search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேற்றிய குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    கடந்த இரண்டு வருடக்ளாக கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு காரணமாக பிரம்மோற்சவ விழா நடைபெறாமல் இருந்தது.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கும், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான இன்று பவழக்கால் சப்பரத்தில் சுப்பிரமணயசுவாமி எழுந்தருளி நான்கு ராஜவீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ந்தேதி மயில்வாகன வீதி உலாவும், 9-ந்தேதி திருத்தேர் உற்சவமும், 13-ந்தேதி வள்ளி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

    16-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
    மாசாணியம்மன் கோவிலில் மாசாணியம்மன், 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து, கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறார்.
    கோயம்புத்தூரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மாசாணியம்மன் கோவில். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் ஆனைமலை என்ற ஊராகும். உப்பாற்றின் வடகரையில் இருக்கிறது இந்த ஆலயம்.

    மயானத்தில் சயன கோலத்தில் இருப்பவள் என்பதால் இந்த அன்னைக்கு ‘மயானசயனி’ என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே மருவி ‘மாசாணி’ என்றானதாக சொல்கிறார்கள். இங்கு மாசாணியம்மன், 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து, கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறார்.

    ருதுவாகும் பெண்கள் சந்திக்கும் பல்வேறு வகையான உடல் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தெய்வமாக, மாசாணியம்மன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் தை மாதம் 18 நாட்கள் நடைபெறும் பெருவிழா சிறப்புமிக்கது.
    பெரிய பாதிப்பு இருந்து தசா புக்தியும் சாதகமாக அமையாதவர்களுக்கு கால தாமத திருமணம் நடக்கும் அல்லது திருமணம் நடக்காது அல்லது திருமண வாழ்க்கையில் தோல்வியை சந்திப்பார்கள்.
    ஒருவருக்கு ஜோதிட ரீதியாக திருமணமாகும் காலம் பற்றி பார்க்கலாம்.

    1. ஒருவருக்கு ஏழாம் அதிபதி தசாபுத்திகள் நடப்பில் இருந்து, கோச்சாரத்தில் குரு ஏழாம் இடத்தை, ஏழாம் அதிபதியை பார்க்கும் பொழுது திருமணமாகும்.
     
    2. இரண்டாம் அதிபதியின் தசாபுத்திகள் நடைபெறும் காலத்தில், களத்திர ஸ்தானத்தோடு குரு தொடர்பு கொள்ளும்பொழுது திருமணமாகும்.

    3. எவ்வளவு கடுமையான தோஷம் இருந்தாலும் சுக்கிர தசா, புத்திகளில் திருமணமாகும். சாத்தியக் கூறுகள் மிகுதி.

    4.ஏழாம் அதிபதி ராகு ,கேதுக்களின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தால், ராகு, கேதுக்களின் தசா புத்திகள் திருமணத்தை நடத்தித் தரும்.
     
    5. ஏழாமிடத்தில் ராகு கேதுக்கள் இருந்தால், தான் நின்ற களத்திர ஸ்தானத்து பலன்களை ராகு ,கேதுவே எடுத்துச் செய்யும்.

    6. விரைவில் குழந்தை பெற்று குடும்பம் அமையக்கூடிய, நட்சத்திர சாரத்தை, ராகு கேது பெற்றிருந்தாலும், அந்த காலகட்டங்களிலும் சிலருக்கு திருமணம் நடக்கும்.
     
    7. களத்திர ஸ்தானாதிபதியின், நட்சத்திர சாரம் வாங்கிய கிரகத்தின் தசா,புத்திகளும் திருமணத்தை நடத்தி தரும்.

    8. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியின் தசா புத்திகளும் சிலருக்கு திருமணம் நடத்தும்.

    - இந்த விதிகளின்படி பெரிய பாதிப்பு இல்லாத களத்திர தோஷத்திற்கு திருமணம் நடக்கும்.திருமண வாழ்க்கை பாதிப்பைத் தராது. பெரிய பாதிப்பு இருந்து தசா புக்தியும் சாதகமாக அமையாதவர்களுக்கு கால தாமத திருமணம் நடக்கும் அல்லது திருமணம் நடக்காது அல்லது திருமண வாழ்க்கையில் தோல்வியை சந்திப்பார்கள்.

    பாரிகாரங்கள்

    பொதுவாக எந்த தோஷமாக இருந்தாலும் எல்லா காலகட்டங்களிலும் பாதிப்பை தராது. தோஷத்துடன் தொடர்புடைய கிரகங்களின் தசா, புக்தி காலங்களில் மட்டுமே பாதிப்பைத் தரும். வீரியம் கடுமையாக இருந்தால் திருமணம் நிச்சயமான நாள் முதல் சிறு சிறு பிரச்சினை தோன்றி முடிவில் எதிர்பாராத பின் விளைவுகளைத் தரும். எனவே ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால், அந்தக் களத்திர தோஷம் எந்த காலகட்டங்களில் செயல்படும், என்பதை அறிந்து, அதற்கேற்ற தசா புத்தி அமைப்புள்ள ஜாதகத்தை இணைக்க வேண்டும்.

    அதாவது திருமணமான தம்பதிகளுக்கு குறைந்தது 25 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை சாதகமான தசா புத்திகள் நடக்க வேண்டும். மேலும் திருமணத்திற்கு முன்னரே சம்பந்தப்பட்ட கிரகத்திற்கு உரிய வழிபாட்டு பரிகார முறைகளை மேற்கொள்வது நல்லது.

    களத்திர தோஷமுடைய ஜாதகத்திற்கு அதே அமைப்புடைய ஜாதகத்தை பொருத்துவதே நிரந்தர தீர்வு. அத்துடன் திருமண வாழ்வில் எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்வதே மிகச் சிறந்த பரிகாரமாக அமையும்.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    தமிழகத்தில் கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கம் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி மாலை 5.30 மணி அளவில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் மதியம் 12.30 மணியிலிருந்து 1.30 மணிவரை ஸ்ரீதேவி பூதேவி மலையப்ப சாமிக்கு சீனிவாச கல்யாணம் நடக்கிறது.

    அதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட ரூ.ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 2 பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம்

    எனினும் ஏழை எளிய பக்தர்கள் பங்கேற்று வழிபட முடியாததால் கோவிலுக்கு வெளியே வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக சீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச கல்யாண உற்சவம் என்ற ஒரு திட்டத்தை தொடங்கி உள்ளது.

    அந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கம் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி மாலை 5.30 மணி அளவில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்திரவதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா அறக்கட்டளை சார்பில் கொடிப்பட்டம் விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிற்றை ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 11-ந்தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம், பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதியுலா வருதல், 12-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு, இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா, 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
    சில குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக, எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் இந்த விரதத்தை அனுசரித்து கொண்டு வருகின்றனர்.
    ஏதாவது ஒரு தமிழ் மாசத்திலே வர்ற மூணாவது அல்லது நாலாவது வெள்ளிக்கிழமையிலே விரதத்தை தொடங்க வேண்டும். அன்னிக்கு விடியற்காலையிலே எழுந்திருச்சு மஞ்சள் பூசி குளிச்சுட்டு நெற்றியிலே குங்குமம் வெச்சுக்கணும். பசுஞ்சாணம் கரைச்ச தண்ணியால வாசல் தெளிக்கணும். ஃப்ளாட்டிலே இருக்கறவங்க பாவனையா அந்தத் தண்ணியைத் தெளிச்சுக்கலாம். அழகா ஒரு கோலம் போட்டு, அதுக்கு செம்மண் பார்டர் போடலாம்.

    வீடு முழுசும் சுத்தமாகப் பெருக்கித் துடைச்சு சுத்தப்படுத்திக்கணும். பூஜையறையையும் துடைச்சு தூய்மைப்படுத்திக்கோங்க. அங்கே சாம்பிராணி புகை போடலாம். வாசல்ல மாவிலைத் தோரணம் கட்டி அழகுபடுத்தலாம். ஒட்டு மொத்தமா வீடு பூராவும் அன்னிக்கு பளிச்னு இருக்கணும். அன்னிக்குப் பூராவும் லக்ஷ்மி ஸ்லோகங்களைச் சொல்லிக்கிட்டே இருக்கலாம்.

    அல்லது சி.டியோ, ஆடியோ கேசட்டோ போட்டுக் கேட்கலாம். லக்ஷ்மி ஸ்லோகங்கள் மட்டுமில்லாம தெரிந்த அம்பாள் பாடல்களையும் பாடலாம். அன்னிக்குப் பூரா சிம்பிளா பால், பழம்னு மட்டும் சாப்பிட்டு விரதமிருக்கலாம். முடியாதவங்க அல்லது அவரவர் உடல்நலத்தைப் பொறுத்து பகல்ல ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுக்கலாம்..

    இந்த விரதத்தை ஆரம்பிச்ச பிறகு அடுத்து வர்ற பதினோரு வெள்ளிக்கிழமைகள்ல இதைத் தொடர வேண்டும். நடுவே ஏதேனும் காரணத்துக்காக ஏதாவதொரு வெள்ளிக் கிழமை முடியாமப் போனா, அதற்கடுத்த வெள்ளிக்கிழமையிலேர்ந்து தொடரலாம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சாயங்காலம் பக்கத்தில் இருக்கற அம்பாள் அல்லது பெருமாள் கோயில்ல இருக்கற தாயார் சந்நதிக்குப் போய் வரணும்.

    இதைக் கட்டாயமாக முதல் வெள்ளிக்கிழமை விரதத்தன்னைக்காவது செய்யணும். கோயிலுக்குப் போய் வந்தபிறகு, வீட்ல பூஜையறையிலே முடிந்த பிரசாதங்களைச் செய்து (சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி மாதிரி ஏதாவது) நைவேத்யம் செய்துக்கணும். அவங்கவங்க வசதிக்கேத்தா மாதிரி சுமங்கலிகளை அழைச்சு, அவங்களுக்கு குங்குமம், மஞ்சள், பூ, பழம், வெற்றிலை பாக்கு, ரவிக்கைத் துணின்னு கொடுக்க வேண்டும்.

    இதே மாதிரி 12 வெள்ளிக்கிழமைகளும் செய்ய வேண்டும். 12-வது வெள்ளிக்கிழமையான்னு ரொம்பவும் டென்ஷனாயிடாதீங்க. எத்தனை வெள்ளிக்கிழமை விரதம் இருந்தாலும் அந்த ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முழுமனதுடன் செய்ய வேண்டும். சில குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக, எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் இந்த விரதத்தை அனுசரித்து கொண்டு வருகின்றனர்.

    இப்படி விரதம் கடைப்பிடிச்சா சகல சௌபாக்கியங்களையும் நீங்கள் அடையலாம்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை தொடர்ந்து ராஜகோபுரத்தில் சாரம் பிரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நிலையிலும் மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அந்த சிற்பங்களுக்கு பல மாதங்களாக வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வந்தது. இப்பணி சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து அடுத்த மாதம்(ஜூலை) 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    இதன் ஒரு கட்டமாக ராஜகோபுரத்தின் தரை தளத்தில் இருந்து ஏழு நிலைகள் வரை ஆயிரக்கணக்கான சவுக்குக் கட்டைகளால் கட்டப்பட்ட சாரம் பிரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணியில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.

    ஸ்ரீமத் பாகவதம் சொல்லும் கண்ணனின் திருக்கதையைச் சுருக்கமாகச் சொல்லும் ஒரு சின்ன சுலோகம் இது.
    ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
    கோபீ க்ருஹே வர்த்தனம்
    மாயா பூதன ஜீவிதாபஹரணம்
    கோவர்த்தனோத்தாரணம்
    கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம்
    குந்தீ ஸுதா பாலனம்
    ஏதத் பாகவதம் புராண கதிதம்

    - ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

    மீனாட்சி அம்மன் கோவில் புதுமண்டபத்தை சுற்றி நீர் நிரப்பும் பணி நடந்தது. வசந்த உற்சவ விழா இன்று தொடங்குகிறது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடைபெறும். 1635-ம் ஆண்டு மன்னர் திருமலைநாயக்கர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபம் என்றும் அழைப்பர். 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட இந்த மண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மேலும் மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.

    வைகாசி வசந்த உற்சவத்தின் போது மீனாட்சி-சுந்தரேசுவரர் இந்த மேடையில் எழுந்தருளி காட்சி அளிப்பர். இந்த விழா நடக்கும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தை தணிக்க அந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்காக சிறிய அகழி போன்று முற்காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீராழி மண்டபம் என்றும் அழைப்பர்.

    விழா நாட்களை தவிர மற்ற காலங்களில் இந்த மண்டபம் பக்தர்கள் ஓய்வு எடுக்கும் இடமாக மாறியது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, அங்கு பூஜை பொருள் கடைகள், துணிக்கடைகள், புத்தக கடைகள், இரும்பு மற்றும் பாத்திரக்கடைகள், பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் செயல்பட்டு வந்தன. வணிக மண்டபமாக மாறியதால் அதன் சிறப்புகள் நாளடைவில் பக்தர்களுக்கு தெரியாமல் போனது. எனவே தொல்லியல், சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலையத்துறை இணைந்து புதுமண்டபத்தையும், அங்குள்ள கலை நயமிக்க சிலைகள், தூண்களை பக்தர்கள் காணும் வகையில் அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்தன. இதையடுத்து கடைகள் குன்னத்தூர் சத்திரத்துக்கு மாற்றப்பட்டன.

    இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது போன்று மண்டபத்தை சுற்றிலும் நீர் நிரப்பி, பாரம்பரிய வழக்கப்படி நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன.

    அதன்படி விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. 1-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை மீனாட்சி, சுந்தரேசுவரர், விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் எனும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு தினமும் மாலை 6 மணி அளவில் நடக்கும். அதை தொடர்ந்து கோவிலில் இருந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பட்டு புது மண்டபம் சென்று, அங்கு வீதி உலா- தீபாராதனை நடத்தப்படும்.

    பின்பு 4 சித்திரை வீதிகளிலும் சுவாமி-அம்மன் வலம் வந்து கோவிலை சென்றடைவர். 12-ந்தேதி அன்று காலையிலேயே புதுமண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாசலம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    விழாவுக்காக மண்டபத்தை சுற்றிலும் சோதனை முறையில் தண்ணீர் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. எனவே தண்ணீர் நிற்கும் பாதைகளை சரி செய்து அங்கு நேற்று மதியம் முதல் 30-க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரப்பப்படுவதால் அந்த தண்ணீர் அங்கு சரிவர நிற்கவில்லை. எனவே அதற்கான காரணங்களை கண்டறிந்து என்ஜினீயர்கள் மூலம் அதனை சீரமைக்கும் பணியை செய்ய உள்ளனர். மேலும் மண்டபம் முழுவதும் தோரணங்கள் கட்டியும், வண்ண விளக்குகள் ஒளிர விட்டு அழகுற காட்சி அளிக்கிறது. இனி வரும் காலத்தில் வசந்த உற்சவ திருவிழா சிறப்பான முறையில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்புரத்தில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
    விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்புரத்தில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குத்தந்தை எட்வர்ட் ராயன், பாளை.புனித சவேரியார் கல்லூரி கலைமனைகளின் பொருளாளர் ராய்ஸ் அடிகளார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் இறைமக்கள், புனித அந்தோணியார் நற்பணி மன்றம், இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு திருப்பலி நடைபெறும். 5-ந் தேதி தியானம், திருப்பலியை தொடர்ந்து நற்கருணை பவனி நடக்கிறது. 6-ந் தேதி இரவு 9 மணிக்கு புனிதரின் தேர்பவனி, 7-ந் தேதி காலை 9 மணிக்கு கொடி இறக்கம், மதியம் அசன விருந்து நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை புனித அந்தோணியார் நற்பணி மன்றம், ஆலய நிர்வாகிகள், ஜெயராஜ் சுவாமிதாஸ், அந்தோணி மற்றும் நகர்மன்ற உறுப்பினர் ஏசு ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.
    அம்பாளின் மேன்மை அடங்கிய பல திருத்தலங்கள், தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    அம்பாளை வழிபடும் சமயத்தை ‘சாக்தம்’ என்று அழைப்பார்கள். அம்மனையே, இந்த உலகத்தின் மூலமுதற்கடவுளாகக் கொண்டது, அந்த சமயத்தின் கொள்கை. அம்பாளின் மேன்மை அடங்கிய பல திருத்தலங்கள், தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    மதுரை மீனாட்சி

    மதுரையின் முக்கிய அடையாளமே, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்தான். வைகை ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் 14 கோபுரங்களும், 5 நுழைவு வாசல்களும் கொண்டு பிரமாண்டமாக அமைந்த திருக்கோவில் இது. சிவபெருமானின் திருவிளையாடல்கள் அனைத்தும் நடைபெற்றது மதுரை நகர் என்றாலும், இங்கு மீனாட்சியோடு இணைந்து சுந்தரேஸ்வரரும் கோவில் கொண்டுள்ளார் என்றாலும், இந்த ஆலயத்தில் அம்பாளுக்கே முதல் மரியாதை. தங்கத் தேர் உள்ள ஆலயங்களில், மதுைர மீனாட்சி அம்மன் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் கடம்ப மரமும், வில்வ மரமும் தல விருட்சங்களாக உள்ளன.

    காஞ்சி காமாட்சி

    காஞ்சிபுரம் என்றாலே அங்கு வீற்றிருக்கும் காமாட்சி அம்மன்தான் அனைவரின் நினைவுக்கும் வருவார். அந்த அளவுக்கு பக்தர்களின் மனதில் இடம் பிடித்தவர், காமாட்சி தேவி. காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் அமைந்த இந்த ஆலயம், 51 சக்தி பீடங்களில் ‘காமகோடி சக்தி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. இத்தல அம்பிகை, தங்க விமானத்தின் கீழ் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும், இந்த அன்னையே பிரதான சக்தி தேவியாவார். அதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், தனியாக அம்பாள் சன்னிதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் தல விருட்சம் செண்பக மரம் ஆகும்.

    கன்னியாகுமரி பகவதிதேவி

    முக்கடல் சங்கமிக்கும், தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்த ஊர், கன்னியாகுமரி. இங்கு கடற்கரையோரமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள், பகவதி அம்மன். இந்த அம்பாள் கொலுவிருக்கும் ஆலயம், 51 சக்தி பீடங்களில் ‘குமரி சக்தி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. இது அம்பாளின் முதுகுப் பகுதி விழுந்த சக்தி பீடமாக கருதப்படுகிறது. உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்லும் சிறப்பு மிக்க ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. பரசுராமர், பகவதி அம்மனின் திருவுருவத்தை இந்த இடத்தில் அமைத்து வழிபட்டிருக்கிறார். இங்குள்ள அம்பாள், குமரிப் பெண்ணாக (திருமணமாகாத கன்னிப் பெண்ணாக) இருந்து அருள்புரிகிறார். பாணாசுரை அழிப்பதற்காக, தேவி பராசக்தியே பகவதி அம்மனாக அவதரித்ததாக தல புராணம் சொல்கிறது.

    சமயபுரம் மாரியம்மன்

    திருச்சியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சமயபுரம் என்ற ஊர். இங்குள்ள மாரியம்மன், ஊர் பெயரோடு சேர்த்து ‘சமயபுரம் மாரியம்மன்’ என்றே அழைக்கப்படுகிறார். கண்நோய் தீர்க்கும் சிறப்பு மிக்க தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. வேப்பிலை ஆடை தரிப்பது, தீச்சட்டி ஏந்தி அம்பாளை வழிபடுவது, கண்மலர் வாங்கி காணிக்கை செலுத்துவது போன்றவை, இங்கு முக்கியமான நேர்த்திக்கடன்களாக இருக்கின்றன. மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் ‘பூச்சொரிதல்’ விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. அதே போல் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஆண்டு தோறும் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமையில், தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிப்பதைப் பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வேம்பு.

    பொள்ளாச்சி மாசாணியம்மன்

    கோயம்புத்தூரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மாசாணியம்மன் கோவில். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் ஆனைமலை என்ற ஊராகும். உப்பாற்றின் வடகரையில் இருக்கிறது இந்த ஆலயம். மயானத்தில் சயன கோலத்தில் இருப்பவள் என்பதால் இந்த அன்னைக்கு ‘மயானசயனி’ என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே மருவி ‘மாசாணி’ என்றானதாக சொல்கிறார்கள். இங்கு மாசாணியம்மன், 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து, கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறார். ருதுவாகும் பெண்கள் சந்திக்கும் பல்வேறு வகையான உடல் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தெய்வமாக, மாசாணியம்மன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் தை மாதம் 18 நாட்கள் நடைபெறும் பெருவிழா சிறப்புமிக்கது.
    திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் மகாலிங்கேஸ்வர் சன்னிதி முன்பாக உள்ள பாவை விளக்கு மிகவும் நேர்த்தியானது. அந்தச் சிலை உள்ள பீடத்தின் அடியில் பொறிக்கப்பட்டுள்ளது.
    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில், மகாலிங்க சுவாமி திருக்கோவில் இருக்கிறது. கலையழகுடன் கூடிய தமிழக ஆலயங்கள் பலவற்றுள் இதற்கும் முக்கிய இடம் உண்டு. அதிலும் மகாலிங்கேஸ்வர் சன்னிதி முன்பாக உள்ள பாவை விளக்கு மிகவும் நேர்த்தியானது. புடவை அணிந்து, சந்திர பிரபை, சூரிய பிரபை, நெற்றிச் சுட்டி, தோள்வளை, முத்தாரம், அட்டிகை, கைவளை, கடகம், இடுப்பணி, கால் கொலுசு, மெட்டி என்று தலை முதல் பாதம் வரை மங்கல ஆபரணங்கள் சூடி, கையில் விளக்குடன் புன்னகை பூத்த முகத்துடன் நின்றிருக்கும் இந்த பாவை விளக்குப் பெண்ணின் திருமேனி அழகு நிறைந்தது.

    பாவை விளக்கில் உள்ள பெண்ணைப் பற்றிய குறிப்புகள், அந்தச் சிலை உள்ள பீடத்தின் அடியில் பொறிக்கப்பட்டுள்ளது. மராட்டிய அரச குலத்தைச் சேர்ந்த அம்முனு பாய் என்ற பெண்மணியே, அந்தப் பாவை. தஞ்சை அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரதாப சிம்மன் என்ற இளவரசனின் மாமன் மகளே, இந்த அம்முனு. அவள் தன் மாமன் மகனை திருமணம் செய்வதற்காக, லட்ச தீபம் ஏற்றி, மகாலிங்கேஸ்வரர் அருள் பெற்றதாகவும், வேண்டுதல் நிறைவேறியதும், தன்னையே பாவை விளக்காக வடித்து, இறைவனுக்கு சமர்ப்பித்ததாகவும் அந்த குறிப்பு சொல்கிறது.
    ×