search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    மகாலட்சுமி
    X
    மகாலட்சுமி

    சகல சௌபாக்கியங்களையும் அருளும் 12 வெள்ளிக்கிழமை விரதம்

    சில குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக, எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் இந்த விரதத்தை அனுசரித்து கொண்டு வருகின்றனர்.
    ஏதாவது ஒரு தமிழ் மாசத்திலே வர்ற மூணாவது அல்லது நாலாவது வெள்ளிக்கிழமையிலே விரதத்தை தொடங்க வேண்டும். அன்னிக்கு விடியற்காலையிலே எழுந்திருச்சு மஞ்சள் பூசி குளிச்சுட்டு நெற்றியிலே குங்குமம் வெச்சுக்கணும். பசுஞ்சாணம் கரைச்ச தண்ணியால வாசல் தெளிக்கணும். ஃப்ளாட்டிலே இருக்கறவங்க பாவனையா அந்தத் தண்ணியைத் தெளிச்சுக்கலாம். அழகா ஒரு கோலம் போட்டு, அதுக்கு செம்மண் பார்டர் போடலாம்.

    வீடு முழுசும் சுத்தமாகப் பெருக்கித் துடைச்சு சுத்தப்படுத்திக்கணும். பூஜையறையையும் துடைச்சு தூய்மைப்படுத்திக்கோங்க. அங்கே சாம்பிராணி புகை போடலாம். வாசல்ல மாவிலைத் தோரணம் கட்டி அழகுபடுத்தலாம். ஒட்டு மொத்தமா வீடு பூராவும் அன்னிக்கு பளிச்னு இருக்கணும். அன்னிக்குப் பூராவும் லக்ஷ்மி ஸ்லோகங்களைச் சொல்லிக்கிட்டே இருக்கலாம்.

    அல்லது சி.டியோ, ஆடியோ கேசட்டோ போட்டுக் கேட்கலாம். லக்ஷ்மி ஸ்லோகங்கள் மட்டுமில்லாம தெரிந்த அம்பாள் பாடல்களையும் பாடலாம். அன்னிக்குப் பூரா சிம்பிளா பால், பழம்னு மட்டும் சாப்பிட்டு விரதமிருக்கலாம். முடியாதவங்க அல்லது அவரவர் உடல்நலத்தைப் பொறுத்து பகல்ல ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுக்கலாம்..

    இந்த விரதத்தை ஆரம்பிச்ச பிறகு அடுத்து வர்ற பதினோரு வெள்ளிக்கிழமைகள்ல இதைத் தொடர வேண்டும். நடுவே ஏதேனும் காரணத்துக்காக ஏதாவதொரு வெள்ளிக் கிழமை முடியாமப் போனா, அதற்கடுத்த வெள்ளிக்கிழமையிலேர்ந்து தொடரலாம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சாயங்காலம் பக்கத்தில் இருக்கற அம்பாள் அல்லது பெருமாள் கோயில்ல இருக்கற தாயார் சந்நதிக்குப் போய் வரணும்.

    இதைக் கட்டாயமாக முதல் வெள்ளிக்கிழமை விரதத்தன்னைக்காவது செய்யணும். கோயிலுக்குப் போய் வந்தபிறகு, வீட்ல பூஜையறையிலே முடிந்த பிரசாதங்களைச் செய்து (சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி மாதிரி ஏதாவது) நைவேத்யம் செய்துக்கணும். அவங்கவங்க வசதிக்கேத்தா மாதிரி சுமங்கலிகளை அழைச்சு, அவங்களுக்கு குங்குமம், மஞ்சள், பூ, பழம், வெற்றிலை பாக்கு, ரவிக்கைத் துணின்னு கொடுக்க வேண்டும்.

    இதே மாதிரி 12 வெள்ளிக்கிழமைகளும் செய்ய வேண்டும். 12-வது வெள்ளிக்கிழமையான்னு ரொம்பவும் டென்ஷனாயிடாதீங்க. எத்தனை வெள்ளிக்கிழமை விரதம் இருந்தாலும் அந்த ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முழுமனதுடன் செய்ய வேண்டும். சில குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக, எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் இந்த விரதத்தை அனுசரித்து கொண்டு வருகின்றனர்.

    இப்படி விரதம் கடைப்பிடிச்சா சகல சௌபாக்கியங்களையும் நீங்கள் அடையலாம்.
    Next Story
    ×