search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பாவை விளக்கு
    X
    பாவை விளக்கு

    பாவை விளக்கு வரலாறு தெரியுமா?

    திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் மகாலிங்கேஸ்வர் சன்னிதி முன்பாக உள்ள பாவை விளக்கு மிகவும் நேர்த்தியானது. அந்தச் சிலை உள்ள பீடத்தின் அடியில் பொறிக்கப்பட்டுள்ளது.
    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில், மகாலிங்க சுவாமி திருக்கோவில் இருக்கிறது. கலையழகுடன் கூடிய தமிழக ஆலயங்கள் பலவற்றுள் இதற்கும் முக்கிய இடம் உண்டு. அதிலும் மகாலிங்கேஸ்வர் சன்னிதி முன்பாக உள்ள பாவை விளக்கு மிகவும் நேர்த்தியானது. புடவை அணிந்து, சந்திர பிரபை, சூரிய பிரபை, நெற்றிச் சுட்டி, தோள்வளை, முத்தாரம், அட்டிகை, கைவளை, கடகம், இடுப்பணி, கால் கொலுசு, மெட்டி என்று தலை முதல் பாதம் வரை மங்கல ஆபரணங்கள் சூடி, கையில் விளக்குடன் புன்னகை பூத்த முகத்துடன் நின்றிருக்கும் இந்த பாவை விளக்குப் பெண்ணின் திருமேனி அழகு நிறைந்தது.

    பாவை விளக்கில் உள்ள பெண்ணைப் பற்றிய குறிப்புகள், அந்தச் சிலை உள்ள பீடத்தின் அடியில் பொறிக்கப்பட்டுள்ளது. மராட்டிய அரச குலத்தைச் சேர்ந்த அம்முனு பாய் என்ற பெண்மணியே, அந்தப் பாவை. தஞ்சை அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரதாப சிம்மன் என்ற இளவரசனின் மாமன் மகளே, இந்த அம்முனு. அவள் தன் மாமன் மகனை திருமணம் செய்வதற்காக, லட்ச தீபம் ஏற்றி, மகாலிங்கேஸ்வரர் அருள் பெற்றதாகவும், வேண்டுதல் நிறைவேறியதும், தன்னையே பாவை விளக்காக வடித்து, இறைவனுக்கு சமர்ப்பித்ததாகவும் அந்த குறிப்பு சொல்கிறது.
    Next Story
    ×