என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷன பைரவர் எழுந்தருளினார்.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளி அருள்பாலிப்பவர் சொர்ண ஆகர்ஷன பைரவர். இவருக்கு, ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியையொட்டி 5 கால சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷன பைரவர் எழுந்தருளினார்.
இதுபோல திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் உள்ள பைரவர் சன்னதியில், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பட்டிவீரன்பட்டி பகவதியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது. மேலும் சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சொர்ண ஆகர்ஷன பைரவர் சன்னதியிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

முன்னோர்களை வழிபடும் ‘மகாளய அமாவாசை’, சிவபெருமானின் அருளை பெற்றுத் தரும் ‘கேதார கவுரி விரதம்’ என்று அனைத்து தெய்வங்களுக்குமான வழிபாட்டு மாதமாக புரட்டாசி மாதம் இருக்கிறது.
புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இந்த மாதத்தில் பெருமாளுக்குரிய வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். பெருமாள் மட்டுமின்றி, அம்பாளுக்கு உரிய நவராத்திரி விரத நாளும், புரட்டாசி மாதத்தில்தான் வருகிறது. அதோடு முன்னோர்களை வழிபடும் ‘மகாளய அமாவாசை’, சிவபெருமானின் அருளை பெற்றுத் தரும் ‘கேதார கவுரி விரதம்’ என்று அனைத்து தெய்வங்களுக்குமான வழிபாட்டு மாதமாக புரட்டாசி மாதம் இருக்கிறது.
புரட்டாசி மாதத்தில் கடைப் பிடிக்கப்படும் விரதங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
அமுக்தாபரண விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் பிள்ளைப் பேறு கிடைக்கும்.
ஜேஷ்டா விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி அன்று, ஜேஷ்டா தேவியை நினைத்து செய்யப்படும் விரதம் இது. மகாலட்சுமிக்கு மூத்த தேவியான இவரை, பேச்சு வழக்கில் ‘மூதேவி’ என்றும் அழைப்பார்கள்.
விநாயக விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விநாயகரை மனதில் நிறுத்தி செய்யப்படும் இந்த விரதத்தை, மன சுத்தத்தோடு செய்தால், நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். இது தவிர ‘துர்வாஷ்டமி விரதம்’ என்பதும் விநாயகரை வழிபடும் ஒரு விரதமாக இருக்கிறது. புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதி அன்று, சிவ பெருமானோடு சேர்த்து விநாயகரை வழிபட வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தை மேற்கொள்வதால் குடும்ப ஒற்றுமை பலப்படும்.
சஷ்டி-லலிதா விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலமும் கிடைக்கப்பெறும்.
கபிலா சஷ்டி விரதம்
புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகளும் கிடைக்கும்.
மகாளய பட்சம்
புரட்டாசி பவுணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாட்களும் மாகாளய பட்சம் ஆகும். இந்தக் காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது புண்ணியம். இதுநாள் வரை முன்னோர்களுக்கு திதி கொடுக்காதவர்கள் கூட, இந்த மகாளய அமாவாசையில் திதி கொடுத்தால், முழு பலனையும் பெற முடியும்.
மகாலட்சுமி விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்து செய்யப்படும் விரதம் இதுவாகும். தொடர்ச்சியாக 16 நாட்கள் மகாலட்சுமியை வழிபட்டு வந்தால், குடும்பத்தில் இருக்கும் வறுமை அகலும். ஒளிமயமான வாழ்க்கை அமையும்.

கோமாதாவின் உடலில் முப்பத்து முக்கோடி தெய்வங்களும் வீற்றிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. எந்த தெய்வங்கள், பசுவின் எந்த பாகத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
பசு மாட்டை தெய்வமாக வணங்கும் வழக்கம், இந்து சமயத்தில் இருக்கிறது. பசுவை ‘கோமாதா’ என்றும் அழைப்பார்கள். இந்த கோமாதாவின் உடலில் முப்பத்து முக்கோடி தெய்வங்களும் வீற்றிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. எனவே தினமும் பசுவை வணங்கினாலே, அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலன் வந்து சேரும். எந்த தெய்வங்கள், பசுவின் எந்த பாகத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
தலை - சிவபெருமான்
நெற்றி - சிவசக்தி
வலது கொம்பு - கங்கை
இடது கொம்பு - யமுனை
கொம்புகளின் நுனி - காவிரி, கோதாவரி முதலிய
புண்ணிய நதிகள்
கொம்பின் அடியில் - திருமால்
மூக்கின் நுனி - முருகன்
மூக்கின் உள்ளே - வித்யாதரர்கள்
இரு காதுகளின் நடுவில் - அஸ்வினி தேவர்
இரு கண்கள் - சூரியன், சந்திரன்
வாய் - சர்ப்ப அசுரர்கள்
பற்கள் - வாயுதேவர்
நாக்கு - வருணதேவர்
நெஞ்சு - கலைமகள்
கழுத்து - இந்திரன்
மணித்தலம் - எமன்
உதடு - உதய, அஸ்தமன,
சந்தி தேவதைகள்
கொண்டை - பன்னிரு ஆதித்யர்கள்
மார்பு - சாத்திய தேவர்கள்
வயிறு - பூமிதேவி
கால்கள் - அக்னி தேவன்
முழந்தாள் - மருத்து தேவர்
குளம்பு - தேவர்கள்
குளம்பின் நுனி - நாகர்கள்
குளம்பின் நடுவில் - கந்தர்வர்கள்
குளம்பின் மேல்பகுதி - அரம்பெயர்கள்
முதுகு - ருத்திரர்
யோனி - சப்த மாதர் (ஏழு கன்னியர்)
குதம் - லட்சுமி
முன் கால் - பிரம்மா
பின் கால் - ருத்திர பரிவாரங்கள்
பால் மடி - ஏழு கடல்கள்
சந்திகள் - அஷ்ட வசுக்கள்
அரைப் பரப்பில் - பித்ரு தேவதை
வால் முடி - ஆத்திகன்
உடல்முடி - மகா முனிவர்கள்
எல்லா அவயங்கள் - கற்புடைய மங்கையர்
சடதாக்கினி - காருக பத்தியம்
இதயம் - ஆகவணியம்
முகம் - தட்சரைக் கினியம்

துர்க்கையை வழிபட்டு வந்தால் செவ்வாயின் அருளை பெறலாம். வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாயை வழிபட செவ்வாயின் தீய தசாபுத்தி நடப்பவர்கள் அது நீங்கி சுகம் பெறலாம்.
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இத்தலத்திற்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு. வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் வேதபுரி, கந்தபுரி, பரிதிபுரி, அங்காரபுரி, அம்பிகாபுரி என்ற பெயர்களும் உண்டு. இறைவனின் திருவிளையாடல்படி வேர்வைத் துளியிலிருந்து அங்காரகன் செந்நிற வடிவத்துடன் வேலுடன் தோன்றி சிவபெருமானை வணங்கினார். அப்போது அங்காரகனுடைய மேனியில் செங்குட்டம் இருப்பதைக் கண்டு இந்திராதி தேவர்கள் அஞ்சினார்கள். சிவபெருமான் அங்காரகனிடம் காவிரிக்கரையருகில் வைத்தியநாத தலம் ஒன்று உள்ளது. அங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் மூழ்கி இறைவனைப் பூசித்து வணங்கினால் உனக்கு ஏற்பட்டுள்ள செங்குட்டம் நீங்கி விடும் என்று கூறினார்.
அதன்படி அங்காரகன் சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி செங்குட்டம் நீங்கப் பெற்றார் ஸ்ரீ வைத்தியநாதரை தினசரி முழு ஈடுபாட்டுடன் தியானம் செய்தார். இறைவன் மனமகிழ்ந்து அங்காரகன் முன்தோன்றி அவருக்கு வேண்டிய வரங்களைக் கேட்க கூறினார். அங்காரகன் இறைவன் திருவடியை மறக்காத மனமும், செவ்வாய்க்கிழமைகளில் வந்து தன்னை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் சற்புத்திரப் பேற்றையும் அளிக்கும்படி வேண்டினார்.
சிவபெருமானும் அங்காரகனுக்கு “செவ்வாய் கிழமைகளில் உன்னை வந்து துதிப்போருக்கு கிரகபீடையை நீக்கி நன்மை செய்யவும், நவக்கிரகங்களில் மூன்றாவதாகத் திகழ்க” என வரம் அளித்தார். வைத்தீஸ்வரன் கோவிலில் அங்காரகன் மூலவர் சன்னதி கிழக்குக் கோபுர வாசலில் நுழைந்தவுடன் தண்டாயுதபாணி சன்னதிக்குத் தெற்கில் தெற்கு முகமாக அமைந்துள்ளது. நான்கு கைகளில் முறையே சூலம், சக்தியாயுதம், அபயக்கை, தண்டம் தாங்கிய கையுடன் காட்சியளிக்கிறார். அங்காரகன் உற்சவர் ஸ்ரீ வைத்தியநாதர் மூலவர் சன்னதிக்குத் தெற்கில் வெள்ளிமஞ்சத்தில் காட்சியளிக்கிறார்.
செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் இங்கு வந்து அர்ச்சனை செய்து துவரை அன்னம் நிவேதனம் செய்து வழிபட வேண்டும். இதனால் தோஷம் நீங்கும். இங்கு விற்கப்படும் வைத்தியநாதர் மருந்து என்ற திருச்சாந்துருண்டையை வாங்கி உண்டால் நோய்கள் நீங்கும்.
அர்ச்சனைத் தட்டுடன் வெல்லம் மற்றும் உப்பும், மிளகும் கலந்து விற்பனை செய்கிறார்கள். வெல்லத்தை உள்ளே உள்ள (தீர்த்தத்தில்) குளத்தில் கரைத்து விட வேண்டும், உப்பை தையல் நாயகி சந்நிதி எதிரில் உள்ள இடத்தில் சேர்க்க வேண்டும். மிகச் சிறிய அளவு உப்பு மற்றும் மிளகை அதிலிருந்து எடுத்து வாயில் போட்டு மென்று தின்பதும் வழக்கம்.
கீழசந்நிதி நுழைவாயிலில் வேப்ப மரத்தடியில் ஆதிவைத்திய நாதர் காட்சியளிக்கிறார். இந்த மரத்தினை மூன்று முறை வலம் வந்து பணிந்து அவ்விடம் அமர்ந்து தியானித்தால் சகல நலன்களும் கிடைக்கும். கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்.
இத்தலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன் இரவில் ஆடு வாகனத்தில் வலம் வந்து ஆண்டவனை வணங்குவதாகக் கூறப்படுகிறது.

மனிதர்கள் ஒவ்வொருவரையும் மனைவி-மக்கள், செல்வம், பதவி, பகட்டான பொருட்கள், புகழ், நோய், வறுமை, துன்பம் என்று அனைத்தையும் கொடுத்து சோதனை செய்கின்றான் இறைவன்.
இந்த பூமியில் வாழும் மனிதர்களை நேர்வழிப்படுத்த வந்த மார்க்கம் இஸ்லாம். தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இறைவன் திருக்குர்ஆன் மூலம் தெளிவாக எடுத்துக்கூறி இருக்கின்றான். மனிதர்களை நல்வழிப்படுத்த இறைவன் அனுப்பிய நபிமார்களும் அதன்படியே வாழ்ந்து மக்களை நேர்வழிப்படுத்த வழிகாட்டினார்கள்.
திருக்குர்ஆனும், நபிமொழிகளும் மனிதர்களை நேர்வழியில் நடக்க வலியுறுத்தினாலும் அதில் இருந்து மாறுபட்டு நடக்கவே மனித மனம் துடிக்கின்றது.
இன்றைய மனிதனின் வாழ்க்கை எப்படி அமைந்துள்ளது என்று சிந்தித்துப்பார்த்தால் உள்ளம் நடுங்கவே செய்யும். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற ரீதியில் மனம் விரும்பிய முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவே மனிதன் ஆசைப்படுகிறான். அந்த ஆசையின் விளைவாக அதன்படி நடக்கவும் துணிகின்றான்.
இந்த உலக வாழ்க்கை சோதனை நிறைந்தது. மனிதர்கள் ஒவ்வொருவரையும் மனைவி-மக்கள், செல்வம், பதவி, பகட்டான பொருட்கள், புகழ், நோய், வறுமை, துன்பம் என்று அனைத்தையும் கொடுத்து சோதனை செய்கின்றான், இறைவன்.
இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி, மேலும் பொருள்கள், உயிர்கள், கனி வர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்”. (திருக்குர்ஆன் 2:155).
“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 8:28).
“உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது”. (திருக்குர்ஆன் 64:15).
இறைவனின் சோதனையில் இருந்து எந்த மனிதனும் தப்பிக்கவே முடியாது. இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அவன் இறைவனின் சோதனைக்கு ஆளாகியே தீரவேண்டும். அவ்வாறு சோதனையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு கேடயமாக இருக்கக்கூடியவை திருக்குர்ஆன் ஓதுதல், தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஸதகா அளித்தல் போன்றவையாகும். இறையச்சத்துடன் கூடிய தொழுகையுடன் இறைவன் காட்டிய வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்ந்தால் சோதனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
அதையும் மீறி இறைவனின் சோதனை வந்தால் அதை அமைதியாக ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடமே அதில் இருந்து மீண்டுவர உதவி தேடவேண்டும். இதையே திருக்குர்ஆன் (2:156) குறிப்பிடும்போது, “(சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்டபோதிலும் ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்’ எனக் கூறுவார்கள்”, என்று தெளிவாக கூறுகின்றது.
ஆனால் எல்லா மனிதர்களும் இப்படி இருப்பதில்லை. இன்பம் வரும் போது இறைவனை மறந்து விடுகிறார்கள். இது இறைவன் தங்களுக்கு அளித்த நற்கொடை என்பதை நினைக்கத்தவறிவிடுகிறார்கள். தங்களது உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று இறுமாப்புடன் நடந்து கொள்கிறார்கள். பின்னர் சோதனை ஏற்படும் போது இறைவனை தஞ்சமடைய மறுத்து ஆணவத்துடன் நடந்து கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் கடுமையான நஷ்டமும், வேதனையும் இருக்கிறது என்று திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:
“இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்”. (திருக்குர்ஆன் 22:11).
“மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்: “இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!” என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள்”. (திருக்குர்ஆன் 39:49).
எனவே, நமக்கு நன்மைகள் வந்தால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம். அதைத்தந்த இறைவனுக்கு நன்றி சொல்வோம். அந்த நன்மையின் மூலம் நாம் மட்டுமின்றி பிறரும் நன்மை அடையும்படி செயல்படுவோம். இதேபோல சோதனைகள் வந்தால் அதையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வோம். இறைவனை அடி பணிந்து அந்த சோதனையில் இருந்து மீண்டுவர வழிகாட்டும்படி பிரார்த்தனை செய்வோம்.
அல்லாஹ் வாரி வழங்குவதில் இணையற்ற வள்ளல் தன்மை மிக்கவன். தன்னை அடிபணிந்து வணங்கிய அடியார்களின் கரங்களை வெறுமையாக அனுப்புவதில்லை. அவன் அனைத்தையும் அறிந்தவன், ஞானம் மிக்கவன், இரக்க குணம் உள்ளவன். எத்தனை சோதனைகள் வந்தாலும் அவனிடமே சரண் அடைவோம். அவனிடமே பாதுகாப்பு கேட்போம். இறைவன் அருள்மழை நம் மீது நிச்சயம் பொழியும், ஆமின்.
பேராசிரியர் அ. முகம்மது அப்துல் காதர், சென்னை.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவிலுக்கு வந்த பெரும்பாலான பக்தர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தனர்.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கொரோனா 2-வது அலை பரவலின் போது அமல்படுத்திய ஊரடங்கினால், ஸ்படிக லிங்க தரிசனத்துக்கு கடந்த மே மாதம் தடை விதிக்கப்பட்டது.
ஊரடங்கு தளர்வினால் தற்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், தினமும் காலை 5 முதல் 6 மணி வரை நடைபெறும் ஸ்படிக லிங்க தரிசனத்திற்கு இதுவரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கொரோனா தொற்று குறைந்ததன் எதிரொலியாக 140 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் நேற்று முதல் ஸ்படிக லிங்க தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை 4.30 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு பின்பு 5 மணிக்கு தொடங்கப்பட்ட ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு பக்தர்கள் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று காண வரிசையில் சென்றனர். 6 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் செய்தனர். நேற்று 1,600 பேர் ஸ்படிக லிங்க தரிசனம் செய்தனர்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்றும் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சாமி தரிசனம் செய்ய கோவிலின் முதல் பிரகாரம் மற்றும் கோவிலின் கிழக்கு வாசல் ரதவீதி சாலை உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேபோல் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட மற்றும் திதி தர்ப்பண பூஜை செய்யவும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவிலுக்கு வந்த பெரும்பாலான பக்தர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தனர். இதையடுத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தடைப்படுதல், தாமதத் திருமணம், இருதாரம், நோயுற்ற மனைவி போன்ற பிரச்சனைகள் எல்லாம் இருக்கும்.
ஒருவருடைய ஜாதகத்தில், செவ்வாய் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12ம் இடங்களில் நின்றால் தோஷம் என்று கூறப்படுகிறது. செவ்வாய் தோஷம் என்றால், செவ்வாய் தோஷமுள்ள ஒருவருடன்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது சரியல்ல.
செவ்வாய், தான் நிற்கும் ஸ்தானத்தையும், பார்க்கும் ஸ்தானங்களாகிய (4, 7, 8 ம் பார்வை) 3-மிடம், 6-மிடம், 7-மிடம், 8-மிடம், 2-மிடங்களையும் பாதிப்படையச் செய்து, திருமண வாழ்க்கைக்கு அவசியமான குடும்பம், வியாதி, களத்திரம், கவுரவம், மாங்கல்யம் ஆகியவற்றை வளரவிடாமல் செய்து விடுகிறார்.
இதில் சகோதரம், கடன், வியாதி, வீரியம், தைரியம், கவுரவம், அந்தஸ்து, ஆயுள் என பலவகையிலும் பாதிக்கப்படுவதால், தானாகவே கெட்டப் பெயர் ஏற்பட்டு, தீய நடவடிக்கைகளால் பெண்களால் வெறுக்கப்பட்டு, தகாத பழக்கங்களில் ஆரோக்கியம் குறைவது போன்றவை ஏற்படும். ஆயுள் குறையும். இது போல துன்பங்கள் ஏற்படுவதால் இதை செவ்வாய் தோஷம் என்கிறோம்.
இதனால் திருமணம் மட்டும் தடைபடாது. சகோதர, சகோதரிகளின் வெறுப்புக்கு ஆளாகுதல், வேலைக்காரர்களால் அவமானப்படுதல், பூர்வீக பூமியை விற்பது போன்றவைகளுக்கும் காரணமாகி விடும். குடியிருக்க வசதியான வீடு கூட, செவ்வாய் தோஷம் வந்தால் அமையாது. நண்பர்களே எதிரியாக மாறுவார்கள்.
2, 4, 7, 8ம் இடங்களில் ஒன்றில் செவ்வாய் அமரக் காரணம், நம் முன் ஜென்மப் பலன். அது, தனக்கு அல்லாத, இந்தப் பாவங்களுக்கெல்லாம், கலியுகம் என்பதால் உடனே தண்டனை கிடைக்காது. வயதான பின்போ, அல்லது அதற்கு முன்போ பிள்ளைகளுக்குத் துன்பம் நேர்ந்து ஒன்றும் உதவி செய்ய முடியாமல் மனம் வருந்தி ஏங்கும் நிலை ஏற்படும்.
நிராயுதபாணியாக எதிரிகளிடம் சிக்கிக் கொள்வார்கள். கடன் வாங்கிவிட்டுத் திருப்பி தர முடியாமல் திணறுவார்கள். அடிக்கடி குடியிருக்கும் வீட்டை மாற்றுவது, மனைவியிடம் கருத்து வேற்றுமை உண்டாவது, ஒரு பாவமும் செய்யாமல் பழி ஏற்பது போன்ற துன்பங்கள் செவ்வாய் தோஷத்தால்தான் ஏற்படும்.
திருமணம் தடைப்படுதல், தாமதத் திருமணம், இருதாரம், நோயுற்ற மனைவி, அல்லது மனைவி அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, தான் நோயுறுதல் இவையெல்லாம் நடக்கும். நாம் கண்ணால் காணக்கூடிய 5 கிரகங்களுள் ஒன்று செவ்வாயும் என்பதால், செவ்வாய் தோஷத்தின் தாக்கம் நம்மை நேரடியாகவே பாதிக்கும்.

இந்த ஆண்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 15-ந்தேதி வரைபிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாடவீதிகளில் சாமி வீதிஉலா ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 15-ந்தேதி வரைபிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாடவீதிகளில் சாமி வீதிஉலா ரத்து செய்யப்படுகிறது.
பிரம்மோற்சவ விழாவின்போது திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து மாடவீதியில் அமர்ந்து சாமி வீதி உலாவை கண்டு களிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு மாட வீதியில் சாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டதால் கல்யாண மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் வாகனத்தில் அலங்கார கொலுவிருக்க உள்ளனர். பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின்விளக்கு அலங்காரம் மற்றும் மலர்கள் பழங்கள் கொண்டு அலங்காரம் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
பிரமோற்சவ விழாவின் போது பக்தர்கள் வழக்கம்போல் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
பிரம்மோற்சவ விழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விழாவின்போது நடைபெற உள்ள வாகன சேவை பட்டியலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர் அதன்படி 7-ந்தேதி காலை கொடியேற்றம், மாலை பெரிய சேஷ வாகன சேவையும், 8-ந்தேதி சின்ன சேஷ வாகனம், மாலை அன்னப்பறவை வாகன சேவையும், 9-ந்தேதி சிம்ம வாகனம், மாலை முத்துப்பந்தல் வாகனமும், 10-ந்தேதி கல்ப விருட்ச வாகனம், மாலை சர்வ பூபால வாகனம், 11-ந்தேதி மோகினி அவதாரம், மாலை கருட வாகன சேவை நடைபெறுகிறது.
12-ந்தேதி அனுமந்த வாகனம், மாலை யானை வாகனம், 13-ந்தேதி சூரிய பிரபை வாகனம், மாலை சந்திர பிரபை வாகனம், 14-ந்தேதி காலை சர்வ பூபால வாகனம் இரவு குதிரை வாகனமும், 15-ந் தேதி காலை தெப்ப குளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் இக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். கோவிலின் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் இக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு வருகிறது. ஆகையால் கடந்த 24-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவிலின் கோபுர நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு இருந்தன.
பக்தர்கள் ராஜகோபுரத்தின் முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர். 3 நாட்களுக்கு பிறகு நேற்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்து ஏராளமான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

செப்டம்பர் மாதம் 28-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 4-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
28-ம் தேதி செவ்வாய் கிழமை :
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல்
* சந்திராஷ்டமம் - விசாகம், அனுஷம்
29-ம் தேதி புதன் கிழமை :
* லெட்சுமி பூஜை
* தேய்பிறை அஷ்டமி
* மத்யாஷ்டமி பூஜை
* மகாவீய தீபாதம்
* சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை
30-ம் தேதி வியாழக்கிழமை :
* தேய்பிறை நவமி
* அவிதவா நவமி
* அமிர்த யோகம்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை
* சந்திராஷ்டமம்- கேட்டை, மூலம்
1-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை
* திருவிடைமருதூர் ஸ்ரீபிரஹத்குசாம்பிகை புறப்பாடு
* சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்
2-ம் தேதி சனிக்கிழமை :
* ஏகாதசி
* கரிநாள்
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் - உத்திராடம்
3-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சித்தயோகம்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை
* சந்திராஷ்டமம் - திருவோணம்
4-ம் தேதி திங்கள் கிழமை :
* பிரதோஷம்
* மாத சிவராத்திரி
* கலியுகாதி
* கெஜ கௌரி விரதம்
* தஞ்சை பெரிய கோவிலில் மாலை நந்தீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனை
* திருமெய்யம் ஆண்டாள் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - அவிட்டம்

வழக்கமாக திருவிழாவின் போது கிராம பகுதிகளில் உள்ள தசரா குழுக்களுக்கு கொடியேற்றத்திற்கு பிறகு ஒவ்வொரு குழு சார்பாக நிர்வாகிகள் காப்பு எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெறும்.
தூத்துக்குடி :
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:-
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா இந்த ஆண்டு வருகிற 6.10.2021 முதல் 16.10.2021 வரை 11 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சத்துக்கு மேல் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதவழிபாட்டுத் தலங்களை திறக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி கோவிலின் உள்ளே மற்ற நாட்களில் பக்தர்கள் வந்து வழிபட எந்த தடையும் இல்லை. அதேபோன்று கோவிலுக்கு வெளிப்புறம் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை.
இதனால் தசரா திருவிழா கொடியேற்றம் 6.10.21 அன்றும், சூரசம்ஹார நிகழ்ச்சி 15.10.21 அன்றும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும். இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
அதேபோல் 16.10.2021 அன்று திருவிழா முடியும் நாள் அன்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 7, 11, 12, 13, 14-ந் தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் வர அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் மற்றும் நேரடியாக வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முறை கடற்கரை பகுதியில் தங்குவது, கடைகள் அமைப்பது போன்ற எதற்கும் அனுமதி இல்லை. மேலும் கடற்கரை பகுதியில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்த அனுமதி இல்லை.
மேலும் பக்தர்கள் கோவிலுக்கு வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த பகுதியில் தங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. வழக்கமாக திருவிழாவின் போது கிராம பகுதிகளில் உள்ள தசரா குழுக்களுக்கு கொடியேற்றத்திற்கு பிறகு ஒவ்வொரு குழு சார்பாக நிர்வாகிகள் காப்பு எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெறும். தற்போது பதிவு செய்யப்பட்ட தசரா குழுக்களில் ஒரு குழுவுக்கு ஒரு பிரதிநிதி என்ற வகையில் வந்து தங்கள் குழுவுக்கான காப்பு கயிறுகளை கோவில் அலுவலகத்தில் உரிய அத்தாட்சி கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
பதிவு செய்யாத தசரா குழுக்கள் இருப்பின் கோவில் நிர்வாகத்தை உடனடியாக அணுகி 4.10.2021-க்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் கோவில் நிர்வாகத்தின் மூலம் புதிதாக பதிவு செய்தவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு காப்புகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் வேடம் அணிந்து மேளதாளங்களுடன் கோவில் பகுதிக்கு வருகை தர அனுமதி இல்லை. பக்தர்கள் தங்கள் ஊர்களிலேயே காப்பு அணிந்து வேடமிட்டு விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிக்கலாம்.. தசரா திருவிழா: குலசை கோவில் முன்பு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்
தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் பிள்ளை திருத்தல புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. விழா நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.
தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் பிள்ளை திருத்தல புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை செட்டிச்சார் விளை புனித குழந்தைஏசு தெரசாள் ஆலய பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். திருத்தல அதிபர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் தாமஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார்.
3-ம் நாள் திருவிழா திருப்பலி நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதற்கு குழித்துறை மறை மாவட்ட செயலாளர் ரசல் ராஜ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி வைக்கிறார். தொடர்ந்து தேர் பவனி நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை திருத்தல அதிபரும், வட்டார முதல்வருமான மரிய ராஜேந்திரன், அருட்பணியாளர் மரியதாசன், பங்கு பேரவை உதவித் தலைவர் புரோடி மில்லர், செயலாளர் ஜெகதா, பொருளாளர் ஜான் பென்னட், துணைச் செயலாளர் கண்ணதாசன், வின்சன்ட் ராஜா மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர். திருவிழா 3 தினங்களிலும் அரசு வழிகாட்டுதல் முறைப்படி, சமூக இடைவெளியுடன், மறைமாவட்ட விதிமுறைப்படி நடைபெறுமென பங்கு திருத்தல அதிபரும், பங்கு பேரவை நிர்வாகிகளும் தெரிவித்தனர்.