரகாசலட்சுமியே போற்றி
ஓம் பில்வலட்சுமியே போற்றி
ஓம் பூலட்சுமியே போற்றி
ஓம் புவனலட்சுமியே போற்றி
ஓம் பூஜ்யலட்சுமியே போற்றி
ஓம் பூர்ணலட்சுமியே போற்றி
ஓம் போகலட்சுமியே போற்றி
ஓம் மகாலட்சுமியே போற்றி
ஓம் மாயாலட்சுமியே (80) போற்றி
ஓம் மோஷலட்சுமியே போற்றி
ஓம் மோஹனலட்சுமியே போற்றி
ஓம் யக்ஞலட்சுமியே போற்றி
ஓம் யந்திரலட்சுமியே போற்றி
ஓம் யோகலட்சுமியே போற்றி
ஓம் யௌவனலட்சுமியே போற்றி
ஓம் ராஜலட்சுமியே போற்றி
ஓம் ராஜ்யலட்சுமியே போற்றி
ஓம் ரம்யலட்சுமியே போற்றி
ஓம் ரூபலட்சுமியே (90) போற்றி
ஓம் லட்சுமியே போற்றி
ஓம் லங்காதகனியே போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஓம் வரதலட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் விஸ்வலட்சுமியே போற்றி
ஓம் வித்யாலட்சுமியே போற்றி
ஓம் வீரலட்சுமியே போற்றி
ஓம் வீர்யலட்சுமியே போற்றி
ஓம் ஞானலட்சுமியே போற்றி
ஓம் ஹம்சவாகினியே போற்றி
ஓம் ஹருதயலட்சுமியே போற்றி
ஓம் ஹிரண்யலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீசக்ரலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீசூக்தலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீப்ரதனாலட்சுமியே போற்றி
ஓம் அத்ரூஷ்டலட்சுமியே போற்றி
ஓம் அன்னலட்சுமியே போற்றி
ஓம் அபயலட்சுமியே போற்றி
ஓம் அலங்காரலட்சுமியே போற்றி
ஓம் அஸ்வாரூடலட்சுமியே போற்றி
ஓம் அஷ்டபுஜலட்சுமியே போற்றி
ஓம் அஷ்டாதசபுஜலட்சுமியே போற்றி
ஓம் அம்ருதலட்சுமியே போற்றி
ஓம் அனந்தலட்சுமியே போற்றி
ஓம் ஆதிலட்சுமியே போற்றி
ஓம் ஆனந்தலட்சுமியே போற்றி
ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
ஓம் இந்திரலட்சுமியே போற்றி
ஓம் ஐஸ்வர்யலட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார ரூபியே போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கனகலட்சுமியே போற்றி
ஓம் கற்பகலட்சுமியே போற்றி
ஓம் கனகாபிஷேகலட்சுமியே (20) போற்றி
ஓம் கன்யாலட்சுமியே போற்றி
ஓம் கமலாலட்சுமியே போற்றி
ஓம் கிருபாலட்சுமியே போற்றி
ஓம் கீர்த்திலட்சுமியே போற்றி
ஓம் கோலட்சுமியே போற்றி
ஓம் கோலாபுரிலட்சுமியே போற்றி
ஓம் சத்யலட்சுமியே போற்றி
ஓம் சர்வலட்சுமியே போற்றி
ஓம் சம்பத்ஸ்வரூபியே போற்றி
ஓம் சந்தானலட்சுமியே (30) போற்றி
ஓம் சாந்தலட்சுமியே போற்றி
ஓம் சாகரோத்பவலட்சுமியே போற்றி
ஓம் சித்தலட்சுமியே போற்றி
ஓம் சிவானந்தலட்சுமியே போற்றி
ஓம் சுபலட்சுமியே போற்றி
ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
ஓம் சுவர்ணலட்சுமியே போற்றி
ஓம் சுஸ்மிதலட்சுமியே போற்றி
ஓம் சுகாசனலட்சுமியே போற்றி
ஓம் சௌபாக்யலட்சுமியே (40) போற்றி
ஓம் ஸ்திதலட்சுமியே போற்றி
ஓம் சௌந்தர்யலட்சுமியே போற்றி
ஓம் சுவர்க்கலட்சுமியே போற்றி
ஓம் ஸைன்யலட்சுமியே போற்றி
ஓம் ஜயலட்சுமியே போற்றி
ஓம் ஜகல்லட்சுமியே போற்றி
ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
ஓம் ஜேஷ்டலட்சுமியே போற்றி
ஓம் ஷ்ட்புஜலட்சுமியே போற்றி
ஓம் ஷோடசலட்சுமியே (50) போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தனதலட்சுமியே போற்றி
ஓம் தயாலட்சுமியே போற்றி
ஓம் தான்யலட்சுமியே போற்றி
ஓம் த்ரிகுணலட்சுமியே போற்றி
ஓம் த்வாரலட்சுமியே போற்றி
ஓம் த்விபுஜலட்சுமியே போற்றி
ஓம் த்விபுஜவீரலட்சுமியே போற்றி
ஓம் திவ்யலட்சுமியே போற்றி
ஓம் தீபலட்சுமியே (60) போற்றி
ஓம் தைர்யலட்சுமியே போற்றி
ஓம் துளசிலட்சுமியே போற்றி
ஓம் துக்கநிவாரணியே போற்றி
ஓம் நாகலட்சுமியே போற்றி
ஓம் நித்தியலட்சுமியே போற்றி
ஓம் பாலலட்சுமியே போற்றி
ஓம் பங்கஜலட்சுமியே போற்றி
ஓம் பிரம்மசோதரியே (70) போற்றி
ஓம் பிரசன்னலட்சுமியே போற்றி
ஓம் பிரகாசலட்சுமியே போற்றி
ஓம் பில்வலட்சுமியே போற்றி
ஓம் பூலட்சுமியே போற்றி
ஓம் புவனலட்சுமியே போற்றி
ஓம் பூஜ்யலட்சுமியே போற்றி
ஓம் பூர்ணலட்சுமியே போற்றி
ஓம் போகலட்சுமியே போற்றி
ஓம் மகாலட்சுமியே போற்றி
ஓம் மாயாலட்சுமியே (80) போற்றி
ஓம் மோஷலட்சுமியே போற்றி
ஓம் மோஹனலட்சுமியே போற்றி
ஓம் யக்ஞலட்சுமியே போற்றி
ஓம் யந்திரலட்சுமியே போற்றி
ஓம் யோகலட்சுமியே போற்றி
ஓம் யௌவனலட்சுமியே போற்றி
ஓம் ராஜலட்சுமியே போற்றி
ஓம் ராஜ்யலட்சுமியே போற்றி
ஓம் ரம்யலட்சுமியே போற்றி
ஓம் ரூபலட்சுமியே (90) போற்றி
ஓம் லட்சுமியே போற்றி
ஓம் லங்காதகனியே போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஓம் வரதலட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் விஸ்வலட்சுமியே போற்றி
ஓம் வித்யாலட்சுமியே போற்றி
ஓம் வீரலட்சுமியே போற்றி
ஓம் வீர்யலட்சுமியே போற்றி
ஓம் ஞானலட்சுமியே போற்றி
ஓம் ஹம்சவாகினியே போற்றி
ஓம் ஹருதயலட்சுமியே போற்றி
ஓம் ஹிரண்யலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீசக்ரலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீசூக்தலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீப்ரதனாலட்சுமியே போற்றி