search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    களத்திர தோஷம்
    X
    களத்திர தோஷம்

    களத்திர தோஷத்திற்கு திருமணம் நடக்குமா? பரிகாரம் என்ன?

    பெரிய பாதிப்பு இருந்து தசா புக்தியும் சாதகமாக அமையாதவர்களுக்கு கால தாமத திருமணம் நடக்கும் அல்லது திருமணம் நடக்காது அல்லது திருமண வாழ்க்கையில் தோல்வியை சந்திப்பார்கள்.
    ஒருவருக்கு ஜோதிட ரீதியாக திருமணமாகும் காலம் பற்றி பார்க்கலாம்.

    1. ஒருவருக்கு ஏழாம் அதிபதி தசாபுத்திகள் நடப்பில் இருந்து, கோச்சாரத்தில் குரு ஏழாம் இடத்தை, ஏழாம் அதிபதியை பார்க்கும் பொழுது திருமணமாகும்.
     
    2. இரண்டாம் அதிபதியின் தசாபுத்திகள் நடைபெறும் காலத்தில், களத்திர ஸ்தானத்தோடு குரு தொடர்பு கொள்ளும்பொழுது திருமணமாகும்.

    3. எவ்வளவு கடுமையான தோஷம் இருந்தாலும் சுக்கிர தசா, புத்திகளில் திருமணமாகும். சாத்தியக் கூறுகள் மிகுதி.

    4.ஏழாம் அதிபதி ராகு ,கேதுக்களின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தால், ராகு, கேதுக்களின் தசா புத்திகள் திருமணத்தை நடத்தித் தரும்.
     
    5. ஏழாமிடத்தில் ராகு கேதுக்கள் இருந்தால், தான் நின்ற களத்திர ஸ்தானத்து பலன்களை ராகு ,கேதுவே எடுத்துச் செய்யும்.

    6. விரைவில் குழந்தை பெற்று குடும்பம் அமையக்கூடிய, நட்சத்திர சாரத்தை, ராகு கேது பெற்றிருந்தாலும், அந்த காலகட்டங்களிலும் சிலருக்கு திருமணம் நடக்கும்.
     
    7. களத்திர ஸ்தானாதிபதியின், நட்சத்திர சாரம் வாங்கிய கிரகத்தின் தசா,புத்திகளும் திருமணத்தை நடத்தி தரும்.

    8. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியின் தசா புத்திகளும் சிலருக்கு திருமணம் நடத்தும்.

    - இந்த விதிகளின்படி பெரிய பாதிப்பு இல்லாத களத்திர தோஷத்திற்கு திருமணம் நடக்கும்.திருமண வாழ்க்கை பாதிப்பைத் தராது. பெரிய பாதிப்பு இருந்து தசா புக்தியும் சாதகமாக அமையாதவர்களுக்கு கால தாமத திருமணம் நடக்கும் அல்லது திருமணம் நடக்காது அல்லது திருமண வாழ்க்கையில் தோல்வியை சந்திப்பார்கள்.

    பாரிகாரங்கள்

    பொதுவாக எந்த தோஷமாக இருந்தாலும் எல்லா காலகட்டங்களிலும் பாதிப்பை தராது. தோஷத்துடன் தொடர்புடைய கிரகங்களின் தசா, புக்தி காலங்களில் மட்டுமே பாதிப்பைத் தரும். வீரியம் கடுமையாக இருந்தால் திருமணம் நிச்சயமான நாள் முதல் சிறு சிறு பிரச்சினை தோன்றி முடிவில் எதிர்பாராத பின் விளைவுகளைத் தரும். எனவே ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால், அந்தக் களத்திர தோஷம் எந்த காலகட்டங்களில் செயல்படும், என்பதை அறிந்து, அதற்கேற்ற தசா புத்தி அமைப்புள்ள ஜாதகத்தை இணைக்க வேண்டும்.

    அதாவது திருமணமான தம்பதிகளுக்கு குறைந்தது 25 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை சாதகமான தசா புத்திகள் நடக்க வேண்டும். மேலும் திருமணத்திற்கு முன்னரே சம்பந்தப்பட்ட கிரகத்திற்கு உரிய வழிபாட்டு பரிகார முறைகளை மேற்கொள்வது நல்லது.

    களத்திர தோஷமுடைய ஜாதகத்திற்கு அதே அமைப்புடைய ஜாதகத்தை பொருத்துவதே நிரந்தர தீர்வு. அத்துடன் திருமண வாழ்வில் எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்வதே மிகச் சிறந்த பரிகாரமாக அமையும்.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    Next Story
    ×