என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    உடன்குடி கொட்டங்காடு நாராயணபுரம் அய்யா வைகுண்டர் தர்மபதியில் திருவிழாவையொட்டி பணிவடையும், அய்யா திருவீதி உலா வருதல், உம்பான் அன்னதர்மம் நடந்தது.
    உடன்குடி கொட்டங்காடு நாராயணபுரம் அய்யா வைகுண்டர் தர்மபதியில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பணிவடையும், மாலையில் அய்யா திருவீதி உலா வருதல், உம்பான் அன்னதர்மம் நடந்தது.

    நேற்று முன்தினம் மதியம் உச்சிப்படிப்பு, சமபந்தி அன்னதர்மம், இரவு சந்தனக்குடம் மற்றும் மாவிளக்கு பெட்டி எடுத்தலும் நடைபெற்றது. நேற்று அய்யா இந்திர வாகனத்தில் பவனி வந்து அருள்புரிந்தார்.
    கடலில் நீராடி, துளசி மாலை பாசி மாலை வாங்கி அதை கடலில் நனைத்து, சிவப்பு ஆடை அணிந்து கோவில் வளாகத்திற்கு வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கி விடுகின்றனர்.
    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் தசரா திருவிழா ஆகும்.

    இந்த கோவிலில் வருகிற 6-ந்தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 15-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. இந்த இரு நாட்களும் கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் வழக்கம் போல பக்தர்கள் மேளம், கரகம், காவடி, போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தங்கள் சொந்த ஊரில் தசராவை கொண்டாடலாம் என்று அரசு அறிவித்து உள்ளது.

    திருவிழாவையொட்டி மாலை அணியும் பக்தர்கள் கடந்த சில வாரங்களாகவே கோவிலுக்கு வந்து மாலை அணிந்து வருகின்றனர்.

    நேற்றும் ஏராளமான பக்தர்கள் நண்பர்களுடன், குடும்பத்துடன், கார், வேன், இரு சக்கர வாகனத்தில் கோவிலுக்கு வந்து குவிந்துள்ளனர்.

    கடலில் நீராடி, துளசி மாலை பாசி மாலை வாங்கி அதை கடலில் நனைத்து, சிவப்பு ஆடை அணிந்து கோவில் வளாகத்திற்கு வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கி விடுகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்களில் சிகப்பு ஆடை அணிந்து விரதம் இருந்து வரும் தசராபக்தர்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை சுற்றி வலம் வந்தார்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை அன்று தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க நகர் வீதிகளில் உலா வருவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக வீதி உலா தவிர்க்கப்பட்டு உள்ளது

    இதே சமயம் அரசு நெறிமுறைக்கு உட்பட்டு சில தளர்வால் பக்தர்கள் அனுமதி இன்றி கோவிலுக்குள் சுவாமி உலா நடைபெற்று வந்தது. இதற்கிடையே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில் மூடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சனிக்கிழமையான நேற்று புரட்டாசி மாத கார்த்திகையையொட்டி கோவிலுக்குள் நேற்று மாலை சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை சுற்றி வலம் வந்தார். இந்தநிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதி தவிர்க்கப்பட்டது.
    ஸ்ரீரெங்கநாத அஷ்டோத்திரத்தை புரட்டாசி மாதம் முழுவதும் சொல்லி பெருமாளை வழிபாடு செய்து வந்தால் வறுமை நீங்கி ஐஸ்வர்யம் பெருகும்.
    1) ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நம:
    2) ஓம் தேவேசாய நம:
    3) ஓம் ஸ்ரீரங்க ப்ரம்ம ஸம்ஜ்ஞிதாய நம:
    4) ஓம் சேஷ பர்யங்க சயநாய நம:
    5) ஓம் ஸ்ரீநிவாஸ புஜாந்தராய நம:
    6) ஓம் இந்த்ர நீலோத்பல ச்யாமாய நம:
    7) ஓம் புண்டரீக நிபே க்ஷணாய நம:
    8) ஓம் ஸ்ரீவத்ஸலா ஞ்சிதாய நம:
    9) ஓம் ஹாரிணே நம:
    10) ஓம் வநமாலிநே நம:
    11) ஓம் ஹலாயுதாய நம:
    12) ஓம் பீதாம்பர தராய நம:
    13) ஓம் தேவாய நம:
    14) ஓம் வராய நம:
    15) ஓம் நாராயணாய நம:
    16) ஓம் ஹரயே நம:
    17) ஓம் ஸ்ரீ பூமி ஸஹிதாய நம:
    18) ஓம் புருஷாய நம:
    19) ஓம் மஹாவிஷ்ணவே நம:
    20) ஓம் ஸநாதநாய நம:
    21) ஓம் ஸிம்ஹாஸ நஸ்தாய நம:
    22) ஓம் பகவதே நம:
    23) ஓம் வாஸு தேவாய நம:
    24) ஓம் ப்ரபா வ்ருதாய நம:
    25) ஓம் கந்தர்ப்ப கோடி லாவண்யாய நம:
    26) ஓம் கஸ்தூரி திலகோ ஜ்லாய நம:
    27) ஓம் அச்யுதாய நம:
    28) ஓம் சங்க சக்ர கதா பத்ம ஸுரக்ஷித சதுர்ப்புஜாய நம:
    29) ஓம் ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரே நம:
    30) ஓம் ஸ்ரீநாதாய நம:
    31) ஓம் தேவசிகா மணயே நம:
    32) ஓம் ஸ்ரீரங்க நாயகாய நம:
    33) ஓம் லக்ஷ்மீ வல்லபாய நம:
    34) ஓம் தேஜஸாம் நிதயே நம:
    35) ஓம் ஸர்வ சர்ம ப்ரதாய நம:
    36) ஓம் அஹீசாய நம:
    37) ஓம் ஸாமகாந ப்ரியோத் ஸவாய நம:
    38) ஓம் அம்ருதத் வப்ரதாய நம:
    39) ஓம் நித்யாய நம:
    40) ஓம் ஸர்வ ப்ரபவே நம:
    41) ஓம் அரிந்தமாய நம:
    42) ஓம் ஸ்ரீபத்ர குங்குமா லிப்தாய நம:
    43) ஓம் ஸ்ரீமூர்த்தயே நம:
    44) ஓம் சித்தரஞ்ஜிதாய நம:
    45) ஓம் ஸர்வ லக்ஷண ஸம்பந்னாய நம:
    46) ஓம் சாந்தாத்மனே நம:
    47) ஓம் தீர்த்த நாயகாய நம:
    48) ஓம் ஸ்ரீரங்கநாயிகீ கேசாய நம:
    49) ஓம் யக்ஞ மூர்த்தயே நம:
    50) ஓம் ஹிரண் மயாய நம:
    51) ஓம் ப்ரணவாகார ஸதநாய நம:
    52) ஓம் ப்ரணார்த்த ப்ரதாயகாய நம:
    53) ஓம் கோதா ப்ராணேச்வராய நம:
    54) ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:
    55) ஓம் ஜகந் நாதாய நம:
    56) ஓம் ஜயப்ரதாய நம:
    57) ஓம் நிசுளா புரவல்லீசாய நம:
    58) ஓம் நித்ய மங்களதாயகாய நம:
    59) ஓம் கந்தஸ் தம்பத்வ யோல்லாஸி காயத்ரீ ரூப மண்டபாய நம:
    60) ஓம் ப்ருத்ய வர்க்க சரண்யாய நம:
    61) ஓம் பலபத்ர ப்ரஸாதகாய நம:
    62) ஓம் வேதச்ருங்க விமானஸ்தாய நம:
    63) ஓம் வ்யாக் ராஸுர நிஷூதநாய நம:
    64) ஓம் கருடா நந்த ஸேநேச கஜவக்த்ராதி ஸேவிதாய நம:
    65) ஓம் சங்கர ப்ரிய மாஹாத்மநே நம:
    66) ஓம் ச்யாமாய நம:
    67) ஓம் சந்தநு வந்திதாய நம:
    68) ஓம் பாஞ்சராத் ரார்ச்சிதாய நம:
    69) ஓம் அநேக பக்த நேத்ரோத்ஸவ ப்ரதாய நம:
    70) ஓம் கலசாம் போதிநிலயாய நம:
    71) ஓம் க்ஷீராம்போதி நிலயாய நம:
    72) ஓம் கமலாஸந பூஜிதாய நம:
    73) ஓம் ஸநந்த நந்த ஸ்நக ஸுத்ராமா மரஸேவிதாய நம:
    74) ஓம் ஸத்ய லோகபராவாஸாய நம:
    75) ஓம் சக்ஷஷே நம:
    76) ஓம் அஷ்டாக்ஷராய நம:
    77) ஓம் அவ்யாய நம:
    78) ஓம் இக்ஷ்வாகு பூஜித பதாய நம:
    79) ஓம் வஸிஷ்டாதி ஸ்துதாய நம:
    80) ஓம் அநகாய நம:
    81) ஓம் ராகவா ராதிதாய நம:
    82) ஓம் ஸ்வாமிநே நம:
    83) ஓம் ராமாய நம:
    84) ஓம் ராஜேந்த்ர வந்திதாய நம:
    85) ஓம் விபீஷணார்ச்சித பதாய நம:
    86) ஓம் லங்காராஜ்ய வரப்ரதாய நம:
    87) ஓம் காவேரி மத்ய நிலயாய நம:
    88) ஓம் கல்யாணபுர வாஸ்து காய நம:
    89) ஓம் தர்மவர்மாதி சோளேந்த்ர பூஜிதாய நம:
    90) ஓம் புண்ய கீர்த்தநாய நம:
    91) ஓம் புருஷாத்தம க்ருதஸ்தாநாய நம:
    92) ஓம் பூலோக ஜன பாக்யதாய நம:
    93) ஓம் அக்ஞானத மனர் ஜ்யோதிஷே நம:
    94) ஓம் அர்ஜூன பரிய ஸாரதயே நம:
    95) ஓம் சந்த்ர புஷ்கரிணீ நாதாய நம:
    96) ஓம் சண்டாதி தவார பாலகாய நம:
    97) ஓம் குமுதாதி பரீவாராய நம:
    98) ஓம் பாண்ட்யஸா ரூப்ய தாயகாய நம:
    99) ஓம் ஸப்தாவரண ஸம்வீத ஸதநாய நம:
    100) ஓம் ஸுர போஷகாய நம:
    101) ஓம் நவநீத சுபாஹாராய நம:
    102) ஓம் விஹாரிணே நம:
    103) ஓம் நாரத ஸ்துதாய நம:
    104) ஓம் ரோஹிணீ ஜன்ம தாரகாய நம:
    105) ஓம் கார்த்திகேய வரப்ரதாய நம:
    106) ஓம் ஸ்ரீரங்காதிபதயே நம:
    107) ஓம் ஸ்ரீமதே நம:
    108) ஓம் ஸ்ரீமத்ரங்க மஹாநிதயே நம:

    ஓம் ஸ்ரீரங்கபரப்ரஹ்மணே நம:
    கொரோனா தொற்று நம்மை விட்டு நீங்கி விட்டது என்ற நம்பிக்கை வந்தவுடன் உடனடியாக பக்தர்களின் கோரிக்கை விருப்பப்படி ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழக்கம்போல் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள்.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு நேற்று மாலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார். அவருக்கு தக்கார் ராஜா குமரன் சேதுபதி, கோவில் இணை ஆணையர் பழனிக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமைச்சர் சேகர்பாபு கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த யானை ராமலட்சுமிக்கு பழம் கொடுத்தார்.அதன் பின்னர் சாமி தரிசனம் செய்தார்.

    தீர்த்த கிணறு பகுதிகளையும், 3 பிரகாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தங்கத்தேர், வெள்ளிதேர் உள்ளிட்டவைகளை பார்த்தார். ஆய்வின்போது ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், இந்து அறநிலையத்துறையின் ஆணையாளர் குமரகுருபரன், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, தி.மு.க. கட்சியின் நகரச்செயலாளர் நாசர்கான், வீட்டுவசதி வாரிய தலைவர் அயோத்தி ராஜன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் வில்லாயுதம், கோவிலின் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பேஷ் கார்கள் கமலநாதன், முனியசாமி, ராமநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    ஆய்விற்கு பின்பு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமேசுவரம் கோவிலில் உள்ள தங்கத்தேர் மற்றும் வெள்ளித்தேர் ஆகியவை சரியான முறையில் பராமரிப்பில்லாமல் பயனற்று போய் கிடப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே தங்கத்தேர், வெள்ளிதேர் மற்றும் 3 மரத்தேர்களையும் உடனே சீரமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சீரமைக்க முடியாவிட்டால் அதற்கு பதிலாக புதிய தேர் செய்யலாமா என்பது குறித்தும் திட்ட அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.தேவைப்பட்டால் ராமேசுவரம் கோவிலுக்கு புதிதாக தங்கத்தேர், வெள்ளித்தேர் மற்றும் மரத்தேர் செய்து கொடுக்க இந்து அறநிலையத்துறை தயாராக உள்ளது.

    கொரோனா தொற்று நம்மை விட்டு நீங்கி விட்டது என்ற நம்பிக்கை வந்தவுடன் உடனடியாக பக்தர்களின் கோரிக்கை விருப்பப்படி ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழக்கம்போல் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள். ராமேசுவரம் கோவிலில் வருங்கால வைப்பு நிதி மற்றும் டிக்கெட் முறைகேடு குறித்து அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் இந்து அறநிலையத் துறையில் எந்த தவறுகள் செய்யப்பட்டிருந்தாலும் அது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது இந்து அறநிலையத் துறை அமைச்சரிடம் தீர்த்தம் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் தீர்த்த கிணறுகளை நம்பி 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருவதாகவும் மூடப்பட்டு இருப்பதால் அனைத்து குடும்பங்களும் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். தீர்த்தங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தங்கும் விடுதி உரிமையாளர் சங்கம், வர்த்தக சங்கம், அக்னி தீர்த்த புரோகிதர்கள் சங்கம், சலவைத் தொழிலாளர் சங்கம் சன்னதி தெரு மற்றும் கோவிலை சுற்றியுள்ள குடியிருப்போர் நல சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டது. இது குறித்து ஆலோசனை நடத்தி தெரிவிப்பதாக கூறிவிட்டு அமைச்சர் புறப்பட்டு சென்றார்.
    இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இந்த மண்ணே இக்கோயிலின் திருமண்ணாக வாய்த்திருக்கிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு இத்திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
    மூலவர்     – பாலமுருகன்
    பழமை     – 1000 வருடங்களுக்கு முன்
    மாவட்டம்     –  திண்டுக்கல்

    கோவிலின் சிறப்புகள்:

    முருகப்பெருமான் தன் ஆறாவது படைவீடான பழமுதிர்ச் சோலையில் மலைவளம் கண்டபிறகு, தாண்டிக்குடி வருகிறார். முருகன் இங்கிருக்கும் போதுதான் அகஸ்தியரின் சீடரனான இடும்பன் கயிலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என் இரண்டு மலைகளை சுமந்து கொண்டு பழநி வந்து சேருகிறார். இதை அறிந்த முருகன் இந்த இரண்டு மலைகளில் ஒன்று தனக்கு இருப்பிடமாகிக் கொள்ள உரியது என கருதி, தாண்டிக்குதிக்கிறார். இதன் காரணமாகவே இந்த இடம் “தாண்டிக்குதி” என்ற அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி “தாண்டிக்குடி” ஆனது.

    பன்றிமலை சுவாமிகளின் வேண்டுகோளின்படி முருகனே கோயில் கட்ட தேவையான பொருள்களுக்கு அது சம்பந்தப்பட்ட நபர்களின் கனவில் தோன்றி, அந்தப் பொருள்களை கொடுக்க கூறினார் என்றும், தற்போது கோயிலில் உள்ள மூலவர் சிலை கூட ஸ்தபதி ஒருவரின் கனவில் முருகனே சென்று கூறி அதன் மூலம் நிறுவப்பெற்று, திருப்பணிவேலைகள் முருகப்பெருமானின் மேற்பார்வையிலேயே முடிந்தது.

    கணபதி, முருகன், மயில், இடும்பன், பைரவர், அகஸ்தியர் மற்றும் நவக்கிரகங்களுடன் 1949ல் மிகவும் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு மூலவரான முருகன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பழனி முருகன் கோயிலில் உள்ள முலவரின் அமைப்பே இக்கோயிலும் உள்ளன. இந்தக் கோயிலுக்கு மருதநாயகமும், கணபதியும் தலைமைப்பூசாரியாக இருந்திருக்கிறார்கள். பழனிக்கே முருகன் இங்கிருந்து தான் சென்றிருக்கிறார். எனவே பழனிக்கு செல்பவர்கள் இங்குள்ள தாண்டிக்குடி பாலமுருகனை தரிசித்த பின் சென்றால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    இங்கிருந்து பழநிக்கு தாண்டிக்குதித்துச் சென்ற முருகப்பெருமானை, பத்தொன்பது சித்தர் என்று அழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள் (இயற்பெயர் ராமசாமி) தாண்டிக்குடிக்கே பாலமுருகன் வடிவில் அழைத்து வந்து விட்டார்கள். அவர் மறுபடியும் முருகனை அழைத்து வந்ததற்கு அடையாளமாக தாண்டிக்குடி மலையில் முன்று நாட்கள் தொடர்ந்து அனைவரும் பார்க்கும்படி ஓர் ஜோதி தோன்றியது.

    இதனாலேயே இந்த மலை “ஜோதி மலை” என வழங்கப்பட்டது. மூன்று நாட்களும் தொடர்ந்து ஜோதி தெரிந்து முடிந்தவுடன், அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, முருகப்பெருமான் மறுபடியும் தாண்டிக்குடிக்கு வந்து விட்டதற்கு அறிகுறியாக திருவடிச்சுவடுகள் மண்ணில் பதிந்தால் எப்படி இருக்குமோ அப்படி அந்தக்கல்லில் திருவடிச்சுவடு காணப்பட்டது. மேலும் அதற்கு அடுத்தாற்போல் உள்ள பாறையில் முருகனின் வாகனமான மயில் ஒரு பாம்பை கவ்விக் கொண்டிருப்பது போன்ற தோற்றமும் காணப்பட்டது. (இந்த தோற்றங்களை நாம் இப்போதும் பார்க்கலாம்).

    இக்கோயில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது. இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இந்த மண்ணே இக்கோயிலின் திருமண்ணாக வாய்த்திருக்கிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு இத்திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

    வேண்டுகோள்:

    திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

    நேர்த்திக்கடன்:

    வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

    வத்தலகுண்டு கொடைக்கானல் சாலையில் ஊத்து என்னும் ஊரிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்று பண்ணைக்காடு வழியாக தாண்டிக்குடி செல்லலாம். வத்தலகுண்டுவிலிருந்து 46 KM தொலைவில் உள்ளது. வத்தலகுண்டு மற்றும் கொடைக்கானலில் இருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.

    கோயில் திறந்திருக்கும் நேரம்:

    காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

    கோயில் முகவரி:

    அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் தாண்டிக்குடி,
    திண்டுக்கல் மாவட்டம் – 624 216.

    தொலைபேசி:

    04542- 266 378, 99626 71467
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்களை முறையாக கணக்கெடுத்து பக்தர்களின் பார்வைக்கு அறிவிப்பு பலகை மூலம் வைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
    கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் பக்தர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் கோவில் வெளிப் பிரகாரத்தில் நடை பெற்றது. கூட்டத்துக்கு பக்தர்கள் சங்க தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரிதிரு விழாவையொட்டி நடத்தப்படும் பரிவேட்டை ஊர்வலத்தை எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி வழக்கம் போல் கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதுமட்டு மின்றி பரிவேட்டை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொள்ளப்பட்டது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் சுற்றுப் பிரகாரங்களை சுத்தமாக பராமரித்து தேவையான மின் விளக்குகள் அமைத்து இருளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்களை முறையாக கணக்கெடுத்து பக்தர்களின் பார்வைக்கு அறிவிப்பு பலகை மூலம் வைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

    மேற்கண்ட தீர்மா னங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் பக்தர்கள் சங்கதுணை செயலாளர் ராஜ், துணைத் தலைவர் எம்.வி. நாதன், சட்ட ஆலோசகர் எஸ்.பி. அசோகன் மற்றும் நிர்வாகிகள் மோகன், திரவி யம், வீரன், சிவா, மணிகண்ட லிங்க ராஜன், பெருமாள், பகவதி அம்மாள், ஜெனிபா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்கள் சங்க செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
    கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாத கடைசியில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி 11 நாட்கள் நடப்பது வழக்கம்.
    கண்டன்விளையில் புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது குழந்தை இயேசு தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்கிய உடன் கட்டிய முதல் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாத கடைசியில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி 11 நாட்கள் நடப்பது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த வருட திருவிழாவானது இன்று (27-ந் தேதி) மாலை 6 மணிக்கு திருக்கொடி பவனியுடன் தொடங்கி 6.30 மணிக்கு சென்னை செலஸ்டின் மல்டி மீடியா இயக்குனரும், அருட்பணியாளருமான எல்பின்ஸ்டன் ஜோசப் தலைமையில் கொடியேற்றமும் நடைபெறுகிறது. முன்னதாக காலையில் முன்னோர்கள் நினைவு திருப்பலி, கல்லறை மந்திரிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து நடைபெறும் திருப்பலியில் கோட்டார் மறை மாவட்ட மறைக்கல்வி பணிக்குழு இயக்குனர் வின்சன்ட் எட்வின் அருளுரை நிகழ்த்துகிறார். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலியும், 6-ம் நாள் மாலையில் திருப்பலியின் போது குழந்தைகளுக்கு திருமுழுக்கு சடங்கும் நடைபெறுகிறது.

    11-ம் திருவிழா நிறைவு நாளன்று அதிகாலை 5 மணிக்கு கல்லுவிளை பங்கு பணியாளர் அமலதாஸ் தலைமையில் முதல் திருப்பலியும், காலை 8 மணிக்கு பாளை மறை மாவட்ட பணி நிறைவு ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும், 10 மணிக்கு திருவனந்தபுரம் மறை மாவட்ட அருட்பணியாளர் இஞ்ஞாசி ராஜசேகர் தலைமையில் மலையாள திருப்பலியும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீருடன் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் சகாய ஜெஸ்டஸ், இணை பணியாளர் ஸ்டாலின், பங்கு பேரவை துணை தலைவர் ஜெஸ்டஸ், செயலாளர் எச்.ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணை செயலாளர் லில்லி மலர், அருட்சகோதரிகள் மற்றும் பேரவையினர், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    இந்த ஆலய திருவிழா அரசு மற்றும் மறை மாவட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். ஆலயத்துக்கு வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணி வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று ஆலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 17 ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.
    குமரி மாவட்டம் குமார கோவில் சின்மயா மி‌ஷனில் நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரி‌ஷத்தின் மாவட்ட பூசாரிகள் பேரமைப்பு நிறுவாகிகள் ஆலோசனை மற்றும் பயிற்சி நிகழ்ச்சிக்கு மாவட்ட பூசாரி பேரமைப்பு தலைவர் சசிக்குமார் தலைமை தாங்கினார்.

    வி.ஹெச்.பிமாவட்ட துணைச் செயலாளர் சுபாஷ் குமார், பூசாரிகள் பேரமைப்பு மாவட்ட செயலாளர் ராஜசேகர் போற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரகோவில் சின்மயா மி‌ஷன் சுவாமிஜி நிஜானந்த கிரி ஆசியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வி.ஹெச்.பி- யின் பூசாரிகள் பேரமைப்பு மாநில தலைவர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பதை வரவேற்க்க தகுந்த வி‌ஷயமாக இருந்தாலும் ஏற்கனவே அனைத்து சமுதாய கோவில்களிலும் இந்த செயல் நடைமுறையில் உள்ளது எனவும், அதே வேளையில் பரம்பரை பரம்பரையாக பூஜை செய்யும் ஒருவரை நீக்கி விட்டு புதிதாக ஒருவரை நியமிப்பதை எதிர்க்கிறோம் அறநிலைய துறை சார்ந்த நடைவடிக்களை வரவேற்கிறோம், பல ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளனர், பல ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் மீட்க வேண்டியது உள்ளது.அதையும் மீட்க வேண்டும்.

    கிராம கோவில் பூசாரிகளின் நல வாரியத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்குவது போன்று 60 வயதை கடந்த பூசாரிகளுக்கு நிபந்தனை இன்றி ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 17 ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. இத்தனை ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகள் நடப்பது இந்த ஆலயத்தில் தான் என்பது வேதனைக்குரியது. எனவே ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு விரைந்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல லட்சம் மக்களின் நம்பிக்கையின் அடிப்படையிலானது குலசேகரப்பட்டினம் தசரா விழா. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அந்த விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் இல்லாவிட்டால் பூசாரிகள் பேரமைப்பு போராட்டம் நடத்தும். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீவிபத்தில் கோயில் மேற்கூரை எரிந்து சேதமானது எனவே பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப தங்கத்திலான மேற்கூரை வேய வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் இருந்து நவராத்திரி விழாவிற்காக கேரளாவுக்கு கொண்டு செல்லும் சாமி விக்கிரங்களுக்கு-பக்தர்கள் வழிபடவும் வரவேற்பு அளிக்கவும் அனுமதி வழங்க வேண்டும். சிதறால் மலைக் கோயிலில் உள்ள பகவதி அம்மன் திருத்தலம் பூஜையின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர் எனவே ஆலயத்தை திறந்து பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பன உட்பட ஏராளமான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பூசாரிகள் கலந்து கொண்டனர்.
    கிருஷ்ணரின் சிலையை வீட்டில் வைத்து வணங்க வேண்டுமானால், சில சம்பிரதாயங்களை கடைபிடிக்கவேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    கிருஷ்ணரின் சிலையை வீட்டில் வைத்து வணங்க வேண்டுமானால், சில சம்பிரதாயங்களை கடைபிடிக்கவேண்டும். சிலையின் உயரம் ஒரு கை அளவுக்கு மேல் இருக்க கூடாது. தனி பூஜை அறை இருக்க வேண்டும். எந்நேரமும் அது சுத்தமாக இருக்க வேண்டும். உடல் சுத்தம் மட்டுமின்றி, மன சுத்தம் இருந்தால் மட்டுமே பூஜை அறைக்குள் செல்லவேண்டும். குறிப்பாக கண்ணனின் சிலையை வைத்து வணங்கு பவர்கள் பயமின்றி இருக்க வேண்டும். மரண பயத்தை ஏற்படுத்தும் நோய்களோ, கவலையோ தாக்கினால் கூட அஞ்சாமல் கீதையை பாராயணம் செய்து கொண்டு, அவன் அருகில் இருக்க வேண்டும்.

    ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை போட்டுக் கொள்ளவும்.
    ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.
    கிருஷ்ணகமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.
    மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.
    அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.
    பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும்.
    சந்தனம், தாழம்பூ, மல்லிகை, மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.
    வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும்.
    ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.
    காணிப்பாக்கம் விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
    காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் விநாயகருக்கு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்கள் சமர்ப்பணம் செய்வது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு நடக்கும் காணிப்பாக்கம் விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் நேற்று காலை பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள், வேத பண்டிதர்கள் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.

    முற்பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி- மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள்.

    முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று பொன்- பொருள்-ஆடைகள் சேர்த்திருந்தாலும் அவர்கள் இப்பிறவியில்/மறுபிறவிகளில் பாடுபட்டு சேர்த்த பணம், பொருட்கள், பூர்வீக சொத்துக்களை பலவழிகளிலும் இழந்து வறுமையில் தவிக்க வேண்டியிருக்கும்.

    இத்தகைய பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும். மகாலட்சுமி பூஜையின்போது நாம் முற்பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி- மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள்.

    பெண்களின் மாங்கல்ய தோசத்திற்கும் ஸ்ரீமகாலட்சுமி பூஜை சக்திவாய்ந்த பரிகாரம் ஆகும்.

    ×