என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தியில் உள்ள கைலாசநாதர் கோவிலை படத்தில் காணலாம்.
    X
    ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தியில் உள்ள கைலாசநாதர் கோவிலை படத்தில் காணலாம்.

    ஆயிரம் ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவிலில் குடமுழுக்கு நடைபெறுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

    வாய்மேடு அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு நடைபெறுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    நாகை மாவட்டம் வாய்மேடு அருகே ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தியில் கருங்கண்ணி அம்மன் உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஏற்கனவே சிதிலம் அடைந்து காணப்பட்ட இக்கோவில் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து கோவில் திருப்பணி செய்ய முடிவெடுத்தனர். அதன்படி திருப்பணிகள் மேற்கொள்வதற்காக கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலய பூஜைகள் நடந்தன. பின்னர் ரூ.1 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கின. திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் மகாமண்டபம், சுற்றுச்சுவர் அமைக்க வேண்டி உள்ளது. இந்த நிலையில் பொருளாதார பற்றாக்குறை காரணமாக திருப்பணிகளை முடிப்பதற்கு தாமதமாவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘25 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் பரம்பரை அறங்காவலராக இருந்த ராமாமிர்தம் திருப்பணிக்காக ரூ.5 லட்சத்தை கோவில் பெயரில் வங்கிகளில் டெபாசிட் செய்து இருந்தார். இதற்கான நிரந்தர வைப்பு நிதி பத்திரங்களை நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் ஒப்படைத்திருந்தார். அதன் மதிப்பு தற்போது ரூ.25 லட்சம் இருக்கும். இந்த நிதியை விடுவித்து, கைலாசநாதர் கோவிலில் திருப்பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்த இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
    Next Story
    ×